COMMUNIST PARTY OF INDIA (MARXIST - LENINIST) - LIBERATION

COMMUNIST PARTY OF INDIA (MARXIST - LENINIST) - LIBERATION, TAMILNADU

Saturday, December 10, 2011

தீப்போறி டிசம்பர் 2011

‘படிப்பதற்கு ஏதாவது கொண்டு வந்திருக்கிறீர்களா?’

போர்முனையில் படையாட்கள் இராணுவ அதிகாரிகளை எதிர்த்து போராட்டம் நடத்தினார்கள். தமது கமிட்டிகளின் மூலம் தன்னாட்சி நடத்தக் கற்றுக் கொண்டார்கள். ஆலைகளில் தனிச்சிறப்புக்குரிய ரஷ்ய நிறுவனங்களான ஆலை கமிட்டிகள் பழைய அமைப்பை எதிர்த்துப் போராடி, அனுபவமும் பலமும் பெற்று வந்தன. தமது வரலாற்றுப் பணியினை உணர்ந்து கொண்டன. ருஷ்யா அனைத்துமே படிக்கக் கற்று கொண்டு வந்தது. அரசியலும் பொருளாதாரமும் வரலாறும் படித்தது. ஏனெனில் மக்கள் பலவும் தெரிந்து கொள்ள விரும்பினார்கள்.....
மாநகரம் ஒவ்வொன்றிலும், மிகப் பெருவாரியான நகர்களிலும், போர்முனை நெடுகிலும் ஒவ்வொரு அரசியல் கட்சிப்பிரிவும் அதன் செய்தியேட்டை, சில நேரங்களில் ஒன்றுக்கு மேற்பட்டவற்றையும் நடத்தி வந்தது. பல்லாயிரக்கணக்கான நிறுவனங்கள் லட்சக்கணக்கான பிரசுரங்களை வினியோகித்தன. இவை சேனைகளினுள்ளும் கிராமங்களிலும் ஆலைகளிலும் தெருக்களிலும் பெருக்கெடுத்தன............ பாலை மணல் போல் ரஷ்ய நாடு முடிவின்றி ஏடுகளையும் நூல்களையும் உட்கவர்ந்து கொண்டது. அவை கட்டுக் கதைகளும், புரட்டான வரலாறும், முனைப்பில்லா மதமும், சீரழிக்கும் கீழ்த்தரப் புதினமும் அல்ல. சமூக, பொருளாதார தத்துவங்களும், தத்துவவியலும், தல்ஸ்தோய், கோகல், கார்க்கி போன்றோரின் எழுத்துக்களுமாகும்............
........ரீகாவுக்குப் பின்னால் இருந்த பன்னிரண்டாம் சேனையின் போர்முனைக்குச் சென்றிருந்தோம். படையாட்கள் அகழ்வரியின் சேற்றிலே காலில் பூட்சின்றி வதைந்து, பசியாலும், பிணியாலும் ஓய்ந்து போயிருந்தார்கள். எங்களைப் பார்த்ததும் பரப்பரப்புற்றவர்களாய், சிவந்த முகங்களுடன், உடுப்புகளின் கிழிசல் வழியே நீலம் பாய்ந்த மேனி தெரிய, ஆவலோடு கேட்டார்கள். ‘படிப்பதற்கு ஏதாவது கொண்டு வந்திருக்கிறீர்களா?’’
மேலே சொல்லப்பட்டுள்ளது, ‘உலகைக் குலுக்கிய பத்து நாட்கள் நூலில் ஜான் ரீட் எழுதியது. இன்று உலகம் முழுவதும் உழைக்கும் மக்கள் போராட்டங்கள் என்ற பின்னணியில், பரபரப்பான அரசியல் சூழலின் ஊடே நாடு சென்று கொண்டிருக்கிறது. பாதிக்கப்பட்ட, இழப்பதற்கு ஏதுமில்லாத மக்கள் தங்களுக்குத் தெரிந்த விதத்தில் தங்கள் எதிர்ப்புக்களை வெளிப்படுத்திக் கொண்டிருக்கிறார்கள். நடப்பவற்றை எல்லாம் தலைகீழாக புரட்டிப் போட வேண்டும் என்ற ஆதங்கம், வேகம் காணப்படுகிறது. அதிகாரபூர்வ கம்யூனிஸ்ட் கட்சிகளின் அரசியல் திவாலாத்தனத்தையும் மக்கள் புரிந்துகொண்டுவிட்டனர்.
இந்திய கம்யூனிஸ்ட் கட்சி (மார்க்சிஸ்ட் - லெனினிஸ்ட்) மட்டுமே முதலாளித்துவ கட்சிகளுடன் சமரசங்கள் மேற்கொள்ளாமல், இந்தியாவின் நகர்ப்புறங்களிலும் நாட்டுப்புறங்களிலும் உழைக்கும் மக்களின் அரசியல் அறுதியிடலுக்கானப் போராட்டங்களை விடாப்பிடியாக முன்னெடுத்துச் செல்கிறது. போராடுகிற இடதுசாரி, முற்போக்கு, ஜனநாயக சக்திகளுடன் இணைந்து செயல்படும் வாய்ப்புக்களை தொடர்ந்து கண்டறிகிறது.
தனது அரசியல் கருத்தியல் நிலைப்பாடுகளை தீப்பொறி மூலம் மக்களுக்கு கொண்டு செல்கிறது. 30 ஆண்டுகளுக்கும் மேலாக வெளியிடப்படும் தீப்பொறி கடந்த 9 ஆண்டுகளாக மாத இதழாக தொடர்ந்து வெளியாகிறது. இப்போது, மாலெ கட்சியின் செயல்பாடுகள் விரிவடைந்துள்ள நிலையில், நிலவுகிற கொந்தளிப்பான அரசியல் சூழலையும் கணக்கில் கொண்டு, 2012 ஜனவரி முதல் தீப்பொறி இதழை மாதம் இருமுறை வெளியிட முடிவு செய்யப்பட்டுள்ளது. விலைஉயர்வுச் சுமைகளுக்கு மத்தியிலும், மாத இதழாக இருந்தவரை, ரூ.60 என இருந்த ஆண்டுச் சந்தா, மாதமிருமுறை என மாற்றப்படும்போது, ஆண்டுச் சந்தா ரூ.100 என முடிவு செய்யப்பட்டுள்ளது. பரந்த, விரிந்த சந்தாதாரர் அடித்தளம் நிதிச்சுமையை சமாளிக்கும்.
லெனின் கட்டியெழுப்பிய போல்ஷ்விக் கட்சி ருஷ்ய உழைக்கும் மக்களின் விடுதலைக்கான கருத்தியல் மார்க்சியமே என்று அவர்களுக்கு உணர்த்துவதில் வெற்றி கண்டிருந்தது. அதனால்தான் போர்முனையில் பனியில், பசியில், பிணியில் இருந்தவர்கள் கூட படிப்பதற்கு ஏதாவது கொண்டு வந்திருக்கிறீர்களா என்று கேட்டார்கள். அதுபோன்ற ஒரு கம்யூனிஸ்ட் கட்சியை வெகுமக்கள் அரசியல் அழுத்தத்துடன் கட்டியெழுப்ப மாலெ கட்சி தன்னை அர்ப்பணித்துக் கொண்டுள்ளது. அதற்கான முயற்சிகளில் ஒன்றான தீப்பொறி இதழுக்கு ஆதரவு தெரிவித்து, சந்தாதாரர்கள் தங்கள் சந்தாக்களை புதுப்பித்துக் கொள்ள வேண்டும் என்றும், தனியிதழ் வாங்கும் வாசகர்கள் சந்தாதாரர்களாக வேண்டும் என்றும், புதிய சந்தாதாரர்களைச் சேர்க்க மாவட்ட கட்சி அமைப்புகள், அனைத்து முயற்சிகளும் எடுக்க வேண்டும் என்றும் கேட்டுக்கொள்கிறோம்.
தீப்பொறி கொண்டு செல்வோம்!

தலையங்கம்
மாற்றம் தந்த மக்களுக்கு ‘ஏற்றம் தந்த அரசு

என்ன நடக்கிறது உங்கள் மாநிலத்தில்? எதற்கும் ஒரு வரைமுறை இல்லையா? மக்கள் நலப் பணியாளர் பணிநீக்கம் பிரச்சனையில் உச்சநீதிமன்றம் தமிழக அரசாங்கத்தை பார்த்து இப்படிக் கேட்டுள்ளது.

நவம்பர் 8 அப்படி ஒரு மோசமான நாளாக இருக்கும் என்று அந்த 13,000 பேர் எதிர்பார்த்திருக்க மாட்டார்கள். அவர்களில் அம்மா மாறிவிட்டார் என்று  நம்பியவர்கள் கூட இருந்திருப்பார்கள். அவர்களை திடீரென பணிநீக்கம் செய்து, தன்னைப் பற்றிய, தனது ஆட்சியைப் பற்றிய எல்லா மாயை களையும் உடைத்துப் போட்டார் ஜெயலலிதா. அவர்கள் உபரி யாக இருப்பதாகக் காரணம் சொன்னார். ஜெயலலிதாவுக்கு தமிழக உழைக்கும் மக்களே உபரிதான். 13,000 பணியிடங்கள் சர்வசாதாரணமாக நீக்கப்பட்டன.

13,000 பேரை திடீரென பணிநீக்கம் செய்தால், அந்தக் குடும்பங்கள் என்ன செய்யும்? இது பொருளாதார மரண தண்டனை. தென்காசியில், உயர்நீதிமன்றத் தடைக்குப் பிறகு வேலைக்குச் சென்ற ஒருவர் வேலை மறுக்கப்பட்டதால் மாரடைப்பு ஏற்பட்டு செத்துப்போனார். திருவாரூரில் ஒருவர் விஷம் குடித்து தற்கொலைக்கு முயற்சி செய்துள்ளார். 2001லும் இதே காட்சியை ஜெயலலிதா அரங்கேற்றினார். சாலைப் பணியாளர்களும் தெருவில் நிறுத்தப்பட்டார்கள். இப்போது தமிழக மக்களை ஏமாற்ற சில்லறை வர்த்தகத்தில் அந்நியர் நுழைந்தால் வேலை வாய்ப்பு பறிபோகும் என்று பசப்புகிறார்.

இலங்கை கடற்படையினரால் துன்புறும் மீனவர் மீது அக்கறை உள்ளவர் போல் காட்டிக் கொள்ளப் பார்க்கிறார் ஜெயலலிதா. இலங்கை கடற்படை தொடுப்பதுபோல் ஜெயலலிதா தொடுத்துள்ள தாக்குதலும் கொடூரமானதுதான்.

தமிழ்நாடு அரசுப் பணிகளில் 1.7 லட்சம் காலிப் பணி யிடங்கள் உள்ளதாக செய்திகள் வெளியாகின்றன. மகாராஷ்டி ராவுக்கும் அசாமுக்கும் வேலைத் தேடிச் சென்ற தமிழக இளைஞர்களை அங்குள்ளவர்கள் அடித்து விரட்டினார்கள் என்று ஆதங்கப்பட்டோம். ஆனால், தமிழ்நாட்டில், ஆவடியில், ராணுவத்திலாவது வேலை கிடைக்காதா என்ற ஏக்கத்துடன் வந்த தமிழக கிராமப்புற இளைஞர்கள், கடுமையான குளிரில், தெருவோரத்தில் படுத்துக் கிடந்ததை தமிழ்நாடு பார்த்தது.

