COMMUNIST PARTY OF INDIA (MARXIST - LENINIST) - LIBERATION

COMMUNIST PARTY OF INDIA (MARXIST - LENINIST) - LIBERATION, TAMILNADU

Thursday, November 29, 2012

மாலெ தீப்பொறி டிசம்பர் 2012, 01-15 தொகுதி 11 இதழ் 9

வேண்டுகோள்

தீப்பொறி வாசகர்களுக்கு வேண்டுகோள்

தீப்பொறி வாசகர்களுக்கு, வணக்கம்.

உலகின் தலைசிறந்த அறிஞர் மார்க்ஸ் என்று மக்கள் கருதுவதாக இருபத்தியோராம் நூற்றாண்டில் ஒரு முதலாளித்துவ ஆய்வு சொல்கிறது. இன்றைய இந்தியாவுக்கு யார் தேவை என்று கேட்டபோது, காந்தி போன்றவர்களை எல்லாம் பின்னுக்குத் தள்ளி, அது பகத்சிங் என்று இந்திய மக்கள் கருதுவதாக இன்னொரு முதலாளித்துவ ஆய்வு சொல்கிறது. வெள்ளை ஆட்சியிடம் மன்னிப்பு கேட்டிருந்தால் விடுதலை கிடைத்திருக்கும்.

…….

மேலும் படிக்க இங்கு CLICK செய்யவும்

∞∞∞∞∞∞∞∞∞∞∞∞∞∞∞∞∞∞∞∞∞∞∞∞∞∞∞∞

தலையங்கம்

தமிழகத்தில் சாதிவெறித் தீ

இப்படி ஒன்று நடந்துவிட்டதா? பாரதியும், பெரியாரும் பொய்யாய் பழங்கதையாய் மெல்லக் கரைந்து போய் விடுவார்களா? வெள்ளை நிறத்து பூனை பெற்ற குட்டிகள் கதை சொல்லி சாதிக் கொடுமைகள் வேண்டாம் என்றானே, மறந்து விடுவோமா? வாக்கு வங்கி அரசியல் நடத்த, தொலைந்து போன செல்வாக்கு அடித்தளத்தை மீட்க மாநில மக்கள் போராடி பெற்ற நலன்களை, பாடுபட்டு சேர்த்த பகுத்தறிவு, ஜனநாயக செல்வங்களை விற்றுவிடுவார்களா?

…….

மேலும் படிக்க இங்கு CLICK செய்யவும்

∞∞∞∞∞∞∞∞∞∞∞∞∞∞∞∞∞∞∞∞∞∞∞∞∞∞∞∞

சிறப்புக் கட்டுரை

பால் தாக்கரே, அஜ்மல் கசாப்பிடம் இருந்து வேறுபட்டவரா?

எஸ்.குமாரசாமி

அஜ்மல் கசாப் 21.11.2012 அன்று மகாராஷ்டிராவின் எர்வாடா சிறையில் தூக்கில் இடப்பட்டார். (நாடாளுமன்றத்தில் வீசப்போகும் புயலைச் சந்திக்க, காங்கிரசின் தேசபக்தியை பறைசாற்ற அவசரஅவசரமாக, ரகசியமாக தூக்கில் இடப்பட்டார்). பால் தாக்கரே 17.11.2012 அன்று நோய்வாய்ப்பட்டதால் இறந்தார். அஜ்மல் கசாப் தூக்கில் இடப்பட்டதற்குக் கொண்டாட்டங்களும் இருந்தன. ஆனால், பால் தாக்கரே மரணத்தை, இந்திய குடியரசுத் தலைவர் பிரணாப் முகர்ஜி, ஈடுகட்ட முடியாத மரணம் என்று சொல்லி அஞ்சலி செலுத்தினார். லதா மங்கேஷ்கர் தாம் அனாதையாகிவிட்டதாக வருந்தினார். ராம்கோபால் வர்மா, பால் தாக்கரேயின் தொலை நோக்குப் பார்வையை சிலாகித்தார்.

…….

