COMMUNIST PARTY OF INDIA (MARXIST - LENINIST) - LIBERATION

COMMUNIST PARTY OF INDIA (MARXIST - LENINIST) - LIBERATION, TAMILNADU

Tuesday, March 27, 2012

தீப்பொறி மார்ச் 2012, 16 - 31


ÔÔÔÔÔÔÔÔÔÔÔÔÔÔÔÔÔÔÔÔÔÔÔ
ÔÔÔÔÔÔÔÔÔÔÔÔÔÔÔÔÔÔÔÔÔÔÔ
ÔÔÔÔÔÔÔÔÔÔÔÔÔÔÔÔÔÔÔÔÔÔÔ
ÔÔÔÔÔÔÔÔÔÔÔÔÔÔÔÔÔÔÔÔÔÔÔ
ÔÔÔÔÔÔÔÔÔÔÔÔÔÔÔÔÔÔÔÔÔÔÔ
ÔÔÔÔÔÔÔÔÔÔÔÔÔÔÔÔÔÔÔÔÔÔÔ
ÔÔÔÔÔÔÔÔÔÔÔÔÔÔÔÔÔÔÔÔÔÔÔ
ÔÔÔÔÔÔÔÔÔÔÔÔÔÔÔÔÔÔÔÔÔÔÔ

Mar-2-8

அறிவிப்பு

ஜவஹர்லால் நேரு பல்கலை கழகத்தில் புரட்சிகர இடதுசாரிக்கு ஏகோபித்த ஆதரவு!

4 ஆண்டுகளுக்கு பிறகு நடந்த மாணவர் பேரவை தேர்தலில்

அகில இந்திய மாணவர் கழகத்துக்கு மகத்தான வெற்றி!

மார்ச் 1, 2012 அன்று நடைபெற்ற ஜவஹர்லால் நேரு பல்கலைக் கழக மாணவர் பேரவை தேர்தலில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி (மார்க்சிஸ்ட் – லெனினிஸ்ட்) விடுதலையின் மாணவர் அமைப்பான அகில இந்திய மாணவர் கழகம் ஏகோபித்த ஆதரவுடன் தேர்ந்தெடுக்கப்பட்டிருக்கிறது. 4 முக்கிய நிர்வாகிகள் உட்பட பல துறைகளின் கவுன்சிலர்களும் பெரும் எண்ணிக்கை வித்தியாசத்தில் வெற்றி பெற்று வலதுசாரி மாணவர் அமைப்புகளை மட்டுமன்றி, SFI – AISF (இகக, இகக(மா) கட்சிகளுடன் இணைக்கப்பட்ட மாணவர் அமைப்புகள்) கூட்டையும் துடைத்தெறிந்திருக்கிறது. JNUSU வேட்பாளர்களிலேயே இதுவரை இல்லாத அளவுக்கு, தலைவர் பதவிக்கு போட்டியிட்ட சுசிதா தே 2012 வாக்குகள் பெற்று தனக்கு அடுத்தபடியாக வந்த SFIன் சிகோ தாஸ்குப்தாவை (751 வாக்குகள்) 1351 வாக்குகள் என்ற மிகப் பெரிய வித்தியாசத்தில் தோற்கடித்தார். துணைத் தலைவர் பதவிக்கு போட்டியிட்ட AISAவின் அபிஷேக் குமார் யாதவ் 1997 வாக்குகள் பெற்று 1357 வாக்குகள் பெற்ற SFI அனகா குங்கோலை தோற்கடித்தார். பொதுச் செயலாளர் பதவிக்கு போட்டியிட்ட AISAவின் ரவி பிரகாஷ் 1908 வாக்குகள் பெற்று 989 வாக்குகள் வாங்கிய AISF வேட்பாளர் துர்கேஷ் திரிபாதியை தோற்கடித்தார். இணைச் செயலாளராக AISA வின் முகம்மது பிரோஸ் அகமது 1778 வாக்குகள் பெற்றார்; எதிர்த்துப் போட்டியிட்ட நஊஐன் முகம்மது அல்டாமஸ் 1199 வாக்குகள் பெற்றிருந்தார்.

