COMMUNIST PARTY OF INDIA (MARXIST - LENINIST) - LIBERATION

COMMUNIST PARTY OF INDIA (MARXIST - LENINIST) - LIBERATION, TAMILNADU

Thursday, July 13, 2017

பழனிச்சாமி அரசாங்கம் பதவி விலக வேண்டும்

நெடுவாசலில் 90 நாட்களுக்கும் மேலாக இரண்டாம் கட்டமாக போராட்டமும் கதிராமங்கலத்தில் 11 நாட்களுக்கும் மேலாக கடையடைப்பும் ஒரு மாதத்துக்கும் மேலாக போராட்டமும் நடத்திக் கொண்டிருக்கும் விவசாயிகள் தமிழக அரசு தங்கள் பிரச்சனைகளைத் தீர்க்க நடவடிக்கை எடுக்கும் என்று ஏதோ ஒரு நம்பிக்கை வைத்திருந்தாலும் அதை கை விட்டு விடலாம்.
பிரிக்கால் தொழிலாளர் போராட்டம் உணர்த்தும் செய்தி

நாடோடி

தமிழ்நாடு அரசின் தொழிலாளர் அமைச்சர் டாக்டர் நிலோஃபர் கஃபில், தொழிலாளர் துறையின் செயலாளர் அமுதா, தொழிலாளர் ஆணையர் பாலசந்திரன் ஆகியோர் 03.07.2017 அன்று பிற்பகல் 2 மணி வாக்கில் ஏஅய்சிசிடியு தேசியத் தலைவர் தோழர் எஸ்.குமாரசாமி, அனைத்திந்திய விவசாய கிராமப்புற தொழிலாளர் சங்க மாநில பொதுச் செயலாளர் தோழர் ஜானகிராமன், ஜனநாயக வழக்கறிஞர்கள் சங்க அமைப்பாளரும் புரட்சிகர இளைஞர் கழகத் தின் தேசியச் செயலாளருமான தோழர் பாரதி, கோவை மாவட்ட  பிரிக்கால் தொழிலாளர்கள் ஒற்றுமைச் சங்கத்தின் தலைவர் தோழர் நடராஜன் ஆகியோரைச் சந்தித்து பேச்சுவார்த்தைகள் நடத்தினார்கள்.
தோழர் எஸ்.குமாரசாமியிடம் ஒரு கேள்வி

கேள்வி: வெளியாட்கள் நிர்வாகத்திற்கு எதிராக சுமுக உறவுக்கு எதிராக வேலை செய்வதாக, நிறுவனம் பற்றி தவறான தகவல்கள் பரப்புவதாக, கட்சி வளர்ப்பதற்காக தொழிலாளர்களைப் பயன்படுத்துவதாக, பிரிக்கால் நிர்வாகம் புகார் சொல்கிறதே?
மோடியின் இஸ்ரேல் பயணமும்
வெறுப்பரசியல் வியாபாரிகளின் சந்திப்பும்

எஸ்.குமாரசாமி

ஆய கலைகள் அறுபத்து நான்கும் கற்றவர்ஆகச் சிறந்தவராகக் கருதப்படுவாராம். மோடிக்கு எவ்வளவு கலைகள் தெரியும் என, நமக்குத் தெரியவில்லை. வாய் ஓயாமல் பேசிக் கொண்டே இருக்கவும் செய்வார். பற்றி எரியும் பிரச்சனைகளில் வாயைத் திறக்காமலேயும் இருப்பார். பிரதமர் ஆனபிறகு, 64 நாடுக ளுக்குச் சென்று வந்துள்ள மோடி, விளம்பர மாடல்கள் போல் போஸ் கொடுப்பதில் நிபுணர்.
சங்பரிவாரின் இந்துத்துவ வெறியாட்டத்தை தமிழ்நாட்டில் அனுமதிக்கக் கூடாது

