COMMUNIST PARTY OF INDIA (MARXIST - LENINIST) - LIBERATION

COMMUNIST PARTY OF INDIA (MARXIST - LENINIST) - LIBERATION, TAMILNADU

Monday, December 17, 2012

மாலெ தீப்பொறி, 2012, டிசம்பர் 16 - 31 தொகுதி 11 இதழ் 10

களம்

காதலை ஆதரிப்போம். எதிர்ப்பவர்களை புறக்கணிப்போம்.

காதலை விதியாக்குவோம். விவாகரத்தை எளிதாக்குவோம்.

மயிலாடுதுறையில் பேரணி, கருத்தரங்கம்

காதலை ஆதரிப்போம், எதிர்ப்பவர்களை புறக்கணிப்போம், காதலை விதியாக்குவோம், விவாகரத்தை எளிதாக்குவோம் என்ற பொருளில் 08.12.2012 அன்று மயிலாடுதுறையில் புரட்சிகர இளைஞர் கழகமும் அகில இந்திய மாணவர் கழகமும் பேரணி மற்றும் கருத்தரங்கம் நடத்தின. 170க்கும் மேற்பட்ட மாணவர்கள், இளைஞர்கள் கலந்து கொண்டனர். சாதி வெறியை தூண்டும் ராமதாஸ், காடுவெட்டி குருவை கைது செய்யும்படியும்

…….

மேலும் படிக்க இங்கு CLICK செய்யவும்

@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@

தலையங்கம்

தற்காலிநடவடிக்கைகள்

தமிழக மக்கள் சீற்றத்தைத் தணிக்காது

மக்கள் சந்திக்கும் எந்தப் பிரச்சனையிலும் அரசாங்கங்கள் ஏதாவது நடவடிக்கை எடுக்க வேண்டுமானால் சாமான்ய மக்கள் சிலர் சாக வேண்டும். பள்ளிக்கூடம் எரிந்தால், கட்டிட விதிகள் வரும். பேருந்தின் கீழ் நசுங்கிப் போனால் வாகன விதிகள் வரும். கட்டிடம் இடிந்து தலையில் விழுந்தால் கைது நடக்கும். இப்படி இன்னும் பலப்பல. ஆனால், எல்லாம் தற்காலிக நடவடிக்கைகள். அந்தப் பிரச்சனையில் அந்த நேரத்தில் மக்களின் சீற்றத்துக்கு பதில் சொல்ல உள்ளீடற்ற சில அடையாள நடவடிக்கைகள். பிறகு மீண்டும் பிரச்சனை, மீண்டும் உயிரிழப்பு, மீண்டும் கண்துடைப்பு அறிவிப்பு... இந்தத் தற்காலிக மாதிரிக்குள்தான் தமிழ்நாட்டிலும் ஆட்சி நடக்கிறது. இந்த முறை தமிழ்நாட்டின் வறிய விவசாயிகள் சிலர் தற்கொலை செய்துகொண்டார்கள்.

…….

மேலும் படிக்க இங்கு CLICK செய்யவும்

@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@

உறுதிமொழி

2012 டிசம்பர் 18 உறுதிமொழி

வர இருக்கும் கட்சியின் 9ஆவது காங்கிரசை
ஒரு வரலாற்று சிறப்புமிக்க வெற்றியாக்குவோம்!

நாம் ஒரு புயல் வீசிய ஆண்டின் இறுதிக்கு வந்துவிட்டோம். இந்த ஆண்டில் இந்திய ஆளும் வர்க்கங்களின் இரண்டு பெரிய கட்சிகளான காங்கிரசும் பாரதிய ஜனதா கட்சியும், கழுத்து வரை ஊழலில் மூழ்கி இருப்பது அம்பலமாகி உள்ளது. நிலம், கனிமங்கள், எண்ணெய், வாயு, காற்று மற்றும் தண்ணீர் என எல்லா இயற்கை ஆதாரங்களும் மக்களிடமிருந்து பறிக்கப்பட்டு, பெரும்தொழில் குழுமங்களிடம் தாரை வார்க்கப்படுகின்றன.

…….

