COMMUNIST PARTY OF INDIA (MARXIST - LENINIST) - LIBERATION

COMMUNIST PARTY OF INDIA (MARXIST - LENINIST) - LIBERATION, TAMILNADU

Monday, December 19, 2016

தலையங்கம்
தோழர் பி.வி.சீனிவாசனுக்கு சிவப்பு வணக்கம்!
இகக, இகக(மாலெ) நிறுவனத் தலைவர்களுள் ஒருவரான தோழர் பி.வி.சீனிவாசன், டிசம்பர் 6 அன்று அதிகாலை 2.30 மணி அளவில் டெல்லியிலுள்ள மருத்துவமனையில் காலமானார். அவரது வயது 77. கட்சி மத்திய அலுவலகத்தின் பராமரிப்பில் உயர்தர தனியார் மருத்துவமனை ஒன்றில் பல மாதங்கள் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது. மருத்துவர்கள் கூட அவர் குணமடைந்து வருகிறார் என்று கூறியது பெரும் நம்பிக்கை அளிப்பதாக இருந்தது. ஆனாலும், திடீரென மாரடைப்பு ஏற்பட்டது. இறப்புக்கு எதிரான தோழர் சீனிவானது போராட்டமும் கட்சியின் கடும் முயற்சியும் தோற்றுவிட்டன. மரணம் வென்றுவிட்டது. தோழர் சீனிவாசன் நம்மை விட்டுப் பிரிந்து விட்டார். ஆனால், மரணத்தால் வெல்ல முடியாத அனுபவத்தையும் படிப்பினைகளையும் நமக்கு விட்டுச் சென்றிருக்கிறார். தோழர் பி.வி.சீனிவாசனது வாழ்வும் போராட்டமும் மூன்று தலைமுறை கம்யூனிஸ்ட்களது வாழ்வையும் போராட்டத்தையும் நினைவுபடுத்தக் கூடியது.
அஇஅதிமுக திமுக கட்சிகளின் நெருக்கடி 
தமிழக மக்களுக்கு வரமா சாபமா?
நாடோடி
ஜெயலலிதா தமது 68ஆவது வயதில் உடல்நலக் குறைவால் இறந்துவிட்டார். கருணாநிதியும் கூட 93 வயதில் உடல்நலக் குறைவுடன்தான் இருக்கிறார். தமிழக மக்கள் கோடிக்கணக்கில் உயிரோடு வாழ்ந்து கொண்டிருக்கின்றனர். அவர்களுக்கு விவசாயக் கூலி வேலையோ வேறு வேலைகளோ கிடைப்பதில், உழைத்துப் பிழைப்பதில் சிரமம் உள்ளது. வேலை கிடைத்தால், குறை வருமானமே கிடைக்கிறது. தமிழ்நாட்டு விவசாயம் சாகடிக்கப்படுகிறது. தமிழ்நாட்டின் இயற்கை, மனித வளங்கள் ஓயாமல் வேட்டைக்கார பணக்காரர்களால், அரசியல்வாதிகளால், அதிகாரிகள் துணையுடன் சூறையாடப்படுகின்றன. மாணவர், இளைஞர் கல்வியும் வேலைவாய்ப்பும் நம்பிக்கை தரவில்லை. பெண்கள், மதச் சிறுபான்மையினர், ஒடுக்கப்பட்ட சாதியினர் சமத்துவத்துடன், அச்சமற்ற சுதந்திரத்துடன் வாழ வழியில்லை. தமிழக மக்களுக்கு கார்ப்பரேட் அப்பல்லோ மருத்துவமனை சிகிச்சை போன்றவை, வேறு வேறு மட்டங்களில் கட்டுப்படியாவதில்லை. கிராமங்கள் என்ற கொடிய நிலங்களில் இருந்து வெளியேறும் மக்கள் நரகமான நகரக் குப்பைத் தொட்டிகளில் வீசப்படுகிறார்கள். தமிழ்நாட்டு மக்கள் குற்றுயிரும் குலையுயிருமாக, மூச்சுத் திணறுவதுடன் வாழ்வுக்கும் சாவுக்கும் இடையில் போராடிக் கொண்டிருக்கிறார்கள்.
