COMMUNIST PARTY OF INDIA (MARXIST - LENINIST) - LIBERATION

COMMUNIST PARTY OF INDIA (MARXIST - LENINIST) - LIBERATION, TAMILNADU

Tuesday, July 17, 2018


திருபெரும்புதூரில் 13 நாட்கள்

வே.சீதா

போராட்ட தயாரிப்புகளில் இணைவது
தமிழ்நாட்டில் மூலதனம் குவிந்துள்ள பகுதி, திருபெரும்புதூர், ஒரகடம், இருங்காட்டுக்கோட்டை, சுங்குவார்சத்திரம் பகுதியாகும்.
கூலி உழைப்பும் மூலதனமும் நேருக்கு நேர், மோதிக் கொள்ளும் இந்த பகுதியில் வர்க்கப் போராட்டமும் விவசாய எதிர்ப்புப் போராட்டங்களுமே, தமிழ்நாட்டின் இடதுசாரி அரசியலுக்கு ஒரு முக்கிய இடம் தேடித் தரும் என, நான் உணரத் துவங்கியிருந்தேன். கட்சி, ஏஅய்சிசிடியு, ஆர்ஒய்ஏ அமைப்புகள் காஞ்சிபுரத்தில் சில வருடங்களாகவே கூடுதல் கவனம் செலுத்தி வருகின்றனர்.
நிரந்தரமற்ற தொழிலாளர் நலன் காக்க மிகப் பெரிய போராட்டங்களின் விளைவாக நிலையாணைகள் திருத்தச் சட்ட மசோதா 47/2008 தமிழ்நாடு சட்டமன்றத்தில் 14.05.2008 அன்று நிறைவேற்றப்பட்டது. பல முயற்சிகளுக்கு பிறகு, பல தடைகளைக் கடந்து, 2016ல்தான் மத்திய அரசு இந்த மசோதாவுக்கு ஒப்புதல் தந்தது. திருத்தச் சட்டத்திற்குப் பொருத்தமாக பயிற்சியாளர்கள், தகுதிகாண் பருவ நிலை, தற்காலிக தொழிலாளர்கள் நலன் காக்க, தமிழ்நாடு அரசு புதிய நிலையாணைகள் கொண்டு வர வேண்டியிருந்தது. அதற்கான முயற்சிகளை துவக்கி ஆலோசனைகள் பெற்ற பிறகு முதலாளிகள் தடுத்து நிறுத்தியதால் அரசு  தனது சட்டத்தை தானே கிடப்பில் போட்டது. புதிய நிலையாணைகள் கேட்டு புரட்சிகர இளைஞர் கழகமும் ஏஅய்சிசிடியுவும் 2017, 2018ல் சிறை செல்வதற்கான போராட்டம், கோட்டை நோக்கி பேரணி ஆகிய நடவடிக்கைகள் எடுத்தன. தொழிலாளர் அமைச்சருடன் இரண்டு முறை சந்திப்புகள் நடந்தன. ஆனால் அரசு தொழிலாளர்களுக்காக எதுவும் செய்யவில்லை. புதிய நிலையாணைகள் கோரி ÷லை அல்லது ஆகஸ்டில் 1000 பேருக்கு மேல் கலந்து கொள்ளும் போராட்டம் நடத்த முடிவானது.
காஞ்சி மாவட்ட ஏஅய்சிசிடியு, ஆர்ஒய்ஏ தோழர்களோடு இந்த போராட்டத்துக்கான தயாரிப்புகள் மேற்கொள்ள தோழர் குமாரசாமி ÷ன் 28 முதல் ÷லை 10 வரை திருபெரும்புதூர் சென்றபோது இளம் தொழிலாளர்களுடன் அன்றாடம் இயக்க பணியாற்றும் வாய்ப்பு கிடைத்ததால் நானும் திருபெரும்புதூர் சென்றேன். மாணவராக திருவள்ளூர் மாவட்டத்தில் கட்சி வேலை செய்ய துவங்கிய நான், கடந்த சில மாதங்களாக மாநில மட்ட வேலைகள் பார்க்க வேண்டும் என்ற புரிதலோடு கட்சியின் சென்னை அலுவலகத்தில் தங்கி பணியாற்றி வருகிறேன். வேறொரு மாவட்டத்துக்கு சென்று, ஒரு புதிய களத்தில் ஒரு புது வித வேலையை, 13 நாட்கள் செய்யப் போகி றேன் என்ற ஆர்வத்துடனும் எதிர்பார்ப்புடனும், இந்த வேலையில் ஈடுபட்டேன்.
இந்த நாட்களில் நான் பார்த்த வேலைகள்
500 தொழிலாளர்களையாவது இந்த 13 நாட்களில் சந்தித்து நெருக்கமாக உரையாட வேண்டுமென முடிவு செய்யப்பட்டது. பல்வேறு தொழிற்சாலை முன்னணிகள், பெண் தொழிலாளர்கள், பயிற்சி தொழிலாளர்கள், ஒப்பந்தத் தொழிலாளர்கள், நிரந்தரத் தொழிலாளர்கள் ஆகியோரை ஒவ்வொரு நாளும் சந்திப்பது என்றும் இடையிடையே வேலைகளை பரிசீலனை செய்து ஒழுங்குபடுத்திக் கொள்வது எனவும் முடிவானது.
28.06.2018: மாலை, ஹுண்டாய் முன்னணிகள் சிலரோடு உரையாடல் நடந்தது. தலைமை தோழர்கள் சந்தித்தனர். வேலைகள் திட்டமிடப்பட்டன. 04.07.2018 அன்று ஒரகடத்தில் 8 வழிச்சாலையை எதிர்த்து தெரு முனைக் கூட்டம் நடத்த அவசர முயற்சி எடுக்க முடிவானது.