2010 முதல் 2017 வரை மாட்டிறைச்சி மற்றும் மாடு தொடர்பான 63 வன்முறைச் சம்பவங்களில் கொல்லப்பட்ட 28 பேரில் 86% பேர் இசுலாமியர்கள். இந்த வன்முறைச் சம்பவங்களில் 97% மோடி பிரதமரான பிறகு நடந்தவை. இந்தச் சம்பவங்களில் 126 பேர் கடுமையான காயங்களுக்கு உள்ளானார்கள். இந்தத் தாக்குதல் சம்பவங்களில் பாதிக்கும் மேற்பட்டவை வெறும் வதந்திகளின் அடிப்படையில் நடந்தவை. இந்தியா ஸ்பென்ட் என்ற இணையதளம் நாளிதழ்களில் வந்த செய்திகள் அடிப்படையில் இந்த விவரங்களை தொகுத்து வெளியிட்டுள்ளது.
டெல்டா மாவட்டங்களில் இருந்து ஓஎன்ஜிசி வெளியேற வேண்டும்!
விவசாய நெருக்கடிக்கு தீர்வு வேண்டும்!

ஆர்.வித்யாசாகர்

குடிக்கத் தண்ணி இல்ல; ஆக்கச் சோறு இல்ல, எதுக்கு சார் எண்ணெய்?’
மக்களே இல்லாமல் போனதுக்கப்புறம் யாருக்கு சார் வேணும் பெட்ரோலும் காஸும்?’  
வீட்டு வாசல்ல போலீஸ்காரங்க முகத்திலதான் முழிக்க வேண்டியிருக்கு
ஆண்கள், பெண்கள்  குழந்தைகள், சாதி, மத வேறுபாடு இல்லாமல் கதிராமங்கலத்து மக்கள் அனைவரும் குமுறுகிறார்கள்.
இரண்டாம் உலகப் போருக்கு பின்
சோவியத் மறுகட்டுமானம்

அய்க்கிய அமெரிக்காவின் அணுகுண்டு தாக்குதல், உலகில் அணுஆயுதப் போட்டிக்கு வித்திட்டது.
உலகின் மிகவும் சக்திவாய்ந்த ராணுவமாக கருதப்பட்ட செம்படையில் போர் முடியும்போது இருந்தவர்கள் எண்ணிக்கை 1 கோடியே 14 லட்சம். 1950ல் அந்த எண்ணிக்கை 30 லட்சம் என குறைந்தது. நாட்டு மக்கள் ஆற்றல், போரால் சிதைந்திருந்த நாட்டின் புனர்நிர்மாண பணிகளில் செலுத்தப்பட்டது.
ஜிஎஸ்டி வரிவிதிப்பை ரத்து செய்!

ஜிஎஸ்டி வரிவிதிப்பை எதிர்த்து தமிழ்நாட்டில் விசைத்தறி முதலாளிகள் விசைத்தறி கூடங்களை மூடி போராட்டம் நடத்தி வருகின்றனர். இதனால், விசைத்தறித் தொழிலாளர்கள் வாழ்வாதாரம் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளது. விசைத்தறித் தொழிலாளர்களின் வாழ்வாதாரத்தைப் பாதிக்கும் ஜிஎஸ்டி வரிவிதிப்பை ரத்து செய்யக் கோரியும் ஜிஎஸ்டி வரிவிதிப்பால் பாதிக்கப்பட்டுள்ள விசைத்தறித் தொழிலாளர்களுக்கு ரூ.10,000 நிவாரணம், 50 கிலோ அரிசி மற்றும் பருப்பு, எண்ணெய் போன்ற அத்தியாவசிய உணவுப் பொருட்கள் விலையின்றி வழங்க வேண்டும் என வலியுறுத் தியும் நாமக்கல் மாவட்டத்தின் குமாரபாளையத்தில் விசைத்தறித் தொழிலாளர்கள் தொகுதி சட்டமன்ற உறுப்பினர் அலுவலகத்தை ஜுலை 9 அன்று முற்றுகையிட்டனர்.