மோடி கொண்டு வந்துள்ள அவசர நிலையை நிராகரிப்போம்!
பணமதிப்பகற்றும் பேரழிவை எதிர்ப்போம்!
(தோழர் வினோத் மிஸ்ராவின் 18ஆவது நினைவு தினத்தை ஒட்டி 
இகக மாலெயின் மத்திய கமிட்டி விடுத்துள்ள உறுதியேற்பு அழைப்பு)
மத்தியில் உள்ள மோடி ஆட்சி தனது அய்ந்தாண்டு கால பதவி காலத்தில் பாதியை முடித்துவிட்டது. முதல் இரண்டு ஆண்டுகளில் தூய்மை இந்தியா, டிஜிட்டல் இந்தியா, ஜன்தன் திட்டம் போன்றவற்றில் அது மும்முரமாக இருந்தபோது, இந்த ஆட்சியின் நாடாளுமன்றத்துக்கு அப்பாற்பட்ட பகுதியான, அரசாங்கத்தின் செயல்பாட்டில் வெளிப்படையாகவே தலையிடுகிற சங் பரிவார், ‘காதல் ஜிகாத்’, பசுப்பாதுகாப்பு என அனைத்துவிதமான தார்மீக மற்றும் சிந்தனைக் காவல் போன்ற, அதன் விஷமமான நிகழ்ச்சிநிரலை ஒவ்வொன்றாக கட்டவிழ்த்துவிட்டது. இதற்கு பிரதமரின் மறைமுகமான, சில சமயங்களில், வெளிப்படையான ஆதரவும் இருந்தது. உத்தரபிரதேசத் தேர்தல்களில் பெறும் வெற்றி மாநிலங்களவையில் பாஜகவின் இருத்தலை மேலும் வலுவூட்டக் கூடிய, ஆர்எஸ்எஸ் நிகழ்ச்சிநிரலுக்கேற்ப பல்வேறு அரசியல்சாசன மாற்றங்கள் கொண்டு வரும் பாஜகவின் யோசனைக்கு உதவக்கூடிய முக்கியத்துவம் வாய்ந்த தேர்தல் நெருங்கும் நேரத்தில், அரசாங்கம் ஒரு நிச்சயமான அவசரத்தில் இருப்பதாகவே தெரிகிறது.
இப்பிடித்தான் நாங்க கையெழுத்து வாங்குனோம்...
விஏபி ஆலைத் தொழிலாளர்களுடன் ஓர் உரையாடல்
ஏஅய்சிசிடியுவும் அவிகிதொசவும் மாநிலம் முழுவதும் நடத்தி வரும் 10 லட்சம் கையெழுத்து இயக்கத்தில் 30.11.16 வரை சென்னையில் 50,000 கையெழுத்துக்கள் திரட்டப்பட்டுள்ளன. விஏபி ஆலைத் தொழிலாளர்கள் இந்த வேலைகளில், தாங்களாக திட்டமிட்டு ஒரே வாரத்தில் 5,360 கையெழுத்துக்கள் பெற்றுள்ளார்கள். இந்த வேலைகளில் அவர்கள் கடைபிடித்த வழிமுறைகள் தொடர்பாக தீப்பொறி ஆசிரியர் குழு உறுப்பினர் தோழர் சேகர், விஏபி தோழர்கள் ஞானவேல், நாகராஜன், கிரி ஆகியோருடன் நிகழ்த்திய உரையாடலில் இருந்து சில பகுதிகள் இங்கு தரப்படுகின்றன.
தீப்பொறி: எந்த கம்பெனில வேலை செய்றீங்க ?
தோழர் ஞானவேல்: விஏபி...
தீப்பொறி: என்ன விஅய்பியா?
நவம்பர் புரட்சியின் நூற்றாண்டு
கடந்த காலத்தை நினைவு கூர்ந்து எதிர்காலம் நோக்கி முன்னேறுவோம்!