29.06.2018: இந்தப் பகுதியில் ஒரு மிகப் பெரிய போராட்டத்தை வெற்றிகரமாக நடத்திய சான்மினா தொழிலாளர்களை அவர்களது ஆலை வாயிலுக்கு சென்று உள்ளே போகும் ஒரு ஷிப்ட், வெளியே வரும் ஒரு ஷிப்ட் என சந்தித்தோம்.
30.06.2018: தோழர் எஸ்கே அம்பத்தூர் டைமண்ட் செயினில் நமது மூத்த தோழரின் பணி ஓய்வு நிகழ்ச்சிக்கு சென்றிருந்தார். நானும் என்னோடு வந்த இளைஞர் கழக, தொழிற்சங்க குழுவும் சென்று பின்ஸ்டார் நிறுவன வாயி லுக்குச் சென்றோம். எங்கள் வேண்டுகோளை ஏற்றுக்கொண்டு வாயிலில் நாங்கள் நடத்திய கூட்டத்தில் 57 நிரந்தர, பயிற்சி, ஆண், பெண் தொழிலாளர்கள் கலந்துகொண்டனர். உழைப்புச் சுரண்டலுக்கு எதிரான போராட்டத்துக்கான எங்களது அழைப்பை, அவர்கள் உற்சாகமாக வரவேற்றனர்.
01.07.2018: காலை சான்மினா நிர்வாகிகளுடன் ஆலையில் நிலவுகிற பல்வேறு பிரச்சனைகள் பற்றியும் சங்கத்தின் அடுத்தக் கட்ட நடவடிக்கை பற்றியும் விவாதிக்கப்பட்டது. மாலை குமிழியில் புரட்சிகர இளைஞர் கழகத்தின் குமிழி, கீரபாக்கம், நந்திவரம், மண்ணிவாக்கம், கிளைகளின் தோழர்களோடு சந்திப்பு நடந்தது.
02.07.2018: டாஸ்மாக் விற்பனையாளர்கள் தங்கள் சங்கத்தை ஏஅய்சிசிடிவில் இணைக்க வேண்டும் என அணுகிப் பேசினார்கள். அதன் பிறகு ஏசியன் பெயிண்ட்ஸ் தொழிலாளர்களுடன் ஒரு சுற்று சந்திப்பு நடந்தது.
03.07.2018: சான்மினாவில் முதல் முறை விட்டுப்போன தொழிலாளர்களை, ஆலை வாயிலுக்குச் சென்று சந்தித்தோம். இந்த முறையும் உள்ளே செல்வோரையும், வெளியே வருவோரையும் சந்தித்தோம். மாலை கட்சி உள்ளூர் கமிட்டியுடன் ஏஅய்சிசிடியு, ஆர்ஒய்ஏ தோழர்களும் கலந்து கொண்ட தயாரிப்பு கூட்டம் நடந்தது. கூட்டம் நடக்கும்  போதே காவல்துறையின் கெடுபிடி பற்றிய செய்தி வந்தது. 04.07.2018 அன்று கூட்டத்திற்கு அனுமதி மறுத்து கடிதம் தந்தனர். தீப்பொறி தலையங்கம் வாசிக்கப்பட்ட இந்த கூட்டத்தில், இந்த பகுதி வேலைகளை பூந்தமல்லியில் துவங்கும்போது தோழர்களோடு இணைந்து பணியாற்றிய தீப்பொறி ஆசிரியரும் கலந்து கொண்டார்.
04.07.2018: தலைமை தோழர்கள், தோழர் லெனினின்என்ன செய்ய  வேண்டும்என்ற நூலில் இருந்து, அமைப்பு, அமைப்பாளர்கள், தொழில் நேர்த்தியுடன் கூடிய வேலைகள் ஆகியவற்றை பற்றி படித்து விவாதித்தனர்.
05.07.2018: வேறு வேறு ஆலைகளின் பயிற்சியாளர்களையும் ஏசியன் பெயிண்ட்ஸ் ஆப்பரேட்டர்களையும் சந்தித்தோம்.
06.07.2018: காலை காவல்துறை தலைவரை சந்திக்கச் சென்றோம். போலீஸ் ராஜ்யத்திற்கு எதிரான நமது கடிதத்தை கூடுதல் காவல்துறை தலைவர் விஜயகுமார், ஏஅய்ஜி மகேஸ் வரன் ஆகியோரிடம் தந்து விவாதித்தோம். தோழர்கள் எஎஸ்கே, பாரதி ஆகியோரும் வந்திருந்தனர். பிரசுரம் வெளியிடுவது பற்றி வேறு வேறு கோணங்களிலிருந்து தோழர் எஸ்கே வலியுறுத்தியபோதும், ஏடிஜிபி இப்போது என்ன நிலைமை என்று உங்களுக்கே தெரியும் என்ற ஒற்றை வரியை மட்டுமே திரும்பத் திரும்ப சென்னார். அன்று மாலை டென்னகோ மற்றும் ஒரு பன்னாட்டு நிறுவன தொழிலாளர்களைச் சந்தித்தோம்.
07.07.2018: காலை மாநில கட்சித் தலைமையகம் சென்று கட்சியின் தலைமையகக் கூட்டம் ஒன்றை நடத்தினோம். அடிப்படை உரிமைகள் தற்காலிக நீக்கம் செய்யப்பட்டுள்ள அறிவிக்கப்படாத அவசர நிலைக்கு எதிராக கட்சியின் தலைமைத் தோழர்கள், மாநில, மாவட்ட முன்னணிகள் தடையை மீறி பிரசுரம் வெளியிடுகிற போராட்டம் நடத்த முடி வெடுத்தோம். அடுத்தடுத்த நாட்களில் ÷லை இறுதி போராட்டத்துக்கு அழைப்பு விடுக்கப்பட்ட கூட்டங்களில், அறிவிக்கப்படாத அவசர நிலைக்கு எதிரான போராட்டத்திற்கும் அழைப்பு விடுக்கப்பட்டது. அன்று மாலை ஒட்டேரி தலைநகர் தமிழ்ச்சங்கத்தில் உயிரியல் பூங்கா, நிப்பான், சௌந்தர்யா டெக்ரேட்டர்ஸ், டைமண்ட் இன்ஜினியரிங், ஆட்டோ, கட்டுமானம் மற்றும் அல்டிமாஸ் தொழிலாளர்களுடன் ஒரு சந்திப்பு நடந்தது.
