COMMUNIST PARTY OF INDIA (MARXIST - LENINIST) - LIBERATION

COMMUNIST PARTY OF INDIA (MARXIST - LENINIST) - LIBERATION, TAMILNADU

Thursday, April 13, 2017

தொட்டியப்பட்டி தலித் மக்கள் மீது
தாக்குதல் நடத்திய அனைவரும் கைது செய்யப்பட வேண்டும்!

விருதுநகர் மாவட்டத்தில் ராஜபாளையம் அருகில் உள்ள தொட்டியப்பட்டியில் தலித் மக்கள் மீது, அவர்களது உடைமைகள் மீது ஆதிக்க சாதியினர் கொடூரமான தாக்குதல் நடத்தியுள்ளனர். 43 வீடுகள் சூறையாடப்பட்டுள்ளன. 5 வீடுகள் தீக்கிரையாக்கப்பட்டுள்ளன. தலித் மக்கள் பலர் படுகாயங்களுக்குள்ளாகி மருத்துவமனையில்
தாமரை ரத்தக் கறையுடன் மலர்ந்தது
புறப்பட்டு விட்டது திரிசூலம்
ஸ்வஸ்திகாவும் வெளியில் வந்துவிட்டது
எல்லாம் மூலதன சேவைக்காக

எஸ்.குமாரசாமி

தேசப் பிரிவினை இந்துக்களுக்கு மிகவும் நல்ல விஷயம். இந்துஸ்தானம் ஓர் இந்து நாடு என்றும் அதன் அதிகாரபூர்வ மதம் இந்து மதம் என்றும் அறிவிக்க நேரம் வந்துவிட்டதுதானே?’
    (05.06.1947 அன்று தொழில் அதிபர் பி.எம்.பிர்லா படேலுக்கு எழுதிய கடிதத்தில் இருந்து)
இந்துஸ்தானத்தை இந்து நாடு என்றும் இந்து மதத்தை அதன் அதிகாரபூர்வ மதம் என்றும் கருத முடியாது என நான் நினைக்கிறேன். நாட்டில் இதர மதச் சிறுபான்மையினர் இருக்கின்றனர் என்பதையும், அவர்களைப் பாதுகாப்பது நமது முதன்மைப் பொறுப்பு என்பதையும், நாம் மறந்துவிட முடியாது. அரசு, சாதி மத நம்பிக்கை வேறுபாடுகள் கடந்து அனைவருக்குமானதாக, இருக்க வேண்டும்’.
(பிர்லா கடிதத்திற்கு படேல் 10.06.1947 அன்று எழுதிய பதிலில் இருந்து)
எழுக செங்கொடிகள்!

எஸ்.குமாரசாமி

இயற்கை வளக் கொள்ளைக்கெதிராக எழுக செங்கொடிகள்
தமிழ்நாட்டில், ஆர்கே நகர் இடைத்தேர்தல் ரத்து செய்யப்பட்டுள்ளது. வாக்குகளுக்காக கோடி கோடியாய் பணம், தரப்பட்டதாக, தேர்தல் ஆணையம் சொல்கிறது. பணம் கொடுப்பதில், பழனிச்சாமி - தினகரன் வகையறா முதலிடத்திலும், பன்னீர்செல்வம் - மதுசூதனன் வகையறா இரண்டாம் இடத்திலும், திமுக மூன்றாம் இடத்திலும் இருந்ததாக, இகக(மா) குற்றம் சுமத்தியிருந்தது.
விவசாய கடன்கள் தள்ளுபடி தவறு
கார்ப்பரேட் கடன் தள்ளுபடி நல்லது
முதலாளித்துவம் இப்படித்தான் இயங்குகிறது

பணமதிப்பகற்றும் நடவடிக்கை நாட்டு மக்களின் வாழ்வாதாரத்தை சூறையாடியபோது, சாமான்ய மக்களை அதன் விளைவுகள் இன்றும் விரட்டும்போது, கிண்டலுக்கும் கேலிக்கும் உள்ளானபோதும், அந்த நடவடிக்கை பற்றி எதுவும் பேசாத ரிசர்வ் வங்கி ஆளுநர் உர்ஜித் படேல் இன்று பேசியிருக்கிறார். வாய் பேசாத முடியாத பிள்ளை முதல்முதலாக பேசிய போது தாயைப் பார்த்து ஏதோ கேட்டதாக ஒரு மோசமான ஆணாதிக்க சொல் வழக்கு உண்டு.
தொழிலாளர்களின், விவசாயிகளின்
பொருளாயத நிலைமைகளை மேம்படுத்துவதில்
முதல் அய்ந்தாண்டு திட்டத்தின்
நான்காண்டுகளில் ஏற்பட்ட விளைவுகள்

ஜனவரி 7 - 12, 1933 தேதிகளில் நடந்த மத்திய கமிட்டி மற்றும் மத்திய கட்டுப்பாட்டு கமிசனின் கூட்டு கூட்டத்தில் ஜனவரி 7, 1933 அன்று முதல் அய்ந்தாண்டுத் திட்டத்தின் விளைவுகள்என்ற தலைப்பில் தோழர் ஸ்டாலின் முன்வைத்த அறிக்கையில் இருந்து

தொழிலிலும் விவசாயத்திலும் நாம் கண்டுள்ள வெற்றிகள் பற்றி, சோவியத் ரஷ்யாவில் தொழிலிலும் விவசாயத்திலும் நடந்த முன்னேற்றங்கள் பற்றி நான் பேசினேன். தொழிலாளர்களின், விவசாயிகளின் பொருளாயத நிலைமைகளை மேம்படுத்துவது என்ற நோக்கில் இந்த வெற்றிகளின் விளைவுகள் என்ன? உழைக்கும் மக்களின் பொருளாயத நிலைமைகளில் அடிப்படை மாற்றம் என்ற பொருளில் தொழிலிலும் விவசாயத்திலும் நாம் கண்ட வெற்றிகளின் முக்கிய விளைவுகள் என்ன?
நேற்று இறால் பண்ணைகள்....
இன்று ஓஎன்ஜிசி எண்ணெய் கிணறுகள்....
நாளை ஹைட்ரோகார்பன்....?

இந்தியாவில் உலகமயம் அமலாகத் துவங்கிய போது தமிழ்நாட்டின் விவசாயத்தில் அதன் நுழைவு இறால் பண்ணைகள் வடிவத்தில் நிகழ்ந்தது. அப்போது, பகுதி மக்களிடம் வளம் வருகிறது என்றார்கள். மணிசங்கர அய்யர் பகுதியை துபாயாக மாற்றப் போவதாகச் சொன்னார்.
ஆர்கே நகர் தொகுதியில் இககமா வேட்பாளருக்கு வாக்குகள் கேட்டு
இககமாலெ பிரச்சாரம்

அஇஅதிமுக, திமுக கட்சியினரின் பணப்பட்டுவாடாவைத் தொடர்ந்து ஆர்கே நகர் இடைத்தேர்தல் ரத்து செய்யப்பட்டுள்ளது. இடைத்தேர்தல் ரத்து செய்தி ஏப்ரல் 10 அன்று வெளியானது. இந்தத் தேர்தலில் இககமாவை ஆதரிப்பது என்ற கட்சியின் முடிவுக்கேற்ப இகக மாலெ தோழர்கள் ஏப்ரல் 5, 6, 7 மற்றும் 9 தேதிகளில் இககமா வேட்பாளர் தோழர் லோகநாதனுக்கு வாக்கு கேட்டு பிரச்சாரம் மேற்கொண்டனர்.

Search