COMMUNIST PARTY OF INDIA (MARXIST - LENINIST) - LIBERATION

COMMUNIST PARTY OF INDIA (MARXIST - LENINIST) - LIBERATION, TAMILNADU

Monday, May 15, 2017

தலையங்கம்

தமிழக மாணவர்களின் சுயமரியாதையை விலை பேசுகிற அஇஅதிமுக ஆட்சி

தமிழ்நாட்டில் நீண்ட காலத்துக்குப் பிறகு இப்போதுதான், சில மாதங்களாகத்தான் தமிழக அமைச்சர்கள் நிமிர்ந்து நிற்கிறார்கள்; நடக்கிறார்கள். இப்போது எந்த கார் டயருக்கும் அவர்கள் வணங்கி வணக்கம் சொல்வதில்லை. ஜெயலலிதாவின் மறைவும் சசிகலாவின் சிறை வாசமும் அவர்கள் முதுகை சற்று நிமிர்த்தியுள்ளன. கால் பிடிக்கும் தொழிலில் அவர்களுக்கு சங்கடமோ, இழிவோ இருந்ததில்லை.
நக்சல்பாரியின் அய்ம்பது ஆண்டுகள்
சங் பரிவார் ஆட்சியில் இருக்கும் இந்த நேரத்தில்
ஒரு புதிய அரசியல் ஆற்றல் அவசியம்

திபங்கர்

இந்திய - நேபாள எல்லைக்கருகே, மேற்குவங்கத்தின் டார்ஜிலிங் மாவட்டத்தில், அது வரை எவர் கண்ணிலும் படாமல் இருந்த பகுதியான நக்சல்பாரி, இந்திய அரசியல் சொல்லாடல்களில் புயல் போல் நுழைந்து அய்ம்பது ஆண்டுகள் ஆகின்றன.
மகிழ்ச்சி, தோழர் சீதாராம் யெச்சூரி!
ஆனாலும்.........

நாடோடி

கோன்தி தெற்கு சட்டமன்ற இடைத் தேர்தல் முடிவு, 13.04.2017 அன்று வந்தது. இந்தத் தொகுதி, மேற்கு வங்கத்தின் கிழக்கு மிதினாபூர் மாவட்டத்தில் உள்ளது. திரிணாமூல் 95,369 வாக்குகளும், பாஜக 52,843 வாக்கு களும், இடது முன்னணியின் இகக 17,423 வாக்குகளும், காங்கிரஸ் 2,270 வாக்குகளும் பெற்றன.
காரல் மார்க்ஸ் நூலகத்தின் நிறுவனர்

தோழர் கண்ணனுக்கு செவ்வஞ்சலி


நான் இடதுமில்லை வலதுமில்லை என்று சொல்லும்
எம்மானுவேல் மேக்ரன்தான்
பிரான்சின் புதிய குடியரசுத் தலைவர்

மே மாதம் 7 ஆம் நாள், பிரான்சின் குடியரசுத் தலைவர் தேர்தலின் இறுதிச் சுற்று நடைபெற்றது. ஏப்ரல் 23 நடந்த முதல் சுற்றில் போட்டியிட்ட எவருக்கும் 50% வாக்குகள் கிடைக்காததால், மேக்ரனும் லீ பென்னும் மோதினார்கள். 26% பிரான்ஸ் வாக்காளர்கள் வாக்களிக்கவில்லை. 42 லட்சம் வாக்காளர்கள் யாருக்கும் வாக்கில்லை என வாக்களித்தனர். உற்சாகம் வடிந்த தேர்தல். அதில், மேக்ரன் 2 கோடியே 74 லட்சத்து 3 ஆயிரத்து 128 வாக்குகளும், மரீன் லீ பென் 1 கோடியே 63 லட்சத்து 8 ஆயிரத்து 475 வாக்குகளும் பெற்றனர்.
கொரிய தீபகற்பத்தில் அமைதி திரும்ப வேண்டும்

தென் கொரியாவில் குடியரசுத் தலைவர் தேர்தல் நடந்த சமயத்தில்தான், சீனா, அய்க்கிய அமெரிக்காவுக்கும் வட கொரியாவுக்கும் இடையிலான பதட்டம், ஒரு போருக்குச் சென்றுவிடக் கூடாது என கவலை தெரிவித்தது. அய்க்கிய அமெரிக்காதான் கொரிய தீபகற்பத்தை வடகொரியா,
நிக்சனுக்கு வாட்டர்கேட். டிரம்புக்கு ரஷ்யாகேட்