இந்த நிலையில் நெருக்கடியில் சிக்கித் தவிக்கும் தமிழகத் தின் கிராமப்புற வளர்ச்சி தொடர்பான பணிகளில் ஈடுபடுபவர் கள் எப்படி உபரியாவார்கள்? 13,000 பேர் பணி நீக்கம் அவர்கள் வேலைவாய்ப்பு மட்டும் சம்பந்தப்பட்ட விசயமில்லை. தமிழ கத்தின் கிராமப்புற வறிய மக்களின் நலன்கள் தொடர்பானது. கிராமப்புற வறிய மக்களுக்கு ஓரளவாவது வாழ்வுரிமையை பாதுகாக்கும் நலத்திட்டங்கள், பணிகள் தொடர்பானது. மக்கள் வாழ்வாதாரங்களைப் பறித்துவிட்டு, மக்கள் நலத்திட்டங்களை முடக்கிவிட்டு, கிரைண்டர், மிக்சி,  மடிக்கணினி என்று பாட்டு பாடினால் பசித்த மக்களின் வயிறு நிரம்பிவிடுமா?

பணிநீக்க அறிவிப்பு தந்த அதிர்ச்சியில் இருந்து தமிழக மக்கள் மீளும் முன்னரே அடுத்த அடி. முன்னறிவிப்பு ஏதுமின்றி அமலுக்கு வந்த பால் விலை ஏற்றம், பேருந்து கட்டண உயர்வு என்று ஜெயலலிதாவின் சாட்டையடியில் தமிழக உழைக்கும் மக்கள், அன்றாட பிழைப்பு தேடி, பணியிடம் செல்ல, பக்கத்து ஊர்களில் உள்ள உறவினர்களைப் பார்க்கச் செல்ல பேருந்தை நம்பியிருந்தவர்கள் சுருண்டு போனார்கள். குழந்தைகளுக்குத் தர வேண்டிய பால் பெற்றவர்களுக்கு விஷமாகிப் போனது. ஜெயலலிதா மக்கள் வாழ்நிலைமை கள் பற்றி எந்த அறிவும் இல்லாதவர் என்பதை இந்த விலை உயர்வு அறிவிப்புகள் மிகவும் சத்தமாகச் சொல்கின்றன.

பொதுத்துறை நிறுவனங்களைக் காப் பாற்றவே இந்த விலைஉயர்வு என்கிறார். தான் ஆட்சியில், அதிகாரத்தில் இருப்பதை மறந்து, எதிர்க்கட்சிகள் போல் பேசுகிறார். கருணாநிதி யை, காங்கிரசை விமர்சிக்கவா ஆட்சிக்கு வந் தார்? பரமக்குடி தலித் மக்கள் மீது ஒடுக்கு முறையை ஏவி சட்டம் ஒழுங்கைக் காப்பாற் றிய ‘நிர்வாகத் திறன், இலவச மின்சாரம், வரிவிலக்குகள், இன்னபிற கணக்கில் வருகிற, கணக்கில் வராத சலுகைகள் பெற்று, தமிழக இளைஞர்கள் ரத்தத்தைக் குடிக்கும் பன் னாட்டு, உள்நாட்டு நிறுவனங்கள் பக்கம் திரும் பாதா? அவர்களுக்கு தரப்பட்டுள்ள சலுகை களை திரும்பப் பெற்று மாநிலத்தின் நிதி நிலையை மேம்படுத்த முடியாதா? சில்லறை வர்த்தகத்தில் பன்னாட்டு நிறுவனங்களை அனுமதிக்க முடியாது என்று அறிவித்து விட் டால், மக்கள் பக்கம் நின்றுவிட்டதாக ஆகி விடுமா? ஹ÷ண்டாய், நோக்கியாக்களுக்கு சலு கைகளை வாரி வழங்கியது திமுக ஆட்சி. திமுக ஆட்சியில் உருவான கட்டிடங்கள் வேண்டாம் என்றால், கருணாநிதி ஆட்சியில் பன்னாட்டு நிறுவனங்களுக்குத் தரப்பட்ட சலுகைகள் மட்டும் ஏன் தொடர்கின்றன? (கட்டிடங்களை கருணாநிதியும் அவர் குடும்பத்தா ரும் மண் சுமந்து செங்கல் வைத்து சிமெண்ட் பூசிக்கட்டவில்லை. இந்தக் கட்டிடங்களை உருவாக்க ரத்தம் சிந்தியவர்கள் தமிழக, பிற மாநில தொழிலாளர்கள். அவை கருணாநிதி யின் சொந்தப் பணத்தில் கட்டப்பட்டவை அல்ல. தமிழக மக்களின் பணத்தில் கட்டப் பட்டவை. அவை பயன்பட வேண்டியதும் தமிழக மக்களுக்குத்தான். ஜெயலலிதாவின் சொந்தக் கணக்கைத் தீர்த்துக் கொள்ள அல்ல).

காவிரி தென்பெண்ணை பாலாறு - தமிழ்
கண்டதோர் வையை பொருணை நதி
மேவிய யாறு பலவோட - திருமேனி செழித்த தமிழ்நாடு!

பாரதிக்கு தமிழ் பெருமை பாடுவதில் அத்தனை இன்பம்! அந்த ஆறுகள் வற்றிவிட்ட தால் வேறு ஆறுகளுக்கு ஏற்பாடு செய்கிறார் ஜெயலலிதா. அதுவும் உயர்ரக சாராய ஆறு. மக்களுக்கு வேலை வாய்ப்பு, அரசுக்கு வரு மானப் பெருக்கு என்று அதற்கும் காரணம் இருக்கும். வேலையின்மை, கட்டுப்படியாகாத கூலி, வாய்க்கும் வயிற்றுக்குமான வாழ்க்கை, இவற்றுடன் சேர்ந்து கொண்டுள்ள விலை உயர்வுச் சுமையில் துன்பப்படும் நெஞ்சங்களை சாராயம் ஊற்றி குளிர்வித்துவிட்டால் எதிர்ப்பு இருக்காது என்று தப்புக்கணக்கு போடுகிறார்.

ரத்தத்தின் ரத்தங்களால் அறிவு திறன், கூர்மை ஆகியவற்றுக்காக கொண்டாடப்படும் ஜெயலலிதாவுக்கு சொத்துக் குவிப்பு தொடர் பான கேள்விகளுக்கு பதில் சொல்ல முடியாமல் போனது. நூற்றுக்கணக்கான கேள்விகளுக்கு தெரியாது, மறந்துவிட்டது என பதில் சொன்ன துடன் மக்கள் மீது தொடர் சாட்டையடி தொடுத்து களைப்பாகி ஓய்வுக்கு கொடநாடு செல்ல திட்டமிட்டார். அவருடைய ஓய்வுத் திட்டம் ஏனோ ரத்தாகியுள்ளது.

ஒன்றரை லட்சம் அரசு ஊழியர்கள், ஆசிரி யர்கள், சாலைப் பணியாளர்களை பணி நீக்கம் செய்த அவரை கொடநாட்டுக்கு கிட்டத்தட்ட நிரந்தர ஓய்வுக்கு அனுப்பியதை மறந்துவிட்டு மக்கள் மீது சாட்டை வீசுகிறார் ஜெயலலிதா. மாற்றம் தந்த மக்களுக்கு பால் விலையிலும் பேருந்து கட்டணத்திலும் ஜெயலலிதா தந்த ‘ஏற்றம், மின்கட்டணத்தில் தரவுள்ள ‘ஏற்றம் மக்களை படுபாதாளத்தில் தள்ளியுள்ளது.

ஜெயலலிதாவின் எதேச்சதிகார, உழைக்கும் மக்கள் விரோதப் போக்குக்கு எதிராக தமிழ கம் முழுவதும் மக்கள் போராட்டங்கள் எழு கின்றன. அந்தப் போராட்டங்களே உண்மை யான எதிர்க்கட்சி பாத்திரமும் ஆற்றுகின்றன. ஜெயலலிதா கையில் எடுத்துள்ள சாட்டையை தமிழக உழைக்கும் மக்கள் போராட்டங்கள் பிடுங்கி எறியும்.

அப்துல் கலாமுக்குச் சில கேள்விகள்

1.     அணுஉலைகள் பாதுகாப்பானவை என்றால், மிகவும் புத்திசாலித்தனமான முதலாளித்துவக் காப்பீட்டு நிறுவனங்கள் அவற்றை ஏன் காப்பீடு செய்வதில்லை? அணுக்கசிவு ஆபத்திற்கு ஏன் காப்பீடு செய்யப்படுவதில்லை?

2.     வால் ஸ்ட்ரீட் டஸ் நாட் வோட் ஃபார் நியுக்ளியர் இண்டஸ்டிரிஸ் என ஏன் சொல்கிறார்கள்? தண்டச் செலவு என்பதால்தானே? மற்ற எரிபொருள் ஆற்றல் தொழில்களைக் காட்டிலும் அணு ஆற்றல் தொழிலுக்கு வால்ஸ்ட்ரீட் வங்கிகள் ஏன் கூடுதல் வட்டி வாங்குகின்றன?

3.     அணுக்கழிவை, பூகம்ப/நீர் ஓட்ட வாய்ப்பே இல்லாத யூக்கா மலையில் ஆழப் புதைக்கும் திட்டத்திற்கு பல ஆயிரம் கோடி செலவு செய்து பின்னர் அதுவும் ஆபத்துதான் என ஆனானப்பட்ட அமெரிக்காவே அந்தத் திட்டத்தைக் கைவிடவில்லையா?

4.     கூடங்குளம் அணுக்கழிவிற்கும் அணுகுண்டு தயாரிப்பிற் கும், இந்தியாவில் துணை மேலாதிக்க வல்லரசு கனவுகளுக்கும் தொடர்பில்லையா?

கண்டனம்
இருளர் பெண்களை வன்புணர்ச்சிக்குள்ளாக்கிய குற்றவாளிகள் கைது செய்யப்பட வேண்டும்!

டி.மண்டபம் பழங்குடிப் பெண்கள் மீது நடத்தப் பட்ட கொடூரமான வன்புணர்ச்சி சம்பவம் குறித்து இந்திய கம்யூனிஸ்ட் கட்சி (மார்க்சிஸ்ட் - லெனி னிஸ்ட்) மற்றும் அகில இந்திய முற்போக்குப் பெண்கள் கழக ஆய்வுக் குழு விழுப்புரம் மருத்துவ மனையில் இருந்த பாதிக்கப்பட்ட பெண்கள், அவர்கள் உறவினர் கள், மருத்துவ அதிகாரிகள், பழங்குடி இருளர் சங்கத் தலைவர்கள், பத்திரிகையாளர்கள், வழக்கறிஞர்கள், டி.மண்டபம் கிராம மக்கள் ஆகியோரை சந்தித்தது. பாதிக்கப்பட்டோரின் வசிப்பிடம், திருக்கோவிலூர் நீதிமன்றம் உள்ளிட்ட இடங்களுக்கும் சென்று வந்தது. மாலெ கட்சி மாநிலச் செயலாளர் தோழர் பாலசுந்தரம் தலைமையில் சென்ற குழுவில் கட்சியின் மாவட்டச் செயலாளர் வெங்கடேசன், கோபாலகிருஷ்ணன், அகில இந்திய முற்போக்குப் பெண்கள் கழக தேசிய செயற்குழு உறுப்பினர் ரஞ்சனி, மாவட்டத் தலைவர், சுசிலா, கட்சியின் திருக்கோவிலூர் பகுதிக் குழு உறுப்பினர் பேபி, ஆகியோர் இடம் பெற்றனர்.

திருக்கோவிலூர் காவல்நிலையத்தில் பணிபுரிந்த பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளவர்கள் திட்ட மிட்ட வகையில் பழங்குடிப் பெண்கள் நான்கு பேரை கொடூரமாக வன்புணர்ச்சி செய்துள்ளனர் என்பது உறுதியாகிறது. இரவு 8 மணிக்கு இரண்டு வாகனங் களில் சென்றவர்கள் அதிகாலை 1 மணிவரை மண்ட பம் கிராமத்தில் பலவிதமான வன்முறை செயல்களில் ஈடுபட்டுள்ளனர். பெண் காவலர் யாரையும் அழைத்து செல்லாமல் பெண்களை கைது செய்து வாகனங்களில் ஏற்றிச் சென்றார்கள். 4 பெண்களை மறைவிடத்திற்கு கொண்டு சென்று வன்புணர்ச்சி செய்துள்ளனர். இரவு நேரத்தில் பெண்களை கைது செய்வது, காவல்நிலை யத்தில் சட்ட விரோதமாக வைத்திருப்பது, துன்புறுத் துவது, பெண்களது கண்ணியத்தை தன்மானத்தைக் குலைப்பது உள்ளிட்ட பல குற்றங்களை செய்துள்ளனர்.

