COMMUNIST PARTY OF INDIA (MARXIST - LENINIST) - LIBERATION

COMMUNIST PARTY OF INDIA (MARXIST - LENINIST) - LIBERATION, TAMILNADU

Thursday, June 15, 2017

தலையங்கம்

மாணவர்களை, பெற்றோர்களை துன்புறுத்தும் மத்திய மாநில அரசுகள்

தனக்கு என்ன கிடைக்கும் என்பதைத் தவிர வேறு எது பற்றியும் அக்கறை காட்டாத அமைச்சர்கள் தமிழ்நாட்டை ஆட்சி செய்துகொண்டிருக்கிறார்கள் என்று நமக்குத் தெரியும். ஆனால், அதை சற்றும் வெட்கம் இல்லாமல், இப்படி வெளிப் படையாக, நாடே கைகொட்டி சிரிக்கும்படி செய்வார்கள் என்று நாம் எதிர்ப்பார்க்கவில்லை என்பது உண்மைதான்.
மத்தியபிரதேசத்தில் போராடுகிற விவசாயிகள்
படுகொலை செய்யப்பட்டதை இகக மாலெ கண்டிக்கிறது

ஜுன் 6, 2017 அன்று மத்தியபிரதேசத்தின் மன்சார் மாவட்டத்தில் போராட்டத்தில் ஈடுபட்ட அய்ந்து விவசாயிகள் துப்பாக்கிச் சூட்டில் படுகொலை செய்யப்பட்டதற்கும் பலர் படுகாயம் அடைந்ததற்கும் மத்தியபிரதேச அரசை இகக மாலெ கண்டிக்கிறது. நாடு முழுவதும் விவசாயிகள் போராடிக் கொண்டிருக்கின்றனர்.
சங் பரிவாரின் பொற்காலம்?

எஸ்.குமாரசாமி

மோடியின் ஆட்சி மத்தியில் வந்து 3 ஆண்டுகள் முடிந்துவிட்டன. இந்தியாவில் ஆகக்கூடுதல் மக்கள் வாழும் உத்தரப்பிர தேசத்தில், காவி உடையணிந்த, தலையை மொட்டை அடித்துக் கொண்ட ஒரு சாமியார், கோரக்பூர் மடாதிபதி யோகி ஆதித்யநாத், முதல்வராகிவிட்டார்.
வாராது போல வந்த பாஜகவின் மாமணிகள்

மாமணி 1: பாஜக மத்திய அமைச்சர் வெங்கய்யா நாயுடு சமீபத்தில், தனது டிவிட்டர் செய்தி ஒன்றில் கோபாலகிருஷ்ண கோகலே பற்றிய செய்தியைப் போட்டு பாலகங்காதர திலகரின் நிழற்படத்தைப் போட்டிருந்தார். இவர் பெரிய அறிவாளி என்று கருதப்படுகிறார். ஆங்கில இந்து நாளேட்டில் அவரது கட்டுரைகள் அடிக்கடி வெளியாகின்றன. அந்தக் கட்டுரைகளில் அவர் சொல்வதெல்லாம் உண்மை என்று நாம் நம்ப முடியுமா?
நக்சல்பாரி தோற்றுவிட்டதா?
இடதுசாரி இயக்கத்திற்கு எதிர்காலம் கிடையாதா?

எஸ்.குமாரசாமி

நக்சல்பாரி இயக்கம் தோன்றியதன் 50ஆவது ஆண்டை (1967 - 2017), சோவியத் புரட்சியின் நூறாவது ஆண்டை (1917 - 2017), இந்திய கம்யூனிஸ்ட்  கட்சி (மார்க்சிஸ்ட் - லெனினிஸ்ட்) அனுசரித்துக் கொண்டிருக்கும் போது, நக்சல்பாரி தோற்றுப்போன இயக்கம், இடதுசாரிகளின் காலம் முடிந்துவிட்டது என்ற குரல்களும் ஓங்கி ஒலிக்கத்தான் செய்கின்றன.
சோவியத் ரஷ்யா
இரண்டாம் உலகப் போரை எதிர்கொள்ள நேர்ந்தது

பகுதி 2

ஏகாதிபத்தியத்துக்கும் சோசலிசத்துக்கும் இடையிலான போர் தவிர்க்க முடியாதது....
முதலாளித்துவத்தால் சூழப்பட்டுள்ள சோசலிசம் ஏகாதிபத்திய நாடுகளால் தாக்கப்படும் ஆபத்துகள் எப்போதும் இருக்கும்....
உலகின் முதல் சோசலிச குடியரசான சோவியத் குடியரசை பாதுகாப்பது பாட்டாளி வர்க்கத்தின் கடமை....
 இந்த அம்சங்களை சோவியத் பாட்டாளி வர்க்கத்திடம் லெனினும் ஸ்டாலினும் தொடர்ந்து வலியுறுத்தி வந்தனர்.
காஷ்மீரில் என்ன நடக்கிறது?’

