COMMUNIST PARTY OF INDIA (MARXIST - LENINIST) - LIBERATION

COMMUNIST PARTY OF INDIA (MARXIST - LENINIST) - LIBERATION, TAMILNADU

Wednesday, August 16, 2017

அமித் ஷா அடி வாங்கினார்
அஸ்ஸாம் அரசு அடி வாங்கியது
மோடி கூட்டம் மேலும் மேலும் அம்பலமாகிறது

எஸ்.குமாரசாமி

குஜராத் சட்டப் பேரவையில் 182 உறுப்பினர்கள் உள்ளனர். பாரதிய ஜனதா கட்சி 2012 தேர்தலில் 116 இடங்களை வென்றது. 2007ல் 117 இடங்கள் வென்றது. அப்போதெல்லாம் மோடி, தந்திரமாகவும், சதிகள் பல செய்தும், ‘இந்து இதய சிம்மாசனத்தில்போய் அமர்ந்து கொண்டார். 2012ல் காங்கிரஸ் 57 சட்டமன்ற உறுப்பினர்களைக் கொண்டிருந்தது.

அமித் ஷா, தாமும் தேர்தல் வெற்றியும், பிரிக்க முடியாத இரட்டையர்கள் என்ற மிதப்பில் இருந்தார். ஆளுநர்கள் உதவி கொண்டும், மத்திய அதிகாரம், பணபலம் கொண்டும், கட்சித் தாவல் மூலமும், மணிப்பூர் கோவா சட்டமன்றத் தேர்தல் தோல்விகளை மூடி மறைத்து ஆட்சிகளைக் கைப்பற்றியது பாரதிய ஜனதா கட்சி. 2015ல் பீகாரில் பாஜக ஆட்சி வேண்டவே வேண்டாம் என மக்கள் தோற்கடித்தனர். 2017ல், மக்கள் தீர்ப்புக்குத் துரோகம் செய்து, நிதிஷோடு கூட்டு சேர்ந்து, ஆட்சியைப் பிடித்தது பாரதிய ஜனதா கட்சி. ஆட்சியைப் பிடிக்க மோடியும் அமித் ஷாவும் என்ன வேண்டுமானாலும் செய்வார்கள்.
ஒரு பக்கம் நிறைய தேர்தல் வெற்றிகள் பெற்றாலும், நாடாளுமன்ற சட்டமன்ற எதிர்க்கட்சிகள் மேலும் மேலும் பலவீனமானாலும், எழுகிற மக்கள் போராட்டங்கள் மீது, எப்போதுமே சங்பரிவாருக்கு அச்சம் உண்டு. அவர்கள் கோழைகள்.கூடுதலான மேலும் தீவிரமான ஒடுக்குமுறை கொண்டு, மக்கள் எதிர்ப்பைச் சந்திக்கத் தயாராகிறார்கள்.குஜராத்தில் மோடி முதல்வராக இருந்தபோது, அமித் ஷா உள்துறை அமைச்சராக இருந்த காலம் உண்டு. அப்போதுதான், மோதல் படுகொலைகள் உள்ளிட்ட பாசிச ஒடுக்குமுறைகளுக்கு, அந்த இரட்டையர் ஒத்திகைகள் பார்த்தனர். இப்போது அமித் ஷாவை எம்பியாக்கிவிட்டனர்; அவரை உள்துறை அமைச்சர் ஆக்கவும் திட்டமிடுகின்றனர் போல் தெரிகிறது. குஜராத்தில் மக்களவை தேர்தலில், பாஜக 3ல் இரண்டு இடங்கள் பெற அதற்கு எண்ணிக்கை வலிமை உண்டு. அந்த இரண்டு  இடங்களுக்கு அமித் ஷாவும் ஸ்மிருதி இரானியும் போட்டியிட்டனர். அதற்கு அடுத்து, மோடி ஆசியுடன் அமித் ஷா காய் நகர்த்தி முகத்தில் கரி பூசிக் கொண்டதும் நடந்தது.