Saturday, July 1, 2017

தலையங்கம்

நீதிமன்றத் தீர்ப்புக்களும் கட்சிகளின் செயல்பாடுகளும்

தமிழ்நாட்டில் சமீபத்தில் உயர்நீதிமன்றம் வழங்கியுள்ள இரண்டு தீர்ப்புக்கள் ஜனநாயகத்தின் வேரில் நச்சு கலக்கும் தன்மை கொண்டவை. மாண்புமிகு நீதிபதிகள் நல்ல எண்ணத்தோடு, நோக்கத்தோடு தீர்ப்பு எழுதுவதாக கருதியிருக்கலாம். ஆனால், நரகத்துக்கான பாதை பல நேரங்களில் நல்லெண்ணங்களால் போடப்படுகிறது.
மோடி ஆட்சியின் ஜிஎஸ்டி எனும் சூதாட்டத்தில் நாட்டின் வறிய மக்களுக்குத்தான் கூடுதல் சுமை

ஜிஎஸ்டி வரி விதிப்பால் விலைகள் உயராது என்று மத்திய வர்த்தக அமைச்சர் நிர்மலா சீதாராமன் சொன்னார். பாஜக ஆட்சியில் நாட்டு மக்களுக்கு நல்லது நடக்க வாய்ப்பே இல்லையே? பிறகு விலை உயராமல் எப்படி...? ஆடம்பரக் கார்களின் விலை ரூ.1.25 லட்சத்தில் இருந்து ரூ.7 லட்சம் வரை குறைகிறது. சாதாரண கார்களின் விலையும் ரூ.5,000 முதல் ரூ.75,000 வரை குறையும். நிர்மலா சீதாராமன் சொல்வது உண்மை! அறிவு கெட்ட விவசாயி... தற்கொலை செய்துகொள்கிறானே... மோடியின் ஆட்சியில் நல்ல காலம் வந்துவிட்டதல்லவா? ஆடம்பரக் கார் வாங்குவதை விட்டுவிட்டு உயிரை விட்டுவிடுகிறான்....
கோவையில் டேவிட்டுக்கும் கோலியாத்துக்கும் மீண்டும் சண்டை

கோவையில் டேவிட்டுக்கும் கோலியாத்துக்கும் மீண்டும் சண்டை. டேவிட் கையில் அன்று இருந்த அதே கவண்தான் இன்றும் இருக்கிறது. கோலியாத் அன்று போலவே இன்றும் விவரமற்றவனாகவே இருக்கிறான். எனவே டேவிட்தான் இந்தச் சண்டையிலும் வெல்வான்.
ஜாபருக்கு நீதி வேண்டும்!
பெரும்பான்மைவாதத் திமிருடன் கொடுமைப்படுத்துவதில் இருந்து விடுதலை வேண்டும்!