அகில இந்திய மக்கள் மேடையின் அரங்கக் கூட்டம்

அகில இந்திய மக்கள் மேடையும், உழைக்கும் மக்கள் மாமன்ற தொழிற்சங்கமும் இணைந்து காஷ்மீரில் என்ன நடக்கிறது?’ என்ற தலைப்பில் சென்னை உழைக்கும் மக்கள் மாமன்ற அலுவலகத்தில் ஜுன் 5, 2017 அன்று அரங்கக் கூட்டம் நடத்தியது.
டாஸ்மாக் கடை யை மூடக் கோரி இகக மாலெ தலைமையில் அம்பத்தூர் பகுதி மக்கள் சாலை மறியல்

அம்பத்தூர் ரயில் நிலையத்துக்கு மிக அருகில் உள்ள டாஸ்மாக் கடையை அகற்ற ஜுன் 10 அன்று தயாரிப்பு கூட்டம் நடத்தப்பட்டது. இந்தக் கடை இங்கு பல ஆண்டுகளாக இருக்கிறது. இது புதிதாக வந்த கடை அல்ல. ரயில் நிலையத்துக்கு மிக அருகில் இருப்பதால் பகுதி மக்களுக்கு எல்லா விதங்களிலும் பெரும் இடையூறாகவே இந்தக் கடை இயங்கி வந்தது.
ஜுன் 8, மாநிலம் தழுவிய எதிர்ப்பு நாள்

மத்தியபிரதேசத்தில் போராடுகிற விவசாயிகள் படுகொலை செய்யப்பட்டதை கண்டித்தும்
நீட் தேர்வை இந்தியை திணிக்கின்ற, மாட்டுக்கறி விற்பதை உண்பதை தடை செய்கின்ற
தமிழ்நாட்டு மக்களின் வாழ்வுரிமைகளைப் பறிக்கின்ற
மதவாத பாசிச மத்திய அரசைக் கண்டித்தும், மண்டியிடுகிற மாநில அரசைக் கண்டித்தும்
மார்க்சிஸ்ட் லெனினிஸ்ட் கட்சி ஆர்ப்பாட்டம்

நீட் தேர்வை இந்தியை திணிக்கின்ற, மாட்டுக்கறி விற்பதை உண்பதை தடை செய்கின்ற, தமிழ்நாட்டு மக்களின் வாழ்வுரிமைகளைப் பறிக்கின்ற மதவாத பாசிச மத்திய அரசைக் கண்டித்தும் மண்டியிடுகிற மாநில அரசைக் கண்டித்தும் இகக மாலெ ஜுன் 8 அன்று தமிழ்நாடு தழுவிய எதிர்ப்பு நாள் கடைபிடித்தது. கோவை, சென்னை, நெல்லை, புதுக்கோட்டை, திருவள்ளூர், குமரி, கடலூர், நாமக்கல் ஆகிய மாவட்டங்களில் ஆர்ப்பாட்டங்கள் நடத்தப்பட்டன.
ஜனநாயக வழக்கறிஞர் சங்கத்தின் மாட்டுக் கறி உண்ணும் போராட்டம்

இறைச்சிக்கு மாடுகளை விற்பதற்கு மத்திய அரசு தடை விதித்துள்ளதைக் கண்டித்தும் மாட்டுக் கறி விழா நடத்திய சென்னை அய்அய்டி மாணவர் சூரஜ் மீது காவிக் காலிகள் நடத்திய தாக்குதலைக் கண்டித்தும் தாக்குதல் நடத்திய காவி காலிகள் மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தியும் ஜுன் 1 அன்று சென்னை உயர்நீதிமன்ற வளாகத்தில் ஜனநாயக வழக்கறிஞர் சங்கம் மாட்டுக் கறி உண்ணும் போராட்டம் நடத்தியது.

Thursday, June 1, 2017

டாஸ்மாக் கடைகளை மூடக் கோரிய
இகக மாலெ போராட்டங்கள் வெற்றி 

பழ.ஆசைத்தம்பி
ஜீவா புகழ்வேந்தன்

புதுக்கோட்டையில்

உச்சநீதிமன்ற உத்தரவின்படி மூடப்பட்ட டாஸ்மாக் கடைகளை மீண்டும் திறக்க எடப்பாடி பழனிச்சாமி அரசு அனைத்து நடவடிக்கைகளும் மேற்கொண்டு வருகிறது. ஒரு பகுதியில்  விளைநிலத்தின் மத்தியில் கூட டாஸ்மாக் கடை திறக்கப்பட்டது. மூடப்பட்ட கடைகள் வேறு இடங்களில் திறக்கப்படக் கூடாது என வலியுறுத்தி மக்கள் போராட்டங்கள் வலுக்கின்றன.
தலையங்கத்துக்குப் பதிலாக