மேலும் படிக்க இங்கு CLICK செய்யவும்

∞∞∞∞∞∞∞∞∞∞∞∞∞∞∞∞∞∞∞∞∞∞∞∞∞∞∞∞

களம்

தொழிலாளர் பிரச்சனைகளை விவாதிக்க சிறப்பு சட்டமன்றக் கூட்டத் தொடர் கூட்டு

2013 பிப்ரவரி 20 - 21 தேதிகளில் நடக்கவுள்ள பொது வேலை நிறுத்தம், பிப்ரவரி 2 - 12 தேதிகளில் தமிழகத்தில் கோவையில் இருந்தும் குமரியில் இருந்தும் சென்னை நோக்கி, தொழிலாளர் பிரச்சனைகளை விவாதிக்க சிறப்பு சட்டமன்றக் கூட்டத் தொடர் வேண்டும் என்ற கோரிக்கையுடன் நடக்கவுள்ள பிரச்சாரப் பயணங்கள் ஆகியவற்றுக்கான மாவட்ட மட்டத்திலான தயாரிப்பு ஊழியர்கள் கூட்டங்களை ஏஅய்சிசிடியு நடத்தி வருகிறது. கோவை, குமரி, நெல்லை, சென்னை, சேலம், நாமக்கல் ஆகிய மாவட்டங்களில் ஊழியர் கூட்டங்கள் நடத்தப்பட்டுள்ளன.

…….

மேலும் படிக்க இங்கு CLICK செய்யவும்

∞∞∞∞∞∞∞∞∞∞∞∞∞∞∞∞∞∞∞∞∞∞∞∞∞∞∞∞

உலகம்

காசா

இருபத்தியோராம் நூற்றாண்டிலும்
காலனியம் தொடர்கிறது

எஸ்.கே

உலகின் கவனத்தை கடந்த சில தினங்களாக காசா பெற்றிருந்தது. எட்டு நாட்களாக இஸ்ரேல் ஒரு கொடூரமான போரை காசா மீது ஏவியது. இப்போது எகிப்தை முன் நிறுத்தி ஒரு போர் நிறுத்த உடன்பாடு ஏற்பட்டுள்ளது.

…….

மேலும் படிக்க இங்கு CLICK செய்யவும்

∞∞∞∞∞∞∞∞∞∞∞∞∞∞∞∞∞∞∞∞∞∞∞∞∞∞∞∞

கட்டுரை

உலகமயம்: மேலிருந்து கீழ் கசிவது அல்ல கீழிருந்து மேல் சேர்வது

உணவு மானிய ஒதுக்கீட்டை நினைத்து முன்னாள் நிதியமைச்சருக்கு தூக்கம் கெட்டது. அய்முகூ ஆட்சியாளர்கள் பெட்ரோலுக்கும் டீசலுக்கும் சமையல் எரிவாயுவுக்கும் மானியம் தர நிதியில்லை என்று அழுகிறார்கள். பொது விநியோகத்தில் பொருளுக்கு பதிலாக பணம் பெற்றுக்கொள்ளச் சொல்கிறார்கள். கோடிக் கணக்கான சாமான்ய மக்களின் துன்பங்களுக்கு தீர்வு காண எந்த முயற்சியும் எடுக்காமல் பெரு நிறுவனங்களின் நலன்களை மட்டுமே கணக்கில் கொள்ளும் அய்முகூ அரசாங்கத்தின் இன்றைய நிதியமைச்சர் சிதம்பரம் தேசியமயமாக்கப்பட்ட வங்கிகளுக்கு கூடுதலாக நிதி வழங்குவது பற்றி அரசாங்கம் சில வாரங்களில் முடிவு எடுக்கும் என்கிறார். மார்ச் 2013 வரையிலான பட்ஜெட்டில் அது ரூ.15,500 கோடிக்கு மிகாது என்று சொல்கிறார்.

…….

மேலும் படிக்க இங்கு CLICK செய்யவும்

∞∞∞∞∞∞∞∞∞∞∞∞∞∞∞∞∞∞∞∞∞∞∞∞∞∞∞∞

கட்டுரை

பெருநிறுவனங்கள் இன்புற்றிருக்க இருப்பதுவேயல்லாமல்...

மஞ்சுளா

அரசாங்கம் எடுக்கும் ஒரு நடவடிக்கை தவறாகிப் போனால், அந்த நடவடிக்கையின் இலக்கை எட்ட முடியாமல் போனால், அதற்கு அந்த அரசாங்கம் வருத்தப்பட வேண்டும். மக்களிடம் தோல்விக்கான காரணத்தை விளக்க வேண்டும். சரி செய்யும் நடவடிக்கை எடுக்க வேண்டும். அய்முகூ அரசாங்கம் தலைகீழாக செயல்படுகிறது. 2 ஜி அலைக்கற்றை ஏலத்தில் எதிர்ப்பார்த்த ரூ.40,000 கோடி வருவாய்க்குப் பதில் வெறும் ரூ.9,407 கோடி வந்ததை அய்முகூ ஆட்சியாளர்கள் கொண்டாடுகிறார்கள்.

…….