(2016 டிசம்பர் லிபரேசன் இதழில் வெளியாகியுள்ள கட்டுரையின் தமிழ் வடிவம் பகுதி 2)
நாடாளுமன்றவாதத்துக்கு அப்பால்: 
‘அனைத்து அதிகாரங்களும் சோவியத்துகளுக்கே’
பிப்ரவரி புரட்சிக்குப் பிறகு, ஜார் அரசாங்கத்தின் இடத்தில் தற்காலிக அரசாங்கம் அமைக்கப்பட்டது; டூமா உறுப்பினர்களில் பெரும்பாலானோர் வசதி படைத்த நில உடைமையாளரான இளவரசர் ஜி.லோவோவ் தலைமையிலான கேடட் (அரசியல் சாசன - ஜனநாயக) கட்சியின் உறுப்பினர்களாக இருந்தார்கள். அதே நேரத்தில் பெட்ரோகிராடிலும் பிற நகரங்களிலும் தொழிலாளர் மற்றும் படைவீரர் பிரதிநிதிகளின் சோவியத்துக ளும் உருவாக்கப்பட்டன. இப்படியாக இரட்டை அதிகாரம் இருக்கிற தனித்துவமான சூழல் உருவானது. முதலாளித்துவ தற்காலிக அரசாங்கம், அனைத்து உழைக்கும் மக்களையும் பிரதிநிதித்துவப்படுத்தும் சோவியத்துடன் அரசியல் ஆதிக்கத்துக்கு போட்டியிட்டது. சோவியத்துகள் தற்காலிக அரசாங்கத்துக்கு அறிவுரைகள் வழங்க ஒரு தொடர்பு ஆணையமும் உருவாக்கப்பட்டது. முதலாளித்துவ ஜனநாயகப் புரட்சி முதலாளித்துவத்தாரிடம்தான் அதிகாரம் தரும், பாட்டாளி வர்க்கம் பிந்தைய ஒரு கட்டத்தில் சோசலிசப் புரட்சியைத் துவக்க வேண்டும் என்ற தங்கள் வறட்டுத்தனமான புரிதலுக்கேற்ப, சோவியத்துகளில் இருந்த மென்ஷ்விக்குகள் தற்காலிக அரசாங்கம்பால் சமரசப் போக்கை கடைபிடித்தார்கள்.
திருவிழா
- இன்குலாப்
(மக்கள் கவிஞர் இன்குலாப் நினைவாக
வெண்மணி நினைவாக)
ஒத்தையடிப் பாதை
ஓரத்தில் கருந்தூணாய்
நிக்கும் பனைமரங்கள்...
நெடுமரத்து ஓலையெல்லாம்
சரசரக்கும் பாதையிலே
சஞ்சரிக்க யார் வருவார்?

Saturday, December 3, 2016

தோழர் பிடல் காஸ்ட்ரோ நீடுழி வாழ்க
கியூபப் புரட்சியின் தலைவரும் உலகெங்கும் உள்ள ஏகாதிபத்திய எதிர்ப்புப் போராளிகளின் ஆதர்ச உருவுமான பிடல் காஸ்ட்ரோ ரஸ் மறைவுக்கு அஞ்சலி செலுத்தி இககமாலெ தனது கொடியை இறக்கிப் பறக்க விடுகிறது. ஒடுக்குமுறை பாடிஸ்டா ஆட்சியை தூக்கியெறிந்த, வெற்றிகரமான கியூபப் புரட்சிக்கு பிடல் காஸ்ட்ரோ தலைமை தாங்கினார். சின்னஞ்சிறிய புரட்சிகர கியூபாவை அழித்துவிட உறுதியாக இருந்த, அடுத்தடுத்த அய்க்கிய அமெரிக்க ஆட்சிகளின் பற்களில் இருந்து கியூபாவைப் பாதுகாத்தார். அய்க்கிய அமெரிக்க உளவு அமைப்பான சிஅய்ஏயின் 600க்கும் மேற்பட்ட படுகொலை முயற்சிகளை முறியடித்து, தனது 90ஆவது வயதில் மறைந்தார்.
நாட்டு மக்களை துன்புறுத்தும் நரேந்திர மோடி தேசபக்தரா? தேசவிரோதியா?
