COMMUNIST PARTY OF INDIA (MARXIST - LENINIST) - LIBERATION

COMMUNIST PARTY OF INDIA (MARXIST - LENINIST) - LIBERATION, TAMILNADU

Monday, April 16, 2018

இன்னும் ஒரு வங்கிக் கடன் மோசடி... 
இப்போது செய்தியாகியிருப்பது 
அய்சிஅய்சிஅய் வங்கி

ஜி.ரமேஷ்

வைர வியாபாரிகள் நீரவ் மோடி, மெகுல் சோக்சி வரிசையில் வீடியோகான் வேணுகோபால், தனியார் வங்கியின் தலைவர் சந்தா கொச்சார், அவரது கணவர் தீபக் கொச்சார், இவரது சகோதரர் ராஜீவ் கொச்சார் என அடுத்தடுத்து அம்பலத்துக்கு வந்துள்ளார்கள்.

பொதுத்துறை வங்கியான பஞ்சாப் நேஷனல் வங்கியின் அதிகாரிகளும் ஊழியர்களும் நீரவ் மோடிக்கும் மெகுல் சோக்சிக்கும் கடன் கொடுத்து ரூ. 11,400 கோடிக்கு மேல் மோசடி நடந்துள்ளது. அதனால், பொதுத்துறை வங்கிகளை தனியார் கைகளில் ஒப்படைத்துவிட் டால் இது போன்ற ஊழல் மோசடிகள் நடக்காது என்று மத்திய நிதியமைச்சர் அருண் ஜெட்லி உள்ளிட்டோர் பேசி ஒரு மாதம் கூட ஆகவில்லை. அதற்குள் அய்சிஅய்சிஅய் வங்கி உள்பட 20 வங்கிகளில் 40,000 கோடி ரூபாய் கடன் வாங்கிவிட்டு ஏப்பம் விடுகிறார் வீடியோகான் நிறுவனத்தின் வேணுகோபால் தூத். அய்சிஅய்சிஅய் வங்கி மட்டும் ரூ.3,250 கோடி கடன் கொடுத்துள்ளது. வீடியோகான் வேணுகோபாலுக்கு கடன் கொடுக்க வைத்து அதை இப்போது வாராக் கடனாக அறிவிக்கச் செய்துள்ளது அய்சிஅய்சிஅய் வங்கியின் சாதாரண அதிகாரிகளோ ஊழியர்களோ அல்ல, அய்சிஅய் சிஅய் வங்கியின் தலைமைச் செயல் அதிகாரியும் நிர்வாக இயக்குநருமான சந்தா கொச்சார்.
சந்தா கொச்சாரின் கணவர் தீபக் கொச்சாரும் வீடியோகான் நிறுவனத்தின் தலைவரான வேணுகோபால் தூத்தும் சேர்ந்து 2008ல் நுபவர் என்ற நிறுவனத்தைத் தொடங்குகிறார்கள். இருவருக்கும் சமபங்கு. 50:50. 2009ல் வேணுகோபால் தூத் தன் வசம் உள்ள 50% பங்குகளை தீபக் கொச்சாருக்கு ரூ.2.5 லட்சத்திற்கு விற்றுவிடுகிறார். இப்போது நுபவர் நிறுவனத்தின் மொத்த பங்குகளும் தீபக் கொச்சார் வசம்.
2010 மார்ச்சில் நுபவர் நிறுவனம், சுப்ரீம் எனர்ஜி என்கிற நிறுவனத்திடம் இருந்து 64 கோடி ரூபாயைக் கடனாக வாங்குகிறது. இந்த சுப்ரீம் எனர்ஜி நிறுவத்தின் 99.9% பங்குகளுக்குச் சொந்தக்காரர் வேணுகோபால் தூத். கொஞ்ச நாட்கள் கழித்து  தீபக் கொச்சார் தன்னிடம் உள்ள 100%  நுபவர் நிறுவனத்தின் பங்குகளில் 94.99% பங்குகளை வேணுகோபாலின் சுப்ரீம் எனர்ஜி நிறுவனத்திடம் தருகிறார். வேணுகோபால் தூத், சுப்ரீம் எனர்ஜி நிறுவனத்தில் தன்னிடம் உள்ள பங்குகளை தன் கீழ் வேலை பார்க்கும் மகேஷ் புங்கிலியாவிற்கு மாற்றித் தருகிறார். இப்போது இந்த மகேஷ் புங்கிலியா தன் வசம் உள்ள சுப்ரீம் எனர்ஜி நிறுவனப் பங்குகளை எல்லாம் வெறும் 9 லட்ச ரூபாய் வாங்கிக் கொண்டு பினகிள் டிரஸ்ட் என்கிற நிறுவனத்திற்குக் கொடுத்துவிடுகிறார். இந்த பினகிள் டிரஸ்ட்டின் உரிமையாளர் தீபக் கொச்சார்.