டி.மண்டபம் பழங்குடிப் பெண்கள் மீது நடத்தப் பட்ட கொடூர வன்புணர்ச்சி சம்பவத்துக்கு முதலமைச் சர் பொறுப்பேற்க வேண்டும் வன்புணர்ச்சி செய்த காவலர்களை உடனடியாக சிறையிலடைக்க உத்தர விட்டிருக்க வேண்டும். உயரதிகாரிகள் மீது நடவ டிக்கை எடுத்திருக்க வேண்டும். மாறாக பெண்களின் தன்மானத்துக்கும் கண்ணியத்துக்கும் விலை பேசுவது போல இழப்பீடு அறிவித்துள்ளார். குற்றவாளிகளை விரைவாக கடுமையாக தண்டிப்பதுதான் பாதிக்கப்பட் டவர்களுக்கு ஓரளவாவது ஆறுதலளிக்கும்.

சம்பவத்தில் 9 காவலர்கள் சம்பந்தப்பட்டுள்ளனர். மீதமுள்ள 4 பேரையும் திருக்கோவிலூர் சரக டிஎஸ்பி மீதும் சஸ்பெண்ட், கைது நடவடிக்கை எடுக்க வேண் டும். சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ள கொடூர குற்றம் புரிந்த குற்றவாளிகளை காப்பாற்ற, குற்றத்தை மறைக்க மாவட்ட கண்காணிப்பாளர் தனது அதிகாரத்தை தவ றாகப் பயன்படுத்தியுள்ளார். வன்முறை சம்பவம் எது வும் நடைபெறவில்லை என தவறான செய்தியளித் துள்ளார். ஊடகங்கள் செய்தியை வெளிப்படுத்தாமல் இருந்திருந்தால் முழுக்குற்றமும்  மறைக்கப்பட்டிருக்கும்.

ஊடகங்களில் செய்திகள் வந்த பிறகும் மண்டல டிஅய்ஜி எந்த நடவடிக்கையும் எடுக்காமல் குற்ற வாளிகளுக்கு உதவியாக செயல்பட்டுள்ளார். சட்டப் படி கடமை செய்யத்தவறிய மாவட்ட கண்காணிப் பாளர், டிஅய்ஜி ஆகியோரை சஸ்பெண்ட் செய்ய வேண்டும். அவர்கள் மீது வன்கொடுமை சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்ய வேண்டும். மாநிலக் காவல் துறை அமைப்பு வழக்கை விசாரிப்பதால் நீதி கிடைக் காது என்பதால் மனித உரிமை ஆணையம், தாழ்த்தப் பட்டோர் - பழங்குடி ஆணையம் மற்றும் மகளிர் ஆணையம் சம்பவம் பற்றி விசாரித்து குற்றவாளி களை தப்பிக்க விடாமல் தண்டிக்க வழி செய்ய வேண் டும். மாவட்டம் முழுவதும் இருளர் சமூகத்தினர் மீது போடப்பட்டுள்ள பொய்வழக்குகளைத் திரும்பப் பெற வேண்டும். டி.மண்டபத்தை சேர்ந்த மூவரையும் உடன டியாக சிறையிலிருந்து விடுதலை செய்ய வேண்டும் பழங்குடி இருளர் சமூகத்து மக்கள் அச்சமின்றி கவுர வத்துடன் வாழ தமிழ்நாடு அரசாங்கம் சமூகப் பொரு ளாதார நல்வாழ்வு சிறப்புத் திட்டங்களை விரைந்து செயல்படுத்திட வேண்டும்.

டிசம்பர் 2 அன்று தோழர் பாலசுந்தரம் தலை மையிலான மாலெ கட்சிக் குழு காவல்துறை தலைவரை சந்தித்து குற்றவாளிகளை உடனடியாக கைது செய்ய வலியுறுத்தியது. காட்டுமன்னார்குடியில் மாலெ கட்சி தலைவர்கள் மீது தாக்குதல் நடத்த காவல்நிலையத்தில் நடந்த முயற்சியை தடுக்காத காவல்துறையினர் மீதும் தாக்குதல் முயற்சியில் ஈடுபட்டவர் மீதும் நடவடிக்கை எடுக்க வலியுறுத்தியும் மனு அளித்துள்ளது.

இருளர் சமூக பெண்கள் மீது நடத்தப்பட்ட பாலியல் வன்முறை சம்பவத்தைக் கண்டித்தும் குற்றவாளிகளை உடனடியாக கைது செய்து சிறையி லடைக்க வேண்டுமென்பதை வலியுறுத்தியும் வரும் டிசம்பர் 5 அன்று சென்னையிலும் விழுப்புரத்திலும் முற்றுகைப் போராட்டம் நடத்த மாலெ கட்சியும் முற் போக்கு பெண்கள் கழகமும் திட்டமிட்டுள்ளன.

கெட்ட காலம் வந்துடுச்சி கெட்ட காலம் வந்துடுச்சி

தமிழ்நாட்டுல தமிழ்நாட்டுல தமிழ்நாட்டுல தமிழ்நாட்டுல தமிழ்நாட்டுல தமிழ்நாட்டுல

தமிழ்நாட்டுல என்ன நடக்குது
அம்மா ஆட்சி நடக்குது
அம்மா ஆட்சில என்ன நடக்குது


எப்படி இப்படி ஒரு கேள்விங்க
அடடா பிரமாதம் அட்டகாசமுன்னு”
ஏழாம் அறிவுக்கு புரியல்லயா?

ஆறறிவுள்ள ஆளுங்களுக்குப்
புரியறமாறி சொல்லுங்களே

அம்மா ஆட்சில அம்மா ஆட்சில
என்னன்னமோ நடக்குது
ஏதேதோ நடக்குது
எல்லாத்தியும் எப்படிச் சொல்லுறது?

சரி சரி கேளு கத கேளு கத கேளு

பழங்குடி இருளர் பெண்களுக்கு
ஆளுக்கு ஒரு லட்சம்
சுளையாக் கிடச்சிது
சுளையாக் கிடச்சிது

எப்படி எப்படி சொல்லுங்க
விவரமா சொல்லுங்க

காக்கிச் சட்ட போலீசு
கடம கண்ணியம் கட்டுப்பாடோட
காவல்நிலையத்துக்கு வந்த பெண்கள
காட்டுக்குள்ள துôக்கிப் போயி
பாலியல் வன்முற செஞ்சாங்க

விசயம் வெளிய வந்தபிறகு
சஸ்பென்ட் மட்டும் செஞ்சாங்க
கோர்ட்டாருங்க சொன்ன பிறகுதான்
மருத்துவ சோதனக்கு      அனுப்பிச்சாங்க

வீரபாண்டி பொன்முடி நேருவ
உள்ளவச்ச அம்மாவால
காக்கிச் சட்டக் காரங்கள

உள்ள தள்ள முடியாதாங்க...?
சட்டம் ஒழுங்கு காக்கறவங்க
கவுரவம் அம்மாவுக்கு முக்கியமுங்க
அம்மா ஆட்சின்னு வந்தாலே
அவங்க கொடி மட்டுந்தாங்க
உசர உசர பறக்குமுங்க
அம்மா ஆட்சில அம்மா ஆட்சில
ஒரு லட்சம் அஞ்சு லட்சமாகுது
அஞ்சு லட்சம் கிடைக்கணுமுன்னா
பரமகுடி தலித்தா பொறக்கணுமுங்க
சாதிவெறி போலீசு சுட்டுத்தள்ளி சாவனுமுங்க

வேறென்னங்க நடக்குது
சென்னயும் கோவையும் தண்ணில மிதக்குது
நாலு நாளு மழையில
நகரமெல்லாம் நாறிடிச்சி
அப்ப கூடங்குளம் என்ன ஆவுங்க

மறந்தா போயிட்ட அம்மா சொன்னத
போருன்னா ஜனங்க சாவாங்க
அப்துல் கலாமே சொல்லிட்டாருங்க
சாலை விபத்துக்கு பயந்தாக்க
ரோடுல போக முடியாது
அணுக்கசிவு வந்தாக்க
மொத்த ஜனமுமா சாவாங்க
அப்படி இப்படி ஆவுந்தாங்க
கொஞ்சப் பேரு சாவோந்தாங்க

அம்மா பேர கேட்ட ஒடனே
நோய் நொடியெல்லாம் பறந்திடுச்சா

நோயும் பேயும் வேற வேணுமா?
அம்மா சொல்றதைக் கேளுங்க

கருணாநிதிதான் பிரச்சினங்க
கஜானல காசில்லங்க

மெட்ராஸ் ஜிஹெச் சர்ஜரிக்கி
மயக்க மருந்து இல்லிங்க
நைட்ரிக் ஆக்சைட் இல்லிங்க
கவர்மென்டு காசு தரல
கம்பெனி மருந்து தருல
ஆப்பரேசனு நடக்கலிங்க

கோவையில நர்சம்மாங்க
நோயாளிய பாக்கிறவங்க
அய்சியூல அட்மிட்டுங்க
தங்கற இடம் சுத்தமில்லாம
டெங்கு ஜ
÷ரம் புடுச்சிதுங்க
கருணாநிதியால கஜானா காலி
அம்மா என்ன பண்ணுவாங்க
வெலய ஒயர்த்தணும் கட்டணம் ஏத்தணும்
வேறென்னங்க பண்ணுவாங்க

முன்னமே சொல்லிப்புட்டாங்க
சிபிஅய் சிபிஎம் கட்சிக்கு
தேமுதிக கட்சிக்கு
அம்மா முன்னமே சொல்லிட்டாங்க
வயத்தக் கட்டணும் வாயக் கட்டணும்
கசப்பு மருந்து குடிச்சாகணும்

உள்ளூரு கத கேட்டவரே
வெளியூரு கத கேளு
சுப்ரீம் கோர்ட் கத கேளு

பதிமூணாயிரம் பேருங்க
மக்கள் நலப் பணியாளருங்க
மூணாம் முறையா அம்மா வந்து
தூக்கிக் கெடாசிப் போட்டாங்க

வெவரமில்லா சுப்ரீம் கோர்ட்டு
தமிழ்நாட்டுல என்ன நடக்குது
சட்டத்தின் ஆட்சி இருக்குதான்னு
கேள்விகேள்வியா கேக்குறாங்க
இந்த நீதிபதி பசங்கள
கஞ்சாக் கேசுல உள்ள போடணும்
அப்பத்தான் செரியாவாங்க
அம்மா வச்சது சட்டமுங்க
அம்மா நெனச்சது நடக்கணுமுங்க
நீதிபதிகளுக்கு புரியணுமுங்க

அப்ப ஒண்ணு சொல்லுங்க
அம்மா ஆட்சிய எதிர்த்திட
ஆளு யாரும் இல்லிங்களா
கருணாநிதி பாவமுங்க
கனிமொழி வந்தது போதுமுங்க
இடதுசாரி தோழருங்க
கேப்டன் விசுலுக்கு காத்திருக்காங்க
புரியுதுங்க புரியுதுங்க
ஆறாம் அறிவுக்கு புரியுதுங்க

சூடா இருக்குது நாடுங்க
இரும்பு பழுத்த சூடுங்க
மக்கள்தாங்க சம்மட்டி
ஓங்கிப் போட்டா போதுமுங்க
எல்லாமே மாறுமுங்க

- சாமக்கோடாங்கி

நியுயார்க்கில் சிவப்பு விளக்கு தடை நியுடில்லியில் சிவப்புக் கம்பள வரவேற்பு
காம்ரேட்

இந்தியாவில் சில்லறை வர்த்தகம்

இந்தியா எங்கும் 1.2 கோடி கடைகள் உள்ளன. மக்கள் தொகையில் ஒவ்வொரு ஆயிரம் பேருக்கும் 11 கடைகள் உள்ளன. 4 கோடி பேர் இந்தக் கடைகளில் பணிபுரிகின் றனர். ஒருவர் வருமானத்தில் குறைந்தபட்சம் மூன்று பேர் வாழ்கிறார்கள் என்றால், 12 கோடிப் பேருக்கு இந்தக் கடைகள் வாழ்க்கை தருகின்றன.

