COMMUNIST PARTY OF INDIA (MARXIST - LENINIST) - LIBERATION

COMMUNIST PARTY OF INDIA (MARXIST - LENINIST) - LIBERATION, TAMILNADU

Monday, May 14, 2018

பாசிஸ்டுகளை, பாசிஸ்டுகளின் எடுபிடிகளை முறியடிக்க மக்கள் இந்தியா படைக்க 
மே நாளில் விண்ணதிர முழக்கங்கள்

கார்ல் மார்க்ஸ் பிறந்த 200ஆவது ஆண்டு என்பதால் 2018 மே மாதம் மிகவும் முக்கியத்துவம் வாய்ந்ததானது.
உலகெங்கும் மே 1ம் மே 5ம் பல்வேறு நிகழ்ச்சிகளை, கொண்டாட்டங்களைக் கண்டது. இந்தியாவில் மோடி தலைமையிலான பாஜக பாசிச ஆட்சி இந்திய மக்கள் மீது போர் தொடுத்துக் கொண்டிருக்கும் அதே வேளை பாசிச ஆட்சிக்கு எதிராக கடுமையான கண்டனங்களும் போராட்டங்களும் அதிகரித்து வரும் சூழலில், இவ்வாண்டு மே மாதம் துவங்கும் முன்பே கார்ல் மார்க்ஸ் பற்றியும் அவரது மூலதன நூல் பற்றியும் மார்க்ஸிடம் திரும்புவது காலத்தின் கட்டாயம் என்கிற வகையில் விவாதங்கள் எழுந்தன. இகக (மாலெ) நாடெங்கும் பல்வேறு நிகழ்ச்சிகளைக் கட்டமைத்தது.
மே நாளில் விண்ணதிர முழக்கங்கள்
133ஆவது மே நாள் இது. தமிழகத்தில் இந்த மே நாளை பாசிஸ்ட்டுகளை, பாசிஸ்ட்டுகளின் எடுபிடிகளை முறியடிக்க, மக்கள் இந்தியா படைத்திட உறுதியேற்பு நாளாக இகக (மாலெ) கடைபிடித்தது. ஏஅய்சிசிடியுவும் புரட்சிகர இளைஞர் கழகமும் ‘இந்தியா வேலை கோருகிறது’ இயக்கம் நடத்தி மே நாள் அன்று அதை நிறைவு செய்தன. அதையொட்டி சென்னை அம்பத்தூர், காஞ்சிபுரம், திருவள்ளூர், திருபெரும்புதூர் பகுதிகளில் ஊழியர் கூட்டங்கள் நடத்தப்பட்டன.
இந்திய இளைஞர்கள் இளமையை ஒட்டச் சுரண்டிக் கொழுத்துக் கொண்டிருக்கும் பன்னாட்டு நிறுவனங்கள் பரவலாக உள்ள திருபெரும்புதூரில் மே நாள் அன்று காலையில் இருந்தே ஆலை வாயில்களில் ஏஅய்சிசிடியு கொடிகள் ஏற்றப்பட்டன. மாலையில் மே தினப் பேரணியும் பொதுக்கூட்டமும் நடத்தப்பட்டன. பேரணி, பொதுக் கூட்டத்திற்கு புரட்சிகர இளைஞர் கழக மாநிலத் தலைவர் தோழர் ராஜகுரு தலைமை தாங்கினார். பேரணியைத் துவக்கி வைத்து ஜிம்கானா கிளப் தொழிற்சங்கத்தின் பொதுச் செயலாளர் தோழர் ஜேம்ஸ் உரையாற்றினார். பேரணி முடிவில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் இகக (மாலெ) மாநிலச் செயலாளர் தோழர் எஸ்.குமாரசாமி, ஏஅய்சிசிடியு மாநிலச் செயலாளர் தோழர் பழனிவேல், புரட்சிகர இளைஞர் கழகத்தின் தேசியச் செயலாளர் தோழர் பாரதி, அகில இந்திய மாணவர் கழகத்தின் மாநிலச் செயலாளர் தோழர் சீதா ஆகியோர் உரையாற்றினர். கட்சியின் மத்தியக் குழு உறுப்பினர்கள், புவனா, வித்யாசாகர் கலந்துகொண்டனர்.