இந்துத்துவ பெரும்பான்மையின் அமைப்புகளாக இருக்கும் ஆர்எஸ்எஸ் மற்றும் பிஜேபி கட்சியுடன் இணைக்கப்பட்ட அகில் பாரதீய வித்யார்த்தி பரிஷத் (ABVP) எல்லா இடங்களிலும் 3வது இடத்தையே பிடிக்க முடிந்தது.

JNUSUல் 4 நிர்வாகிகள் உட்பட பல்வேறு பள்ளி(துறை)களை அல்லது மய்யங்களை பிரதிநிதித்துவப்படுத்தும் எல்லா கவுன்சிலர்களும் நேரடி தேர்வின் மூலமே தேர்ந்தெடுக்கப்படுகிறார்கள். இம்முறை மொத்தமுள்ள 29 கவுன்சிலர் இடங்களில் 14ல் AISA வெற்றி பெற்றது. JNUல் மொழி, கலை மற்றும் கலாச்சார படிப்புக்கான பள்ளி, சமூக அறிவியலுக்கான பள்ளி, மற்றும் சர்வதேசிய படிப்புக்கான பள்ளி என்ற 3 மிகப் பெரிய பள்ளிகள் ஒவ்வொன்றும் 5 கவுன்சிலர் இடங்களை கொண்டவை. இப்பள்ளிகளில் பெரும்பான்மை இடங்களை AISA கைப்பற்றியதால், இந்த ஒவ்வொரு பள்ளியிலும் கன்வீனர் என்ற பதவியையும் பெற முடிந்தது. மொழி இலக்கியம் மற்றும் கலாச்சார படிப்பு துறையில் ABVPஅய் வீழ்த்தி மொத்த கவுன்சில் பதவிகளையும் AISA பிடித்தது. சமூக படிப்பு மற்றும் சர்வதேசிய படிப்பு துறைகளில் 5ல் 4 இடங்களை AISA கைப்பற்றியது. 5ஆவது இடம் SFIக்கு சென்றது. சமூகப் படிப்புத் துறையில் கடந்த 20 ஆண்டு களில் முதல்முறையாக SFI கன்வீனர் பதவியை இழந்திருக்கிறது. கலை மற்றும் அழகியல் துறையின் கன்வீனர் பதவியையும் AISA கைப்பற்றியது.

மாணவர்களை அரசியலற்றவர்களாக்கும் சதிக்கு எதிராக

2007ல் JNUSUல், AISAவை சேர்ந்தவர்களையே 4 நிர்வாகிகளுக்கும் தேர்ந்தெடுத்திருந்தது. கடந்த 4 ஆண்டுகளாக உச்சநீதிமன்றம் JNUவின் ஜனநாயக முறைப்படியான தேர்தல் (நிர்வாக குறுக்கீடு எதுவும் இல்லாமல் முழுவதுமாக மாணவர்களால் நடத்தப்படுவது) அது நியமித்த லிங்டோ கமிட்டியின் பரிந்துரைகளை மீறியதாக இருக்கிறது என்று தேர்தலுக்கு தடை விதித்திருந்தது.