பன்னாட்டு சில்லறை வர்த்தகம்

அமெரிக்காவின் வால்மார்ட், ஜெர்மனி யின் மெட்ரோ, நெதர்லேண்ட்சின் அஹோல்ட், பிரான்சின் கேர்ஃபோர், இங்கி லாந்தின் டெஸ்கோ போன்றவை சர்வதேச சில்லறை வர்த்தகத்தை கட்டுப்படுத்தும் பிரும்மாண்டமான நிறுவனங்கள்.

இந்த நிறுவனங்களின் மொத்த வருமா னத்தில் வெளிநாட்டு வருமானம் கணிசமான பங்கு வகிக்கிறது. அஹோல்ட் 72%, கேர்ஃ போர் 52%, மெட்ரோ 53%, டெஸ்கோ 22%, வால்மார்ட் 20% வெளிநாட்டு வருமானம் கொண்டுள்ளன. கேர்ஃபோரின் ஆண்டு வரு மானம்  ரூ.6,15,000 கோடி. வால்மார்ட்டின் ஆண்டு வரு மானம் ரூ.19,95,000 கோடி ஆகும். இவற்றின் ஆண்டு வருமானம், இந்தியாவின் பல மாநிலங்களின் வருமானத் தைவிட அதிகம்.

இப்போது, இந்தியாவிற் குள் பெருமளவிற்கு மூலத னத்தை ஈர்க்க, விவசாய இடைத்தரகர்களை விரட்டி, விவசாயியும், நுகர்வோரும் ஒரே நேரத்தில் பயன்பெற, மல்டி பிராண்ட் தொழிலில் 51%, ஒரே பிராண்ட் பொருள் விற்பனையில் 100% அன்னிய நேரடி முதலீடு கொண்டுவர, மன்மோகன் அமைச்சரவை முடிவு செய்துள்ளது. ஒரு கோடி வேலை வாய்ப்புகள் உருவாகும் என மத்திய அமைச்சர் ஆனந்த் சர்மா சொல்கிறார்.

இந்திய சில்லறை வர்த்தகம் போட்டியிட முடியுமா?

முதலாளித்துவம் தனது பதாகையில் ‘சுதந் திர வர்த்தகம் என்ற மோசடி முழக்கத்தை எப்போதுமே எழுதி வைத்துள்ளது. கடலில் வாழும் பெரிய மீன் சிறிய மீனிடம், நாம் இருவருமே கடல்வாழ் ஜீவராசிகள், இருவரும் வாயை அகலத் திறப்போம். யாரால் அடுத்த வரை விழுங்க முடியுமோ, அவர் அந்த அடுத்த வரை விழுங்கிக் கொள்ளட்டும் எனச் சொன்ன தாம். என்ன நடக்கும்? பெரிய மீன் சின்ன மீனை விழுங்கிவிடும். ரூ.19,95,000 கோடி ஆண்டு வருமானம் உள்ள வால்மார்ட்டுடன் சிறு வர்த்தக நிறுவனங்கள் போட்டி போட முடியாது. குறைந்த விலையில் தரமான பொருட்கள் என்ற சந்தை மந்திரம் மனிதர்கள் மனதை மயக்கும். ஆனால் அது நடக்குமா? பெப்சியும் கோக்கும், தமது பண பலத்தால், குறைந்த விலையில் துவக்கத்தில் விற்றார்கள். காளிமார்க், வின்சென்ட், கோலி சோடா தாக்குப்பிடிக்க முடியாமல், வாங்க ஆளில்லா மல், சந்தையில் இருந்து காணாமல் போயின. பிறகு, பெப்சி கோக், காட்டில் மழை. அவை வைத்ததுதான் விலை.

ஒரு கோடி வேலை வாய்ப்பா?

முதலாளித்துவமும் அதன் அரசுகளும் வாடிக்கையாகக் கூசாமல் பொய் சொல்லு வார்கள். தாங்கள் நிதானமாகத்தான் செல்கி றோம் எனக்காட்ட, 10 லட்சம் மக்கள் வாழும் 53 நகரங்களில் மட்டும், அன்னிய நேரடி முதலீட்டில் கடைகள் வரும் என்கிறார்கள். ஒரு நகரத்திற்கு 50 கடைகள் என்றால் 2,650 கடைகள் மட்டுமே வருமே. ஒரு கடையில் 4,000 பேருக்கு வேலை தந்தால்தான் ஒரு கோடி பேருக்கு மேல் வேலை கிடைக்கும். ஒரு கோடி பேருக்கு வேலை என்பது  மிகப் பெரிய மோசடி.

விவசாயிகளுக்கு அற்புத வாய்ப்பா?

2,60,000 விவசாயிகள் கடன் சுமை தாளாமல், இதுவரை, உலகமயக் கொள்கை கள் அரியணையில் அமர்ந்தபிறகு, தற்கொலை செய்துகொண்டுள்ளனர். மூலதன ஊடுருவல், ரியல் எஸ்டேட் பெருக்கம், ரியல் எஸ்டேட் விலைகள், நிலப்பறி போன்றவற்றாலும் அரசுகளின் புறக்கணிப்பாலும் சிறு விவசாயம் செத்துக் கொண்டிருக்கிறது. வால்மார்ட் போன்றவைகள் விவசாயிகளிடமிருந்து நேரடி கொள்முதல் செய்தால், விலையை விவசாயி தீர்மானிக்க முடியுமா? விவசாய விளை பொருட்களை தாங்கள் வைத்த விலையில் டெஸ்கோ, வால்மார்ட், கேர்ஃபோர் தீர்மானிப்பார்கள். அவர்கள் நிர்ணயிக்கும் தர அளவைகளுக்கும் சிறு விவசாயிகள் ஈடு கொடுக்க முடியாது. பெரும் பண்ணைகள் ஒப்பந்த விவசாய பண்ணைகள் பயன் பெற லாம். அரசு மொத்தக் கொள்முதலில் இருந்து பின்வாங்கும். சந்தைக்கு, பன்னாட்டு அந்நிய வர்த்தகத்தின் நுழைவால், சிறு விவசாயம் பாதிக்கப்படும். மூச்சுத் திணறிச் சாகும். அன்னிய நிறுவனம் கொண்டு வரும் பணத்தின் ஒரு பகுதி குளிர்ப்பதன வசதி போன்றவற்றிற் கும் பயன்படும் என்று சொல்லப்படுகிறது. விவசாயத்திற்குத் தேவையான உள்கட்டுமான வசதிகளை அரசு செய்யாமல் விட்டுவிட்டு, இனி வால்மார்ட்டை டெஸ்கோவைத் தான் அதை செய்யச் சொல்லுமா? சிறுவிவசாயிகள், விவசாயம் மற்றும் உணவுப் பாதுகாப்புக்கே ஆபத்து.

சீனாவுடன் ஒப்பிடுவது சரியா?

சீனா வால்மார்ட் கடைகளுக்கு வழி விட்டுள்ளது. நாம் மட்டும் ஏன் தயங்க வேண்டும்? இப்படியும் ஒரு கேள்வி. ஒரு காலத்தில் உலகின் உற்பத்திக் கூடமாக இங்கிலாந்து இருந்தது போல், இன்று சீனாதான் உலகின் தொழிற்சாலை. அங்கிருந்துதான் வால்மார்ட் போன்றோர் பல உற்பத்திப் பொருட்களை வாங்குகிறார்கள். சீனப் பொருட்களை கூடுதலாக வாங்கி விற்கும் வால்மார்ட் சீனாவில் வருவதால் சீனப் பொருளாதாரத்திற்கு இழப்பில்லை. சீனாவில் இந்தியாவை விட வறுமை குறைவு. மனிதவள வளர்ச்சி அதிகம். அவர்களது வளர்ந்துள்ள பொருளாதார பலம், மேலை ஏகாதிபத்திய நாடுகளையே அச்சுறுத்துகிறது. ஆகவே, சீனாவுடன் இந்தியாவை ஒப்பிடுவது தவறு.

சங்பரிவார் திரிணாமுல் மோசடி

பாரதிய ஜனதா கட்சி தனது 2004 தேர்தல் அறிக்கையில் சில்லறை வர்த்தகத்தில் அன்னிய முதலீடு வருவதே நல்லது என வாக்குறுதி சொன்னது. 2009ல்  பின்வாங்கியது. சமீபத்தில் அதன் தலைவர் அருண் ஜேட்லி அமெரிக்க துôதரிடம், சில்லறை வர்த்தகத்தில் அன்னிய நேரடி முதலீடு அவசியம் மா - பாப் (தாய் தந்தை) நடத்தும் கடைகள் பாதுகாக்கப்படுமா என்றெல்லாம் யோசிக்க முடியாது என்று சொன்னதை விக்கிலீக்ஸ் கசிவுகள் அம்பலப் படுத்தியுள்ளன.

மம்தா அரசின் நிதியமைச்சராக இருக்கும் அமித் மிஸ்ரா, இப்போது எதிர்க்கிறார். ஆனால் ஃபெடரேசன் ஆப் இந்தியன் சேம்பர் ஆப் காமர்ஸ் அண்ட் இண்டஸ்ட்ரியின் தலைவர் என்ற தமது முன்னாள் அவதாரத்தில், அன்னிய முதலீட்டை நேரடியாக ஆதரித்தார்.

நாடாளுமன்றத்தின் புனிதம்

லோக்பால் சர்ச்சையின்போது, காங்கிரஸ் கட்சியினர் கச்சைகட்டிக்கொண்டு, வீதிப் போராட்டங்களுக்கு நாடாளுமன்ற மேன் மையை கீழ்ப்படுத்தலாமா, நாடாளுமன்ற அதிகாரத்தைச் சுருக்கலாமா என்றெல்லாம் சொன்னார்கள். நேற்று வரை ஆதரித்த, பாதலின் சிரோன்மணி அகாலி தளமும் பஞ்சாப் அரசும் இப்போது எதிர்க்கின்றனர். மத்திய அரசின் கூட்டாளிகள் திரிணாமூலும் திமுகவும் எதிர்க்கின்றன. காங்கிரஸ் நாடாளு மன்ற உறுப்பினர்கள் சிலரே எதிர்த்து கருத்துச் சொல்லியுள்ளனர். நாடாளுமன்றத்தில் விவா திக்காமலேயே, அமைச்சரவை ஒப்புதல் தந்துள்ள மன்மோகன் அரசு, நாடாளுமன்ற ஜனநாயகம் பற்றி வசனம் பேசக் கூடாது.

நியுயார்க் தடுத்ததை நியுடில்லி எடுத்துக் கொள்கிறது

அமெரிக்காவின் நியுயார்க் மக்கள் தங்கள் நகரத்தில் வால்மார்ட் கடைகளை ஏற்க மறுத்து விட்டனர். வேலைகளை அழிக்கும், குறைந்த கூலி மோசமான பணி நிலைமைகள் இருக்கும், சங்கம் வைக்க அனுமதிக்காது, வால்மார்ட் கடைகள் ரியல் எஸ்டேட் விற்பனையை உயர்த்தும் எனக் காரணம் சொல்லி நியுயார்க் மக்கள் வால்மார்ட்டுக்கு சிவப்புக்கொடி காட்டியுள்ளனர். அமெரிக்க நேரடி முதலீடு களில் ஒன்றான மன்மோகன், சிவப்பு விளக்கு தடையில்லை. சிவப்பு கம்பள வரவேற்புதான் என்கிறார்.