08.07.2018: காலை ஹுண்டாய் பயிற்சியாளர்களோடு ஒரு சந்திப்பு நடந்தது. அன்று மாலை மதுரா மேட்டூர் மியாங்ஹுவா, ஒப் பந்தத் தொழிலாளர்களையும் பகுதி இளைஞர்களையும் சந்தித்தோம். அன்று சான்மினா நிர்வாகிகள் கூட்டத்தில் புதிய ஒப்பந்தத்திற்கான கோரிக்கை மனு பட்டியல் தயாரானது. 15.07.2018 பொதுப் பேரவை நடத்த முடிவானது. இந்த கூட்டத்தில் தோழர் பாரதி கலந்துகொண்டார். அன்று காலை, நான் பகுதியில் உள்ள ஒரு பன்னாட்டு நிறுவனத்தின் பெண் ஒப்பந்தத் தொழிலாளர்களை சந்தித்து அமைப்பாக வேண்டிய போராட வேண்டிய அவசியம் பற்றி உரையாற்றினேன்.
09.07.2018: மாலை ஹுண்டாய் நிரந்தரத் தொழிலாளர்களோடு ஒரு சந்திப்பு நடந்தது. ஏசியன் பெயிண்ட்ஸ் டெக்னிஷியன்களோடு ஒரு சந்திப்பு நடந்தது. மறு நாள் புறப்பட வேண்டும் என்பதால் அன்று மாலையே பரிசீலனை கூட்டம் நடந்ததுஹுண்டாயில் பணி நீக்கம் செய்யப்பட்ட தோழர் பழனிச்சாமி சிறையிலிருக்கும் பிரிக்கால் தோழர்களின் குழந்தைகளின் படிப்பிற்காக ரூ.20,000 தோழர் எஸ்.கே. அவர்களிடம் அளித்தார்.
10.07.2018: காலை சான்மினா தொழிலா ளர்களுக்கு எதிராக படுமோசமான முறையில் நடந்துவரும் விசாரணை தொடர்பாக அடுத்தடுத்த கடிதங்கள் தயார் செய்ய நேர்ந்தது. மாலை ஹுண்டாய் பயிற்சித் தொழிலாளர்களோடு ஒரு சந்திப்பு நடந்தது.
இந்த 13 நாட்களில் திட்டமிட்டபடி  கிட்டத்தட்ட 500 தொழிலாளர்களை சந்தித்தோம். பல புதியவர்களையும் ஏற்கனவே வேலையில் இருந்து பின்னர் விலகி இருந்து இப்போது இணைந்து கொண்டவர்களையும் சந்தித்தோம். பல நிறுவனத்தினர் வெளியில் தெரிய வேண்டாம் எனச் சொல்லி சந்தித்தனர்.
எனது உணர்தல்கள்
கொரியா, ஜப்பான், அய்க்கிய அமெரிக்க முதலாளிகள் ஆட்டம் போடுகிறார்கள். முதலாளிகள் பணம் மட்டுமே முதலீடு செய்கிறார்கள். (நமது தோழர்கள் அந்த மூலதனமும் மடிந்த உழைப்பு என்கிறார்கள்). வியர்வையை, ரத்தத்தை, வாழ்க்கையை முதலீடு செய்தவர்களுக்கு, அரசுகள் பதில் சொல்ல வேண்டாமா?
வீட்டைச் சுற்றி அனல் காற்று வீசும் போது, நாம் நமது வீட்டிற்குள் நிம்மதியாய் இருக்க முடியுமா? முதலாளித்துவம் நம்மை எவ்வளவுதான் முடக்கி குறுக்கி வைத்தாலும், ஒரு வட்டத்திற்குள் நிறுத்தினாலும், ஒருவரோடு ஒருவரை மோத விட்டாலும், நம்மை உயிரற்ற உடல்களாக, எந்திரங்களின் தொங்குசதையாக மாற்றினாலும், நாம் கடைசி கடைசியாய் உலகைக் கட்டி எழுப்பும் தொழிலாளர்கள். தொழிலாளர்கள், தொழிற்சங்கங்கள் மூலம் அவரவர் முதலாளிகளை எதிர்க்க வேண்டும். அதற்கு மேல், முதலாளித்துவ அரசியலை, முதலாளித்துவ அரசுகளை, முதலாளித்துவ அமைப்பை வீழ்த்த வேண்டும்.
மு           தலைமைத் தோழர்கள் தாமே வேலை செய்வது நல்ல விஷயம், ஆனால், அவர்கள் மற்ற தோழர்களை வேலை செய்ய வைப்பது நல்லது. இந்த போராட்டத்திற்காக 10,000 பேரைச் சந்திக்க, போராட்டத்தில் 500 பேரை அணிதிரட்ட, 15 - 20 குழுக்களையாவது அமைத்துச் செயல்பட வேண்டும்.
குறைகூலி, கடுமையான உழைப்புச் சுரண்டல், சிறுமைப்படுத்துதல், பாலியல்  சீண்டல்கள், நிரந்தர வேலைகளில் நிரந்தரமற்ற தொழிலாளர்கள். திருபெரும்புதூர், ஒரகடம், இருங்காட்டுக்கோட்டை தொழில் பகுதிகளில் இவைதான் நிறைந்துள்ளன. முதலாளித்துவம் வீழட்டும், சோசலிசம் வெல்லட்டும் என முழங்கி, திருபெரும்புதூர் பாட்டாளிகள் களம் இறங்கினால், நாளை அவர்களை தமிழ்நாடு பின்தொடரும்.