மேலும் படிக்க இங்கு CLICK செய்யவும்

@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@

நாட்டு நடப்பு

சில்லறை வர்த்தகத்தில் அந்நிய நேரடி முதலீடு

அமெரிக்க ஆதரவுடன் கலவையாக உருவாக்கப்பட்ட (கன்காக்டட்) நாடாளுமன்ற பெரும்பான்மையுடன் இந்தியாவுக்குள் நுழைகிறது

நாடாளுமன்றத்தில் சில்லறை வர்த்தகத்தில் அந்நிய நேரடி முதலீடு மீதான விவாதமும் வாக்கெடுப்பும் அரசாங்கத்துக்கு ஒரு சந்தேகத்துக் குரிய வெற்றியுடன் நிறைவுற்றது. இது, அணு ஒப்பந்தம் மீதான வாக்கெடுப்பை நினைவூட்டுகிறது. பல்இலச்சினை சில்லறை வர்த்தகத்தில் அந்நிய நேரடி முதலீட்டை நுழைக்கும் கொள்கைக்கு எதிராக அவையில் பெரும்பான்மை கருத்து இருந்ததை விவாதம் தெளிவாக்குகிறது. ஆனால் வாக்கெடுப்பில் காணப்பட்ட சந்தர்ப்பவாதமே மேலோங்கியதாக இருந்தது.

…….

மேலும் படிக்க இங்கு CLICK செய்யவும்

@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@

நகல் தீர்மானம்

பெண்கள் இயக்கம்: சவால்கள் மற்றும் கடமைகள்

(2013, ஏப்ரல் 2 - 6 தேதிகளில் ராஞ்சியில் நடக்கவுள்ள இகக மாலெ (விடுதலை) 9ஆவது கட்சி காங்கிரசில் விவாதிக்கப்படவுள்ள நகல் தீர்மானம் தரப்படுகிறது. வாசகர் கருத்துக்கள் வரவேற்கப்படுகின்றன)

1. இன்றைய இந்தியாவில், பெண்களின் வளரும் அறுதியிடலையும் சமத்துவத்திற்கான அதிகரித்த விருப்பங்களையும், வேறூன்றிய ஆணாதிக்கத்திற்கு சவால் விடுவதையும், எல்லா அரங்குகளிலும் காணவும், உணரவும் முடியும். இந்த அறுதியிடல் மற்றும் பொது வாழ்க்கையில் பெண்களின் வளரும் பங்களிப்பு என்பதற்கு நேரெதிராகவும் அதே நேரத்தில், பெண்கள் மீதான பாலியல் மற்றும் ஆணாதிக்க வன்முறை நிற்காமல் தொடர்வதையும், தீவிரமடைவதையும் நாம் காண முடியும். கடினப்பட்டு பெண்கள் வென்ற உரிமைகள் மற்றும் சுதந்திரங்கள் மீது பகிரங்கமான மற்றும் கட்டமைக்கப்பட்ட ஆணாதிக்க தாக்குதல்கள் (உடல்ரீதியான, கருத்தியல்ரீதியான) தொடர்கின்றன; உலகத்திலேயே படுமோசமான பெண்களின் ஊட்டச்சத்தின்மை, பசி, மகப்பேறின்போது இறத்தல் ஆகியவை இந்தியாவில் நிலவுகின்றன. இந்த முரண்பாடு அல்லது புதிர் நவீன இந்தியாவில் ஒரு வரையறுக்கும் குணஇயல்பாக எழுந்துள்ளது.

…….

மேலும் படிக்க இங்கு CLICK செய்யவும்

@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@

கண்டனம்

மாலெ கட்சித் தலைவர்கள் மீது பொய் வழக்குப் போட்டு கைது செய்த காவல்துறையினர் மீது நடவடிக்கை எடு!

மாநில உள்துறைச் செயலர், மாநில பெண்கள் ஆணையத் தலைவர், மாநில மனித உரிமை ஆணையத் தலைவர் ஆகியோருக்கு மாலெ கட்சி இந்தக் கடிதத்தை 05.12.12 அன்று தந்துள்ளது. 07.12.12 அன்று தோழர் சுசீலா பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளார். 11.02.12 அன்று குமரி தோழர்கள் பிணையில் விடுவிக்கப்பட்டனர்.

அய்யா/அம்மையீர்

பொருள்: செஞ்சி, குளச்சல் காவல்நிலையங்கள் எமது தோழர்கள் மீது அநியாயமாக ஏவியுள்ள ஒடுக்குமுறை மற்றும் சித்தரவதை தொடர்பாக நடவடிக்கைக் கோருதல்

…….