ஆனால் JNUSU தேர்தல்தான் லிங்டோ குழு கட்டுப்படுத்தப் போவதாகச் சொல்லும் பண பலம் மற்றும் வன்முறை என்பது கிஞ்சித்தும் இல்லாமல் நடைபெறும் தேர்தல். இந்தத் தேர்தலில்தான் பெரும் எண்ணிக்கையில் மாணவர்கள், மாணவர் இயக்கம் சந்திக்கிற பிரச்சினைகள் பற்றி கருத்தியல், அரசியல் தளங்களில் காத்திரமான, ஆழமான விவாதங்கள் நடத்தி வாக்களிக்கின்றனர். எனவே, இடதுசாரி மாணவர் குழுக்கள் JNU மாணவர்கள் அரசியலில் எப்போதுமே ஆளுமை செலுத்தி வருகின்றன. 1990களிலிருந்து முக்கியமான போட்டி AISAவுக்கும் SFI – AISF க்கும் இடையிலானதாக இருந்து வருகிறது. இங்கு அரசாங்கங்களின் தனியார்மயக் கொள்கைகளை மாணவர் இயக்கம் எப்போதுமே எதிர்த்து வந்திருக்கிறது. ஆகையால், லிங்டோ குழு விதிகளான, தன்னிச்சையாக நியமிக்கப்பட்ட வயது வரம்பு, இத்தனை முறைதான் ஒருவர் போட்டியிட முடியும் என்பதற்கான வரம்பு, (அதுவும் மய்ய நிர்வாகி பதவிக்கு ஒரு முறையும், கவுன்சிலர் பதவிக்கு இரண்டு முறையும்), ஒழுங்கு நடவடிக்கைக்கு உள்ளாக்கப்பட்ட மாணவர் போட்டியிட வாய்ப்பு மறுப்பு ஆகியவற்றை திணித்து, JNUவில் நடத்தப்படுவதுபோல் மாணவர்களாக நடத்தும் தேர்தல் மீது ஆட்சியாளர்கள் தாக்குதல் தொடுக்கின்றனர். JNU மாணவர்கள் உச்சநீதிமன்றத்தில் இந்த விதிகளுக்கு எதிராக முறையிட்டிருக்கிற அதே வேளை, லிங்டோ பரிந்துரைகளில் சில பகுதிகளை தளர்த்தி நீதிமன்றத்தில் சமரசம் பேசி, இடைக்கால நடவடிக்கையாக இந்த ஆண்டு தேர்தலை நடத்திட முடிவு செய்தார்கள்.

லிங்டோ கமிட்டி விதிகளும், கடந்த 4 ஆண்டு காலமாக தேர்தலை தற்காலிகமாக நிறுத்தி வைத்ததும், ஆட்சியிலிருப்பவர்கள் வேண்டுமென JNU மாணவர்களிடையே அரசியலகற்ற செய்த சதியே ஆகும். சொல்லப் போனால், தேர்தலுக்கான தடை JNU வில் பல மாணவர் குழுக்கள் செயலிழக்கவும், சிதறுண்டு போகவும் இட்டுச் சென்றது. ஆனால் தேர்ந்தெடுக்கப்பட்ட மாணவர் சங்கம் இல்லாமலேயே AISA இந்தக் காலகட்டத்தில் மிகவும் துடிப்பாக செயல்பட்டு, பல முக்கிய போராட்டங்களில் மாணவர்களை அணிதிரட்டியது. லிங்டோ கமிட்டி பரிந்துரைகளுக்கு எதிரான போராட்டம், மின்சாரம் போன்ற வசதிகளை வணிகமயமாக்குவதற்கு எதிராக, பயன்பாட்டிற்கு கட்டண வசூல் திட்டத்திற்கு எதிராக, இதர பிற்பட்ட சமூகத்தினருக்கான இட ஒதுக்கீட்டை கடைபிடிப்பதில் தவறான அணுகுமுறையை கையாண்டதற்கு எதிராக, தேசிய முக்கியத்துவம் வாய்ந்த உச்சநீதிமன்ற தீர்ப்பை பெற்றதாக இருக்கட்டும், மதரசாக்களில் கொடுக்கப்படும் சான்றிதழ்களை JNU நுழைவுக்கு அங்கீகாரமாக்க நடந்த வெற்றிகரமான போராட்டங்களாகட்டும், இவை அனைத்திலும் AISA கேந்திரமான பங்காற்றியிருக்கிறது.

