COMMUNIST PARTY OF INDIA (MARXIST - LENINIST) - LIBERATION

COMMUNIST PARTY OF INDIA (MARXIST - LENINIST) - LIBERATION, TAMILNADU

Tuesday, April 3, 2018

இகக (மாலெ) 10ஆவது அகில இந்திய மாநாட்டில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள்

1. சமீபத்தில் மேற்கு வங்கத்திலும் பீகாரிலும் ராமநவமி என்ற பெயரில் சங்பரிவாரால் கட்டவிழ்த்து விடப்பட்ட மதவெறி வன்முறையை இந்த அரங்கு கண்டனம் செய்வதோடு திருவிழாக்களை மதவெறிமயமாக்குவது, பாசிச சக்திகள் சிறுபான்மையினர் மீது குறிவைத்து தாக்குவது ஆகியவற்றை தடுத்து நிறுத்த மக்களுக்கு அறைகூவல் விடுத்தது.

2. தனியார்மயமாக்கலுக்கு எதிராகவும், ‘சுயாட்சி’ என்ற பெயரில் மத்திய அரசாங்கத்தால் எதேச்சாதிகார அரசியல் தலையீடு திணிக்கப்படுவதற்கு எதிராகவும் போராடும் பல்கலைக்கழக மாணவர்கள் மற்றும் ஆசிரியர்களுக்கு இந்த அரங்கு ஒருமைப்பாடு தெரிவித்துக் கொள்கிறது. தனியார்மயத்துக்கு எதிராகவும், ஆசிரியர் ஒருவரின் பாலியல் துன்புறுத்தலுக்கு எதிராகவும் போராடி வரும் ஜேஎன்யு மாணவர்கள் மீது டெல்லி காவல்துறை வன்முறையை கட்டவிழ்த்துவிட்டுள்ளதை மாநாடு கண்டனம் செய்கிறது.
3. வேலைவாய்ப்பின்மை, எஸ்சி, எஸ்டி சட்டத்தை நீர்த்துப் போகச் செய்தல் மற்றும் சிபிஎஸ்ஈ தேர்வு ஊழல்களுக்கு எதிராகப் போராடும் மாணவர்கள்  இளைஞர்களோடு இந்த அரங்கு ஒருமைப்பாடு தெரிவித்து நிற்கின்ற அதே வேளை, நாட்டின் இளைஞர்கள் ஜனநாயகத்தைப் பாதுகாக்கவும், மதவெறி பாசிசத்தை முறியடிக்கவும், பகத்சிங் கனவு கண்ட இந்தியாவை நோக்கி முன்னேறுவதற்குமான ஒரு சக்தியாக எழ வேண்டும் என எதிர்பார்க்கிறது.
4. எஸ்.சி, எஸ்.டி (வன்கொடுமை தடுப்பு) சட்டம், உச்சநீதிமன்ற உத்தரவு மூலம் நீர்த்துப் போகச் செய்யப்படுவதற்கு எதிராக தலித்  குழுக்கள் அழைப்பு விடுத்துள்ள “பாரத் பந்த்க்கு ஆதரவு அளித்து ஏப்ரல் 2, 2018 அன்று தேசிய எதிர்ப்பு தினமாக கடைபிடிக்க இந்த அரங்கு அறைகூவல் விடுக்கிறது.
5. அம்பேத்கர் பிறந்த நாளை (ஏப்ரல் 14, 2018) நாடு முழுவதும் ‘அரசியல் சாசன பாதுகாப்பு நாளாக’ கடைபிடிக்க இந்த அரங்கு அறைகூவல் விடுக்கிறது.
6. நிலம் மற்றும் உணவுக்கான உரிமை, விவசாயிகள் மற்றும் தொழிலாளர்களின் உரிமைகள், தலித் துகள், சிறுபான்மையினர் மீதான மதவெறி வன்முறையை எதிர்ப்பது ஆகிய கோரிக்கைகளுக்காக ஏப்ரல் 22 முதல் மே 1 வரை நாடு முழுவதும்  ‘நடைபயணங்கள்’ நடத்த இந்த அரங்கு அறைகூவல் விடுக்கிறது.