தலை சுற்றுகிறதா? தீபக் கொச்சார் கடனாகத்தான் 64 கோடி ரூபாய் தனது நுபவர் நிறுவனத்திற்கு வேணுகோபாலின் சுப்ரீம் நிறுவனத்திடம் வாங்கினார். அதையே பங்குகளாக தங்களுக்குள் மாற்றி மாற்றி கடைசியில் 9 லட்ச ரூபாய்க்கு பரிமாற்றம் செய்து கடனைத் திருப்பித் தராமலேயே 64 கோடி ரூபாயை அசெட்டாக (சொத்தாக) மாற்றி அதற்கு அதிபதியாகி விட்டார் தீபக் கொச்சார். வெறும் தாள்கள் பரிமாற்றம் மூலம் வேணுகோபால் தூத், தீபக் கொச்சாரை 64 கோடிக்கு சொந்தக் காரர் ஆக்கிவிட்டார் அல்லவா, அதற்கு கைமாறாக தீபக் கொச்சார் தனது மனைவி சந்தா கொச்சார் தலைமை செயல் அதிகாரியாக உள்ள அய்சிஅய்சிஅய் வங்கியை 3250 கோடி ரூபாய் 2012ல் வேணுகோபால் தூத்தின் வீடியோகான் நிறுவனத்திற்கு கடனாகத் தரச் செய்கிறார்.
ஆனால், அய்சிஅய்சிஅய் வங்கி வீடியோகான் நிறுவனத்திற்கு 3250 கோடி ரூபாய் கடன் கொடுத்ததை சந்தா கொச்சாரோடு சம்பந்தப்படுத்தக் கூடாது, வேணுகோபால் தூத்தின் வீடியோகான் நிறுவனம் தீபக் கொச்சாரின் நுபவர் நிறுவனத்தில் முதலீடு எதுவும் செய்தி ருக்கவில்லை, அதனால், வீடியோகானுக்கு கடன் கொடுக்கும் விசயத்தில் சந்தா கொச்சார் விலகியிருந்திருக்க வேண்டிய அவசியமில்லை, வீடியோகான் நிறுவனம் அய்சிஅய்சிஅய் வங்கிகளில் மட்டுமா கடன் வாங்கியுள்ளது, 20 வங்கிகளில் மொத்தம் ரூ.40,000 கோடி கடன் வாங்கியிருக்கிறது, சந்தா கொச்சாரை சந்தேகிக்க கூடாது என்று அய்சிஅய்சிஅய் வங்கியின் தலைவர் எம்.கே.சர்மா சொல்கிறார்.
வங்கித் தலைவர்களின் சொந்தங்கள் தொழில் துவங்கக் கூடாது என்றோ, வங்கிகளில் கடன் வாங்கக் கூடாது என்றோ விதிமுறைகள் கிடையாது, ஆனால், வங்கி கடன் வழங்கும் குழுவில் கடன் வாங்கும் நிறுவனங்களின் சொந்தங்கள் இருந்தால் அது தாக்கத்தை ஏற்படுத்தும், சந்தா கொச்சார் இந்தியாவில் உள்ள அதிகாரம் மிக்க பெண் நிர்வாகிகளில் ஒருவர், வீடியோகான் நிறுவனத்தின் வேணுகோபாலுக்கும் நுபவர் நிறுவனத்தின் தீபக் கொச்சாருக்கும் அதாவது சந்தா கொச்சாரின் கணவருக்கும் பங்குப் பரிவர்த்தனை தொடர்புகள் இருக்கும்போது அய்சிஅய்சிஅய் கடன் வழங்கும் குழுவில் சந்தா கொச்சார் இருந்திருக்கக் கூடாது, அப்படி அவர் இருந்ததுதான் தவறாகப் போய்விட்டது என்று சந்தா கொச்சாருக்குச் ஆதரவான வாதங்கள் முன்வைக்கப்படுகின்றன. ஒரு வங்கியின் தலைமைச் செயல் அதிகாரி, நிர்வாக இயக்குநர் கடன் வழங்கும் குழுவில் இல்லாவிட்டால், கடன் வழங்குவது தொடர்பாக தாக்கம் ஏற்படுத்த முடியாதா என்ன?