அய்க்கிய அமெரிக்காவின் குடியரசுத் தலைவராக இருந்த ரிச்சர்ட் நிக்சன், சீனாவுடன் பேச்சு வார்த்தைகளை துவக்கினார். இவரும் இவரது அயலுறவுத் துறை அமைச்சர் ஹென்றி கிசிங்கரும் சீனாவுடன் ராஜிய உறவுகளை நிலை நாட்டியவர்கள். அதே நேரம் பதவி பறிப்பு தீர்மானம் வரும் என்ற சூழலில், பதவி விலகியவர் நிக்சன்.
அதிகாரபூர்வமற்ற முறையில்
சிறைகளில் அடைக்கப்பட்டுள்ளவர்களை
இந்தியாவும் பாகிஸ்தானும் விடுதலை செய்ய வேண்டும்

தி ஹேக். இங்குதான் சர்வதேச நீதிமன்றம் செயல்படுகிறது. இந்தியா மனு செய்ததன் பேரில், இந்தியரான குல்பூஷன் ஜாதவுக்கு, பாகிஸ்தான் இராணுவ நீதிமன்றம் ஏப்ரல் 2017ல் வழங்கிய மரண தண்டனைக்கு, நெதர்லாண்டின் தி ஹேகில் உள்ள சர்வதேச நீதிமன்றம் தடை வழங்கி உள்ளது.
சமூக மாற்றத்துக்கு பங்காற்றுங்கள்!

தி இந்து தமிழ் நாளேட்டின் திரு.சமசுக்கு, அவர்கள் பத்திரிகையில் வெளியிடக் கோரி இந்தக் கட்டுரை அனுப்பப்பட்டுள்ளது.

பெறுவதற்கு பொன்னுலகு என்ற உன்னத லட்சியம், அதை எட்டுவதற்கான நீண்டகால நோக்குநிலை, அந்த நோக்குநிலையில் இருந்து உருவாகும் சமூகப் பொறுப்புணர்வு, இன்னும் இவற்றை ஒட்டிய பல்வேறு இயல்புகள், நட்பு முரண்பாடு கொண்டவர்களும் இடதுசாரிகள் மீது சேறு வீசுகிறபோது, இடதுசாரிகளை அமைதி காக்க வைக்கின்றன. அதனால், அடிப்படைகளை கணக்கில் கொள்ளாமல், சொல்ல வேண்டும் என்பதற்காக மட்டும் சொல்லப்படும் அந்த விமர்சனங்களை இடதுசாரிகள் ஏற்றுக்கொண்டு விட்டார்கள் என்று பொருளாகாது.
நாகையில் தலித் இளைஞர்கள் மீது காவல்துறை கொடூரத் தாக்குதல்
தமிழ்நாட்டில் செயல்படுவது காவல்துறையா? கொலைகார படையா?

நாகை மாவட்டத்தில் உள்ள புதுப்பட்டினம் கிராமத்துக்கு சீர்காழி பகுதியைச் சேர்ந்த தலித் இளைஞர்கள் நான்கு பேர் மே 7 அன்று தங்கள் நண்பர்களைச் சந்திக்க இரு சக்கர வாகனத்தில் சென்றனர். சென்ற இடத்தில் ஒரு சாலையோர தேநீர் கடையில் நின்று நண்பர்கள் பேசிக் கொண்டிருந்தபோது, அவர்களது வாகனத்தில் அம்பேத்கர் படம் ஒட்டப்பட்டிருந்ததை பார்த்த,
சோவியத் ரஷ்யா
இரண்டாம் உலகப் போரை எதிர்கொள்ள நேர்ந்தது