மோடி ஆட்சியின் செயல்பாடுகள், நோக்கங்கள் பற்றி மக்கள் மத்தியில் கடுமையான கேள்விகளும் சந்தேகங்களும் எழுந்துள்ள பின்னணியில், மோடி ஆட்சி அனைத்து தளங்களிலும் மக்களுக்கு அளித்த வாக்குறுதிகளில் தோல்வி அடைந்து, துரோகமிழைத்து மக்கள் சீற்றத்தை எதிர்கொண்டிருக்கிற பின்னணியில், மக்கள் மீது எறியப்பட்ட வெடிகுண்டுதான் 500, 1000 ரூபாய் நோட்டு செல்லாது என்ற அறிவிப்பு.
போபால் - மல்கன்கிரி – மலப்புரம்: தொடரும் மோதல் படுகொலைகள்
எஸ்.குமாரசாமி
பாகிஸ்தானுக்கு எதிராக, பாகிஸ்தான் ஆதரவு பயங்கரவாதிகளுக்கு எதிராக, வெற்றிகரமான ‘துல்லியத் தாக்குதல்’ (சர்ஜிக்கல் ஸ்டிரைக்) நடத்தியதாக, நரேந்திர மோடி, (56 இன்ச்) மார் தட்டிக் கொண்டார்.
மோடியின் ஆட்சி எல்லா முனைகளிலும் தோல்வியடைந்து மக்கள் சீற்றத்துக்கு ஆளாகத் துவங்கியதில் இருந்தே, சங்பரிவார் கூட்டங்கள், தேசம் தேசியம் தேசபக்தி எனக் கூப்பாடு போடத் துவங்கின. பாஜக அரசு தனது மக்கள் விரோத நடவடிக்கைகளை எதிர்ப்பவர்களை தேச விரோதிகள் என்றது. எதிர்ப்பு எழும் போதெல்லாம், எல்லையைக் காக்கும் ராணுவ வீரர்களை நினைத்துப் பார்க்க மாட்டீர்களா எனக் கேட்டது. இராணுவத்தை அரசியல்படுத்தும், அரசியலை இராணுவமயப்படுத்தும் விபரீத ஆட்டத்தை ஆடத் துவங்கியது.
பொருளாதார சுனாமியில் சிக்கிக் கொண்ட விவசாய சமூகம்
பொருளாதார அறிஞர் ஜான் மேனார்ட் கீன்ஸ் சொன்னதை மேற்கோள் காட்டி நாடாளுமன்றத்தில் பேசிய மன்மோகன் சிங் நீண்டகால நோக்கில்.... நாம் உயிருடன் இருக்க மாட்டோம்.. என்றார். இதையே, தனது துன்பம் பற்றி தனது நண்பர் ஒருவரிடம் பேசிக் கொண்டிருந்த திருவாளர் பொது ஜனம், வருத்தத்தில் மூழ்கிய குரலில் இப்படிச் சொன்னார்: இப்படியே போனா மோடிதான் இருப்பாரு.... ஜனங்க இருக்க மாட்டாங்க... சென்னை நகரவாசி ஒருவருக்கு இந்தத் துன்பம் என்றால், கிராமப்புறங்களில் மக்கள் வாழ்க்கை எந்த அளவுக்கு தடம் புரண்டு போய் இருக்கும்?
பண மதிப்பகற்றும் நடவடிக்கை
மோடியின் வருமுன் காக்கும் திட்டமும் சஹாரா, பிர்லா பேப்பர்களும்
மோடியை துக்ளக் என்று சொல்கிறார்கள். கிண்டல் செய்கிறார்கள். தூற்றுகிறார்கள். எதிர்ப்புகள் தெரிவிக்கிறார்கள். மாபெரும் குளறுபடி செய்துவிட்டார், கட்டமைக்கப்பட்ட திருட்டு, சட்டபூர்வமான கொள்ளை என்று எதிர்க்கட்சியினர் சொல்கிறார்கள். மோடி அசைய மறுக்கிறார். பின்வாங்க மாட்டேன் என்று உறுதியாக நிற்கிறார். நாட்டு மக்கள் துன்பப்படுவது நன்றாகத் தெரிந்தும், கொஞ்சம் பொறுத்துக் கொள்ளுங்கள் என்கிறார். நிலைமை சீரடைந்துவிடாமல் பார்த்துக் கொள்கிறார். காரணம் இருக்கிறது. காரணம் பற்றி ஆயும் முன் பத்திரிகைகளில் பெரிதாக வெளியிடப்படாத, அல்லது வெளிவந்து விடாமல் பார்த்துக் கொள்ளப்படுகிற ஒரு சுவாரசியமான நியமனம் பற்றி பார்க்கலாம்.