லெனின்
இடைவிடாத தீவிரமான வேலைகள் மத்தியில், தோழர் லெனினின் பின்வரும் மேற்கோளைப் படித்து விவாதித்தோம்.
ஊழியர்களே இல்லை எனினும் ஊழியர்கள் திரள் திரளாய் இருக்கவே செய்கிறார்கள். ஊழியர்கள் திரள் திரளாய் இருக்கக் காரணம், ஆண்டுதோறும் தொழிலாளி வர்க்கமும் மேன்மேலும் வேறுபட்ட சமுதாயப் பிரிவுகளும் தம்மிடையேயிருந்து அதிகரித்துவரும் எண்ணிக்கையில் அதிருப்தியடைந்த நபர்களை உண்டாக்கியவாறு இருக்கிறது. இவர்கள் கண்டனம் தெரிவிக்க விரும்புகிறார்கள். எதேச்சதிகார ஆட்சி முறையை எதிர்த்து நடக்கிற போராட்டத்தில் தம்மாலான உதவியனைத்தும் அளித்திடத் தயாராயிருக்கிறார்கள். இந்த எதேச்சதிகார ஆட்சி முறையைச் சகிக்க முடியாது என்பதை எல்லோரும் அங்கீகரிக்கவில்லையாயினும் மேன்மேலும் அதிகமான மக்கள் திரள் தீவிரமாக உள்ளூர உணர்ந்து வருகிறார்கள். அதே நேரத்தில் நம்மிடம் ஊழியர்கள் இல்லாதிருக்கக் காரணம், மிகமிக அற்பமான சக்திகளையும் உள்ளிட்ட எல்லாச் சக்திகளையும் பயன்படுத்தும் வகையில் விரிவாயும் அதே நேரத்தில் சமச்சீராகவும் இசைவாகவும் வேலையை ஒழுங்குபடுத்திச் சித்தம் செய்ய திறமையுள்ள தலைவர்கள், அரசியல் தலைவர்கள் ஆற்றல்மிக்க அமைப்பாளர்கள் நம்மிடம் இல்லை.
எதையும் எவரையும் புறக்கணிக்காதே, அமைப்பை, நம் அரசியலை ஏற்கும் அனைவரையும் உள்வாங்கி, எதிரியும் மதிக்கும் விதம் துணிந்து சிந்திப்போம், பெரிதாகச் சிந்திப்போம். விரிவாக அதே நேரம் அனைவரையும் இணைக்கின்ற விதம் சீராக ஒத்திசைவுடன் வேலைகள் முன்செல்வதை உறுதி செய்வோம்.
ஆற்றல் உள்ள அமைப்பாளருக்கு, அரசியல் தலைவர்களுக்கு என்ன பண்புகள் தேவை என்ற தோழர் லெனினின் வழிகாட்டுதலை, என்றும் மறவோம்.