காங்கிரசின் சேதத் தணிப்பு நடவடிக்கைகள்

53 நகரங்களில்தானே வரும் எனச் சொன்ன காங்கிரஸ், பின்னர் ஏற்றுக் கொள்ளும் மாநிலங்களில்தான் வரும், வேண் டும் என்றவர்கள் வைத்துக் கொள்ளட்டும். வேண்டாம் என்பவர்கள் விட்டுவிடட்டும் என்றும் கூறுகிறது. ஏன் நாடாளுமன்றத்தில் கூச்சல் குழப்பம் நடவடிக்கை முடக்கம் எனக் கேட்கிறது. அன்னிய முதலீட்டு வரம்புகள் இதுவரை வேறுவேறு துறைகளில் உயர்ந்துள் ளன எனத் தெரியும். பிற மாநில ஒத்திகை, நாளை நிஜ சோக நாடகமாக மாறும். தொழி லாளர் வர்க்கத்திற்கு இந்த கசப்பான பாடம்  நன்றாகவே தெரியும். ஆரம்பத்தில் கொஞ்சம் காண்ட்ராக்ட், கேசுவல், ட்ரெய்னி, சப்காண்ட் ராக்ட், அவுட்சோர்சிங்தான், கவலைப்படாதீர் கள் எனச் சொல்லும் முதலாளிகள், பின்னர் எல்லாமே நிரந்தரமில்லை என ஆக்கிவிடுவார் கள். பாலைவன மணல் சூறாவளியில் பாது காப்பு தேடி கூடாரத்தில் ஒதுங்கிய மனித னிடம் முதலில் தலையை மட்டும் நுழைத்துக் கொள்கிறேன் என அனுமதி பெற்ற ஒட்டகம், பிறகு மொத்தக் கூடாரத்தையும் ஆக்கிரமித்து மனிதனை விரட்டிய கதையை மறக்கக் கூடாது.

மன்மோகனின் பிடிவாதம்

வரலாறு காணாத ஊழல் ஆட்சிக்கு, அன்னிய எடுபிடி ஆட்சிக்கு, அன்னிய சூறை யாடலுக்குத் துணை போகும் ஆட்சிக்கு, மன்மோகன்தான், அய்முகூவின் இரு அவதா ரங்களிலும் தலைமை தாங்குகிறார். அவர் அவரது கொள்கையில் உறுதியாக உள்ளார். அமெரிக்காவிடம் 123 அணுஆற்றல் ஒப்பந்தத் திற்கு ஒப்புதல் தராவிடில் ராஜினாமா செய்வேன் என மிரட்டியவர் மன்மோகன். ஆடம்பர ஊதாரி கிங் ஃபிஷர் விஜய் மல்லய்யாவின் விமான சேவைக்கு ரூ.8,200 கோடி நட்டம் வந்தவுடன், ராகுல் பஜாஜ் போன்றவர்கள் சாக வேண்டியவர்கள் சாகட் டும் எனச் சொன்னபோது, கிங் ஃபிஷருக்கு நிவாரணம் கொடுப்பது பற்றி பரிசீலிக்கலாம் எனச் சொன்னவர் மன்மோகன்.

முகேஷ் அம்பானி போன்ற முதலாளிகள், கோதாவரி கிருஷ்ணா படுகை எண்ணை வயல்களில் அரசுக்கு சேர வேண்டிய கோடி கோடியான பணத்தைத் தராமல் ஏமாற்றி, இப்போது அரசு கூடுதல் பணம் தர வேண்டும் என வழக்கு போடும் முதலாளிகள், அரசு நாடாளுமன்ற ஜனநாயக நெருக்கடிகளுக்கு அஞ்சி நவதாராள கொள்கைகளை அமல் படுத்துவதில் செயல் இழந்துவிட்டது (Policy Paralysis) என விமர்சனம் செய்தனர்.

அப்படியெல்லாம் நினைக்காதீர்கள் எனச் சொல்லித்தான் கோடிக்கணக்கானவர்களை நேரடியாகப் பாதிக்கும் அன்னிய நேரடி முதலீட்டிற்கு பச்சைக் கொடி காட்டினார். இன்றைய (02.12.2011) நிலவரம்வரை, மன்மோகன் வேதாளம் முருங்கை மரத்தை விட்டு இறங்கவில்லை.

மன்மோகன் அரசுக்கு பல முனைகளில் நெருக்கடி

நெருக்கடிகளோடு மக்கள் இயக்கங்களும் சேர்ந்தே வரும். ஆளும் வர்க்க முகாமில் விரிசல்கள் வரவும் வாய்ப்புண்டு.  பல மூலதன விசுவாசக் கட்சிகளும் வேறு வழியில்லாமல், இந்த அன்னிய முதலீட்டை எதிர்க்கிறார்கள். 01.12.2011 அன்று நாடு தழுவிய கடையடைப்பு நடந்துள்ளது. மன்மோகன் தமது அரசுக்கும் அது பின்பற்றும் பொருளாதாரக் கொள்கை களுக்கும் வேகமாகச் சவக்குழி தோண்டு கிறார். இந்த நல்ல காரியத்தில் நாடே அவருக்கு உதவும்.

ஒரு கிராமசபைக் கூட்டம்

திருவள்ளூர் மாவட்டம் நெற்குன்றம் ஊராட்சியில் மாலெ கட்சி, ஊராட்சி தலைவர் பதவிக்கும் ஒரு வார்டு உறுப்பினர் பதவிக்கும் வெற்றி பெற்றுள்ளது. வாக்காளர் பட்டியல் சரிபார்ப்பு பற்றி பேச நவம்பர் 2 அன்று சிறப்பு கிராமசபைக் கூட்டம் கூட்ட வேண்டும் என்று பிடிஓ நவம்பர் 1 அன்று இரவு தகவல் கொடுத்தார். வார்டு உறுப்பினர்களுக்கு தொலைபேசி மூலம் முன்னரே தகவல் தரப்பட்டிருந்தது.

இந்த குறுகியகால அவகாசத்தில் மக்களுக்கு தகவல் சொல்லி வரவழைப்பது சிரமம் என்பதால் கூட்டத்தைத் தள்ளி வைக்கக் கோரி ஊராட்சி தலைவர் தோழர் பி.சரஸ்வதி கோரினார். ஒன்றிய வளர்ச்சி அலுவலரோ இது சிறப்புக் கூட்டம்தான் என்றும் அதற்கு அனைவருக் கும் தகவல் சொல்ல வேண்டியதில்லை என்றும் வலியுறுத்தினார்.

பொதுவாக இது போன்ற கூட்டங்கள் மக்களுக்கு அறிவிக்கப் படாமலே நடத்தப்பட்டு, முடிவுகள் எடுக்கப்பட்டு, பிறகு மக்களிடம் கையெழுத்து பெறப்படும் நடைமுறை இருந்தது.

ஆனால், முதல் கூட்டமே முறையாக நடத்தப்படாமல் போவதை அனுமதிக்கக் கூடாது என்பதால், வாக்காளர்களில் 10% இருந்தால்தானே கூட்டம் செல்லுபடியாகும் என தோழர் பி.சரஸ்வதி கேள்வி எழுப்பிய பிறகு, ஒன்றிய வளர்ச்சி அலுவலர் பின்வாங்கினார். ஆயினும் அதே தேதியில் நடத்த வேண்டும் என்றும் அனைவருக்கும் தகவல் தர வேண்டும் என்றும் வலியுறுத்தினார்.

மாலெ கட்சி மாநிலக்குழு உறுப்பினர் தோழர் ஜானகிராமன் அவசி யம் அக்டோபர் 2 அன்றே நடத்த வேண்டும் என்றால், மக்கள் எங்கு கூடியிருப்பார்களோ அங்கு நடத்தலாம் என்றும், நூறு நாள் வேலை நடக்கும் இடம் அதற்கு உகந்ததாக இருக்கும் என்றும் சொன்னார். அதன டிப்படையில் மக்களை தவிர்த்து விட்டு நடத்தப்பட இருந்த கூட்டம், மக்கள் ஒன்றுகூடி வேலை செய்யும் நூறு நாள் வேலை நடக்கும் இடத் தில் நடத்தப்பட்டது. 250 பேர் அந்தக் கூட்டத்தில் கலந்து கொண்டனர்.

வாக்காளர் பட்டியல் சரிபார்ப்பு பற்றி விவாதித்ததுடன், கூடியிருந்த மக்கள் நூறு நாள் வேலைத் திட்டத்தில் சட்டக்கூலி கிடைப்பதில்லை என்றும் அது முறைப்படுத்தப்பட வேண்டும் என்றும் வலியுறுத்தினர்.

அதை முறைப்படுத்த அனைத்து முயற்சிகளும் எடுப்பதாக ஊராட்சித் தலைவர் உறுதியளித்தார். இனி வரும் நாட்களில் ஊராட்சியின் வரவு செலவுக் கணக்கு வெளிப்படையாக ஒவ்வோர் ஆண்டும் தரப் படும் என்றும், அனைத்து செயல்பாடுகளிலும் வெளிப்படைத் தன்மை உறுதி செய்யப்படும் என்றும் உறுதியளித்தார். அடுத்து நடக்கிற கூட்டத் தில் கூடன்குளம் அணு உலை மூடப்பட வேண்டும் என்று ஊராட்சி தீர்மானம் நிறைவேற்றப்பட வேண்டும் என்றும் தோழர் பி.சரஸ்வதி முன்வைத்துள்ளார்.

இப்படி ஒரு கூட்டம் நடந்ததே ஊராட்சி மக்கள் மத்தியில் ஒருபுறம் வியப்பையும் மறுபுறம் நம்பிக்கையையும் ஏற்படுத்தியுள்ளது.

திருவள்ளூர் மாவட்டத்தில் உள்ளாட்சித் தேர்தல்களில் வெற்றி பெற்ற, போட்டியிட்ட தோழர்கள் மற்றும் கட்சி முன்னணிகள் கொண்ட கூட்டம் நவம்பர் 6 அன்று நடத்தப்பட்டது. கட்சி அரசியல் தலைமைக் குழு உறுப்பினர் தோழர் எஸ்.குமாரசாமி கலந்து கொண்டார்.

மாலெ கட்சி குமரி மாவட்ட முதல் மாநாடு

கன்னியாகுமரி மாவட்ட முதல்  கட்சி மாநாடு நவம்பர் 20 அன்று குளச்சலில் நடைபெற்றது.

தோழர்கள் மேரி ஸ்டெல்லா, சாந்தி, குமாரசாமி பிள்ளை ஆகி யோர் கொண்ட தலைமைக் குழு மாநாட்டை நடத்தியது. மறைந்த தோழர்களுக்கு அஞ்சலி செலுத் தப்பட்டது.

மாநாட்டை துவக்கி வைத்து மாநாட்டுப் பார்வையாளர் தோழர் தேன்மொழி உரையாற்றினார். மாநாட்டு அறிக்கையை தோழர் அந்தோணிமுத்து முன்வைத்தார். அறிக்கை மீது விவாதம் நடத்தப் பட்டு 7 பேர் விவாதத்தில் பங்கு கொண்டனர். மாநாட்டு தீர்மானங் கள் தோழர்கள் சுசிலா, ஜாக்குலின் முன்வைத்தார்கள். 30 தீர்மானங் கள் முன்வைக்கப்பட்டன.