7. தமிழ்நாட்டில், தூத்துக்குடி மாவட்டத்தில், கொடிய பன்னாட்டு நிறுவனம் வேதாந்தாவின், சுற்றுச் சூழலுக்கு கேடு விளைவிக்கும் ஸ்டெர்லைட் தாமிர உருக்காலையை மூடக்கோரி நடைபெற்று வரும் எதிர்ப்பியக்கத்துக்கு, சுற்றுச் சூழலுக்கு ஆபத்தான மீத்தேன் அகழாய்வு துரப்பணத் திட்டத்திற்கு காவிரி டெல்டா பகுதியில் துளையிடுவதை தடுக்க நடை பெறும் எதிர்ப்பியக்கத்துக்கு மாநாடு ஒருமைப்பாட்டை, ஆதரவை தெரிவிக்கிறது.
8. தேர்தல் ஜனநாயகத்தின் மீது நம்பிக்கையை ஏற்படுத்தவும், முழுமுற்றான வெளிப்படைத்தன்மையை பராமரிக்கவும் நாட்டின் தேர்தல்கள் வாக்குச் சீட்டு முறைக்கு திரும்ப வேண்டும் அல்லது வாக்கு எந்திரத்தில் பதிவான எண்ணிக்கையை கட்டாயமாக (விவிபிஎடி) கொண்டு சரிபார்க்க வேண்டும் என இந்த மாநாடு கோருகிறது.
9. பொய்யான தேசத்துரோக குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்டுள்ள ஒடிஷாவின் இகக (மாலெ) மாநிலக் கமிட்டி உறுப்பினரும், கலகந்தி மாவட்டப் பொறுப்பாளருமான தோழர் நிரஞ்சன், பிரிக்கால் தொழிலாளர்கள் தோழர்கள் மணிவண்ணன் மற்றும் ராமமூர்த்தி,  இகக (மாலெ) தோழர் பி.என்.சிங், பீம் படையின் சந்திரசேகர் ஆசாத் ராவண், மனித உரிமை செயற்பாட்டாளர் ஜி.என்.சாய்பாபா மற்றும் தோழர் கோபட் காண்டி உட்பட கொடிய சட்டங்களை பயன்படுத்தி பொய்யான குற்றச்சாட்டுகளில் தண்டனை பெற்று, கைது செய்யப்பட்டு சிறை வைக்கப்பட்டுள்ள அரசியல் கைதிகள் அனைவரையும் விடுதலை செய்ய வேண்டும் என மாநாடு கோருகிறது.
10. புகழ்மிக்க ஏகாதிபத்திய எதிர்ப்பு தேசியவாத வரலாறான ஜாலியன்வாலாபாக் படுகொலையின் நூற்றாண்டை 2019ல் அனுசரிக்க மாநாடு  உறுதியேற்கிறது.
11. கட்சியின் ஸ்தாபகரும், பொதுச் செயலாளரு மான தோழர் சாரு மஜும்தாரின் நூற்றாண்டு பிறந்த தினத்தை, ‘மக்களே முதலில்’ தேசப்பற்றுக்கான தியாகம் மற்றும் புரட்சிகர  சமூக, அரசியல் மாற்றத்துக்கான அர்ப்பணிப்பு ஆகிய மரபுகளை நினைவு கூறும் வகையில் 2019ம் ஆண்டை கடைபிடிக்க மாநாடு உறுதியேற்கிறது.
12. கார்ல் மார்க்சின் 200ஆவது பிறந்த நாளான மே 5, 2018 அன்று நாடு முழுவதும் கிராமங்கள் வரை மார்க்சின் வழிமரபை கொண்டாடும் வகையில் பேரணிகள், பிற நிகழ்ச்சிகள் நடத்த மாநாடு உறுதியேற்கிறது.

Search