இமையம் மற்றும் ஆதவன் தீட்சண்யா
03.06.2018 தேதிய தமிழ் இந்துவில் எழுத்தாளர் இமையம், ஒவ்வொரு மனிதனையும் ஸ்மார்ட்போன்கள் தனித்தனி தீவுகளாக மாற்றி இருக்கின்றன, ஒவ்வொரு செல்போனும் ஒரு கற்பனை உலகத்தைக் கொடுக்கிறது, ஒவ்வொரு மனிதனுமே, ஒரு செய்தி நிறுவனமாக மாறுகிறான், நமது இரவுகளை செல்போன்கள் எடுத்துக் கொண்டு விட்டன என்று சொல்லியுள்ளது, மெய் உலகு தவிர்த்து மெய் நிகர் உலகில் வாழும் இளைய தலைமுறையினர் உள்ளிட்டோருக்கு எச்சரிக்கையாக இருந்தது.
எட்டைக் காக்கும் காவல்துறைக்கு எதிராக எட்டு திசையிலும் எட்டு வழிச்சாலை எதிர்ப்பு ஒலிக்கட்டும். ஆதவன் தீட்சண்யா கவிதையை பலரோடும் பகிர்ந்து கொண்டேன்.
வையத்து நிலமிழந்தோம்
வானமுத மழையிழந்தோம்
வாழும் புலமிழந்தோம்
வளமூறும் ஆறிழந்தோம்
வேளாண் குடியிழந்தோம்
வெள்ளாமைக் காடிழந்தோம்
சூழும் கொடு நெருப்பில்
சொந்தபந்த சனமிழந்தோம்