7 பெண்கள் உட்பட 21 பேர் கொண்ட புதிய மாவட்டக் கமிட்டி தேர்ந்தெடுக்கப்பட்டது.  மாவட்டச் செயலாளராக தோழர் அந்தோணி முத்து தேர்ந்தெடுக்கப்பட்டார்.

தீர்மானங்கள் பற்றி விளக்கி யும், மாநில மாநாடு பற்றி விளக்கியும் 26.11.2011 அன்று குளச் சல், திங்கள் சந்தை, மணவாளக் குறிச்சி ஆகிய இடங்களில் மாலை நேர தர்ணா போராட்டம் நடத்த முடிவு செய்யப்பட்டது.

கட்சி உறுப்பினர் எண்ணிக் கையை 1000 என உயர்த்துவது, தீப்பொறி சந்தா 1000 ஆக்குவது. கட்சிக் கிளைகள் 50 ஆக்குவது, மாணவர் கழக, இளைஞர் கழக அமைப்புக்கள் உருவாக்குவது, ஒருமைப்பாடு வாசகர் வட்டங் களை முறைப்படுத்துவது போன்ற முடிவுகள் எடுக்கப்பட்டன.

ஒய் திஸ் கொலைவெறி ஜெ?
ஜி.ரமேஷ்

ஏய்யா, நேத்து நாலு ரூவாதான வாங்கின. இன்னிக்கு ஒன்பது ரூவா வாங்குத

பஸ் டிக்கட் விலையை ராத்திரியே கூட்டியாச்சு

அடியாத்தி, இது என்ன அநியாயம். டிக்கட்டு விலையை இரண்டு மடங்கா ஆக்கிட்டீய

யாத்தா, நான் ஒன்னும் கூட்டல. அரசாங்கத்த கேளு.

என்னத்த கேக்க. இதுக்கா இவுகளுக்கு ஓட்டு போட்டது

போட்டேல்ல. இன்னும் 5 வருசத்துக்கு ஒன்னும் பண்ண முடியாது போ

ஒய் திஸ் கொலைவெறி பாடலை விட அதிகமாக தமிழ்நாட்டில் இப்போது கேட்பவை இந்தக் குமுறல் கள், கொந்தளிப்புகள், சண்டைகள்தான். இவைதான் இப்போது தமிழக பேருந்துகளில் நித்திய காட்சிகள்.

நவம்பர் 18 அன்று இரவு ஜெயலலிதா, தொலைக்காட்சியில் திடீரெனத் தோன்றி, மாற்றம் தந்த தமிழக மக்களுக்கு விலை ஏற்றம் தந்து திணறடித்தார். மறுநாள் காலையில் பால் வாங்கச் சென்றவர்களும் பஸ் பயணம் போனவர்களும் உண்மையிலேயே மூர்ச்சையாகிப் போனார்கள்.

பொதுத் துறை நிறுவனங்களான மின்சார வாரியம், போக்குவரத்துக் கழகம், ஆவின் பால் நிறுவனம் ஆகிய மூன்றையும் முந்தைய கருணாநிதி அரசு திவாலாக்கி வைத்துவிட்டதால், அவை பெரும் நஷ்டத்தில் மூழ்கும் நிலையில் இருப்பதால், அவற்றைக் காப்பற்ற மின்சாரக் கட்டணத்தையும் பேருந்துக் கட்டணத்தையும் பால் விலையையும் உயர்த்துவதைத் தவிர எனக்கு வேறு வழியே இல்லை. மேலோட்டமாகப் பார்க்கும்போது இது பொதுமக்களை மிகுந்த சிரமத்திற்குள்ளாக்கும் என்ற எண்ணத்தைத் தோற்றுவித்தாலும் இந்த முடிவு எடுக்கப்பட்டதற்கான காரண காரியங்களை ஆராய்ந்து பார்த்தால் அது அவ்வாறு அல்ல என்பது விளங்கும். முற்றிலுமாக முடமாகிப் போயுள்ள நிறுவனங்களைக் கைதூக்கி விடவில்லை என்றால், இந்த நிறுவனங்களின் சேவைகள் மக்களுக்குக் கிடைக்காமலே போய்விடும். என் மீது மிகுந்த நம்பிக்கை வைத்து ஆட்சிப் பொறுப்பை என்னிடம் ஒப்படைத்தீர்கள். தமிழக அரசு ரூ.1 லட்சம் கோடி கடனில் உள்ளது. மத்திய அரசு மாற்றாந்தாய் மனப்பான்மையுடன் தமிழகத்தை அடியோடு புறக்கணித்து கைவிட்டுவிட்ட நிலையில் எனது அருமைத் தமிழக மக்களாகிய உங்களிடம் வராமல் நான் வேறு எங்கே செல்ல முடியும்?. தவிர்க்க முடியாத  இச்சுமையை நீங்கள் ஏற்றுக் கொண்டு அரசுக்கு முழு ஒத்துழைப்பு நல்க வேண்டும் என உருக்கமாகவே பேசினார்.

நான் எங்கே போவேன். நேக்கு யாரைத் தெரியும் என்கிற திரைப்பட வசனம்தான் ஞாபகம் வருகிறது. நடிப்பையே வாழ்க்கையாக்கிக் கொண்டவர்களுக்கு சொல்லி வேறு கொடுக்க வேண்டுமா? அரசாணை போடவில்லை. அமல்படுத்தும் தேதி கூட அறிவிக்க வில்லை. எல்லாம் அதிரடி.

இப்போது பொதுத்துறை என்கிற அஸ்திரத்தைக் கையில் எடுத்துள்ளார். பொதுத் துறை நிறுவனங்கள் நஷ்டத்தில் உள்ளன என்கிறார். உண்மையில் பொதுத் துறை நிறுவனங்களுடைய நஷ்டத்திற்கு அதன் நிர்வாகச் சீர்கேடுகளும் ஊழல் ஆட்சியாளர்களுமே காரணம். சட்டமன்றத் தேர்தலின் போது கருணாநிதி ஆட்சியின் மின்வெட்டையும் மறைமுக பேருந்துக் கட்டண உயர்வையும் காரணம் காட்டிதான் பிரச்சாரம் செய்தார் ஜெயலலிதா. ஆனால், தற்போது கடந்த பத்து ஆண்டுகளாக பேருந்துக் கட்டணம் உயர்த்தப்படா மலே உள்ளது. டீசல், பெட்ரோல் விலை உயர்ந்து கொண்டே போகிறது. அதனால் பேருந்துக்கட்டணம் உயர்த்தப்பட்டுள்ளது என்று சொல்கிறார்.

கருணாநிதியும் தனது ஆட்சி காலத்தில் பேருந்துக் கட்டணம் உயர்த்தப்படவேயில்லை என்று முழுப்பூசணிக்காயை சோற்றில் மறைக்கப் பார்க்கிறார். கடந்த திமுக ஆட்சியின் போதுதான் எம் சர்வீஸ், டீலக்ஸ்,  அல்ட்ரா டீலக்ஸ், எக்ஸ்பிரஸ், எல்எஸ்எஸ், எஸ்எஃப்எஸ், டிஎஸ்எஸ், பாய்ன்ட் டூ பாய்ன்ட், டிரிபிள் பி, என பல்வேறு தமிழ்! பெயர்களை வைத்து ஓரே ரூட்டிற்கு ஒன்பது வகையான கட்டணங்களை கவ லையே படாமல் வசூலித்தார்கள். அரசுப் பேருந்துக ளும் தனியார் பேருந்துகளும் போட்டி போட்டு வசூலித்தார்கள். பண்டிகை, விடுமுறை காலங்களில் இஷ்டம் போல் கட்டணம் வைத்து பகல் கொள்ளை யடித்தார்கள். இந்த மறைமுகக் கட்டண கொள்ளை யைக் காட்டி வாக்குகளை வாங்கிய ஜெயலலிதா இன்று அதையும் தாண்டி இரு மடங்கு பேருந்துக் கட்டணத்தை உயர்த்தியுள்ளார்.  நகரப் பேருந்துகளில் முதலில் குறைந்த கட்டணம் 2 ரூபாய் என்றிருந்ததை 3 ரூபாயாக கருணாநிதி ஆட்சியில் அறிவிக்காம லேயே வசூல் செய்தார்கள். தற்போது ஜெயலலிதா குறைந்தது 3 ரூபாய் என்று கூறிவிட்டு ஸ்டேஜ் தூரத்தைக் குறைத்து விட்டார். இரண்டு கிலோமீட்டர் வரை ரூ 2 என்று இருந்தது இப்போது ஒரு கிலோ மீட்டருக்கு ரூ.3ஆக மாறிவிட்டது.

ஜெயலலிதாவின் இந்த நடவடிக்கைகளுக்கு வக்காலத்து வாங்குகிறார்கள் சில நபர்களும் பத்திரிகைகளும். பெட்ரோல், டீசல் விலையை லிட்டருக்கு ரூபாய் கணக்கில் உயர்த்தும் போது பேருந்துக் கட்டணம் கிலோ மீட்டருக்கு 17 காசுகள், 22 காசுகள் என்றுதானே உயர்த்தப்பட்டுள்ளது என்கிறார்கள். அந்த அதிமேதாவிகள் சொல்வதைப் பார்த்தால் ஒரு லிட்டர் டீசலுக்கு ஒரு கிலோ மீட்டர்தான் செல்ல முடியும் போலும்.  பல்வேறு அரசுத் துறைகளில், நிறுவனங்களில் தினமும் பேருந்தில் சென்று வேலை பார்க்கும் மாதச் சம்பளக் காரர்களுக்கும் கட்டுமானத் தொழிலாளர்கள், பீடித் தொழிலாளர்கள் போன்ற தினக் கூலித் தொழிலாளர் களுக்கும் இந்தக் கட்டண உயர்வு பெரும் துன்பத்தை ஏற்படுத்தியுள்ளது. தினமும் 30 கிலோ மீட்டர் 20 ரூபாயில் பயணம் செய்தவர்கள் இன்று 55 ரூபாய் இருந்தால்தான் பயணம் செய்ய முடியும் என்கிற நிலை.

உண்மையில் ஜெயலலிதா சொல்வதுபோல், இந்த கட்டண உயர்வு பொதுத் துறை நிறுவனமான அரசுப் போக்குவரத்துக் கழகத்தைக் காப்பாற்றுவதற்காகவா? நிச்சயமாக இல்லை. அரசு போக்குவரத்துக் கழகத்தில் தமிழகம் முழுவதும் மொத்தம் 20399 பேருந்துகள் (இதில் சென்னை மாநகரப் பேருந்துகள் 3057, மாவட்ட நகரப் பேருந்துகள் 6406, புறநகர் பேருந்துகள் 7723, அரசு விரைவுப் பேருந்துகள் 555, வெளிமாநில விரைவுப் பேருந்துகள் 359, மலைப் பகுதி பேருந்து கள் 579, உபரிப் பேருந்துகள் 1780 )உள்ளன. இந்த எண்ணிக்கை 2010ம் ஆண்டிற்குரியது. 2011ல் சில நூறு பேருந்துகள் கூடியிருக்கும். அரசுப் போக்குவரத்துக் கழகத்தில் பணிபுரியும் மொத்த பணியாளர்கள், தொழிலாளர்கள் எண்ணிக்கை 1,30,000. அரசுப் பேருந்துகள் ஒரு லிட்டர் டீசலுக்கு 2010ல் சராசரியாக 5.25 கி.மீ. ஓட்டப்பட்டன. தற்போது ஒரு லிட்டர் டீசலுக்கு 7 கி.மீ வரை ஓட்டப்படுவதாக தொழிலாளர் கள் சொல்கிறார்கள்.