பேரணியில் மதுரா மேட்டுர், கீரப்பாக்கம், குமிழி, மண்ணிவாக்கம் பகுதிகளில் இருந்து புரட்சிகர இளைஞர் கழகத் தோழர்கள், ஹ÷ண்டாய், நிசான், சான்மினா, ஏசியன் பெயின்ட்ஸ், வான்டெக், சிஎம்ஆர் டொயாட்ச்சு, டென்னகோ, சிஅன்டுஎஃப் ஆட்டோமோட் டிவ், நிப்பான் எக்ஸ்பிரஸ், எம்எஸ்அய், டைமண்ட் இன்ஜினியரிங், மியங்ஹ÷வா இந்தியா, ஆர்எம்சி ரெடிமிக்ஸ், டிஅய்டிசி, ஓஎல்ஜி, ரானே பிரேக்ஸ், கேகேஆர், கேஏஒய் இன்ஜினியரிங், ஸ்டாண்டர்டு கெமிக்கல்ஸ், வண்டலூர் உயிரியல் பூங்கா, சவுந்தர்யா டெக் கரேட்டர்ஸ், அல்க்கிமாஸ் கெமிக்கல்ஸ், ஜிம் கானா கிளப், மெட்ராஸ் கிளப், அரசு அச்சகம், அகர்வால் பவன், காஞ்சி காமகோடி மருத்துவமனை, இசபெல்லா மருத்துவமனை, வெல் மேக், மங்களபுரம் கட்டுமானச் சங்கம், அயனாவரம் கட்டுமானச் சங்கம், ஓட்டேரி விரிவு கட்டுமானத் தொழிலாளர் சங்கம் சென்னை மாநகராட்சி அம்பத்தூர் மண்டல மலேரியா நோய் ஒழிப்புத் தொழிலாளர் சங்கம் ஆகியவற்றில் இருந்து தொழிலாளர் தோழர்கள் பெருவாரியாகக் கலந்து கொண்டனர். 
காஞ்சிபுரம் மாவட்டத்தில் மண்ணிவாக்கம், குமுளி, கீரப்பாக்கம், வண்டலூர் உயிரியல் பூங்கா, நிப்பான் எக்ஸ்பிரஸ், ஆர்எம்சி உள்ளிட்ட 9 இடங்களில் சங்கக் கொடிகள் ஏற்றப்பட்டன. 300க்கும் மேற்பட்டோர் பங்கேற்றனர். ஏஅய்சிசிடியு மாநிலத் துணைத் தலைவர் தோழர் இரணியப்பன் உள்ளிட்ட தலைவர்கள் கலந்து கொண்டனர். சென்னையில் உள்ள அகர்வால் பவன் அடுமனையில் முதல்முறையாக நடைபெற்ற கொடியேற்று விழாவில் ஏஅய்சிசிடியு மாநிலத் தலைவர் தோழர் எ.எஸ்.குமார் கொடியேற்றி உரையாற்றினார். சங்கத் தலைவர்கள் கிருஷ்ண பாண்டி, ராஜசேகர் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். ஜிம்கானா கிளப், மதராஸ் கிளப் கிளைகளில் ஏஅய்சிசிடியு மாநிலச் செயலாளர் தோழர் பாரதி, மாவட்டத் தலைவர்கள் தோழர் ஜேம்ஸ், ராமு, வியாசர்பாடியில் ஆட்டோ சங்கம், அயனாவரம் கிளைகளில் கொடியேற்றப்பட்டது. அதில் தோழர்கள் குமரேஷ், பொன்ராஜ், குப்பாபாய் உட்பட 300 பேர் கலந்து கொண்டனர். சென்னை அம்பத்தூரில் 15 இடங்களில் நடைபெற்ற கொடியேற்று விழா நிகழ்ச்சிகளில் தோழர்கள் சேகர், முனுசாமி, மோகன், பாலகிருஷ்ணன், பசுபதி, இராஜேந்திரன், வீரராகவன், ராமதாஸ் ஆகியோர் கலந்து கொண்டு உரையாற்றினர். 300க்கும் மேற்பட்ட தோழர்கள் பங்கேற்றனர்.
