COMMUNIST PARTY OF INDIA (MARXIST - LENINIST) - LIBERATION

COMMUNIST PARTY OF INDIA (MARXIST - LENINIST) - LIBERATION, TAMILNADU

Thursday, January 26, 2017

ஜல்லிக்கட்டு தொடர்பான கேள்விகளும் 
சில பதில்களும்

(2017 ஜனவரி 16 – 31 மாலெ தீப்பொறி)
தமிழ்நாட்டில், பொங்கல் பண்டிகைக்கு முன் ஜல்லிக்கட்டு தொடர்பாக நடந்த விசயங்களை எப்படி பார்க்கலாம்?
ஜல்லிக்கட்டு தொடர்பாக 2016 முழுவதும் எந்த இயக்கமும் நடக்கவில்லை. இந்த ஆண்டு, ஜல்லிக்கட்டு நடத்த அவசரச் சட்டம் வேண்டும் என்ற கோரிக்கை,

காவல்துறை தாக்குதல்களைக் கண்டிக்கிறோம்
ரூ.500, ரூ.1000 செல்லாது என மோடி அரசு அறிவித்ததால் நாட்டு மக்களுக்கு நெருக்கடி 
நியாயம் கேட்ட சிபிஎம் - DYFI - AIDWA தோழர்கள் மீது தமிழக காவல்துறை தாக்குதல்
பெண்கள் மீது பாலியல் வக்கிரத் தாக்குதல்
தமிழக அரசே
நீதி விசாரணை நடத்து! தண்டனை வழங்கு! மன்னிப்பு கேள்!

இகக மாலெ AISA RYA


கோவை இகக மாலெ தோழரும் பிரிக்கால் தொழிலாளர் போராட்டத்தில் பணிநீக்கம் செய்யப்பட்டவருமான தோழர் ராஜா, ஜனவரி 14 அன்று கோவையில் இருந்து சேலத்துக்கு தொடர்வண்டியில் சென்றபோது, கட்சி நிலைப்பாடுகள் பற்றி சகபயணிகள் 200 மத்தியில் உரையாற்றினார். அவர்கள் மத்தியில் 20 தீப்பொறி இதழ்கள் விற்றுள்ளார்.
தலையங்கம்
வறட்சி மாநிலம் என்ற அறிவிப்பின் வறட்சியும் அலட்சியமும்
(2017 ஜனவரி 16 – 31 மாலெ தீப்பொறி)
கங்கைச் சமவெளி நெசவாளர்களின் எலும்புக் கூடுகளால் வெண்ணிறமாகிப் போனது என்று, பிரிட்டிஷ் ஆட்சியில் நெசவாளர்களுக்கு நேர்ந்த துன்பத்தை மார்க்ஸ் விவரித்தார். இன்று மக்களின் வாக்குகளைப் பெற்று அமைக்கப்பட்டுள்ள ஆட்சியில் தமிழ்நாட்டின் காவிரி நதிக்கரை விவசாயிகளின் எலும்புக் கூடுகளால் நிறைந்து கொண்டிருக்கிறது. பூச்சி மருந்து குடித்து விடுகிறார்கள். தூக்கில் தொங்கிவிடுகிறார்கள். மன உளைச்சலில் இதயத்தை
சுயஉதவிக் குழுக்கள் மூலம் தமிழக கிராமப்புற வறிய பெண்கள் வாங்கியுள்ள கடன்கள் தள்ளுபடி செய்யப்பட வேண்டும்
(2017 ஜனவரி 16 – 31 மாலெ தீப்பொறி)
தமிழக அரசின் இலக்கிய விருதுகள் விழா வில் முதலமைச்சர் பன்னீர்செல்வம் நலம்தானா பாடலைப் பாடி அசத்தினாராம். தமிழ்நாட்டின் கிராமப்புற பெண்கள் மத்தியில் இந்தப் பாடலை அவர் பாடினால் எதிர்மறை பதிலே அவருக்குக் கிடைக்கும். 
மோடியின் ஊழல், கருப்புப் பண எதிர்ப்பு போர் 
எவ்வளவு தூரம் சென்றுள்ளது?
(2017 ஜனவரி 16 – 31 மாலெ தீப்பொறி)

மலையைத் தூக்கி வைத்து, எலியை, இல்லை இல்லை, கொசுவைக் கூடப் பிடிக்கவில்லை என்பது, தெளிவாகிவிட்டது. நவம்பர் 8க்குப் பிறகு 50 நாட்கள் அல்ல, 60 நாட்களே தாண்டிவிட்டன. மோடியிடம், நாட்டு மக்களுக்குச் சொல்ல பதில் ஏதும் இல்லை. மோடி செல்லாது என அறிவித்த ரூ.15.44 லட்சம் கோடியும் கருப்பாய் எங்கேயோ சிக்கி தங்கி விடாமல்,
வளரும் இளந்தலைமுறையினர் 
எப்படி கம்யூனிசம் கற்றறிய வேண்டும்?