2004 - 2006 கால கட்டத்தில் நடத்தப்பட்ட என்றென்றும் தாக்கத்தை ஏற்படுத்தக் கூடிய, JNU வளாகத்திலுள்ள ஒப்பந்தத் தொழிலாளர்களுக்கான போராட்டம் மற்றும், சிறு தேநீர் கடைக்காரர்களின் வாழ்வாதாரத்துக்கு அச்சுறுத்தலாக விளங்கிய ‘நெஸ்லே’யை வளாகத்தை விட்டு விரட்டிய போராட்டம் ஆகியவை முக்கியத்துவம் வாய்ந்த போராட்டங்களாகும்.

அய்முகூ அரசாங்கத்தின் தனியார்மயமாக்கத்திற்கான புளு பிரிண்ட் ஆக இருந்த கல்வி தொடர்பான தொகுப்பான சட்ட முன் வரைவுகளை எதிர்த்து பிரச்சாரம் செய்து, பெரும் எண்ணிக்கையில் மாணவர்களை AISA அணி திரட்டியது. ஆகஸ்ட் 2011 அன்று ஊழல் மற்றும் பெருநிறுவனக் கொள்ளைக்கு எதிராக நாடாளுமன்றத்தில் தடுப்பு அரண் அமைத்து போராடியபோது நூற்றுக்கணக்கான JNU மாணவர்கள் அதில் பங்கு பெற்றனர்.

ஜகத்சிங்பூர் போஸ்கோ ஆலைக்கு எதிரான போராட்டத்திலும், ஜாய்தாபூர் மற்றும் கூடங்குளம் அணுஉலைக்கு எதிரான போராட்டங்களிலும் AISA மக்களோடு ஒருமைப்பாடு தெரிவித்து நின்றது. வடகிழக்கு மாநிலங்கள், காஷ்மீர், வனப்பகுதிகளில், நாட்டின் பிற பகுதிகள் ஆகியவற்றில் கொடுமையான ஆயுதப்படை சிறப்பு அதிகாரங்கள் சட்டம், மத வன்முறை, அரசு ஒடுக்குமுறை, போலி மோதல் படுகொலைகள், சிறைக் கொலைகள் ஆகியவற்றுக்கு எதிராக அஐநஅ மாணவர்களை திரட்டியது.

ஆகவே 2012ல் AISA மீண்டும் தேர்வு செய்யப்பட்டது, JNUல் அரசியல் அகற்றும் முயற்சிகளுக்கும், மாணவர் இயக்கத்தை பலவீனப்படுத்தும் முயற்சிகளுக்கும் கிடைத்த வலுவான பதிலடி மட்டுமல்ல. பெரும்பான்மை மாணவர்கள் AISAவின் அரசியல் நிகழ்ச்சி நிரலுக்கும், முன்முயற்சிகளுக்கும் பேராதரவு தருகிறார்கள் என்பதற்கான சமிக்ஞை ஆகும். ஊடகங்களிலும், ஆளும் நிறுவனங்களிலும் சொல்லப்பட்டு வந்த ‘கருத்தியல் முடிந்து விட்டது’ மற்றும் இளைஞர் மத்தியில் இடதுசாரிகளுக்கு ஆதரவு குறைந்து விட்டது என்ற வாதங்களுக்கு கொடுக்கப்பட்ட சரியான பதில்வினையாகும். வளாக ஜனநாயகத்தின் குரலை நெறிக்க லிங்டோ கமிட்டி பரிந்துரைகள் எடுத்த நடவடிக்கைகளை மாணவர்கள் வலுவாக நிராகரித்துவிட்டார்கள் என்பதையும் தேர்தல் முடிவுகள் காட்டுகின்றன.