முகமது அக்லக், மஜ்லும் அன்சாரி, இம்தியாஸ் கான், பேலு கான், ஷேக் நயீம், முகமது ஹலீம், முகமது சஜ்ஜத், உத்தம் வர்மா, கணேஷ் குப்தா...... இந்த வரிசையில் இன்று ஜாபர் உசேன். வசுந்தரா ராஜேயின் ராஜஸ்தானில் கடந்த மூன்று மாதங்களில் அடுத்தடுத்த நடந்த இரண்டு கும்பல் வன்முறை படுகொலைகளில் இது இரண்டாவது படுகொலை.
ராஜஸ்தானின் ஏழை பெண்களின் கவுரவத்தை பாதுகாக்கும் போராட்டத்தில் தோழர் ஜாபர் கொல்லப்பட்டார். அவரைப் போலவே, அவரது குடும்பமும் இருக்கிறது. ராஜஸ்தான் அரசு கொடுத்த ரூ.2 லட்சம் இழப்பீட்டை பெற்றுக் கொள்ள தோழர் ஜாபரின் மனைவி ரஷீதா, அவரும் கட்சி உறுப்பினர், மறுத்துவிட்டார். தோழர் ஜாபர் படுகொலைக்கு நீதி வேண்டும் என்பதில் அவர் உறுதியாக இருக்கிறார்.
இந்த கடினமான காலங்களில் தோழர் ஜாபரின் குடும்பம் இந்திய ஜனநாயகத்தைக் காக்கும் போராட்டத்தில் பெரும் பங்கு ஆற்றியுள்ளது.
இப்போது இது நமது கடமையைச் செய்வதற்கான நேரம். தோழர் ஜாபருக்கு இரண்டு மகள்கள் உள்ளனர். ஒருவருக்கு திருமணமாகிவிட்டது. இளைய மகள் பத்தாம் வகுப்பு படிக்கிறார். ஓர் அடையாள நடவடிக்கையாக, அவரது படிப்பு செலவுகளுக்காக நாம் நிதி திரட்டலாம். நிதியளிக்கலாம். நிதியளிக்க விரும்புபவர்கள் தோழர் ரஷீதாவின் வங்கி கணக்குக்கு நேரடியாக தங்கள் பங்களிப்பை அனுப்பலாம்.
வங்கி விவரங்கள் பின்வருமாறு:
வங்கியின் பெயர்: BARODA RAJASTHAN KSHETRIYA GRAMEEN BANK
கிளை: PRATAPGARH
கணக்கு வைத்திருப்பவர் பெயர்: RASHIDA BEE, W/O JAFAR KHAN

வங்கிக் கணக்கு எண்: 42310100020101. அய்எஃப்எஸ்சி: BARB0BRGBXX
சோவியத் ரஷ்யா இரண்டாம் உலகப் போரை எதிர்கொள்ள நேர்ந்தது

நிறைவு பகுதி

1945 ஏப்ரலில் மேற்கு முனையில் மட்டும் அச்சு நாடுகளின் படையினர் 15 லட்சம் பேர் நேச நாடுகளிடம் சரணடைந்தனர். கிழக்கு முனையில் 8 லட்சம் பேரும் இத்தாலியில் ஜெர்மானிய போர் வீரர்கள் 1,20,000 பேரும் சரணடைந்துவிட்டனர். போர்க் குற்றவாளிகள் பலர் தப்பிச் சென்றனர்.
ஜெர்மனியில் சித்திரவதை முகாம்களிலும் கட்டாய உழைப்பு கூடங்களிலும் இருந்தவர்கள் விடுவிக்கப்பட்டனர்.
சர்வதேச உறவுகளும் கத்தார் நடப்புகளும்

எஸ்.குமாரசாமி

ஒரே நேரத்தில், வளர்ந்த நாடுகளில், கூலி உழைப்புக்கும் மூலதனத்திற்கும் இடையிலான முரண்பாடு தீவிரமடைகிறது; ஏகாதிபத்தியத்துக்கும் மூன்றாம் உலக நாடுகளுக்கும் இடையிலான முரண்பாடும் தீவிரமடைகிறது.
இஸ்ரேல் சிறைகளில் பாலஸ்தீன போராளிகள் 
ஏப்ரல் 17 முதல் காலவரையற்ற பட்டினிப் போராட்டம்

எஸ்.குமாரசாமி

இஸ்ரேல் ஆக்கிரமிப்பிற்கு எதிராகப் போராடி, இஸ்ரேலிய உயர் பாதுகாப்பு சிறைகளில் ஆண்டுக்கணக்கில் அடைக்கப்பட்டுள்ள 1500 போராளிகள் ஏப்ரல் 17, 2017 முதல் கால வரையற்ற பட்டினிப் போராட்டம் நடத்தி வருகின்றனர். 300 குழந்தைகள் உட்பட 6500 பாலஸ்தீனர்கள் இஸ்ரேலிய சிறைகளில் உள்ளனர்.

Search