தீபக் கொச்சார், தனக்கும் வேணுகோபால் தூத்திற்கும் உள்ள பரிவர்த்தனை உறவுகள் பற்றி தன் மனைவிக்குத் தெரியாது, தங்கள் நிறுவனத்தில் இருந்து தூத் போனதற்குப் பின்புதான் தனது மனைவிக்கு அது பற்றி தெரியப்படுத்தினேன், ஜாம்லால் பஜாஜ் இன்ஸ்டிட்யுட்டில் எம்பிஏ படித்துள்ளேன், ஹார்வர்ட் பல்கலைக் கழகத்தில் படித்துவிட்டு வந்துள்ளேன், என் மனைவி ஒரு பெரிய வங்கியில் தலைவராக இருக்கிறார் என்பதால் நான் எதிலும் ஈடுபடாமல் வீட்டில் சும்மா இருக்க வேண்டுமா என்று கொதிக்கிறார். 
தீபக் கொச்சாரும் அவர் சகோதரர் ராஜீவ் கொச்சாரும் அவர் குடும்பத்தினரும் சேர்ந்து ஆரம்பத்தில் கிரடென்சியல் ஃபைனாஸ் என்ற நிதி நிறுவனத்தை நடத்தி வந்துள்ளார்கள். அந்த நிறுவனத்தில் வேணுகோபாலின் வீடியோகான் நிறுவனம் 17.74% பங்குகளை வைத்திருந்தது. கொச்சார் குடும்பத்தைச் சேர்ந்த 7 பேர் கிரடென்சியல் ஃபைனாஸில் பங்குதாரர்களாக இருந்துள்ளார்கள். அதில் தீபக் கொச்சார், அவர் மனைவி சந்தா கொச்சார், அவர் தம்பி ராஜீவ் கொச்சார் ஆகியோர் தலா 2 பங்குகளையும் வேணுகோபால் தூத்துக்கு நெருக்கமான மகேஷ் புங்கிலியா 0.8% பங்கையும் வைத்திருந்துள்ளார்கள். சந்தா கொச்சார் 2009ல் அய்சிஅய்சிஅய் வங்கியின் தலைமைச் செயல் அதிகாரியாக ஆன பிறகுதான் கிரடென் சியல் ஃபைனான்ஸில் தனக்கு இருந்த பங்கு களை மாற்றியோ அல்லது விற்றோ உள்ளார். எல்லா ஃபைனான்ஸ் நிறுவனங்களும் நஷ்டக் கணக்கு காட்டி மூடப்படுவதுபோல், இந்த கிரடென்சியல் ஃபைனான்ûஸயும் மூடிவிட்டு, அடுத்த தொழிலுக்குத் தாவுகிறார்கள் கொச்சார் குடும்பத்தார். அதில் ராஜீவ் கொச்சார், மகாராஷ்டிராவின் அன்றைய கேபினட் செயலாளராக இருந்த சரத் உபாசனியின் மருமகன்; சிங்கப்பூர் சென்று அவிஸ்டா அட்வைசரி குரூப் என தனி நிறுவனத்தைத் தொடங்குகிறார். அந்த ராஜீவ் கொச்சாரைத்தான் மும்பை விமான நிலையத்தில் மத்திய புலனாய்வுத் துறை கைது செய்து விசாரித்து வருகிறது.
