COMMUNIST PARTY OF INDIA (MARXIST - LENINIST) - LIBERATION

COMMUNIST PARTY OF INDIA (MARXIST - LENINIST) - LIBERATION, TAMILNADU

Tuesday, April 3, 2018

வெளிநாட்டு அமைப்புகளின் வாழ்த்துச் செய்திகளில் இருந்து

மலேசிய சோசலிச கட்சி
மலேசிய நாட்டு தேர்தல் வேலைகளில் மும்முரமாக இருப்பதால் தங்கள் கட்சி மாநாட்டில் நேரடியாக பங்குபெற முடியவில்லை.மாநாடு வெற்றி பெற வாழ்த்துகள்.

இன்றைய முதலாளித்துவ தாக்குதல், உலகம் தழுவிய நெருக்கடி என்ற பின்னணியில் சோசலிச இயக்கங்களைப் பலப்படுத்த வேண்டியது நமது உடனடி கடமையாக இருக்கிறது. வருமான இடைவெளி அதிகரித்து வருவது, வளங்களைப் பகிர்ந்து கொள்வதில் சமத்துவமின்மை, பாதுகாப்பற்ற வேலை, இனவெறி உட்பட அனைத்துப் பாகுபாடுகள், ஆணாதிக்கம் ஆகியவற்றுக்கு எதிராக போராடுவது ஆகியவை புரட்சிகர இடதுசாரிகள் முன்னுள்ள சில முக்கிய கடமைகளாகும்.......
நமது இரண்டு கட்சிகளுக்கிடையிலான உறவுகளை வளர்த்துக் கொள்ள ஆவலாய் இருக்கிறோம்.....

இந்தியாவுக்கான கியூப தூதர்
கியூப கம்யூனிஸ்ட் கட்சி சார்பாக வாழ்த்துகள்.
நாங்கள் இன்னும் மேலான பொருளாதார நிர்வாகத்துக்காக கியூப பொருளாதார, சமூக முன்மாதிரியை மேம்படுத்திக் கொண்டிருக்கிறோம். ஒருபுறம் சமூக நலத் திட்டங்களான கல்வி,  மருத்துவம், கலாச்சாரம், விளையாட்டு இன்ன பிறவற்றை அதிகரிக்கிற அதேவேளை, எங்கள் சோசலிச திட்டத்தை உறுதிப்படுத்த வும் செய்கிறோம்.
சோசலிச, செழுமை வாய்ந்த, நீடித்த சமூகத்தைக் கட்டி எழுப்புவதுதான் எங்கள் குறிக்கோள். சில வாரங்களுக்கு முன்பு மாவட்ட மட்டங்களில் நடைபெற்ற நாடாளுமன்றத்துக்கான தேர்தல்களில் 85% கியூப மக்கள்  வாக்களித்திருக்கின்றனர். இது எங்கள் அரசியல் அமைப்பை கச்சிதப்படுத்திக் கொள்ளும் எங்கள் விருப்பத்தை எடுத்துக் காட்டுவதாகும். கியூபப் புரட்சி வெற்றியின் 60ஆவது ஆண்டு தினத்தை வரும் ஜனவரி 1, 2019 அன்று இந்திய கம்யூனிஸ்ட்கள் உட்பட உலகம் முழுவதும் உள்ள நண்பர்களுடன் கொண்டாட இருக்கிறோம்.
இந்தத் தருணத்தில் அய்க்கிய அமெரிக்காவின் அநீதியான பொருளாதாரத் தடைக்கெதிராக கடந்த ஆண்டுகளில் எங்களுக்கு ஒருமைப்பாடு தெரிவித்து நின்றதற்கு நாங்கள் கடமைப்பட்டுள்ளோம்.
இந்தக் கடுமையான தருணத்தில் நடை பெறும் இகக(மாலெ)யின் போராட்டங்களுக்கு எங்கள் ஒருமைப்பாட்டை மீண்டும் தெரிவிக்கிறோம்.

கம்யூனிஸ்ட் கட்சி (ஸ்விட்சர்லாந்து)
பிரதிநிதிகளுக்கு எங்கள் கட்சியின் வாழ்த்துக்கள். பிரிக்ஸ் நாடு என்ற முறையில், இந்தியாவில் இடதுசாரிகள், கம்யூனிஸ்ட்கள் செல்வாக்கு அதிகமாவது, அய்க்கிய அமெரிக்க ஏகாதிபத்தியத்திற்கு இடையூறாகவும், பல துருவ உலகை அடையவும் முக்கியமானது......
துருக்கி பேட்ரியாட்டிக் கட்சியின் மாணவர் - இளைஞர் பிரிவு, வேன்கார்ட் யூத்
இந்தியாவில் புரட்சிகர சக்திகளுக்கு ஆழமான  வேர் உள்ளது. ஏகாதிபத்திய எதிர்ப்புப் போராட்டத்தில் சர்வதேச அளவில் நாம் ஒருவருக்கொருவர் ஆதரவு தரவேண்டும். ஏகாதிபத்தியத்திற்கு எதிராக அனைத்து முற்போக்கு சக்திகளும் தங்கள் போராட்ட பங்களிப்பை செய்ய வேண்டும்.
உங்கள் மாநாடு சோசலிசத்திற்கான போராட்டத்துக்கு வலு சேர்க்கும் என நாங்கள் நம்புகிறோம்.
மாநாடு வெற்றிபெற வேன்கார்ட் யூத் வாழ்த்துகிறது.

Search