COMMUNIST PARTY OF INDIA (MARXIST - LENINIST) - LIBERATION

COMMUNIST PARTY OF INDIA (MARXIST - LENINIST) - LIBERATION, TAMILNADU

Saturday, January 28, 2012

தீப்பொறி ஜனவரி 2012, 16 - 30


கல்வி
லெனின்
சமூக ஜனநாயகவாதத் தொழிலாளி, புரட்சிகரமான தொழிலாளி (இப்படிப்பட்ட தொழிலாளர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது) தொட்டறியதக்க விளைவுகளை அளிக்கக்கூடிய கோரிக்கைகள் முதலானவற்றைப் பற்றிய பேச்சுக்களைச் சீற்றத்துடன் நிராகரிப்பான்; காரணம், இது ரூபிளுடன் கூட ஒரு கோபெக்கு சம்பாதிப்பது பற்றிய பழைய பாட்டைச் சற்று மாற்றிப் பாடுவது தவிர வேறில்லை என்று புரிந்து கொள்வான். ரபோச்சயா மிஸ்ல் ரபோச்சியே தேலோபாற்பட்ட அறிவுரையாளர்களிடம் அவன் சொல்வான்; நல்லபடியாக நாங்களே சமாளிக்கக்கூடிய காரியத்தில் மட்டுமீறிய ஆர்வத்துடன் குறுக்கிடுவதின் வழியாக நீங்கள் வீணாக சிரமம் எடுத்துக் கொள்கிறீர்கள்
தலையங்கம்
சசிகலா கும்பல்கள் நீக்கங்களுக்குப் பிறகு, அதை ஒட்டிசெய்திகள் வெளியிட்ட நக்கீரன் பத்திரிகை அஇஅதிமுகவினரால் தாக்கப்பட்டுள்ளது. 07.01.2012அன்றுபத்திரிகைஅலுவலகத்தின்காவல்பணியில்இருந்தசிவகுமார்தாக்கப்பட்டார்.கணினி இயக்கும் அன்புமணியும் தாக்கப்பட்டார். இருவரும் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளனர்.
காவல்துறை வேடிக்கை பார்க்கும்போதே அஇஅதிமுகவேளச்சேரி சட்டமன்ற உறுப்பினர் எம்.கே.அசோக் அத்துமீறிநுழைந்து அலுவலத்தைப் பூட்டினார். பிறகு காவல்துறைபூட்டை உடைத்து உள்ளே நுழைந்து, செய்தி சேகரிக்கச்சென்ற ஊடகவியலாளர்களை விடுவித்தது
அம்பலம்
புயலால் பாதிக்கப்பட்ட பகுதிகளை மாலெ கட்சிக் குழு பார்வையிட்டபின் 06.01.2012 அன்று விழுப்புரத்தில் பத்திரிகையாளர் கூட்டத்தில் மாலெ கட்சி மாநிலச் செயலாளர் தோழர் பாலசுந்தரம் வெளியிட்ட செய்தி குறிப்பு
விவாதம்
என்.கே.நடராஜன்
நக்கீரன் அலுவலகம் அதிமுகவினரால்தாக்கப்பட்டது கண்டனத்துக்கு உரியது. நக்கீரனில் வெளியான செய்தி, சம்பவங்கள்உண்மையா பொய்யா என்ற ஆராய்ச்சி நமக்குத்தேவையில்லை. ஆனால், மாட்டுக்கறி சாப்பிடுவது குறித்த ஒரு விவாதம் முன்னுக்குவந்துள்ளது. மாட்டுக்கறி சாப்பிடுபவர்கள்கீழானவர்கள் என்றக் கருத்து மேல்சாதி ஆதிக்(பார்ப்பனிய கருத்து) கருத்தாகும். இப்போது நடைமுறையில் பார்ப்பனர்கள் சிலர் உட்படஎல்லா சாதியைச் சேர்ந்தவர்களும் மாட்டுக்கறி சாப்பிடுகிறார்கள். மாட்டுக்கறி சாப்பிடுவதும், சாப்பிடாததும் அவரவர் விருப்பம்
மாநாடு
அகில இந்திய மாணவர் கழக இரண்டாவது மாநில மாநாடு நோக்கி
கே.பாரதி
23 வயதில் வெள்ளையனை வெளியேற்றதனது இன்னுயிரை துச்சமென மதித்து தூக்குமேடை ஏறினார் பகத்சிங்.
டெல்லி ஜவகர்லால் நேரு பல்கலைக்கழகத்தில் மாணவர் பேரவைத் தலைவராகவெற்றி பெற்று, புரட்சிகர மாணவர் அமைப்பான அகில இந்திய மாணவர் கழகத்தைநிறுவியதில் முக்கியப் பங்காற்றிய தோழர்சந்திரசேகர், படித்து முடித்து பீகாருக்குச்சென்று வறிய மக்களுக்காக போராடியதால்லாலுவின் நாடாளுமன்ற உறுப்பினர்சகாபுதீனால் சுட்டுக் கொல்லப்பட்டார்
தானே புயல் ஒரு மினி சுனாமியாக கடலூர் விழுப்புரம் நாகை மாவட்டங்களைத் தாக்கியுள்ளது. மக்கள் மிகப்பெரும் துன்பத்துக்கு ஆளாகியுள்ளனர். அரசு அலட்சியப் போக்கையே வெளிப்படுத்துகிறது.
விமர்சனம்
அமல் ஜோசப்