இந்தப் போர் நம் மீது திணிக்கப்பட்டுள்ளது; ஜெர்மானிய தொழிலாளர்களோ, விவசாயிகளோ, அறிவாளிகளோ இதைச் செய்யவில்லை; அவர்கள் படும் துன்பங்களை நாம் நன்கு புரிந்துகொண்டிருக்கிறோம்; பிரான்ஸ், செக்கோஸ்லோவகியா, போலந்து, செர்பியா, நார்வே, பெல்ஜியம், டென்மார்க், ஹாலந்து, கிரீஸ் மற்றும் பிற நாடுகளின் மக்களை அடிமைப்படுத்தியுள்ள, ஜெர்மனியின் ரத்தவெறி பிடித்த பாசிச ஆட்சியாளர்களால் இந்தப் போர் நம் மீது திணிக்கப்பட்டுள்ளது.
மதவெறிக் கொடுமைகளுக்கு ஆளாக்கப்படுபவர்களுக்கு ஆதரவாக குரல் எழுப்புவோம்

ஏப்ரல் இரண்டாவது வாரத்தில் ஒரு நாள், ஏஅய்சிசிடியு தேசிய செயலாளரும், டெல்லி போக்குவரத்து கழக தொழிலாளர் ஒற்றுமை சங்கத்தின் தலைவருமான தோழர் சந்தோஷ் ராய் டெல்லி மெட்ரோவில் பயணித்துக் கொண்டிருந்தார். முதியவர்களுக்கான இருக்கையில் இரண்டு இளைஞர்கள் உட்கார்ந்திருந்தனர். அப்போது
களச் செய்திகள்

கூடங்குளத்தில் அணுஉலைப் பூங்கா கூடாது!
தாமிரபரணித் தண்ணீரை விற்காதே!

கூடங்குளத்தில் அணுஉலைப் பூங்கா கூடாது, தாமிரபரணித் தண்ணீரை விற்காதே என வலியுறுத்தி மே 13 அன்று நெல்லையில் மக்கள் பேரணி மற்றும் பொதுக் கூட்டம் நடைபெற்றது.
பொதுகூட்டத்திற்கு அணுசக்திக்கெதிரான மக்கள் இயக்க ஒருங்கிணைப்பாளர் தோழர் சு.ப.உதயகுமார் தலைமை தாங்கினார். மார்க்சிஸ்ட் லெனினிஸ்ட் கட்சி மாநிலச் செயலாளர் தோழர் எஸ்.குமாரசாமி துவக்கி வைத்துப் பேசினார். அகில இந்திய மக்கள் மேடை தேசியக் குழு உறுப்பினர் தோழர் ஜி.ரமேஷ் வரவேற்றுப் பேசினார்.

Tuesday, May 2, 2017

தலையங்கம்

மே தினப் பேரணியின் எச்சரிக்கை! 
நெருப்பை பொட்டலம் கட்ட முடியாது!

முதலாளித்துவ நாடாளுமன்ற ஜனநாயகம் முதலாளிகளுக்கு, வசதி படைத்தவர்களுக்கு, அதிகாரத்தில் இருப்பவர்களுக்கு மட்டுமானது, சாமான்யர்களுக்கு எதிரானது என்பதை அம்பலப்படுத்தும் பணியை, இன்றைய தமிழக அரசு செம்மையாகச் செய்துகொண்டிருக்கிறது.
காஷ்மீரில் எப்போது அமைதி திரும்பும்?
மசூதி இடிப்பில் எப்படி நியாயம் கிடைக்கும்?

எஸ்.குமாரசாமி

2016 இறுதி வரையிலும் 2017 துவக்கத் திலும் காஷ்மீரில் கொந்தளிப்பு அடங்கவில்லை. பொருளாதார வளர்ச்சி, சலுகைகள், கூடுதல் நிதி ஒதுக்கீடு என்ற ஆசை வார்த்தைகள், அங்கு எடுபடவில்லை. காஷ்மீர் மக்கள், காஷ்மீரின் ஆண் பெண் இளைஞர்கள், இந்திய அரசின் மீது நம்பிக்கை வைக்க முடியுமா?
நேற்று இறால் பண்ணைகள்....
இன்று ஓஎன்ஜிசி எண்ணெய் கிணறுகள்.... நாளை ஹைட்ரோகார்பன்....?