தீபக் கொச்சாரின் தொழில் நலிந்தபோது சந்தா கொச்சார் வளர்ச்சியடைந்தார் என்றும் இருபதே ஆண்டுகளில் கொச்சார் குடும்பம் மும்பையில் சொத்துக்களைக் குவித்தது என்றும் சொல்லப்படுகிறது. ஆனால், நுபவர், சுப்ரீம் எனர்ஜி போன்ற நிறுவனங்களை உருவாக்கி பங்குப் பரிமாற்றங்களைச் செய்து வங்கிக் கடன்களைப் பெற்று சொத்துக் குவித்துள்ளார்கள். அய்சிஅய்சிஅய் வங்கிக்கும் வீடியோகா னுக்கும் இடையே 1985ல் இருந்தே தொடர்பு உள்ளது. இதே காலக்கட்டத்தில்தான் சந்தா கொச்சாரும் வங்கியில் சேர்ந்து வளர்ந்துள்ளார். 1998ல் சந்தா கொச்சார், அய்சிஅய்சிஅய் வங்கியின் 200 முன்னணி வாடிக்கையாளர்கள் கொண்ட குழுவை அமைக்கிறார். அதில் வீடியோகானும் ஒன்று. வீடியோகான் வேணுகோபாலுக்கும் தீபக் கொச்சாருக்கும் இடையேயான வியாபார ஒப்பந்தங்கள் முடிவுக்கு வரும் ஓராண்டிற்கு முன்பே அதாவது 2012 ஏப்ரல் மாதத்திலேயே வீடியோகான் நிறுவனத்திற்கு அய்சிஅய்சிஅய் வங்கி ரூ.3,250 கோடியை கடனாகக்  கொடுத்துள்ளது. ஆகையால், சந்தா கொச்சாருக்கும் வீடியோகானுக்கும் தொடர்பு கிடையாது என்பதும் அவர் சிறந்த நிர்வாகி, பத்மபூசன் விருது பெற்றவர், சந்தேகத்திற்கு அப்பாற்பட்டவர் என்பதெல்லாம் முழுப் பூசணிக்காயை சோற்றில் மறைப்பது போன்றது.
நாட்டின் 90% சொத்துக்களை வைத்துள்ள 1% பெரும்பணக்காரர்கள் முகேஷ் அம்பானி, கவுதம் அதானி, சுனில் மிட்டல், ராஜீவ் பஜாஜ்,  குமாரமங்கலம் பிர்லா போன்றவர்களும் அவர்களுக்கு லாவணிபாடும் ப.சிதம்பரம், உத்தவ் தாக்கரே, அருண் ஜெட்லி, நிதின் கட்கரி, பியுஷ் கோயல் போன்ற அரசியல் தலைவர்களும்தான் 2014ல் நடைபெற்ற சந்தா - தீபக் கொச்சார் தம்பதியினரின் மகள் திருமணத்தில் கலந்துகொண்டனராம்.
இந்திய வங்கிகளில் மூன்றாவது பெரிய வங்கியும் தனியார் வங்கிகளில் முதன்மையான வங்கியுமான அய்சிஅய்சிஅய் வங்கி சம்பந்தப்பட்ட இந்தப் பிரச்சனையை சந்தா கொச்சாரைச் சுற்றியே கொண்டு செல்வதில்தான் பெரும்பாலான ஊடகங்களும் பத்திரிகைகளும் முதலாளித்துவ கருத்தியலாளர்களும் கவனமாக உள்ளனர். கொச்சார் குடும்பத்திற்கு மட்டுமின்றி ஓடிப் போன வைர வியாபாரி மெகுல் சோக்சிக்கும் அய்சிஅய்சிஅய் வங்கி அள்ளிக் கொடுத்துள்ளது.  31 வங்கிகளில் இருந்து 52.8 பில்லியன் (5,280 கோடி) ரூபாய் கடன் மெகுல் சோக்சிக்கு தரப்பட்டுள்ளதில் முதலிடத்தில் அய்சிஅய்சிஅய் வங்கி உள்ளது. அய்சிஅய்சிஅய் வங்கி மட்டும் 405 கோடி ரூபாய் கடனாக மெகுல் சோக்சியின் கீதாஞ்சலி குழுமத்திற்கு வழங்கியுள்ளது. உண்மையில் பிரச்சனை கொச்சார் குடும்பத்தைப் போல, அம்பானி குடும்பம், அதானி குடும்பம், மிட்டல் குடும்பம், டாடா குழுமம், பிர்லா குடும்பம், சன் குழுமம், டிவிஎஸ் குடும்பம் என குடும்பம் குடும்பமாக, உழைப்பால் உயர்ந்துள்ள (!?) ஒரு சில குடும்பங்கள் தொடர்பானது. அவர்கள் சொத்துக் குவித்த விதம் தொடர்பானது. பிரச்சனை முதலாளித்துவம் தொடர்பானது.