குஜராத்தின் முக்கிய காங்கிரஸ் தலைவர் அகமது படேல். இவர் சோனியாவுக்கு நெருக்கமானவர். 57 இடங்கள் இருந்த காங்கிரஸ், எண்ணிக்கை வலிமையால் மூன்றாவது ராஜ்ய சபா இடம் குஜராத்தில் தனக்கு உறுதி என நம்பியதால், அகமது படேலைக் களம் இறக்கியது. அகமது படேல், 1977 முதல் 1989 வரை நாடாளுமன்ற மக்களவையில் இருந்தவர்; 1993 முதல் மாநிலங்களவையில் இருப்பவர். சுமார் 30 ஆண்டுகள் அனுபவம் உள்ளவர். இவரைத் தோற்கடித்துக் காட்டுவேன், 57 இடங்களுடன் நிச்சய வெற்றி வாய்ப்புள்ள காங்கிரசைத் தோற்கடித்துக் காட்டுகிறேன் என்ற உறுதியுடன் களம் இறங்கினார் அமித் ஷா.
ஊழலற்ற பாஜக ஆட்சிகள் என மோடி தம்பட்டம் அடிக்கும்போது, குஜராத் தெருக்களில், மக்கள், தங்கள் சட்டமன்ற உறுப்பினர்களின் குறைந்தபட்ச விலை ரூ.15 கோடி எனப் பேசிக் கொள்ளும் நிலை உருவானது. 22 வருடங்கள் முன்பு 1955ல் பாஜகவுக்கு எதிராக சட்டமன்ற உறுப்பினர்களை, கஜ÷ரா ஹோவுக்கு கடத்திய சங்கர் சிங் வகேலா, 2017ல் அமித் ஷாவின் ஆளானார். காங்கிரஸ் எம்எல்ஏக்களை இழுக்க உதவினார். 57, 44 ஆனது. காங்கிரஸ் 44 எம்எல்ஏக்களை பெங்களூர் அழைத்துச் சென்று ஈகிள்டன் ரிசார்டில் தங்க வைத்தது. மோடி காலத்தில், கூவத்தூர், ஈகிள்டன் ரிசார்ட்டுகள் பிரபலமாகி உள்ளன. காங்கிரசுக்கு அய்க்கிய ஜனதா தள சட்டமன்ற உறுப்பினர் ஒருவரும், தேசியவாத கட்சியின் சட்டமன்ற உறுப்பினர் ஒருவரும் வாக்களிக்க முடிவு செய்தனர். ஆத்திரக்காரனுக்கு புத்தி மட்டு! பாஜகவுக்கு வாக்களித்ததை இரண்டு காங்கிரஸ் சட்டமன்ற உறுப்பினர்கள் பாஜக தேர்தல் முகவருக்குக் காட்டியது காணொளிக் காட்சியாய்ப் பதிவானது. அவர்கள் இரண்டு பேர் வாக்குகள் செல்லாது, அதனால் வெற்றி பெற 45 வேண்டாம் 44 மட்டுமே போதும் என காங்கிரஸ் வாதாடியது.
தலைமை தேர்தல் ஆணையர் .கே.ஜோட்டி, குஜராத் முதல்வராக மோடி இருந்தபோது, தலைமைச் செயலாளராக இருந்தவர் என்பதால், வெற்றிக்கு 45 வேண்டும் காங்கிரஸ் சட்டமன்ற உறுப்பினர்கள் இரண்டு பேரின் வாக்குகளைத் தள்ளுபடி செய்யக் கூடாது என, இந்தியாவின் சட்ட அமைச்சர் ரவிசங்கர் பிரசாத்தும் இந்தியாவின் நிதி மற்றும் பாதுகாப்புத் துறை அமைச்சர் அருண் ஜேட்லியும் நேரில் சென்று வாதாடி அவர் மீது செல்வாக்கு செலுத்த முயற்சி செய்தனர். காங்கிரஸ் சார்பில் .சிதம்பரம் வாதாடினார். காங்கிரஸ் சட்டமன்ற உறுப்பினர்கள் இரண்டு பேரின் வாக்குகள் செல்லாது என தேர்தல் ஆணையம் தீர்ப்பளித்துள்ளதால், முதல் சுற்றில் 44 வாக்குகள்  பெற்றாலே 3ஆவது வேட்பாளர் வெற்றி பெறுவார் என்று ஆனது. அகமது படேல் வென்றார். அமித் ஷா ஊதிய பலூன் அவர் முகத்தில்படேல்என வெடித்தது.