(2017 ஜனவரி 16 – 31 மாலெ தீப்பொறி)
(1920, அக்டோபர் 2 அன்று, ரஷ்யாவின் இளம் கம்யூனிஸ்ட் கழகத்தின் மூன்றாவது அனைத்து ரஷ்ய காங்கிரசில் லெனின் ஆற்றிய உரையில் இருந்து)

.......நமக்கென ஒரு தனி அறநெறி கிடையாது என்பதாய் அடிக்கடி பேசப்படுகிறது; ஒழுக்கநெறி அனைத்தையுமே நிராகரிப்பவர்கள் என்பதாய் கம்யூனிஸ்டுகளாகிய நம்மீது முதலாளித்துவ வர்க்கத்தினர் அடிக்கடி குற்றம் சாட்டுகிறார்கள். பிரச்சனையைக் குழப்புவதற்கான - தொழிலாளர், விவசாயிகளின் கண்களில் மண்ணைத் தூவுவதற்கான - ஓர் உபாயமே இது.
அக்கரைச் சீமையில்: 
பின்லாந்து, இங்கிலாந்து, அய்க்கிய அமெரிக்கா
எஸ்.குமாரசாமி
(2017 ஜனவரி 16 – 31 மாலெ தீப்பொறி)
பின்லாந்தில் ஒரு புதிய பரிசோதனை
நோக்கியா, பின்லாந்திலிருந்து பிறந்து புறப்பட்ட ஒரு பன்னாட்டு நிறுவனம். தமிழ்நாடு, நோக்கியாவுக்கு நிறைய தந்தது. நோக்கியாவிடம் ஆகக் குறைவாகப் பெற்றுக் கொண்டது. அது ஒரு கசப்பான அனுபவம்.
தமிழக விவசாயிகள் தற்கொலை, அதிர்ச்சியில் உயிரிழப்பு
விவசாய, கிராமப்புறத் தொழிலாளர்கள் கடும் பாதிப்பு
குற்றவாளிக் கூண்டில் மாநில மத்திய அரசுகள்
ஜனவரி 9, நியாயம் கோரும் நாள்
தமிழ்நாட்டை வறட்சி மாநிலமாக அறிவித்து உரிய நிவாரணங்கள் உடனடியாக வழங்கப்பட வேண்டும். உயிரிழந்த விவசாயிகள் குடும்பங்களுக்கு தலா ரூ.25 லட்சம் இழப்பீடு தரப்பட வேண்டும். பாசனத்துக்கு நீர் கிடைக்காமல் நட்டமடைந்த விவசாயிகளுக்கு ஏக்கருக்கு ரூ.25,000 நிவாரணம் வேண்டும். விவசாயக் கடன்கள் உடனடியாக தள்ளுபடி செய்யப்பட வேண்டும்.
பீகாரில் இகக மாலெ தலைவர்கள் 
இரண்டு பேர் படுகொலை
அராரியாவில் மகாதலித்துகள் மீது தாக்குதல்ஆளும்கட்சியின், ராஷ்டிரிய ஜனதா தளத்தின் அரசியல் பாதுகாப்பு பெற்ற அடியாட்கள், அராரியா தாலுகாவின் பர்காமா ஒன்றியத்தில் உள்ள ரஹாரியா கிராமத்தில் முஷாஹர் தலித் மக்கள் மீது கொலைவெறித் தாக்குதல் நடத்தியுள்ளனர். இகக மாலெ தலைவர்களான, அராரியா மாவட்டச் செயலாளர் தோழர் சத்யநாராயண் பிரசாத், தோழர் கமலேஷ்வரி ரிஷிதேவ் ஆகியோரை படுகொலை செய்துள்ளனர்.