போக்குவரத்துக் கழகம் நஷ்டத்தில் இயங்கு வதாகச் சொல்வது அரசும் ஆட்சியாளர்களும்  ஊழல் அதிகாரிகளுமே. திருநெல்வேலி கோட்டத்தில் உள்ள 1907 அரசு பேருந்துகளுக்கு தினமும் 1,65,000 லிட்டர் டீசல் செலவாகிறது. அந்த டீசலுக்கு மத்திய மாநில அரசுகளுக்கு 3 லட்ச ரூபாய் வரி செலுத்தப்படுகிறது. சாலை வரியாக ரூ.1.35 கோடி செலுத்தப்படுகிறது. இந்த வரிகளை அரசு வசூலிக்காமலோ அல்லது மானிய மாகக் கொடுத்தாலோ பல ஆயிரம் கோடி மிச்சமாகும். பள்ளி மாணவர்களுக்கு வழங்கப்படும் இலவச பஸ் பாஸிற்குரிய தொகையை அரசு சென்னையைத் தவிர மற்ற கோட்டங்களுக்கு 56% மட்டுமே தருகிறது. இதையும் சேர்த்து நஷ்டக் கணக்கு காண்பிக்கிறது அரசு என்று போக்குவரத்து இடதுசாரித் தொழிற்சங்கத் தோழர்கள் சொல்கிறார்கள். பல்வேறு வழிகளில் பணத்தை விரயம் செய்யும் அரசு பேருந்துகளைப் பராமரிக்க, தொழிலாளர்களுக்குரிய சம்பளம், ஓய்வூதி யம் வழங்கத் தயாராக இல்லை. திருநெல்வேலிக்கு ஒதுக்கப்பட்ட பேருந்துகளை சேலத்தில் கட்டுமானம் செய்வது சேலத்திற்கு ஒதுக்கப்பட்ட பேருந்துகளை திருநெல்வேலியில் கட்டுமானம் செய்வது போன்றவற் றின் மூலம் தேவையில்லாமல் செலவுகள் செய்கிறது நிர்வாகம் என்கிறார்கள் தொழிலாளர்கள்.

அரசுப் பேருந்துகளுக்கு இணையாக தமிழகத் தில் தனியார் பேருந்துகள் இயக்கப்படுகின்றன. தனியாரால் இயக்கப்பபடும் பயணிகள் பேருந்துகள் மொத்தம் 7183, சிற்றுந்துகள் 4041, ஆம்னி பேருந்துகள் (மாநில அனுமதி) 460, ஆம்னி பேருந்துகள் (தேசிய அனுமதி) 161. ஸ்பேர் பஸ் என்ற பெயரில் கணக்கில் வராத பேருந்துகள் தனி. தனியார் முதலாளிகள் தங்களுக்கு கொடுக்கப்பட்ட ரூட் அனுமதி தாண்டி கூடுதலாக ஓட்டிக் கொள்ளையடிப்பது என்பது சர்வ சாதாரணம். ஆம்னி பஸ்களில் அரசு நிர்ணயித்த கட்டணத்தைக் காட்டிலும் பல மடங்கு அதிகமாக வசூல் செய்யப்படுகிறது. இனி, 5 பேர் கொண்ட ஒரு குடும்பம் நெல்லையில் இருந்து சென்னைக்கு பஸ்ஸில் செல்வதைவிட காரில் சென்றால் செலவு மிச்ச மாகும். ஒருவேளை தமிழக மக்கள் குடும்பத்தோடு காரில் செல்ல வேண்டும் என்பதற்காக ஜெயலலிதா பேருந்துக் கட்டணத்தைக் கூட்டியிருப்பாரோ?

தனியார் போக்குவரத்து முதலாளிகளை கொழுக்கச் செய்யவே ஜெயலலிதா இந்த கட்டண உயர்வை அதிரடியாக அறிவித்து உள்ளார். பால் விலை உயர்வும் கூட தனியார் பால் நிறுவனங்களுக் காகவே. ஆவின் பாலைக் காட்டிலும் இன்று ஆரோக்கியா, கோமாதா, ஜெயம் என ஊருக்கு ஊர் பல பெயர்களில் தனியார் பால் நிறுவனங்கள் பல்கிப் பெருகியுள்ளன. விவசாயிகளுக்காகவே இந்த பால் விலை உயர்வு என்று சொல்லும் ஜெயலலிதா கொள் முதல் விலையை லிட்டருக்கு 2 ரூபாய்தான் கூட்டி யுள்ளார். ஆனால், விற்பனை விலை 4 ரூபாய் கூட்டி யுள்ளார். இதில் தனியார் நிறுவனங்கள் தங்கள் இஷ்டம் போல் விலையைக் கூட்டி விற்பது தனிக் கதை.

தமிழகத்தை முன்மாதிரி மாநிலமாக மாற்றப் போகிறேன், மாற்றம் தந்த மக்களுக்கு ஏற்றம் தருவேன் என்று சொன்னவர் இன்று மாற்றம் தந்த மக்களுக்கு மரணக் குழி தோண்டிக் கொண்டிருக் கிறார். வாக்களித்த மக்கள் வேடிக்கை பார்த்துக் கொண்டிருக்க மாட்டார்கள். வாசல் தாண்டி வீதிக்கு வந்து போராடும் காலம் வெகுதொலைவில் இல்லை. ஏமாற்றுபவர்களை மாற்றுவார்கள் மக்கள்.

கூடங்குளம்
மக்கள் எதிர்க்கிறார்கள். கலாம் ஆதரிக்கிறார்.
கவிதா கிருஷ்ணன்

கடந்த சில மாதங்களாக நடந்துகொண்டிருக்கிற கூடங்குளம் போராட்டம் பெற்ற மிக அதிகமான செயல்வேகமும், ஆதரவும் ஃபுகுஷிமா விபத்தை தொடர்ந்து இந்தியாவிலும, உலக அளவிலும் மக்களி டையே ஏற்பட்டுள்ள விழிப்புணர்வை, கேள்வி எழுப்பும் தன்மையை பிரதிபலிக்கிறது. இந்தப் போராட்டம் வெற்றி பெற்றால் அது கூடங்குளம் அணு உலை நிறுவுவதை தடுப்பதுடன், அய்முகூ அரசாங்கத் தின் இந்திய - அமெரிக்க அணுஒப்பந்தத்தை ஒட்டி திட்டமிடப்பட்டுள்ள அணு விரிவாக்கத் திட்டம் அனைத்துக்கும் சவாலாக இருக்கும் என்பதை அய்முகூ அரசு நன்கு அறியும்.

தமிழக கடற்கரை மாவட்டங்களான (துôத்துக்குடி, திருநெல்வேலி மற்றும் கன்னியாகுமரி) கிராம மக்க ளின்  காலவரையற்ற உண்ணாவிரதப் போராட்டத்தால் முதலமைச்சர் ஜெயலலிதா அணு உலையில் இருந்து தன்னைத் தள்ளி நிறுத்தி வைத்துக் கொள்ள வேண்டிய நிர்ப்பந்தம் உருவானது. தேசிய ஜனநாயகக் கூட்டணி, மத்தியில் ஆட்சியில் இருந்தபோது ஜெய லலிதா இந்தத் திட்டத்தை ஆதரித்தார். இப்போது அப்படிப்பட்ட ஆதரவு தனக்கு பெரிய அரசியல் இழப்பை உருவாக்கும் என்பதை உணர்ந்ததால், மத்திய அய்முகூ அரசாங்கம் தனியாகவே அரசியல் சுமையை ஏற்கட்டும் என்று விட்டுவிட்டார்.

அக்டோபரில் அணு உலை துவங்குவது கிராம மக்களால் தடுக்கப்பட்டுவிட்ட நிலையில், எதிர்ப்பாளர் கள் எழுப்பிய பாதுகாப்பு சம்பந்தமான அய்யப்பாடு களை கவனிப்பதற்காக அய்முகூ அரசு வல்லுனர் குழு ஒன்றை அமைத்தது, ஆனால், உள்ளூர் கிராம மக்கள் எழுப்பிய எந்தவொரு காத்திரமான பிரச்ச னைக்கும் குழு பதிலளிக்க தவறிவிட்டதால், இந்த நடவடிக்கை ஒரு வெற்று சமரச ஏற்பாடாகவே தோன் றுகிறது. அறிவியல் வல்லுனர்களின் உத்தரவாதங்க ளுக்கு சிறிதளவு தாக்கமே ஏற்பட்ட நிலையில், இந்திய அணுமின்சார கழகத்தின் தலைவர் எஸ்.கே.ஜெயின் போராட்டக்காரர்களுக்கு வெளிநாட்டு/கிறிஸ்தவ அமைப்புகள் பின்புலமாக உள்ளன என்ற முட்டாள்தன மான வகுப்புவாத குற்றச்சாட்டை சுமத்தினார். ஆயி னும், கிறிஸ்தவர்களிடமிருந்து இந்து கிராமத்தினரை மதவாத அடிப்படையில் பிரிக்க எடுக்கப்பட்ட குரூர முயற்சிகள் மொத்தமாக தோல்வியடைந்தன.

இயக்கத்துக்கு கெடுமதிப்பு உருவாக்கவும், தமிழ கம் முழுவதும் அன்றி இந்தியாவின் பிற பகுதிகளிலும் இயக்கம் செலுத்துகிற பரந்த செல்வாக்கு மற்றும் ஆத ரவை அரித்துப் போக வைக்கவும், இந்திய அணுமின் நிறுவனத்தில் தொழில்நுட்ப வல்லுனர் என்ற பிம்பம் உடைய முன்னாள் ஜனாதிபதி எ.பி.ஜே.அப்துல் கலாமை அய்முகூ அரசாங்கமும், அணுசக்தித் துறை யும் பயன்படுத்த கையறு நிலையில் முயற்சி எடுத்தன. 2008லும் கூட இந்திய - அமெரிக்க அணு ஒப்பந்தத் திற்கு ஓரளவு நம்பகத்தன்மை கொடுக்கும் முயற்சி யாக அய்முகூ அரசாங்கம் கலாமை களம் இறக்கியது.

கலாமின் களம் என்பது ‘அறிவியல், தொழில் நுட்பம், வளர்ச்சி என்ற மேலோட்டமான வாய்வீச்சு என்பதோடு முக்கியமாக தேசியவாத - ஆதிக்கவாத நிலைப்பாட்டில் இருந்து உணர்ச்சிகரமான வேண்டு கோள் என்பதாக இருந்தது. நன்கு அறியப்பட்ட புனிதமான லட்சியமான ‘வளர்ச்சி என்ற முகாந் திரத்தில் அவர் எதிர்ப்பாளர்களின் பாதுகாப்பு பற்றிய அய்யப்பாடுகளை உதாசீனப்படுத்தினார். ‘பயம் வளர்ச்சியை கொல்லும் நோய் என்று குறிப்பிட்ட அவர், ஜப்பான் ஃபுகுஷிமா டைய்சி ஆலை சுனாமி இந்தியாவின் எதிர்காலத்தை அழிக்க நாம் அனுமதிக்க போகிறோமா என்று கேட்டார்.