இழப்பை நினைத்தழவும்
இங்கெமக்கு உரிமை இல்லை
கழுத்தை நெறித்திறுக்கும்
கயிறறுக்க வலுவுமில்லை
மருகிச் சாவதற்கோ
மானுடராய் நாம் பிறந்தோம்
உருகி அழியுதய்யோ
உயிர் வாழும் சிற்றாசை

சொடுங்குது சூரியனும்
சுண்டுது பால்நிலவும்
சொக்குது பகலுமிங்கே
சூழந்திடும் இருளாலே
இருளும் காலமிதில்
எதை நாம் பாடுவது
இம்மி வெளிச்சமில்ல
எதையிங்கே தேடுவது

அவலத்தை நிதம்பாடி
அச்சத்தில் வீழ்வோமோ
சவம்போல விரைத்தழுகி
சலனமின்றி கிடப்போமா
துவண்டுவிழ நியாயமில்லை
துக்கிக்க நேரமில்லை
உழைப்பு வீணும் அல்ல
உயிர் இருப்பு சாவுமல்ல

இருளென்று பாடுவதற்கு
இங்கேதான் நாமெதற்கு
இரு கண்ணில் ஒளியிருக்க
இருள் கண்டு பயமெதற்கு
ஒளியின் மகத்துவத்தை
உலகறியப் பாடிடுவோம்
உயிரீந்தும் வெளிச்சத்தை
மனந்தோறும் பாய்ச்சிடுவோம்
-          ஆதவன் தீட்சண்யா

Search