மேலும் படிக்க இங்கு CLICK செய்யவும்

@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@

1

களம்

காதலை ஆதரிப்போம். எதிர்ப்பவர்களை புறக்கணிப்போம்.

காதலை விதியாக்குவோம். விவாகரத்தை எளிதாக்குவோம்.

மயிலாடுதுறையில் பேரணி, கருத்தரங்கம்

காதலை ஆதரிப்போம், எதிர்ப்பவர்களை புறக்கணிப்போம், காதலை விதியாக்குவோம், விவாகரத்தை எளிதாக்குவோம் என்ற பொருளில் 08.12.2012 அன்று மயிலாடுதுறையில் புரட்சிகர இளைஞர் கழகமும் அகில இந்திய மாணவர் கழகமும் பேரணி மற்றும் கருத்தரங்கம் நடத்தின. 170க்கும் மேற்பட்ட மாணவர்கள், இளைஞர்கள் கலந்து கொண்டனர். சாதி வெறியை தூண்டும் ராமதாஸ், காடுவெட்டி குருவை கைது செய்யும்படியும், வேடிக்கை பார்க்கிற தமிழக அரசை கண்டித்தும் முழக்கமிட்டனர். பேரணியைத் தொடர்ந்து நடந்த கருத்தரங்கத்திற்கு நாகை மாவட்ட புரட்சிகர இளைஞர் கழக பொறுப்பாளர் தோழர் கார்த்திகேயன் தலைமை தாங்கினார். கருத்தரங்கில் முற்போக்கு பெண்கள் கழக மாநிலத் தலைவர் தோழர் தேன்மொழி, சிபிஅய் (எம்.எல்) மாநிலக்குழு உறுப்பினர் தோழர் இளங்கோவன், தோழர், டி.கே.எஸ்.ஜனார்தனன், கடலூர் மாவட்ட மாணவர் கழக பொறுப்பாளர் தோழர் ராஜசங்கர், மாணவர் கழக மாநிலச் செயலாளர் தோழர் ரமேஷ்வர் பிரசாத், புரட்சிகர இளைஞர் கழக மாநில அமைப்பாளர் தோழர் பாரதி கலந்து கொண்டு உரையாற்றினார்.

 

பதானிதோலா, பரமக்குடி, கீழ்வெண்மணி, கொடியங்குளம், தர்மபுரி

இனியும் அனுமதிக்க மாட்டோம்!

கரம்பக்குடியில் ஆர்ப்பாட்டம்

பதானிதோலா, பரமக்குடி, கீழ்வெண்மணி, கொடியங்குளம், தர்மபுரி இனியும் அனுமதிக்க மாட்டோம் என்ற முழக்கத்துடன் கரம்பக்குடியில் டிசம்பர் 9 அன்று புரட்சிகர இளைஞர் கழகமும் அகில இந்திய மாணவர் கழகமும் நடத்திய ஆர்ப்பாட்டத்தில் 60க்கும் மேற்பட்ட மாணவர், இளைஞர்கள் கலந்து கொண்டனர். ஆர்ப்பாட்டத்திற்கு கரமக்குடி ஒன்றிய புரட்சிகர இளைஞர் கழக அமைப்பாளர் தோழர் சண்முக சுந்தரம் தலைமை தாங்கினார். சிபிஅய் (எம்.எல்) மாநிலக் குழு உறுப்பினர் தோழர் வளத்தான், புரட்சிகர இளைஞர் கழக மாவட்ட தலைவர்கள் தோழர்கள் கலைச்செல்வன், விஜயன், தோழர் கோவிந்தராஜ், மாணவர் கழக மாநில செயலாளர் தோழர் ரமேஷ்வர் பிரசாத், புரட்சிகர இளைஞர் கழக மாநில அமைப்பாளர் தோழர் பாரதி ஆகியோர் உரையாற்றினர்.

 

பிப்ரவரி 20, 21 அகில இந்திய வேலை நிறுத்தம் வெல்லட்டும்!