வலதுசாரி அமைப்புகள் காணாமல் போய்விட்டன

JNUSU தேர்தல்களின் இன்னொரு முக்கியமான அம்சம் வலதுசாரி அமைப்புகளான அகில் பாரதிய வித்யார்தி பரிஷத் (ABVP)

மற்றும் சமத்துவத்துக்கான இளைஞர்கள் (YFE) ஆகியவை இம்முறை வலுவிழந்து போயின என்பதுதான். (காங்கிரசுடன் இணைக்கப்பட்ட NSUI JNUல் எப்போதுமே சிறிதளவே இடம்

பெற்றிருந்தது). 1990களில் ABVP இடதுசாரிகளுக்கு காத்திரமான சவாலாக எழுந்தது. ஆனால் 2006ல் YFE இட ஒதுக்கீடு எதிர்ப்பு என்ற தளத்தில் ABVPயின் அடித்தளத்தை அரித்தெடுத்து 2007 தேர்தல்களில் இரண்டாவது இடத்தைப் பிடித்தது. அறிவியல் துறையில் AISA அதிக வாக்குகளை பெற்றது (இது மரபுரீதியாக ABVP மற்றும் YFE அமைப்புகளின் கோட்டையாக இருந்த இடம்) ABVP கலை, இலக்கியம் மற்றும் கலாச்சாரத் துறையில் ஒரு கவுன்சிலர் பதவி கூட வெற்றி பெற முடியவில்லை. இங்கு அவர்களுக்கு சிறிதளவு இருத்தல் தொடர்கிறது. மதவாத ABVP மற்றும் சாதிய YFEஅய் தனிமைப்படுத்தி, முற்போக்கு நிகழ்ச்சிநிரலில் மாணவர்களை ஒன்றிணைத்து, வலதுசாரிக்கான வெளியை குறுக்கியதில் AISAவின் கற்பனை வளமிக்க பிரச்சாரமே பெரும்பங்கு வகித்தது.

அவ்வப்போது சிறுபான்மையினருக்கு எதிராக மத உணர்வுகளை தூண்டிவிட முயற்சிப்பதும், மாணவர்கள் பிரச்சினைகள் மீதான போராட்டத்தில் ஒட்டுமொத்த அமைதி காப்பதும், விலகி நிற்பதும்தான் ABVP என்பதை வளாகம் அறிந்து வைத்திருக்கிறது. YFE மட்டும்தான் லிங்டோ கமிட்டி பரிந்துரைகளுக்கு ஆதரவாக JNUல் துடிப்பான இயக்கம் நடத்திக் கொண்டிருக்கக் கூடிய ஒரே சக்தி. 2006ல் YFE இட ஒதுக்கீட்டை பயன்படுத்தும் மாணவர்களை ‘தரம் குறைந்த ஜீவிகள்’ என்று முத்திரையிட்டு துண்டுப்பிரசுரம் வெளியிட்டது. மிகச் சமீபத்தில் இதே YFE, AISA செயல்

வீரர்களை, துணைத் தலைவராக வெற்றி பெற்றிருக்கிற அபிஷேக் யாதவையும் இணைத்து அவர்கள் ‘கிராமத்து பூசணிக்காய்கள்’ என்றும், எருமை மாடுகள் என்றும் அவர்களின் சாதிகளை குறிக்கிற விதமும் துண்டுப் பிரசுரங்கள் வெளியிட்டனர். JNU மாணவர்கள், ABVPயின் மதவாத அரசியலையும், YFEயின் ஜனநாயக விரோத மேட்டுக்குடி, சாதிய அரசியலையும் திட்டவட்டமாக புறக்கணித்து விட்டனர்.

SFIயின் தீர்மானகரமான தோல்வி

2007ல், பெருநிறுவன நில அபகரிப்பு, சிங்கூரிலும், நந்திகிராமிலும் விவசாயிகள் மீதான ஒடுக்குமுறை. அய்முகூ அரசாங்கத்துக்கு இகக(மா) ஆதரவு ஆகிய இகக(மா) அரசாங்கத்தின் கொள்கைகளை SFI நியாயப்படுத்தியதற்கு எதிராக AISAவின் வெற்றி அமைந்தது. வளாகத்தில் கூட SFI நெஸ்லே கடையை ஆதரித்து ஜனநாயக கருத்துகளிலிருந்து தனிமைப்பட்டது. தொழிலாளர் உரிமைக்கான போராட்டத்தில் SFI நிர்வாக ஆதரவு நிலை எடுத்தது.