அய்சிஅய்சிஅய் வங்கியில் இருக்கும் பணம் இந்திய மக்கள் பணம். எல்அய்சி நிறுவனம்தான் பெரும்பான்மையான பங்குகளை வைத்துள்ளது. பொதுத்துறை வங்கியான பஞ்சாப் நேஷனல் வங்கியாகட்டும், தனியார் வங்கியான அய்சிஅய்சிஅய் வங்கியாகட்டும் இவை இயங்குவது ஒட்டுமொத்த இந்திய மக்களின், உழைக்கும் மக்களின் சேமிப்புப் பணத்தில்தான். மக்கள் பணத்தை இந்த வங்கிகள் மூலம் இந்தப் பெருமுதலாளிகள் எவ்வித ஆதாரங்களும் இல்லாமல் பல்லாயிரம் கோடி, பல லட்சம் கோடி ரூபாய் கடனாகப் பெற்று தொழிலில் போட்டு அதில் வரும் வருமானத்தை தங்கள் சொந்தச் சொத்தாக மாற்றி விட்டு, வாங்கிய கடனைக் கட்டாமல் அதை வாராக் கடன் என்று அறிவிக்கச் செய்து அனுபவித்துக் கொண்டிருக்கிறார்கள்.
மோடி பிரதமர் ஆன பின்பு பொதுத்துறை வங்கிகளில் கடனை வாங்கிக் கொண்டு வேண்டுமென்றே கட்டாதவர்கள் எண்ணிக்கை அதிகமாகியுள்ளது. 2014 மார்ச்சில் 6,336 என்று இருந்தது, 2015 செப்டம்பரில் 7,265 ஆக உயர்ந்தது. 2016 டிசம்பரில் 9130 ஆக உயர்ந்து, 2017 டிசம்பரில் 9025 ஆனது. 2017 டிசம்பரில் மொத்த செயல்படாச் சொத்துக்கள் (எழ்ர்ள்ள் சர்ய்-டங்ழ்ச்ர்ம்ண்ய்ஞ் அள்ள்ங்ற்ள் (எசடஅள்) ரூ.7,33,974 கோடி. அதில் வேண்டுமென்றே கட்டாதவர்கள் தர வேண்டியது ரூ.1,01587 கோடி. 2017 டிசம்பரில் வங்கிகளில் வாராக் கடன் சுமார் ரூ.8.4 லட்சம் கோடி. இதனால் வங்கிகளைக் காப்பாற்ற அரசு, மக்கள் வரிப்பணத்தில் இருந்து ரூ.2.11 லட்சம் கோடி மறுமுதலீடு செய்துள்ளது.
அய்சிஅய்சிஅய் வங்கியின் தலைமைச் செயல் அதிகாரி சந்தா கொச்சார் மட்டுமின்றி, ஆக்ஸிஸ் வங்கியின் தலைமைச் செயல் அதிகாரி சிக்கா சர்மாவும் 2018 டிசம்பரில் பதவி விலக இருக்கிறார். அவருக்கும் இன்னும் 3 ஆண்டுகள் இருப்பினும்கூட அவர் இந்த ஆண்டு இறுதியில் பதவி விலக உள்ளார் என்கிறார்கள். கடந்த நிதியாண்டில் ஆக்ஸிஸ் வங்கியின் வாராக்கடன் ரூ.5,630 கோடி.