மாட்டுக்கறி எனது உரிமை

சுகிர்தராணி

மாட்டுக்கறியே என் வாழ்க்கை
மாட்டுக்கறியே என் கொண்டாட்டம்
மாட்டுக்கறியே என் திருவிழா
மாட்டுக்கறியே என் வாழ்வு
மாட்டுக்கறி விழா ஏற்பாடு செய்த சென்னை அய்அய்டி மாணவர் சூரஜ் மீது இந்துத்துவா குண்டர்கள் நடத்திய தாக்குதலை கண்டிக்கிறோம்.

தமிழக அரசே!

தாக்குதல் நடத்திய எபிவிபி குண்டர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடு.
தாக்கப்பட்ட மாணவருக்கு
உரிய சிகிச்சை வழங்கு
பொருத்தமான நட்ட ஈடு வழங்கு

பெரியார் வளர்த்த தமிழ்நாட்டில்
காவிக் கும்பல் ஊடுருவலை
பார்ப்பனீய ஆதிக்கத்தை வளர விடாதே
கொலைகார மோடி தலைமையிலான

மத்திய அரசின் முன் மண்டியிடாதே
நக்சல்பாரி நாயகர்கள்

விவசாயிகளுக்காக உங்கள் கட்சி என்ன செய்தது, கட்சியை வளர்ப்பதுதான் சங்கத்தின் நோக்கமாக இருக்கிறதே தவிர, தொழிலாளர்கள் பற்றி சங்கத்துக்கு சற்றும் அக்கறை இல்லை என்று பிரிக்கால் நிர்வாகம் சொன்னது.
செவ்வணக்கம்
தோழர் கொகன் மஜும்தார்!
2017, மே 29 அன்று தோழர் கொகன் மஜும்தார் நம்மை விட்டுப் பிரிந்தார். அப்போது நக்சல்பாரியின் அய்ம்பதாவது ஆண்டு நிறைவை நாம் சிலிகுரியில்  அனுசரித்துக் கொண்டிருந்தோம். இந்த அய்ம்பது ஆண்டு காலமும் தோழர் கொகன் மஜும்தார் தன்னாலான அனைத்தையும் புரட்சிகர கம்யூனிஸ்ட் இயக்கத்துக்குத் தந்தார். நக்சல்பாரி துவங்கும் முன்னரே அவர் அந்தப் பணியில் இருந்தார். நக்சல்பாரியை வடிவமைத்த சிற்பிகளில் அவரும் ஒருவர். தனது வாழ்வின் இறுதி வரை இகக மாலெயின் கடப்பாடு கொண்ட தலைவராக, உண்மையிலேயே மக்கள் நலன்களை பாதுகாப்பவராக அவர் இருந்தார். உத்வேகம் தரும் அவரது மரபுக்கு தலை வணங்கும், அதே நேரம் நிறைவுறாத அவரது லட்சியத்தை முன்னெடுத்துச் செல்ல, இந்திய மக்களின் ஜனநாயக உரிமைகளும் விருப்பங்களும் எதிர்கொள்கிற  பாசிச அச்சுறுத்தலை எதிர்கொள்ள நம்மாலான அனைத்தையும் செய்ய உறுதியேற்போம்.
அதிகபட்ச தலைவரின் ஆட்சியில் புதிய இந்தியா

அந்தாரா தேவ் சென்

(2017, மே 24 தேதிய டெக்கான் கிரானிக்கிள் நாளிதழில் வெளியான கட்டுரை)

நம்புவதா? வேண்டாமா?.... மோடியின் மூன்று ஆண்டு கால ஆட்சி முடிவுறும்போது வாழ்க்கை அழகாக இருப்பதாக நமக்குச் சொல்லப்படுகிறது. ஊழல் ஒழிக்கப்பட்டுவிட்டது, சீர்திருத்தங்கள் மக்கள் வாழ்க்கையை உயர்த்திவிட்டன, நாம் இப்போது ஒரு சுத்தமான இந்தியாவில், அழகான இந்தியாவில் வாழ்கிறோம், நமக்கு வேலை இருக்கிறது, உணவு இருக்கிறது, பொருளாதார வளர்ச்சி இருக்கிறது, நாம் கூடுதல் செல்வங்களை உருவாக்குகிறோம், எனவே விவசாயிகள் முதல் ஆலை அதிபர்கள் வரை கொண்டாடுவோம் என்று சொல்லப்படுகிறது. மோடி நமது அதிகபட்ச தலைவர் என்று, அவர் இந்தியாவை வளர்ச்சிப் பாதையில் தீர்மானகரமாக செலுத்தியுள்ளார் என்று சொல்லப்படுகிறது
போக்குவரத்துத் தொழிலாளர் போராட்டத்தில் வெளிப்பட்ட
நாம் எதிர் அவர்கள்