2020 சட்டமன்றத் தேர்தலில் 182ல் 150 இடங்கள் பிடிப்பேன் என அமித் ஷா துள்ளிக் குதிக்கிறார். ஜிக்னேஷ் மேவானியும் தலித்துகளும், கும்பல் கொலையாளிகளுக்கு எதிராக நிற்கின்றனர். உலகமயப் பயனாளிகளான படேல்கள், இப்போது நாங்களும் பாதிப்பு அடைந்தவர்களே என ஹர்திக் படேல் தலைமையில், பாஜகவுக்கு தலைவலியாக மாறிய போராட்டங்களை நடத்துகின்றனர். அயேஷ் தாகோர் தலைமையில் இதர பிற்படுத்தப்பட்டோரும் கேள்விகள் கேட்கின்றனர். மோடி முன்வைத்த குஜராத் பாணி வளர்ச்சி கிழிந்து நார்நாராய்த் தொங்குகிறது. மோடிக்குப் பிறகு ஆனந்தி பென் படேல், விஜய் ரூபானி என இரண்டு முதலமைச்சர்களை பாஜக மாற்றிப் பார்த்துள்ளது. 2 ஆண்டுகளில் கட்சிக்கு, ஆர்சி ஃபால்டு, ரூபானி, ஜிட்டுலஹானி  என மூன்று முறை மாநிலத் தலைவர்களை மாற்றி உள்ளது. மோடியின்சாகசப் புகழ்காலங்களிலேயே காங்கிரஸ் 40% வாக்குகளைப் பெற்றுள்ளது. 2020ல், காங்கிரஸ் மிகவும் கஷ்டப்பட்டுதான் பாஜகவை குஜராத்தில் வெற்றி பெற வைக்க வேண்டும்!
வடகிழக்கில், கட்சி மாறுதல், பதவிகள் தந்து குஷிப்படுத்துதல் போன்றவை மிகவும் சகஜமான விஷயங்கள். நாகாலாந்தின் தற்போதைய முதலமைச்சர் டி.ஆர்.ஜெல்லியை 47 சட்டமன்ற உறுப்பினர்கள் ஆதரித்தனர். இவர் பதிலுக்கு, அமைச்சர்கள் போக, அமைச்சர்களுக்கு இணையான 29 சட்டமன்றச் செயலாளர்களையும் 9 ஆலோசகர்களையும் நியமித்துள்ளார். இது ஓர் உதாரணம்!
கொள்கையில் ஊறிய ஆர்எஸ்எஸ் சிஷ்யர்கள் அஸ்ஸôமில் என்ன செய்தார்கள்? 2004ல் நிறைவேற்றப்பட்ட அரசியல் அமைப்புச் சட்ட 92ஆவது திருத்தப்படி, சட்டமன்ற உறுப்பினர்களில் 15 சதத்துக்கு மேல் அமைச்சர்கள் எண்ணிக்கை இருக்கக் கூடாது. அஸ்ஸôமில் காங்கிரசில் இருந்து கட்சி மாறியவர்தான் துணை முதல் அமைச்சர். பாஜக ஆட்சி ஒரு சந்தர்ப்பவாதக் கூடாரம். அந்த முதலமைச்சர், சட்டமன்ற உறுப்பினர்களைத் திருப்திப்படுத்த, சட்டமன்றத்தில், பொறுப்பு எதுவும் இல்லாத, அதே நேரம் அமைச்சர்களுக்கு இணையான சம்பளமும் சலுகைகளும் பெறும் அந்தஸ்து உள்ள நாடாளுமன்றச் செயலாளர்கள், ஆலோசகர்கள் நியமிக்க, புது சட்டம் கொண்டு வந்தார். இந்த சட்டம் தவறு என உச்சநீதிமன்றம் சொல்லிவிட்டது.

மோடி கும்பலின் பதவி வெறியும் அதிகார போதையும் நாளும் பொழுதும் அம்பலமாகி வருகின்றன

Search