இம்முறை, SFIக்கு மேற்குவங்கத்திலோ, கேரளாவிலோ அபகீர்த்தி வாய்ந்த அரசாங்கங்களை பாதுகாத்துக் கொள்ளும் நிலை ஏதும் இல்லை; உண்மையில் அவர்கள் தளத்தை மீட்டுக் கொள்ள ஒப்பீட்டளவில் சாதகமான அரசியல் சூழலே நிலவியது. எப்படியிருந்தபோதும் JNUன் இடது ஆதரவு மாணவர்கள், இகக(மா), மேற்கு வங்க வீழ்ச்சியிலிருந்து இன்னும் படிப்பினை எதையும் கற்றுக் கொள்ளவில்லை என்பதையும், எந்த காத்திரமான சரி செய்யும் நடவடிக்கையும் எடுக்கவில்லை என்பதையும் குறிப்பாக பார்த்திருக்கிறார்கள். அதேசமயம் AISA, மக்கள் விரோத ஜனநாயகமற்ற மேற்குவங்க திரிணாமுல் காங்கிரசு அரசுக்கு எதிராக செயலூக்கமிக்க, உறுதியான எதிர்ப்பில் இருப்பதையும் கவனித்துள்ளனர்.

எல்லாவற்றுக்கும் மேலாக, ஜனநாயகத்தின் முக்கியமான பிரச்சினைகளில் SFI மற்றும் இகக(மா) நிலைப்பாடு கடுமையான விமர்சனத்துக்கு உள்ளானது. பசுமை வேட்டைத் திட்டத்திற்கு (வனப்பகுதி மக்கள் மீது அரசாங்கத்தின் போர்) இகக(மா)வின் ஆதரவு, ஆயுதப்படை சிறப்பு அதிகாரங்கள் சட்டம் (AFSPA) தொடர்பாக அதன் இரட்டை அணுகுமுறை ஆகியவை இடதுசாரி கொள்கைகளுக்கு முற்றிலும் புறம்பானதாக இருப்பதாக இடதுசாரி சார்பு மாணவர்களால் பார்க்கப்பட்டது. JNU தலைவருக்கான விவாதத்தில் AISA

வேட்பாளர் சுசேதா டே, JNUல் SFI, AFSPA திரும்பப் பெற வேண்டும் என்று சுவரொட்டி ஒட்டும்போது, இகக(மா)வின் அரசியல் தீர்மானம், தேர்ந்தெடுக்கப்பட்ட சில பகுதிகளிலிருந்து AFSPA விலக்கிக் கொள்ளப்பட வேண்டும் என்று குறிப்பிடுகிறதே ஒழிய அச்சட்டம் திரும்பப் பெற வேண்டும் என்று குறிப்பிடவில்லை, திரிபுராவின் இடது அரசாங்கம், அச்சட்டம் திரும்பப்பெற பரிந்துரை கூட செய்யவில்லை, ஏன்? என்று கேள்வி எழுப்பினார். அதற்கு SFI வேட்பாளரின் பதில், மனித உரிமை மீறல் எங்கெல்லாம் நடைபெற்றதோ, அங்கெல்லாம் இருந்து சட்டம் விலக்கிக் கொள்ளப்பட்டால் போதும் என்பதாக இருந்தது. இடதுசாரிகளின் கொள்கைவயப்பட்ட கோரிக்கையான AFSPA அதன் கொடூரத்தன்மை காரணமாக விலக்கிக் கொள்ளப்பட வேண்டும் என்பதை அங்கீகரிக்க மறுத்தது. இகக(மா) ஆட்சி செய்யும் திரிபுராவில் மனித உரிமை மீறல் இல்லை என்று ஏற்கனவே அறிவித்தால் அங்கு இச்சட்டம் தொடரும் என்பது பதிலில் உட்பொதிந்த விசயமாகும்.