உலகெங்கும் வலதுசாரி சக்திகள் ஆட்சிகளைக் கைப்பற்றுகிறார்கள். உழைக்கும் மக்களை ஒருவருக்கு எதிராக ஒருவரை நிறுத்தி சமூக வாழ்வின் பல தளங்களிலும் பதட்டம் தணியாமல் பார்த்துக் கொள்கிறார்கள். ஆட்சியைப் பிடிக்கும் முயற்சியில் மிக அடிப்படையாக அவர்களுக்கு கைகொடுப்பது இல்லாத ஓர் எதிரியை இருப்பதாக திரும்பத் திரும்பச் சொல்வதுதான். அய்க்கிய அமெரிக்காவின் புஷ்ஷுக்கு அது பேரழிவு ஆயுதங்கள் என்றால் இந்தியாவின் மோடிக்கு எல்லை தாண்டிய பயங்கரவாதம், மாட்டிறைச்சி என்று பலவித வேறுபாடுகள். நாம் எதிர் அவர்கள் என்ற வலதுசாரி உத்தி, சமீப காலங்களில் அவர்களுக்கு வெற்றியும் செல்வாக்கும் தேடித் தந்துள்ளது.
சத்திரிய கதாநாயகன் பாகுபலி

சாதிகளால் பிளவுண்டபெருமைமிகு இந்து குலத்தை ஒன்றுபடுத்த வந்தவர் பாகுபலி

ஜி.சம்பத்

பசு சுற்றுவட்டாரப் பகுதி என்று அழைக்கப்படுகிற வட மாநில பார்வையாளர்களை, தங்களுக்கு நன்கு அறிமுகமான ஒரு நாயகர் கூட இல்லாத பாகுபலி எப்படிக் கவர்ந்தது என்று எல்லோருக்கும் ஆச்சரியமே.
இந்தப் படத்தின் பிரசித்திக்குப் பல காரணங்கள் இருந்தாலும், ‘அமர் சித்ர கதாஎன்ற புனைவை திரைக்கதையாக சொன்னவிதம், 3 மணி நேரம், நிஜ அனுபவமாக பார்வையாளர்களை அதில் மூழ்கடித்தது.
தமிழக இளைஞர்கள் நிரந்தரமாக நிரந்தரமற்ற தொழிலாளர்களா?

நீதி கேட்டு புரட்சிகர இளைஞர் கழகம் சிறை நிரப்பும் போராட்டம்

தமிழகத்தின் இளைஞர்கள் பன்னாட்டு, இந்நாட்டு தொழில் நிறுவனங்களில் நிரந்தரமற்ற தொழிலாளர்களாக, பாதுகாப்பற்ற வேலை நிலைமைகளில் கடுமையான சுரண்டலுக்கு உட்படுத்தப்படும் நிலைமைகளில் ஓரளவு மாற்றம் கொண்டு வரக்கூடிய நிலையாணைகள் திருத்தச் சட்டம் அமலாக்கப்பட வேண்டும் என்பது உள்ளிட்ட கோரிக்கைகளை
மக்களை ஒடுக்கும் காவல்நிலையமா?
மக்கள் எதிர்கால நலனுக்கான பள்ளிக் கூடமா?

அம்பத்தூரில் காலவரையற்ற பட்டினிப் போராட்டம்

உபரி மக்கள் தொகை கொட்டப்படும் இடங்களாக நகரங்கள் ஆக்கப்படுகின்றன. இப்படி ஏற்கனவே வந்து சேர்ந்த ஒரு தலைமுறை அம்பத்தூரில் வாழ்கிறது. அந்தத் தலைமுறையினர் அம்பத்தூர் தொழிற்பேட்டையில் வேலை வாய்ப்பு பெற்றனர். பெருவாழ்வு இல்லை என்றாலும் சிறுவாழ்வாவது வாழ்ந்தனர். பெரும்புயலாய் வீசிய உலகமயம் வேலையை, வருமானத்தை, வாழ்க்கையைப் பறித்தது. ஆலைகளில் வேலை செய்துகொண்டிருந்தவர்கள் தற்காலிக, ஒப்பந்த வேலைகள், பாதுகாப்புப் பணிகள், சிறுசிறு சொந்த தொழில்முனைவுகள் என்று சிதைந்து போனார்கள். ஆனாலும் அம்பத்தூரை விட்டு அவர்கள் அகற்றப்படவில்லை.

Search