COMMUNIST PARTY OF INDIA (MARXIST - LENINIST) - LIBERATION

COMMUNIST PARTY OF INDIA (MARXIST - LENINIST) - LIBERATION, TAMILNADU

Wednesday, August 16, 2017

கோரக்பூர் குழந்தைகள் மருத்துவமனையில் குழந்தைகள் உயிரிழப்பு
யோகி ஆதித்யநாத் பதவி விலக வேண்டும்

ஆகஸ்ட் 14, நாடு தழுவிய எதிர்ப்பு நாள்

புதுதில்லி, ஆகஸ்ட் 12
கோரக்பூரில் உள்ள அரசு மருத்துவமனையில் 63 குழந்தைகள் உயிரிழந்திருப்பது நாட்டையே அதிர்ச்சிக்குள்ளாக்கியிருக்கிறது. நாடு விடுதலை பெற்று 70 ஆண்டுகள் நிறைவுறும்போது, அரசு மருத்துவமனைகள், வறியவர் வீட்டு குழந்தைகளின் மரணக் கூடங்களாக இருப்பது அவமானம்.
தமிழக இளைஞர்களிடம் இருந்து
சற்று எட்டியிருப்பது பாஜகவினருக்கு நல்லது

தமிழ்நாட்டின் இளைஞர்கள் தயாராகிவிட்டார்கள், இங்கு தாமரை மலரப் போகிறது என்று பாஜகவின் இளைஞர் அணி பேரணியில் பாஜக தலைவர்கள் சொல்லிக்கொண்டனர். அதற்காக மற்ற மாநிலங்களில் நடப்பதுபோலவே சாம பேத தான தண்டம் எல்லாம் பாஜக கையில் எடுக்கும். பாஜக அப்படி கனவு காண்பதற்கு, துரதிர்ஷ்டவசமாக ஆளும் கட்சி இடம் உருவாக்கித் தந்துள்ளது. ஆனால், தமிழ்நாட்டுக்காக பாஜக காண்கிற கனவை தமிழ்நாட்டின் இளைஞர்களும் காண்பார்கள் என்று அவர்கள் எதிர்பார்த்தால் ஏமாற்றம் கிடைக்கும்
அமித் ஷா அடி வாங்கினார்
அஸ்ஸாம் அரசு அடி வாங்கியது
மோடி கூட்டம் மேலும் மேலும் அம்பலமாகிறது

எஸ்.குமாரசாமி

குஜராத் சட்டப் பேரவையில் 182 உறுப்பினர்கள் உள்ளனர். பாரதிய ஜனதா கட்சி 2012 தேர்தலில் 116 இடங்களை வென்றது. 2007ல் 117 இடங்கள் வென்றது. அப்போதெல்லாம் மோடி, தந்திரமாகவும், சதிகள் பல செய்தும், ‘இந்து இதய சிம்மாசனத்தில்போய் அமர்ந்து கொண்டார். 2012ல் காங்கிரஸ் 57 சட்டமன்ற உறுப்பினர்களைக் கொண்டிருந்தது.
மோடியின் ஆட்சியில் கார்ப்பரேட் தொலைதொடர்பு நிறுவனங்களை கடனில் இருந்து காப்பாற்ற மீட்பு முடிப்பா?

டிசம்பர் 2016 நிலவரப்படி நாட்டின் தொலைதொடர்பு நிறுவனங்கள் ரூ.4.85 லட்சம் கோடி கடனில் உள்ளன. இந்த நிறுவனங்கள் இந்திய அரசுக்கு அலைக்கற்றை பாக்கி ரூ.3 லட்சம் கோடி தர வேண்டும். அதாவது கிட்டத்தட்ட ரூ.8 லட்சம் கோடியை விழுங்கியிருக்கிறார்கள்.கழுத்தில் நிற்கிறதா, சீரணமாகி விட்டதா என்றுதான் இனி பார்க்க வேண்டும்.
சோவியத் யூனியனில்
திரிபுவாதம் தலைதூக்கியது

முதலாளித்துவத்தில் இருந்து கம்யூனிசத்துக்கு மாறிச் செல்லும் கால கட்டம் ஒரு வரலாற்று சகாப்தத்தை பிரதிநிதித்துவப்படுத்துகிறது. இந்த சகாப்தம் நிறைவுறும் வரை, சுரண்டுபவர்கள், தவிர்க்க முடியாமல், மீள்வதற்கான நம்பிக்கையை போற்றி வளர்ப்பார்கள்; இந்த நம்பிக்கை மீள்வதற்கான முயற்சிகளாக மாறும்.
அரசாங்கங்களின் ஆசிகளோடு
கொலைகள் செய்யும் கார்ப்பரேட்மயம்