மேலும் படிக்க இங்கு CLICK செய்யவும்

∞∞∞∞∞∞∞∞∞∞∞∞∞∞∞∞∞∞∞∞∞∞∞∞∞∞∞∞

உலகம்

சீன கம்யூனிஸ்ட் கட்சியின் 18ஆவது காங்கிரஸ்

பாதையை மாற்றிக் கொள்ளும் அறிகுறிகளை காண முடியவில்லை

உலகின் மிகப்பெரிய மக்கள் தொகை கொண்ட நாட்டை ஆளுகிற உலகின் மிகப்பெரிய அரசியல் கட்சியின் (8 கோடி உறுப்பினர்களை பிரதிநிதித்துவப்படுத்துகிற 2300க்கும் மேற்பட்ட பிரதிநிதிகள்) 18ஆவது காங்கிரஸ் வியப்படையத்தக்க ஏதும் முன்வைக்கவில்லை. அதிகரித்து வருகிற வேலை வாய்ப்பின்மை, ஆபத்தான வேலைநிலைமை கள், கட்டுக்கடங்காத ஊழல், கிராமப்புற வறுமை, நிலப்பறி, சமூக ஏற்றத்தாழ்வு, பெண்கள் ஓரங்கட்டப்படுதல், சுற்றுச்சூழல் பாதிக்கப்படுவது ஆகியவை பற்றிய கவலை தரும் செய்திகள் வருகிற பின்னணியில் காங்கிரஸ் நடந்தது.

…….

மேலும் படிக்க இங்கு CLICK செய்யவும்

∞∞∞∞∞∞∞∞∞∞∞∞∞∞∞∞∞∞∞∞∞∞∞∞∞∞∞∞

மண்ணில் பாதி

சவிதாவின் மரணம் எழுப்பிடும் கேள்விகள்

ராகவன்

அயர்லாந்து நாட்டிற்கு குடி சென்ற இந்திய இளம்பெண் சவிதாவின் மரணம் உலகெங்கிலும் கடும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது. ஒப்பீட்டளவில் முன்னேறிய அய்ரோப்பிய நாடுகளில் ஒன்றான அயர்லாந்தில் கருக்கலைப்பு செய்வது குற்றம் என்று சட்டம் இருப்பதால், சவிதாவுக்கு கருச்சிதைவு ஏற்பட்ட நிலையில் அவர் அயர்லாந்தின் கால்வே நகரின் பல்கலைக்கழக மருத்துவமனைக்கு தம் உறவினர்களுடன் சென்று, கருக்கலைப்பு செய்யும்படி மன்றாடி கேட்டுக் கொண்ட பின்னரும், சட்டத்திற்கு பயந்து மருத்துவர்கள் அதனைச் செய்ய மறுத்தனர். இதனால் அவர் கருவில் இருந்த 17 வாரகால சிசு இறந்து அவரது இரத்தத்தில் நச்சுத்தன்மை பரவி அவர் அக்டோபர் 28 அன்று உயிரிழந்தார்.

…….

மேலும் படிக்க இங்கு CLICK செய்யவும்

∞∞∞∞∞∞∞∞∞∞∞∞∞∞∞∞∞∞∞∞∞∞∞∞∞∞∞∞

களம்

எம்ஆர்எப் தொழிலாளர் கருத்தரங்கம்

நவம்பர் 17 அன்று திருவெற்றியூரில் தொழிலாளர் சீரமைப்பு இயக்கம் 2013 ஊதிய உயர்வு ஒப்பந்தம் - தொழிலாளர்களின் கடமைகளும் போராட்டங்களும் என்ற தலைப்பில் கருத்தரங்கம் நடத்தியது. ஏஅய்சிசிடியு அகில இந்தியத் தலைவர் தோழர் குமாரசாமி கலந்துகொண்டு கருத்துரையாற்றினார். ஏஅய்சிசிடியு மாநிலத் தலைவர்கள் தோழர்கள் ஜவஹர், ராதாகிருஷ்ணன், .எஸ்.குமார், புவனேஸ்வரி, பழனிவேல், சேகர் கலந்து கொண்டனர். சீரமைப்பு இயக்கத்தின் முன்னணி நிர்வாகிகள் தோழர்கள் சிவபிரகாசம், சேகர், கார்பரண்டம் சங்க பொதுச் செயலாளர் பழனி ஆகியோர் கலந்து கொண்டனர்.

…….

மேலும் படிக்க இங்கு CLICK செய்யவும்

∞∞∞∞∞∞∞∞∞∞∞∞∞∞∞∞∞∞∞∞∞∞∞∞∞∞∞∞

களம்

புரட்சிகர இளைஞர் கழகத்தின் தேசிய மாநாட்டு விளக்கப் பொதுக் கூட்டங்கள்

ஊழலுக்கு, பெருநிறுவன கொள்ளைக்கு, ஏகாதிபத்திய அடிமைத்தனத்திற்கு எதிராக, 2012 டிசம்பர் 14, 15 தேதிகளில் உத்தரபிரதேசம், லக்னோவில் பகத்சிங் அரங்கத்தில் புரட்சிகர இளைஞர் கழகத்தின் 5வது தேசிய மாநாடு நடைபெற இருக்கிறது. இதை ஒட்டி தமிழகம் முழுக்க மாநாட்டு விளக்கப் பிரச்சாரம் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

…….