திருவள்ளூரில் இகக(மாலெ) மாவட்டச் செயலாளர் தோழர் ஜானகிராமன் தலைமையில் 23 இடங்களில் ஏஅய்சிசிடியு, அவிகிதொச, புரட்சிகர இளைஞர் கழக கொடிகள் ஏற்றப்பட்டன. 300 பேர் கலந்து கொண்டனர்.
விழுப்புரம் மாவட்டத்தில் மே நாள் அன்று 15 ஊராட்சிகளில் நடைபெற்ற கிராம சபைக் கூட்டங்களில் தோழர் வெங்கடேசன் உள்பட அவிகிதொச தோழர்கள் கலந்து கொண்டனர். புதுக்கோட்டை மாவட்டத்தில் 5 ஒன்றியங்களில் 23 இடங்களில் கொடி ஏற்றப்பட்டன. 260 பேர் கலந்து கொண்டனர். கிராம சபைக் கூட்டங்களில் தோழர்கள் பங்கேற்றனர். தர்மபுரியில்  கடகத்தூர் மற்றும் சோகத்தூர் ஊராட்சிகளில் குருசாமிப்பேட்டையில் கொடியேற்றப்பட்டது. தர்மபுரி நுகர்பொருள் வாணிபக் கழக கிட்டங்கி முன்பு கொடி ஏற்றப்பட்டது. ஏஅய்சிசிடியு மாநிலச் செயலாளர் தோழர் கே.கோவிந்தராஜ், தோழர் சின்னத்தம்பி, பெருமாள் உள்ளிட்ட தோழர்கள் கலந்து கொண்டனர். சோகத்தூர் ஊராட்சி கிராம சபைக் கூட்டத்தில் மனு கொடுக்கப்பட்டது. தர்மபுரி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை முன்பு மருத்துவமனைத் தொழிலாளர்கள் 50 பேர் கலந்து கொண்டு மே தின உறுதிமொழி ஏற்றனர்.
கோவையில் மேள தாளத்துடன் மே நாள் நிகழ்ச்சி நடைபெற்றது. கோவை பிரிக்கால் பிளான்ட் 3 வாயிலில் ஏஅய்சிசிடியு கொடியை ஏஅய்சிசிடியு தேசியச் செயலாளர் தோழர் என்.கே.நடராஜன் ஏற்றினார். 150 தொழிலாளர்கள் இரு சக்கர வாகனத்தில் ஊர்வலமாக வந்து பிளான்ட் 1 வாயிலில் தோழர் சிவகுமார் கொடியேற்ற அங்கிருந்து 250 பேர் ஊர்வலமாக வந்து  ஏஅய்சிசிடியு சங்க அலுவலகத்தின் முன்பு கொடி ஏற்றினர். கொடியை இகக மாலெ கோவை மாவட்டச் செயலாளர் தோழர் பாலசுப்பிரமணியன் ஏற்றினார். பெரியநாயக்கன்பாளையம், நத்தம் பாளையம், கூடலூர், கவுன்டன்பாளையம் காட்டூர் மற்றும் கோவை மாநகராட்சி ஆர்.எஸ்.புரம், கோவில்பாளையம் ஆகிய பகுதிகளில் கொடியேற்றப்பட்டது. தோழர்கள் தாமோதரன், சக்திவேல், வேல்முருகன், லூயிஸ் கொடிகள் ஏற்றினர். எல்ஜிபி தொழிலாளர்கள் 80 பேரும் தூய்மைப் பணியாளர்களும் கலந்து கொண்டனர்.