Wednesday, January 4, 2017

தலையங்கம்

ஜெயலலிதா அரசியலின் விளைபொருளே
பன்னீர்செல்வம் - சசிகலா ஆட்சி

(மாலெ தீப்பொறி 2017 ஜனவரி 01 – 15)

தமிழ்நாட்டு மக்கள். அவர்களது வாழ்க்கை. அவர்களது வேலை. அவர்களது வருமானம். அவர்களது விவசாயம். அவர்களது வியாபாரம். தமிழ்நாட்டின் நீர்ப்பாசனம். தமிழ்நாட்டின் மின்தேவையும், அளிப்பும். தமிழ்நாட்டின் மருத்துவம், கல்வி. தமிழ்நாட்டில் தலைவிரித்தாடும் சாதியாதிக்கம். தமிழ்நாட்டின் மதச் சிறுபான்மையினரும் பெண்களும் அச்சமற்ற சுதந்திரத்துடன் வாழ முடியாத நிலை. தமிழ்நாட்டில் தொடரும் இயற்கை வளக் கொள்ளை. தமிழ்நாட்டில் அணு உலை,
நரேந்திர மோடியும் நாட்டு மக்களும் நவம்பர் 8ம்

எஸ்.குமாரசாமி

(மாலெ தீப்பொறி 2017 ஜனவரி 01 – 15)

நவம்வர் 8 பின்மாலையில் நரேந்திர மோடி நாட்டு மக்களிடம் அறிவித்தார். ‘ஊழல் கருப்புப் பணம், பயங்கரவாதம் ஆகியவை நாட்டின் வளர்ச்சிக்குத் தடையாக உள்ளன. பயங்கரவாதிகள் கள்ள நோட்டுக்களை புழக்கத்தில் விடுகிறார்கள். அதிகரித்த அளவிலான பணப் புழக்கம், ஊழலோடு தொடர்புடையது. கருப்புப் பணத்தோடும் சட்டவிரோத ஆயுத வர்த்தகத்தோடும் தொடர்புடைய ஹவாலா வர்த்தகத்தை உயர் மதிப்பு நோட்டுக்களின் புழக்கம் வலுப்படுத்துகிறது
நவம்பர் மற்றும் நக்சல்பாரி
வழிமரபுகளை நினைவுகூர்வதும்
அவற்றில் இருந்து கற்றுக்கொள்வதும்

திபங்கர்

(மாலெ தீப்பொறி 2017 ஜனவரி 01 – 15)

வரலாறு பற்றிய உணர்வு கொண்ட முற்போக்கு இந்தியர்களுக்கு 2017 இரண்டு மகத்தான வரலாற்று நினைவுகளை தூண்டும். 2017 மே 25, நக்சல்பாரி எழுச்சியின் 50ஆவது ஆண்டு தினத்தையும் நவம்பர் 7 மகத்தான நவம்பர் புரட்சியின் நூற்றாண்டையும் குறிக்கும்.
நவம்பர் புரட்சியின் நூற்றாண்டு
கடந்த காலத்தை நினைவு கூர்ந்து எதிர்காலம் நோக்கி முன்னேறுவோம்!

2016 டிசம்பர் லிபரேசன் இதழில் வெளியாகியுள்ள கட்டுரையின் தமிழ் வடிவம் இறுதிப் பகுதி

நவம்பர் உணர்வு

நூறு ஆண்டுகள் ஓடிவிட்டன; மிகவும் மாறுபட்ட ஒரு சூழலில் நாம் இப்போது இருக்கிறோம்; நவம்பர் புரட்சியின் நேரடியான தொட்டுணரத்தக்க விளைவான சோவியத் யூனியன் இப்போது இல்லை; அதன் வீழ்ச்சி விட்டுச்சென்ற வடுக்களும் ஆழமான காயங்களும் உள்ளன. அப்படியானால் தோற்றுப் போன ஒரு பரிசோதனையின் நூற்றாண்டை நாம் ஏன் கொண்டாட வேண்டும்?
மோசடி மோடியின் முகத்திரையை கிழிப்போம்!
உழைக்கும் மக்கள் தக்க பதிலடி கொடுப்போம்!