உமா கேசுக்கு 24 வயது.ஒடிஷாவைச் சேர்ந்தவர். கொல்கத்தாவின் பிரபலமான, மேல் நடுத்தர பிரிவு நோயாளிகள் எப்போதும் நிறைந்திருக்கிற எஎம்ஆர்அய் (அட்வான்ஸ்ட் மெடிகேர் அன்டு ரிசர்ச் இன்ஸ்டிடியுட்) என்ற தனியார் மருத்துவமனையில் கடந்த மூன்றரை ஆண்டுகளாக செவிலியர்.
கடந்த சில நாட்களாக கடுமையான தலை வலி இருப்பதாக சொல்லிக் கொண்டிருந்தார். அந்த மருத்துவமனையின் கண்சிகிச்சை பிரிவில் பரிசோதனை செய்து கொண்டு ஆகஸ்ட் 9, புதன் அன்று கண்ணாடியும் வாங்கினார்.
மாதவிடாய் கால விடுப்பு: பெண்ணுடல் பற்றிய கூருணர்வில் ஒரு மிகப்பெரிய முன்னேற்றம்

மும்பையைச் சேர்ந்த கல்ச்சர் மிஷின் என்ற நிறுவனம் தனது நிறுவனத்தில் வேலை செய்யும் பெண்கள் மாத விடாய் நாட்களின் முதல் நாள் ஊதியத்துடன் கூடிய விடுப்பு எடுத்துக் கொள்ள அனுமதித்து ஆணையிட்டது.
நாடு முழுவதும் பரபரப்பான விவாதத்தை எழுப்பிய இந்த நடவடிக்கையை தொடர்ந்து கேரள மாநில அரசு பெண் ஊழியர்களுக்கு அதுபோல் விடுப்பு வேண்டும் என்று கேரள காங்கிரஸ்காரர்கள் கோரிக்கை எழுப்ப கேரள முதலமைச்சர் பினரயி விஜயனும் அது பற்றி ஆலோசிப்பதாகச் சொல்லியுள்ளார்.
நினைத்தாலே இனிக்கும்

எஸ்கே

தாராபுரம் பேருந்து நிலையத்தில் கையில் காசில்லாமல் இருந்த ஒரு வாலிபர், பசிக்கு ஒரு பன்னை ஒரு கடையில் இருந்து எடுத்து சாப்பிட்டுவிட்டார்.
நினைத்தாலே கொதிக்கும்

எஸ்கே

2005 அய்தராபாத் வெடிகுண்டு வழக்கில் 10 பேர் குற்றம் சாட்டப்பட்டனர். அவர்கள் அனைவரும் ஆகஸ்டு 10, 2017 அன்று விடுவிக்கப்பட்டனர். பயங்கரவாத வழக்குகள் நம் நாட்டில் பலரைக் கடுமையாக பாதிக்கின்றன. பயங்கரவாத வழக்கில் தவறாக சிக்க வைக்கப்பட்டு குற்றம் நிரூபிக்கப்படாமல் குற்றம் சாட்டப்பட்டவர்கள் விடுதலையாகி வெளியே வந்த பல குற்ற வழக்குகளில், இதுவும் ஒன்று. தவறே இழைக்காமல் ஒரு மதத்தையோ அல்லது ஒரு சாதியையோ சார்ந்தவர் என்ற ஒரே காரணத்தினால் மட்டும், சிறை வைக்கப்பட்ட அவலம், இங்கு பல முறை நிகழ்ந்துள்ளது.
தீவிரவாதம் பற்றிய இரண்டு செய்திகள்

ஆகஸ்ட் 14 அன்று ஒரே நாளில், ஒரே பத்திரிகையில் (தினகரன்) தீவிரவாதம் பற்றி அடுத்தடுத்து இரண்டு செய்திகள் வெளியாகியுள்ளன.
ஒரு செய்தி, ‘மத்திய அரசு நடவடிக்கையைத் தாங்க முடியாமல் காஷ்மீரை விட்டு தீவிரவாதிகள் ஓடுகின்றனர்’‘அருண் ஜெட்லி பெருமிதம்எனப் பெருமிதத்துடன் பிரகடனம் செய்தது. அதே பக்கத்தில், பக்கத்திலேயே ஒரு செய்தி, ‘தீவிரவாத இயக்கங்களில் சேரும் இளைஞர் எண்ணிக்கை அதிகரிப்பு’‘7 மாதங்களில் 70 பேர் இணைந்தனர்எனச் சொல்கிறது
தமிழ்நாட்டின் விவசாயப் பகுதிகளை அழிக்கும் கொள்ளையனே வெளியேறு