இப்படிப்பட்ட மோசடி வங்கிப் பணச் சூறையாடல்களுக்கு முழு உறுதுணையாக இருப்பது இந்திய ரிசர்வ் வங்கியும் இந்திய நிதி அமைச்சகமும்தான் என்கிறார் அனைத்திந்திய வங்கி அதிகாரிகள் கூட்டமைப்பின் பொதுச் செயலாளர் தாமஸ் பிராங்கோ. 1990களில் ஹர்ஷத் மேத்தா ஊழல், 2000த்தில் கேத்தன் பரேக் ஊழல் என தனி நபர்களின் ஊழல் மோசடிகளில் ஆரம்பித்து இப்போது மிகத் தெளிவாக ஒரு சில பெருமுதலாளிகள், கார்ப்பரேட் நிறுவனங்கள் வங்கிப் பணத்தை கட னாகப் பெற்றுக் கொண்டு அதைத் திருப்பிக் கட்டாமல் கபளீகரம் செய்வதுதான் இன்றைய நடைமுறை. கடந்த நிதியாண்டில் மட்டும் பஞ்சாப் நேஷனல் வங்கியில் நடந்த மோசடி ரூ.2,810 கோடி. பாங்க் ஆப் இந்தியாவில் ரூ.2,770 கோடி. பாரத் ஸ்டேட் வங்கயில் ரூ.2,420 கோடி. பாங்க் ஆப் மகாராஷ்டிராவில் ரூ.2,041 கோடி. உள்நாட்டு வங்கி துறை மோசடி வழக்குகள் 2016 - 2017 நிதியாண்டில் மட்டும் 12,553 பதிவாகியுள்ளன. இதன் மொத்த மோசடித் தொகை ரூ.18,170 கோடி. மோசடி வழக்குகளில் முதலாவதாக பொதுத் துறை வங்கியான பாங்க் ஆப் மகாராஷ்டி ராவில் அதிகபட்சமாக 3,893 மோசடி வழக்குகளுடன் முதலிடத்தில் உள்ளது. இரண்டாவ தாக தனியார் வங்கியான அய்சிஅய்சிஅய் வங்கியில் 3,359 வழக்குகளும் எச்டிஎப்சி வங்கியில் 2,319 வழக்குகளும் பதிவாகியுள்ளன என்று நிறுவன முதலீட்டு ஆலோசனை சேவை அமைப்பு (ஐய்ள்ற்ண்ற்ன்ற்ண்ர்ய்ஹப் ஐய்ஸ்ங்ள்ற்ர்ழ் அக்ஸ்ண்ள்ர்ழ்ஹ் நங்ழ்ஸ்ண்ஸ்ரீங்) கூறுகிறது. பொதுத் துறை வங்கிகளுக்கு இணையாக தனியார் வங்கிகளிலும் மோசடி ஊழல் மலிந்து கிடப்பதையே இந்த விவரங்கள் காட்டுகின்றன. தனியார்மயம், முதலாளித்துவம் என்றாலே மோசடிதான்.
நீரவ் மோடி ஹாங்காங்கில் இருந்து கொண்டு இந்தியாவிற்கு வர மறுக்கிறார். சீன அரசு நீரவ் மோடி விவகாரத்தில் ஹாங்காங் அரசின் செயலுக்கு தடை சொல்லப் போவதில்லை என்று கூறிவிட்டது. ஆனாலும் அவரை இந்தியா கொண்டு வருவதில் இழுபறி. 12,000 கோடி ரூபாய் மோசடி செய்தவரின் வெறும் ரூ.9 கோடி அளவிலான சொத்தைதான் இந்திய அரசு முடக்கியுள்ளது. பிரதமர் மோடி டிஜிட்டல் இந்தியா, பணமில்லா பரிவர்த்தனை, குழந்தைகள் சத்துணவிற்கும் ஆதார் கட்டாயம் என்று ஆகாயத்தில் மிதந்து கொண்டிருக்கிறார். எந்த ஆதாரமும் இல்லாமல் கொச்சார்களும் மோடிகளும் சோக்சிகளும் அம்பானிகளும் அதானிகளும் வங்கிகளில் இருந்து மக்கள் பணத்தை கபளீகரம் செய்து கொண்டிருக்கிறார்கள்.
முதலீடு என்று எதையும் செய்யாமல் கார்ப்பரேட்  ஆதரவு அரசாங்கங்களின் ஆதரவோடு அனுமதியோடு வங்கிப் பணத்தை, மக்கள் பணத்தை எடுத்துக் கொண்டு, பெரும் பணக்காரர்களாக பல கோடி கோடிகளில் சொத்துக்களை குவிக்கிறார்கள். மோடி சுத்தமான ஆட்சி தந்திருப்பதாக பாஜககாரர்கள் சொல்லித் திரிகிறார்கள். மோசடி மோடி அரசின் கூடாநட்பு முதலாளித்துவம் ஒழியாமல் ஒருபோதும் இந்திய மக்கள் வாழ்வில் மாற்றம் வரப் போவதில்லை. கார்ப்பரேட் மதவெறி பாசிசத்தை முறியடிப்போம். மக்கள் இந்தியா உருவாக்கப் போராடுவோம்.

Search