அதேபோல, இடது – ஜனநாயக மாற்று பற்றி பேசும் ஒரு கட்சி எப்படி பசுமை வேட்டை நடவடிக்கையை ஆதரிக்க முடியுமென்றும், மாவோயிஸ்டுகள்பால் அனுதாபம் கொண்டதாக குற்றம் சாட்டப்பட்ட JNUவின் ஒரு மாணவர் அமைப்பை JNU நிர்வாகம் தடை செய்ததற்கு எதிரான இயக்கத்தை SFI ஏன் நிராகரித்தது என்றும் சுசேதா கேள்விகள் எழுப்பினார். SFI வேட்பாளரின் பதில் மாவோயிஸ கருத்தியலோடு செயல்படும் மாணவர் அமைப்புகளை தடை செய்வதை ஆதரிப்பதாகவே இருந்தது.

லிங்டோ பரிந்துரைகள் பற்றிய கேள்வியிலும் அவர்கள் நிலைப்பாடு தெளிவற்றதாக இருந்தது. JNUல் லிங்டோ விதிகளை அமல்படுத்தப்படுவதை SFI எதிர்க்கிறது. ஆனால் SFI தலைவர் ‘மக்கள் ஜனநாயகம்’ பத்திரிகையில் எழுதிய கட்டுரையில் லிங்டோ பரிந்துரைகளை பாராட்டியிருந்தார். லிங்டோ பரிந்துரைகள், தேசிய அளவில் வளாக ஜனநாயகத்துக்கு எதிராக இருப்பதால் எதிர்க்கப்பட வேண்டும் என்பதை அங்கீகரிக்க மறுத்து, JNU மட்டும் விதிவிலக்கானது என்று SFI பார்ப்பதாகத் தெரிகிறது.

இளைஞர்களை மதவாத மற்றும் சாதி விரோத அடிப்படையில் பிளவுபடுத்தி அணிதிரட்டும் வலதுசாரி அமைப்புகளின் ஆற்றல் குறைந்திருப்பதையும், ஊழல் மற்றும் பெரு நிறுவனக் கொள்ளையை ஊக்குவிக்கும் அரசாங்கத்தின் கொள்கைகளுக்கு எதிராக மாணவர்களின் வலுவான மனப்போக்கு இருப்பதையும் தேர்தல் முடிவுகள் காட்டுகின்றன. இளைஞர்கள் பற்றி ஊடகங்களின் காட்சிப்படுத்தலுக்கு மாறாக, இடதுசாரி கருத்தியல், புரட்சிகர, சமூக அக்கறையுள்ள அரசியல் நம்நாட்டு இளைஞர்களின் கற்பனை வளத்தை பற்ற வைக்கும் ஆற்றல் கொண்டதாக இருக்கிறது. ஒசமல் அஐநஅ அடைந்த வெற்றி இந்தியாவின் பல பல்கலை வளாகங்களில் தன்னெழுச்சியாக கொண்டாடப்பட்டது. அவர்கள் தங்கள் வளாகங்களிலும் JNU போல் கருத்தியலில் அழுத்தம் வைத்து விவாதங்கள் நடத்தப்படும் தேர்தல் வேண்டும் என கோரினர். JNUல் AISAக்கு கிடைத்த ஏகோபித்த ஆதரவும், மரபுரீதியாக தனக்கு வலுவான இடத்தில் SFIக்கு கிடைத்த படுதோல்வியும், இடது ஜனநாயக முற்போக்கு இளைஞர்களை இகக(மா) அரசியல் உற்சாகமூட்ட தவறிவிட்டது என்பதையே காட்டுகிறது. நவதாராளவாத கொள்கைகளுக்கு இகக(மா) அடிபணிந்து, பெருநிறுவன ஆதரவு கொள்கை மற்றும் அரசு ஒடுக்குமுறையை பரிந்துரைப்பதையும் ஆழ்ந்த விமர்சனத்துடன் பார்க்கும் மாணவர்கள், AISAவை மாணவர் இயக்கத்தின் உறுதியான, ஊக்கமளிக்கும் இடதுசாரி தலைமையாக ஏற்றுக்கொண்டார்கள்.

தமிழில்: தேசிகன்

Search