ஆகஸ்ட் 9 அன்று கும்பகோணத்தில் அவிகிதொச, அஇவிமச ஆர்ப்பாட்டம்

தமிழ்நாட்டு விவசாய நெருக்கடிக்கு தீர்வு எதுவும் காணாமல் அடுத்தடுத்து தமிழக விவசாயத்தை அழிக்கும் நடவடிக்கைகளில் மத்திய மாநில அரசுகள் ஒத்திசைந்து செயல்படுவதை கண்டித்தும் கதிராமங்கலம், நெடுவாசல், சீர்காழி, கடலூர் பகுதிகளில் விவசாயத்தை ஒழித்துக் கட்டும் திட்டங்கள் கைவிடப்பட வேண்டும் என்று வலியுறுத்தியும் வெள்ளையனே வெளியேறு தினமான ஆகஸ்ட் 9 அன்று கொள்ளையனே வெளியேறு என்ற

Tuesday, August 1, 2017

தலையங்கம்

கார்ப்பரேட் கொள்ளைக்கு பலியாக்கப்பட்ட விவசாய நிலங்கள்

தமிழக மக்களின் வேலைவாய்ப்பு, நல்வாழ்வு ஆகியவை பற்றி பழனிச்சாமி அரசாங்கத்தின் அமைச்சர்களோ, சட்டமன்ற உறுப்பினர்களோ, அதிகாரிகளோ அக்கறை கொண்டவர்கள் இல்லை.
கக்கூஸ் ஆவணப் பட இயக்குநர் திவ்யபாரதிக்கு
கொலை மிரட்டல் விடுக்கப்படுவதை கண்டிக்கிறோம்

திவ்யபாரதி எடுத்த கக்கூஸ் ஆவணப் படம், மனிதக் கழிவை மனிதர் அகற்ற வேண்டிய அநீதிக்கு எதிராக, மானுட மனசாட்சியை தட்டியெழுப்பும் முயற்சிகளில் ஒன்றாக அமைந்தது. அதனால் அந்தப் படம் தமிழ்நாடெங்கும் கவனம் பெற்றது. திண்டுக்கல் அண்ணா பல்கலை கழக பொறியியல் கல்லூரியில் துப்புரவு தொழிலாளர்களை சட்டத்துக்குப் புறம்பாக நடத்தியது பற்றி ஓர் ஆவணப் படம் வெளியிட்டதாகவும், அடுத்து மாட்டிறைச்சி பற்றி ஓர் ஆவணப் படம் வெளியிட இருப்பதாகவும் ஜுலை 31 அன்று நடந்த மதுரை பத்திரிகையாளர் சந்திப்பில் தெரிவித்துள்ளார்.  
குண்டர் சட்டம் ஏவுதலும் காவல்துறை கைதுகளும் அத்துமீறல்களும்
ஜனநாயகத்தின் மீதான தாக்குதல்களே

தமிழக அரசாங்கம் பலவீனமானதால் கொடூரமான ஒடுக்குமுறை

தமிழ்நாட்டு மக்களின் வெறுப்புக்கும் சீற்றத்துக்கும் ஆளாகி உள்ள பழனிச்சாமி அரசாங்கம், பாரதிய ஜனதாவிடம் சரணடைந்து அதன் தயவில் ஒவ்வொரு நாளையும் ஓட்டிக் கொண்டிருக்கிற பழனிச்சாமி அரசாங்கம்,
பீகாரில் ஆட்சிக் கவிழ்ப்பு மற்றும் அய்க்கிய ஜனதா தளம் - பாஜக கூட்டணி
2015 மக்கள் தீர்ப்புக்கு வஞ்சகம் இழைத்தது மீதான இகக மாலெ அறிக்கை

திபங்கர், பொதுச் செயலாளர்
இகக மாலெ
 ஜுலை 28, 2017  

பீகாரில் இருந்த மகா கூட்டணி அரசாங்கத்தின் முதலமைச்சர் பதவியில் இருந்து நிதிஷ் குமார் முதலில் விலகியது, பிறகு பாஜக கூட்டணிக்கு திரும்பச் சென்று தேஜமு அரசாங்கத்தின் தலைவராக மீண்டும் ஆட்சிப் பொறுப்பேற்றது - இருபத்து நான்கு மணி நேரத்துக்குள் வேகவேகமாக நடந்த இவை யாவற்றையும் பீகாரில் ஆட்சிக் கவிழ்ப்பு நடந்தது என்றே விவரிக்க முடியும்.
தமிழக சட்டமன்ற உறுப்பினர்களுக்கு 100% ஊதிய உயர்வு