இறால் பண்ணைகளால்
நாசமாகிவிட்ட புளியந்துறை ஊராட்சி

புளியந்துறை கிராமத்தைச் சேர்ந்த அரிகிருஷ்ணன், இறால் பண்ணைகளுக்கு எதிராகப் போராட்டங்கள் நடத்தியவர். இன்று புளியந்துறை பகுதி மக்களுக்கும் குடிக்க தண்ணீர் இல்லை. அரிகிருஷ்ணன் இறால் பண்ணையால் ஏற்பட்ட விளைவுகள் பற்றி கேட்டபோது சொன்னார்:
விவசயாயத்தில்
முதல் அய்ந்தாண்டு திட்டத்தின்
நான்காண்டுகளில் ஏற்பட்ட விளைவுகள்

ஜனவரி 7 - 12, 1933 தேதிகளில் நடந்த மத்திய கமிட்டி மற்றும்
மத்திய கட்டுப்பாட்டு கமிசனின் கூட்டு கூட்டத்தில்
ஜனவரி 7, 1933 அன்று
முதல் அய்ந்தாண்டுத் திட்டத்தின் விளைவுகள்என்ற தலைப்பில்
தோழர் ஸ்டாலின் முன்வைத்த அறிக்கையில் இருந்து

பாட்டாளி வர்க்க சர்வாதிகாரத்தை உறுதிப்படுத்திக் கொள்ளவும் சோசலிச சமூகத்தை கட்டியெழுப்பவும் தொழில்மயமாக்கத்துடன் கூடவே, சிறுவீத, தனிப்பட்ட விவசாயத்தில் இருந்து, கிராமப்புறங்களில்
தோழர் மோகன் மீது போடப்பட்ட
பொய் வழக்கு தள்ளுபடி 

தோழர் மோகன் மீது அம்பத்தூர் காவல் துறையினர் தொடர்ந்த பொய் வழக்கில் அவர் குற்றவாளி அல்ல என்று நீதிமன்றம் ஏப்ரல் 24 அன்று தீர்ப்பு வழங்கியுள்ளது. மாலெ கட்சியின் தொடர் செயல்பாடுகள் காவல் துறையினருக்கு இடையூறாக இருக்கும் பின்னணியில் இந்த பொய் வழக்கு வெறும் காழ்ப்புணர்ச்சியில் போடப்பட்டது.
சென்னை உயர்நீதிமன்ற வளாகத்தில்
அம்பேத்கர் பிறந்த தினத்தை ஒட்டி
உறுதியேற்பும் மாட்டுக்கறி விருந்தும்

அம்பேத்கர் பிறந்த தினத்தை ஒட்டி சென்னை உயர்நீதிமன்ற வளாகத்தில் உள்ள அம்பேத்கர் சிலை அருகில் ஜனநாயக வழக்கறிஞர்கள் சங்கம் ஏப்ரல் 13 அன்று உறுதியேற்பு நிகழ்ச்சி நடத்தியது. நிகழ்ச்சிக்காக வெளியிடப்பட்ட, கற்பி, கிளர்ச்சி செய், அமைப்பாக்கு என்ற வாசகங்களைத் தாங்கிய துண்டுப் பிரசுரத்தில், உறுதியேற்பு நிகழ்ச்சி செய்தியும், உறுதியேற்பு நிகழ்ச்சியைத் தொடர்ந்து மாட்டுக் கறி விருந்து தரப்படும் என்ற செய்தியும், மாட்டுக் கறி உண்ண விரும்புபவர்கள் முன்னரே பதிவு செய்து கொள்ள வேண்டும் என்றும் சொல்லப்பட்டிருந்தது.
நெருக்கடியில் சிக்கித் தவிக்கும்
தமிழக விவசாயிகளுக்கு ஆதரவாக
இகக மாலெ பொது வேலை நிறுத்தம்

தமிழ்நாட்டில் நிலவும் வறட்சி, விவசாய நெருக்கடி, விவசாய தொழிலாளர்கள் வாழ்வாதாரம் இழத்தல் போன்றவற்றுக்குக் காரணமான மத்திய, மாநில அரசுகளை கண்டித்தும், விவசாயம், விவசாயி, விவசாய மற்றும் கிராமப்புற தொழிலாளர்களை பாதுகாக்க, விவசாயக் கடன்கள் தள்ளுபடி செய்யப்பட வேண்டும், விவசாய, கிராமப்புற தொழிலாளர்கள் வங்கிக் கணக்கில் ரூ.1 லட்சம் செலுத்த வேண்டும், விவசாயத்தை அழிக்கும் கார்ப்பரேட் திட்டங்களை கைவிட வேண்டும் ஆகிய  கோரிக்கைகளை நிறைவேற்றிட

Search