சேலத்தில் குமரிகிரிப்பேட்டை, நாவல் நகர், எருமாபாளையம் உள்ளிட்ட 16 இடங்களில் கொடியேற்றப்பட்டன. தோழர்கள் சந்திரமோகன், வேல்முருகன், விஸ்வநாதன், நடராஜன் கலந்து கொண்டு உரையாற்றினர். பருத்திக்காட்டில் இருந்து குப்பனூர் வரை ஊர்வலம் நடைபெற்றது.  அங்கு பொதுக்கூட்டம் நடைபெற்றது. கூட்டத்தில் மோகனசுந்தரம், அய்யந்துரை உள்ளிட்ட தோழர்கள் உரை யாற்றினர். பசுமை விரைவுச் சாலைத் திட்டத்துக்கு எதிராக போராட்டம் அறிவிக்கப்பட்டது. குப்பனூர் ஊராட்சியில் 100 நாள் வேலை கோரி 250 மனுக்கள் எழுதப்பட்டன. கூட்டம் வருவதைக் குறைக்க கிராம எல்லை 5 கி.மீ. தொலைவில் நிர்வாகம் கூட்டம் கூட்டியது; ஆனாலும் அவிகிதொச சார்பாக 25 தோழர் பங்கெடுத்து அவர்களே கூட்டத்தை நடத்தினர்.
நாமக்கல் மாவட்டத்தில் 18 இடங்களில் கொடியேற்றப்பட்டது. ஆவச்சிப்பாளையத்தில் தெருமுனைக் கூட்டம் நடத்தப்பட்டது. கட்சியின் மாவட்டச் செயலாளர் தோழர் ஏ.கோவிந்தராஜ் உள்ளிட்ட தோழர்கள் கலந்து கொண்டனர். மதுரையில் 10 பஞ்சாயத்துக்களில் நூறு நாள் வேலை திட்டத்தை அமல்படுத்தக் கோரி அவிகிதொச மனுக்கள் அளித்தது.
திருநெல்வேலியில் மதுரா கோட்ஸ் உள்ளிட்ட 15 இடங்களில் கொடியேற்றப்பட்டன. ஏஅய்சிசிடியு மாவட்டப் பொதுச் செயலாளர் தோழர் கணேசன் தலைமையில் நடைபெற்ற கொடியேற்று நிகழ்ச்சிகளில் 200 பேர் கலந்து கொண்டனர். நெல்லை நகர் பகுதியில் புரட்சிகர இளைஞர் கழகம் சார்பாக தோழர் சுந்தர்ராஜ் தலைமையில் தெருமுனைக் கூட்டங்கள் நடைபெற்றன. வன்கொடுமை தடுப்புச் சட்டத்தை நீர்த்துப் போகச் செய்வதைக் கண்டித்து பாளையங்கோட்டையில் வன்கொடுமை தடுப்புச் சட்டப் பாதுகாப்புக் கூட்டமைப்பு நடத்திய ஆர்ப்பாட்டத்தில் இகக(மாலெ) மாநிலக்குழு உறுப்பினர் தோழர் ரமேஷ் தலைமையில் 20 தோழர்கள் கலந்து கொண்டனர்.
குமரியில் குளச்சலில் கருத்தரங்கம் நடைபெற்றது. 300க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர். 4 இடங்களில் கொடியேற்றப்பட்டது. ஏஅய்சிசிடியு மாநிலத் துணைத் தலைவர் தோழர் அந்தோனிமுத்து மற்றும் தோழர்கள் சுசீலா, மேரிஸ்டெல்லா கலந்துகொண்டனர்.
தூத்துக்குடியில் கன்டெய்னர் லாரி சங்கம் சார்பாக கொடியேற்றப்பட்டது.

Search