கொள்ளையர்களுக்காக கொள்ளையர்களே நடத்தும் கொள்ளையர்களின் ஆட்சி

தமிழ்நாடு சட்டமன்ற உறுப்பினர்களுக்கு 100% ஊதிய உயர்வு அறிவிக்கப்பட்டுள்ளது. இனி அவர்கள் மாதமொன்றுக்கு ஊதியமாக மட்டும் ரூ.1.05 லட்சம் பெறுவார்கள்.
டோக்லம் பிரச்சனை

அண்டை நாடுகளுடனான பிரச்சனைகளுக்கு பேச்சு வார்த்தைகள் மூலம் தீர்வு காண வேண்டும்!

உள்நாட்டு பிரச்சனைகளில் இருந்து மக்கள் கவனத்தை திசைதிருப்பி ஒடுக்குமுறை நடவடிக்கைகளை மக்களை ஏற்றுக்கொள்ள வைக்க, அண்டை நாடுகளுடன் ஏதோ ஒரு மட்டத்தில் மோதல், அல்லது தேசப் பாதுகாப்பு பிரச்சனைகள் முன்னிறுத்தப்படுவது, எல்லா நாடுகளிலும் உள்ள முதலாளித்துவ அரசாங்கங்கள் கடைபிடிக்கும் நடைமுறைதான்.
மக்கள் நலனே கட்சியின் நலன்

தோழர் சாரு ஜும்தார் நினைவு தினக் கூட்டங்கள்

மக்கள் நலனே கட்சியின் நலன் என்ற முழக்கத்துடன் தோழர் சாரு மஜ÷ம்தார் நினைவு தினமான ஜுலை 28 அன்று இகக மாலெ நாடெங்கும் பல்வேறு நிகழ்ச்சிகளைக் கட்டமைத்தது. இந்த நிகழ்ச்சிகளின் ஒரு பகுதியாக தமிழ்நாட்டின் பல்வேறு மய்யங்களில் கட்சி உறுப்பினர் கூட்டங்கள் நடத்தப்பட்டன.
அரசு நடு நிலைப் பள்ளியை மேல்நிலைப் பள்ளியாக தரம் உயர்த்தக் கோரிய
காலவரையற்ற பட்டினிப் போராட்டம் வெற்றி

அம்பத்தூர், காமராஜபுரம் பகுதியில் மக்களை ஒடுக்கும் காவல் அலுவலகமா? மக்கள் எதிர்கால நலனுக்கான பள்ளிக் கூடமா? என்ற மக்கள் போராட்டத்தின் முழக்கத்துக்கு மக்கள் எதிர்கால நலனுக்கான பள்ளிக் கூடமே என்ற விடை கிடைத்துள்ளது.
அம்பத்தூரில் டாஸ்மாக் கடையை அகற்றக் கோரிய
காலவரையற்ற பட்டினிப் போராட்டம் வெற்றி

அம்பத்தூர் ரயில்வே நிலையம் அருகில் பொதுமக்களுக்கு இடையூறாக உள்ள டாஸ்மாக் கடையை அகற்றக் கோரி பகுதி மக்கள் மே மாத இறுதியில் நடத்திய சாலை மறியல் போராட்டத்துக்குப் பிறகு அந்தக் கடை தற்காலிகமாக மூடப்பட்டு மீண்டும் இயங்கத் துவங்கியது.
இந்துத்துவ மதவெறி, சாதியாதிக்க சக்திகளால்
தோழர் மாரியப்பன் படுகொலை செய்யப்பட்டு ஓராண்டு நிறைவு

நெல்லையில் புரட்சிகர இளைஞர் கழகத்தின் கண்டன நிகழ்ச்சி

இந்துத்துவ மதவெறி, சாதியாதிக்க ரவுடிக் கும்பலால், புரட்சிகர இளைஞர் கழக தோழர் மாரியப்பன் கடந்த ஆண்டு ÷லை 20 அன்று நெல்லை பாட்டப்பத்தில் கொடூரமாக படுகொலை செய்யப்பட்டார்


மத்தியபிரதேசத்தில் திறந்தவெளியில் மலம் கழிக்கச் சென்ற ஏழை பெண்களை படம் பிடித்ததற்கு எதிர்ப்பு தெரிவித்ததற்காக கும்பலால் அடித்துக் கொல்லப்பட்ட தோழர் ஜாபர் கான் குடும்ப நிதியாக

Search