ஸ்டேட் பேங்க் ஆப் இந்தியா என்ற பெயரை விஜய் மல்லையா அன்டு கோ என பெயர் மாற்றம் செய்!
நாட்டை விட்டு ஓடிப்போய்விட்ட விஜய் மல்லையாவுக்கு ரூ.1200 கோடி, வேறு பல பல கார்ப்பரேட் முதலாளிகளுக்கு பல ஆயிரம் கோடி கடன் தள்ளுபடி செய்து அறிவிக்கப்பட்டதைக் கண்டித்து, ஸ்டேட் பேங்க் ஆப் இந்தியா என்பதை விஜய் மல்லையா அன்டு கோ என பெயர் மாற்றம் செய் என்ற முழக்கத்துடன், 22.11.2016 அன்று சென்னை பாரிமுனையில் உள்ள, ஸ்டேட் பேங்க் ஆப் இந்தியா வணிகக் கிளையின் அலுவலகத்தை வழக்கறிஞர்கள், மாணவர்கள் இளைஞர்கள் தொழிலாளர்கள் முற்றுகையிட்டு ஆர்ப்பாட்டம் செய்தனர். ஜனநாயக வழக்கறிஞர் சங்க மாநிலப் பொறுப்பாளர் தோழர் கே.பாரதி தலைமை தாங்கி நடத்தினார். சென்னை மாவட்ட இகக மாலெ மாநகரச் செயலாளர் தோழர் எஸ்.சேகர்,  ஏஅய்சிசிடியு மாவட்டத் தலைவர்கள் தோழர்கள் ஜி.முனுசாமி ஆர்.மோகன், ஆர்ஒய்ஏ பொறுப்பாளர்கள் தோழர்கள் செந்தில், கே.ராஜேஷ், இ. ஸ்டாலின் அய்சா மாநிலச் செயலாளர் தோழர் வி.சீதா, மாவட்டப் பொறுப்பாளர் வி.கோகுல், வழக்கறிஞர் சங்க தலைவர்கள் தோழர்கள் சுரேஷ், சங்கர், பிரபாகர், டைமன்ட் இஞ்சினியரிங், டோபாஸ் டூல்ஸ், மினாமி மெட்டல்ஸ், டீகே இஞ்சினியரிங் ஆலைகளின் கிளை சங்கங்களின் தலைவர்கள் கலந்து கொண்டனர். போராட்டத்தில் ஈடுபட்ட அனைவரையும் காவல்துறையினர் தரதர வென இழுத்துச் சென்று கைது செய்து, பிறகு மாலை விடுவித்தனர்.
500, 1000 ரூபாய் நோட்டு செல்லாது என்ற அறிவிப்பை உடனடியாக திரும்பப் பெறு!
நவம்பர் புரட்சியின் நூற்றாண்டு
கடந்த காலத்தை நினைவு கூர்ந்து எதிர்காலம் நோக்கி முன்னேறுவோம்
(2016 டிசம்பர் லிபரேசன் இதழில் வெளியாகியுள்ள கட்டுரையின் தமிழ் வடிவம் பகுதி 1)
“சித்தாந்த அறிஞர்கள் உலகத்தை பல விதங்களிலும் வியாக்கியானம் செய்தார்கள். ஆனால், பிரச்சனை, அதை எப்படி மாற்றுவது என்பதுதான்”. 1845ல், ஃப்யூர்பாக் பற்றிய ஆய்வின் இறுதி வரிகளை இளம் காரல் ஹெயின்ரிச் மார்க்ஸ் இப்படி எழுதியபோது, சித்தாந்தத் தளத்திலும் அரசியல் தளத்திலும் ஒரு மவுனப் புரட்சி நடந்தது.

Search