மேலும் படிக்க இங்கு CLICK செய்யவும்

∞∞∞∞∞∞∞∞∞∞∞∞∞∞∞∞∞∞∞∞∞∞∞∞∞∞∞∞

களம்

அனைத்திந்திய விவசாயத் தொழிலாளர் சங்கம் ஆர்ப்பாட்டம்

தேசிய ஊரக வேலை உறுதி திட்டத்தில் ரூ.132 சட்டக்கூலியை உடனே வழங்க வேண்டும், விவசாயத் தொழிலாளர்களுக்கு வீட்டுமனைப் பட்டா உள்ளிட்ட அடிப்படை வசதிகள் வேண்டும், பஞ்சமி, பூதான் நிலங்களை மீட்டு தலித் மக்களுக்கு வழங்க வேண்டும், விவசாயத் தொழிலாளர் பாதுகாப்புக்குத் தனிச்சட்டம் வேண்டும், கூடன்குளம் அணுஉலை மூடப்பட வேண்டும் போன்ற கோரிக்கைகளை வலியுறுத்தி அனைத்திந்திய விவசாயத் தொழிலாளர் சங்கம் ஆர்ப்பாட்டங்கள் நடத்தியது. திருவள்ளூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகில் நவம்பர் 19 அன்று நடந்த ஆர்ப்பாட்டத்தில் இடம்பெயர்ந்த தொழிலாளர்களுக்கு வாக்குரிமை, ரேஷன் அட்டை வழங்க வேண்டும் போன்ற கோரிக்கைகளும் வலியுறுத்தப்பட்டன. போராட்டத்திற்கு அவிதொச தலைவர்களில் ஒருவரான தோழர் சுந்தரம் தலைமை தாங்கினர்.

…….

மேலும் படிக்க இங்கு CLICK செய்யவும்

∞∞∞∞∞∞∞∞∞∞∞∞∞∞∞∞∞∞∞∞∞∞∞∞∞∞∞∞

களம்

நாயக்கன்கொட்டாய் தலித் மக்களுக்கு நீதி வேண்டும்

தர்மபுரி தலித் மக்கள் மீதான தாக்குதலைக் கண்டித்தும் தங்கள் வாழ்வை இழந்துவிட்ட தலித் மக்களுக்கு நியாயம் கோரியும் சென்னையில் நவம்பர் 19 அன்று ஜனநாயக வழக்கறிஞர் சங்கம், அகில இந்திய மாணவர் கழகம், புரட்சிகர இளைஞர் கழகம், அகில இந்திய முற்போக்கு பெண்கள் கழகம் ஆகிய அமைப்புக்கள் கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தின. ஆர்ப்பாட்டத்தில் வழக்கறிஞர்கள், தொழிலாளர்கள், பத்திரிகையாளர்கள், இளைஞர், மாணவர், பெண்கள் அமைப்புகளின் தோழர்கள் கணிசமான எண்ணிக்கையில் கலந்து கொண்டனர்.

…….

மேலும் படிக்க இங்கு CLICK செய்யவும்

∞∞∞∞∞∞∞∞∞∞∞∞∞∞∞∞∞∞∞∞∞∞∞∞∞∞∞∞

களம்

கூடங்குளம் அணுஉலையை மூடு

22.11.2012 அன்று சர்வதேச மீனவர் தினம் தமிழ்நாட்டில் கூடங்குளம் அணு உலையை மூட வேண்டும் என்ற கோரிக்கையுடன் கடலோர மாவட்டங்களில் அனுசரிக்கப்பட்டது. மாலெ கட்சி திருநெல்வேலியில் கண்டனக் கூட்டம் நடத்தியது. கூட்டத்தில் கட்சி மாவட்டச் செயலாளர் தோழர் சங்கரபாண்டியன் உரையாற்றினார். கட்சியினுடைய மாவட்டத் தலைவர்கள் கருப்பசாமி, கணேசன், உள்ளிட்ட தோழர்கள் பெருந்திரளாக கலந்து கொண்டனர்.

…….

மேலும் படிக்க இங்கு CLICK செய்யவும்

∞∞∞∞∞∞∞∞∞∞∞∞∞∞∞∞∞∞∞∞∞∞∞∞∞∞∞∞

Search