அந்நிய நேரடி முதலீட்டை எதிர்த்தும், தர்மபுரி தலித் மக்கள் மீதான தாக்குதலை கண்டித்தும், குமரி மாவட்டச் செயலாளர் தோழர் அந்தோணிமுத்து, விழுப்புரம் பெண்கள் கழக மாவட்ட அமைப்பாளர் தோழர் சுசீலா ஆகியோரை கைது செய்து சிறையில் அடைத்ததை கண்டித்தும், பிப்ரவரி 20, 21 அகில இந்திய வேலை நிறுத்தத்திற்கு அழைப்பு விடுத்தும் 10.12.2012 அன்று அகில இந்திய முற்போக்கு பெண்கள் கழகமும், ஏஅய்சிசிடியுவும் அம்பத்தூரில் கண்டனக் கூட்டம் நடத்தின. பெண்கள் கழக தேசியக்குழு உறுப்பினர் தோழர் லில்லி தலைமை தாங்கினார். முற்போக்கு பெண்கள் கழக மாநிலத் தலைவர் தோழர் தேன்மொழி, மாவட்டத் தலைவர் தோழர் தேவகி, நிர்வாகிகள் தோழர்கள் குப்பாபாய், ரேவதி, மாலெ கட்சி மாநிலக்குழு உறுப்பினர் தோழர் ஜவஹர், மாவட்டச் செயலாளர் தோழர் சேகர், மாணவர் கழக மாநிலத் தலைவர் தோழர் மலர்விழி, தமிழ்நாடு ஜனநாயக கட்டுமான தொழிலாளர் சங்க மாவட்டத் தலைவர் தோழர் முனுசாமி, உழைப்போர் உரிமை இயக்க மாவட்டத் தலைவர் தோழர் மோகன், வேணுகோபால் ஆகியோர் உரையாற்றினர்.

களச்செய்திகள் தொகுப்பு: எஸ்.சேகர்

குறைந்தபட்ச அடிப்படை வசதிகள் கோரி

அம்பத்தூர் கல்யாணபுரத்தில் 81, 82, 85 வார்டுகளின் பொதுக் கழிப்பிடம் மின் மோட்டார் விசை பம்பு பழுது பார்த்து புதிய மோட்டார் பொறுத்துவது 2 வருடங்களாக தொடர் பிரச்சனையாக உள்ளது. அம்பத்தூர் மாநகராட்சியில் கல்யாணபுரம் பிரபு, விஜய், ஜான், பீட்டர்,அந்தோணி, சாம்சன், ஏகாத்தம்மாள், பத்மா, நாகம்மாள், அன்பு ஆகிய தோழர்கள் கோரிக்கை மனுவுடன் அதிகாரிகளை முற்றுகையிட்டனர். உடனே கல்யாணபுரம் பகுதிக்குள் அதிகாரிகள் வந்து துரித நடவடிக்கை எடுத்து வருகிறார்கள். வரதராஜபுரம் பகுதியில் நடேசன் தெருவில் உள்ள சாலையில் பாதாள சாக்கடை மூடி போடாமல் சாலையில் நடப்பதற்கு சமன் செய்யாமல்  இருந்ததை சீர்செய்யக் கோரி மனு கொடுத்து அடுத்த நாளே சாலை சரி செய்துள்ளார்கள். ராஜீவ்காந்தி தெருவில் சிபிஅய் (எம்.எல்), உழைப்போர் உரிமை இயக்க உறுப்பினர்கள் சதாசிவம், முருகன், மாணிக்கம், கலாவதி, உழைப்போர் உரிமை இயக்க மாவட்டத் தலைவர்கள் தோழர்கள் மோகன், பசுபதி, புகழ் ஆகியோர் மாநகராட்சி அதிகாரிகளைச் சந்தித்து கோரிக்கை மனு  கொடுத்ததன் அடிப்படையில் பொது மக்கள் சொன்ன இடத்தில் குடிநீர் டேங்க் வைக்கப்பட்டுள்ளது. குண்டும் குழியுமான சாலையை உடனே சீரமைக்க வேண்டும் எனவும் மாநகராட்சி அதிகாரிகளிடம் கோரிக்கை மனு கொடுக்கப்பட்டுள்ளது. கல்யாணபுரம் பகுதியில், மாரியம்மன் கோயில் 3வது தெருவில் குடிநீர் குழாய் இணைப்பு இல்லை. இங்கு உடனடியாக குடிநீர் டேங்க் அமைத்து தர வேண்டும் என கோரிக்கை மனு தரப்பட்டுள்ளது. மாநகராட்சி குடிநீர் பிரச்சனையைத் தீர்க்கவில்லை என்றால் பெண்களும் இளைஞர்களும் கோரிக்கை மனுவுடன் ரிப்பன் மாளிகையை முற்றுகையிடுவார்கள் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Search