ஸ்காட் கார்னே வழக்கத்திற்கு மாறான ஒருவியாபாரம் பற்றி - மனித உடல் உறுப்புகள்வியாபாரம் பற்றி எழுதியுள்ளார். ஓரே ஒரு செல்கொண்ட மனித முட்டையில் ஆரம்பித்து முழுவளர்ச்சியடைந்த குழந்தை வரை எல்லாமும் உலகசிவப்புச் சந்தையில் விற்கப்படுகிறது. அதில் ஒன்றைப்பற்றி கார்னே மிக அற்புதமாக விவரித்துள்ளார். வழக்கமான வணிகச் சட்டங்கள் மனித உறுப்புகளுக்கும் பொருந்தும். இதில் விதிவிலக்கு என்னவென்றால், இங்கு விற்பவர் எப்போதும் ஏழையாகவும்வாங்குபவர் எப்போதும் பணம் படைத்தவராகவும்இருக்கிறார்கள். இருவருமே வேறு வேறு காரணங்களுக்காக விரும்பியே இதில் ஈடுபடுகிறார்கள். அதுமட்டுமல்லாமல், இடைத்தரகர் வேறு ஒரு பெரும்தொகையை வெட்டிக் கொள்கிறார். அதிகாரிகளும்சட்டத்தை அமல்படுத்துவர்களும் கூட தங்கள்பங்கிற்கு அள்ளிக் கொண்டு போகிறார்கள்
கேள்வி - பதில்
.சந்திரமோகன்
கேள்வி: தமிழகத்தில் மின் வெட்டு நீங்க, ஆளும் கூட்டங்கள் என்ன பரிந்துரைகளைமுன் வைக்கின்றனர்?
உலகம்
கிரீஸ் நெருக்கடி
மஞ்சுளா
வள்ளுவன் தன்னை உலகினுக்கே தந்துவான்புகழ் கொண்ட தமிழ்நாடு என்றுவள்ளுவன் பெருமையையும், தமிழ்நாட்டின்பெருமையையும் சேர்த்துப் பாடினான் பாரதி. உலகினுக்கு மிகச்சிறந்த அறிஞர்களைத் தந்தபுகழ் கொண்டது கிரேக்க நாடு. மேற்கத்திய அறிவு வரலாற்றுக்கு கிரேக்க மண் தளமாகஇருந்தது. கேள்வி கேள் அறிவு பிறக்கும் என்றுஇளைஞர்களை சிந்திக்கத் தூண்டிய சாக்ரடீஸ், அவர் மாணவர் பிளேட்டோ, தேல்ஸ், பித்தகோரஸ், யூக்ளிட், இப்போகிரடிஸ், அரிஸ்டாட்டில் என கணிதம், வானவியல், மருத்துவம், தத்துவம் என இன்றைய நவீனவாழ்வின் அடிப்படைகளை 2500 ஆண்டுகளுக்கு முன்பே கண்டறிந்து சொன்ன பலஅறிஞர்களை கிரேக்கம்தான் தந்தது. அட்லஸ், அண்டேயஸ் என பல நீதிக் கதைகளை கிரேக்கம் தந்தது
களம்
நெல்லை: பீடி தொழிலாளர் பணி நிலைமைகள் சட்டம் பிரிவு 32அய் அமல்படுத்தாதஅரசு தொழிலாளர் துறை அலட்சியத்தைகண்டித்து, ஏஅய்சிசிடியு தொடர் இயக்கம்நடத்தி வருகிறது. இதன் ஒரு பகுதியாகஜனவரி 6 அன்று கண்டன ஆர்ப்பாட்டங்கள்நடந்தன. ஆலங்குளத்தில் நடைபெற்றஆர்ப்பாட்டத்திற்கு மாவட்ட கமிட்டி உறுப்பினர் தோழர் கணேசன் தலைமை தாங்கினார். கட்சி மாவட்ட செயலாளர் தோழர்சங்கரபாண்டியன் சிறப்புரையாற்றினார்
கந்தர்வகோட்டையில்
ஆசைத்தம்பி
கந்தர்வகோட்டை ஒன்றியம் புனல்குளம்கிராமத்தில் தலித் இளைஞர்கள் புத்தாண்டுகொண்டாடியபோது தலித் தெருவிற்குள்புகுந்து இரவு நேரத்தில் சாதியை சொல்லிஇழிவுபடுத்தி தாழ்த்தப்பட்டவனுக்கு புத்தாண்டு ஒரு கேடா என பேசி சாதி வெறியர்கள் கொலைவெறி தாக்குதல் தொடுத்தனர்
களம்
தானே புயல் தாக்கிய பகுதிகளில் நிவாரண நடவடிக்கைகள் அறிவிப்பு நிலையிலேயேநின்றுள்ளன. பாதிக்கப்பட்ட மக்களுக்குநிவாரணமோ உதவிகளோ இன்னும் முறையாக சென்று சேரவில்லை. குடிதண்ணீர், உணவு கூட முறையாக கிடைக்காமல் மக்கள்துன்பப்படுகின்றனர். பாதிக்கப்பட்டவர்கள் பற்றிய கணக்கெடுப்பு பணியே இன்னும் பலபகுதிகளில் முறையாக, முழுமையாக நடைபெறவில்லை. இந்த நிலைமைகளை கண்டித்தும் உடனடி நிவாரண நடவடிக்கைகள் எடுக்கக் கோரியும் மாலெ கட்சி ஆர்ப்பாட்டங்கள்நடத்தியது
களம்
புதுக்கோட்டை
ஆசைத்தம்பி
புதுக்கோட்டை மாலெ கட்சியின் நான்காவது மாவட்ட மாநாடு டிசம்பர் 31 அன்றுகீழ்வெண்மணி தியாகிகள் அரங்கில் நடைபெற்றது

Search