(மாலெ தீப்பொறி 2017 ஜனவரி 01 – 15)

மோசடி மோடியின் முகத்திரையை கிழிப்போம், உழைக்கும் மக்கள் தக்க பதிலடி கொடுப்போம் என்ற முழக்கத்துடன் மோடியின் பணமதிப்பகற்றும் மோசடித் திட்டத்தை அம்பலப்படுத்தி
கடன் நிலுவை வைத்துள்ள கார்ப்பரேட் நிறுவனங்களின் பட்டியலை வெளியிடு. அவர்களது சொத்துக்களை பறிமுதல் செய்,
சிறு விவசாயிகள் கடன்களை தள்ளுபடி செய்.
பணமதிப்பகற்றும் நடவடிக்கையால் சம்பளமிழந்த பீடித் தொழிலாளர்கள் சாலை மறியல்

(மாலெ தீப்பொறி 2017 ஜனவரி 01 – 15)

500 ரூபாய் 1000 ரூபாய் செல்லாது என்ற மோடியின் அறிவிப்பால் இன்று அனைத்துத் தரப்பு மக்களும் கையில் பணம் இல்லாமல் பெரும் அவதிக்குள்ளாகியுள்ளனர். வங்கிகளில் பணம் இல்லை. ஏடிஎம்கள் இழுத்து மூடப்பட்டுவிட்டன. நெல்லை மாவட்டத்தில் பீடித் தொழிலாளர்களுக்கு 8 வாரச் சம்பளம் கிடைக்கவில்லை. பீடித் தொழிலாளர்களின் பணம் 400 கோடி ரூபாய் வழங்கப்படாமல்
தோழர் பி.வி.சீனிவாசன் நினைவேந்தல் கூட்டம்

(மாலெ தீப்பொறி 2017 ஜனவரி 01 – 15)

சென்னையில் 21.12.2016 அன்று தோழர் பி.வி.சீனிவாசன் நினைவேந்தல் கூட்டம் நடைபெற்றது. இகக(மாலெ) மாநிலச் செயலாளர் தோழர் குமாரசாமி தலைமை தாங்கினார். கூட்டத்தில் தமிழ்நாடு முழுவதுமிருந்து வந்திருந்த முன்னணிகள் கலந்துகொண்டனர். இகக(மாலெ) அரசியல் தலைமைக் குழு உறுப்பினர்கள் தோழர் ஸ்வதேஷ், தோழர் கார்த்திக் பால், மத்தியக்குழு உறுப்பினர்கள் தோழர் பாலசுந்தரம், தோழர் புவனா, புதுச்சேரியிலிருந்து தோழர் பாலசுப்பிரமணியன், மார்க்சிய - லெனினிய இயக்கத்தின் மூத்த தோழர் கோவை ஈஸ்வரன், ஏஅய்சிசிடியு மாநிலத் தலைவர் தோழர் .எஸ்.குமார் ஆகியோர்
வெண்மணி தியாகிகள் நினைவு கூட்டங்கள்

(மாலெ தீப்பொறி 2017 ஜனவரி 01 – 15)

வெண்மணி தியாகிகள் தினமான 25.12.2016 அன்று கோவை கட்சி அலுவலகத்தில் வெண்மணி தியாகிகளுக்கு அஞ்சலிக் கூட்டம் இகக(மாலெ) மாவட்டச் செயலாளர் தோழர் பாலசுப்பிரமணியன் தலைமையில் நடைபெற்றது. இதில் இகக(மாலெ) மாநிலக் குழு உறுப்பினர்கள் தோழர்கள் என்.கே.நடராஜன், தாமோதரன், கிளைச் செயலாளர்கள், உள்ளூர் கமிட்டி செயலாளர்கள் கலந்து கொண்டனர்.
25.12.2016 அன்று விழுப்புரம் மாவட்ட கட்சி அலுவலகத்திலும், கச்சிராபாளையத்திலும் தியாகிகள் 44 பேரின் பெயர் பட்டியல் வெளியிடப்பட்டு, ஸ்தூபி வடிவமைக்கப்பட்டு தோழர்கள் அஞ்சலி செலுத்தினர்.

விழுப்புரம் மாவட்ட செய்திகள்

விழுப்புரம் மாவட்டம், உளுந்தூர்பேட்டை அருகிலுள்ள மருதூர் ஊராட்சியில் மக்களுக்கு குடிநீர் வழங்கப்படாததைக் கண்டித்து இகக(மாலெ) கிளைச் செயலாளர் தோழர் சுலோச்சனா தலைமையில் 12.12.2016 அன்று

Search