ஃபுகுஷிமா பேரழிவு சம்பவத்திற்கு உரிய முக்கி யத்துவம் கொடுக்காததன் மூலம் அவர் பொதுமக்க ளின் புத்திக் கூர்மையை கேவலப்படுத்தினார். வரலாற் றின் மிகப் பெரிய விபத்தை, பேரழிவு ஏற்படுத்தத் தக்க நிகழ்வை கட்டுப்படுத்திய சம்பவம்தான் ஃபுகுஷிமா என்று குறிப்பிடுகிறார். ஓர் உயிர் இழப்பு கூட ஏற்படவில்லை என்பதே அவரது முகாந்திரம். ஃபுகுஷிமாவின் முக்கியத்துவத்தை அவர் வேண்டு மென்றே மட்டுப்படுத்துகிறார். அணுஉலைகள் பாதுகாப்பானவை என்ற உலக முழுவதிலுமுள்ள மக்களின் நம்பிக்கையை ஃபுகுஷிமா அசைத்து விட்டது. கலாம் ஃபுகுஷிமா அணுஉலையில் இருப்பது காலம் கடந்த தொழில்நுட்பம் என்று சொல்ல முயற்சிக் கிறார். ஆனால் ஃபுகுஷிமா அணுஉலை நிலநடுக்கம், சுனாமி போன்றவற்றை எதிர்கொண்டு தாக்குப்பிடிக் கும் வல்லமை கொண்டவை என்று அந்த நாட்டு கலாம்களால் ஜப்பான் மக்களுக்கு பல முறை உத்தர வாதம் அளிக்கப்பட்டிருந்தது என்பது அறிந்த செய்தி. அணு      உலைகளில் ஒன்றை சுனாமி தாக்கியபோது அதன் பாதுகாப்பு மற்றும் குளிரூட்டும் பொறியமைவு உடைந்துபோய் உருகிப் போவது தவிர்க்க முடியாததாக ஆனது. கையறு நிலையில் ஜப்பானிய வல்லுனர்கள் பெருமளவு கடல்நீரைப் பயன்படுத்தி அணுஉலையை குளிரூட்ட முயற்சித்தார்கள்.

மாதங்கள் கழிந்தும், கசிவு தொடர்கிறது. இன்னும் படுமோசமானவை வெளிவர வேண்டிய சூழலில் ஃபுகுஷிமா அபாயத்தில் இருந்து வெளிவந்துவிட்டது என்று சொல்வது முட்டாள்தனமானது. மாசுபடிந்த குளிரூட்டும் தண்ணீரையும், கதிரியக்க கழிவையும் பாதுகாப்பாக அப்புறப்படுத்துவது என்பது இன்னும் தீராத பிரச்சினையாகவே உள்ளது. உலையின் எரிபொருள் பூமிக்கடியில் உட்புகுந்துள்ளதா என்பது இன்னும் அறியப்படவில்லை. பாதிக்கப்பட்ட மக்கள் இன்னும் வீடு வந்துசேரவில்லை.

ஹிரோஷிமா - நாகசாகி குண்டுவீச்சைக்கூட கலாம் குறைத்து மதிப்பிடுகிறார். அணுப்பேரழிவின் விளைவுகள் ஒரு தலைமுறையுடன் நின்றுவிடும் என்ற, குண்டுவீச்சுக்கு காரணமான அமெரிக்கா ஏற் பாடு செய்த ஆராய்ச்சிச் சான்றே அறிவியல்பூர்வமானது, பாரபட்சமற்றது என நம்மை ஏற்றுக்கொள்ள சொல்கிறார்.

ஃபுகுஷிமா படிப்பினையின் பின்னணியில், ஜெர்மனி, பெல்ஜியம் போன்ற நாடுகள் கட்டம் கட்டமாக அணுசக்தியைக் குறைப்பது என்பதை அறிவிக்க வேண்டியதாயிற்று. மிகப் பெரிய மனித துயரத்துக்கான உள்ளாற்றல், வெளிப்படையாக இல்லாமல் உட்பொதிந்திருக்கும் பெரும் செலவினங் கள் (ஏன்ஞ்ங் ஏண்க்க்ங்ய் இர்ள்ற்) என்றப் பின்னணியில் உலகம் முழுவதும் உள்ள நாடுகள் அணுசக்திக்கு எதிரான வளர்ந்துவரும் கருத்துக்களுக்கு தலைவணங்க வேண்டிதாய் உள்ளது. இந்தியர்கள் ஃபுகுஷிமா படிப்பினைகளை புறந்தள்ள வேண்டும் என்று கலாம் சொல்வதன் மூலம் அவர் தனது நம்பகத்தன்மையை அவரே குறைத்துக் கொள்கிறார்.

அணு நிறுவனங்களாலும், கைதியாக உள்ள ஊட கங்களாலும் ‘அறிவியல் மற்றும் தெளிந்த அறிவின் குரல் என்று சித்தரிக்கப்படுகிற கலாம், எதிர்த்துப் போராடுகிற கிராமத்தினரை பகுத்தறிவுக்குப் புறம் பான அச்சத்தினால் ஆளப்பட்ட ‘விவரமில்லாதவர் கள், தவறுதலாக வழிகாட்டப்படுபவர்கள் என்று முத்திரை குத்துகிறார். அணு உலைகளை வரலாற்று நினைவுச் சின்னங்களோடு ஒப்பிட்டும், அணு பேரழி வுகளை அணை உடைவுகளோடு ஒப்பிட்டும் அணு பேரழிவுகளை சிறுமைப்படுத்தி ‘தமிழர் பெருமிதம் என்பதை கலாம் கையாளும்போது, யார் விவரமில்லா தவர் என்று வியப்பேற்படுகிறது. ஆச்சரியப்படத்தக்க விதத்தில், ‘வெளிநாட்டு கை என்ற பூதத்தைக் கிளப்பி ‘பூகோள - அரசியல் மற்றும் சந்தை சக்திகள் போராட்டத்திற்குப் பின் உள்ளதாக சந்தேகிப்பதாக சொல்கிறார். கூடங்குளத்தில் யார் கண்ணுக்கும் தெரி கிற ‘வெளிநாட்டு மற்றும் ‘சந்தை சக்திகள் ரஷ்ய அணு தொழிற்சாலையின் பிரதிநிதிகள் மட்டுமே.

கடைசி ஆயுதமாக, உள்ளூர் வளர்ச்சிக்காக ரூ.200 கோடி என்ற முன்வைப்பை கலாம் வைத்திருக் கிறார். மருத்துவமனை, பள்ளிகள் மற்றும் கல்லுôரிகள், விவசாயம் மற்றும் மீன் பிடித் தொழிலின் வளர்ச்சி ஆகியவை உள்ளூர் மக்களின் உரிமையாக கருதப்பட வேண்டும். வாழ்வையும், வாழ்வாதாரத்தையும் அணுப் பேரழிவின் அபாயத்திற்கு ஆட்படுத்திக் கொள்வதன் பிரதிபலனாக, இத்தகையத் திட்டங்களை முன்வைப்பது என்பது அவலமான விசயமாகும்.

கூடங்குளம் எதிர்ப்பாளர்கள் ‘விவரமில்லாதவர் கள் என்பதற்கு அப்பால், ரஷ்ய அரசு நிறுவனத்தின் சமீபத்திய அறிக்கையில் ரஷ்ய அணு ஆலைகள், குறிப்பாக இயற்கை மற்றும் மனிதனால் ஏற்படக்கூடிய விபத்துக்களுக்கு ஆட்படக் கூடியவை என்று ஒப்புக் கொள்ளப்பட்டிருப்பதை அறிவார்கள். சுனாமி தாக் காத அளவுக்கு (கலாம் உத்தரவாதம் தருவதுபோல) அணுஉலையின் உயரத்தை அதிகரிப்பது நில நடுக்கத் தால் பாதிப்பு ஏற்படும் வாய்ப்பை அதிகப்படுத்தும் என்பதை அவர்கள் அறிவார்கள். சூதாட்டத்தில் வாய்ப்புக் கிடைத்தால் உண்டு என்பதைப் போல் ஃபுகுஷிமா உள்ளாற்றலின் விளிம்பில் தாங்கள் வாழ நிர்ப்பந்திக்கப்படுவதை அவர்கள் விரும்பவில்லை.  நம் நாட்டில் அதிகம் இருப்பு இருக்கும் தோரியம் மின்சாரத்திற்கான ஆற்றலுள்ள மூலப்பொருள் என்ற கலாம் யோசனையையும், தோரியத்தில் இருந்து உரு வாக்குவதாக காட்டப்படும், உத்தரவாதம் தரப்படும் அளவையும் எட்டுவதற்கான உரிய வழியை, சுதந்திர நாட்டின் அதிக நிதி ஒதுக்கீடு பெறும், பெருமை வாய்ந்த அணு ஆராய்ச்சி நிறுவனம் இன்னும் உருவாக்கவில்லை என்பதை அவர்கள் அறிவார்கள்.

கூடங்குளம் இயக்கம், அதற்கு எதிரான அரசாங் கத்தின்  பிரச்சாரத்தின் முன் நிலை குலையாமல் நிற்கி றது. கூடங்குளம் நோக்கிய தேசிய பயணம் வரும் வாரத்தில் திட்டமிடப்பட்டிருக்கிறது. நாடாளுமன்றத் தில் லஞ்சம் கொடுத்து, சந்தேகத்திற்குரிய முறையில் கொண்டு வரப்பட்ட இந்திய - அமெரிக்க அணு ஒப்பந்தம், அணு விரிவாக்க முயற்சிகளுக்கு வழி வகுத்து, அணுமின்சார கழகம் (என்பிசிஅய்எல்) 2032க்குள் 32 இறக்குமதி செய்யப்பட்ட அணு உலைகளை இந்தியா முழுவதும் நிறுவ திட்டமிட்டுள் ளது. அணு இழப்பீடு மசோதா, இழப்பீடு வழங்குவது மற்றும் விபத்து ஏற்படாமல் அந்தப் பகுதியை துப்பு றவு செய்வது ஆகியவற்றில் இருந்து அணு உலை வழங்குபவர்களை பாதுகாக்கிறது. ஆட்சியாளர்கள் உலக அணு ஆலைகளின் தயவிலும், அதையொட்டி மனித குலத்திற்கே உள்ள மிகப்பெரிய அபாயத்திலும் இந்திய மக்களை வைப்பதற்கு ஆனதெல்லாம் செய்யும்போது கூடங்குளம் மக்களின் இயக்கம் நம்பிக்கை ஒளிக்கீற்றை அளிக்கிறது.

தமிழில்: தேசிகன்(லிபரேசன், டிசம்பர் 2011 இதழில் இருந்து)

குளச்சல் கடற்கரை கிராமங்களில் காவல்துறை அராஜகம். மக்களின் எதிர்ப்பு.

குளச்சல் காவல்துறை கூடுதல் ஆய்வாளர் எல்லை மீறி செயல்பட்டு வருகிறார். 16.10.2011 அன்று ரோந்து பணியில் குளச்சல் காவல்துறை ஆய்வாளர் திரு.பிரபாகரன் மற்றும் டாடா சுமோ ஓட்டுனர் ஆகிய இருவ ரும் கடற்கரை கிராமங்களில் இளைஞர்கள், பெண்கள் என பலரையும் எவ்வித முகாந்திர மும் இன்றி லத்தியால் அடித்திருக்கின்றனர்.

பதட்டம், கலவரம் போன்ற எவ்வித அசம்பாவித பிரச்சனைகளும் இல்லாதபோது காவல்துறையின் இந்தக் காட்டுமிராண்டித் தனமான செயல்பாடு கண்டிக்கத்தக்கது. கடற்கரையில் காற்று வாங்குவது, கூடி நின்று தேநீர் குடிப்பது, பேசுவது போன்ற சிவில் உரிமைகள் எல்லாம் பறிக்கப்பட்டிருக்கின்றன. நோசன்ராஜன் என்ற இளைஞனை கூடுதல் ஆய்வாளர் கொலை வெறியுடன் தாக்கி சிறையிலடைத்துள்ளார். இன்னும் 6 பேர் தெரிந்த குற்றவாளிகள் என்றும் 15 பேர் கண் டால் தெரியும் குற்றவாளிகள் என்றும் முதல் தகவல் அறிக்கை பதிவு செய்யப்பட்டுள்ளது.

தொடர்ந்து கூடுதல் ஆய்வாளரின் மிரட் டல், விரட்டல், மக்களை அச்சப்படுத்தும் போக்கு தொடர்வதற்கு எதிராக ஊர் மக்கள் கன்னியாகுமரி மாவட்ட திமுக நாடாளுமன்ற உறுப்பினர் திரு.ஹெலன் டேவிட்சன், குளச்சல் சட்டமன்ற காங்கிரஸ் உறுப்பினர் திரு.பிரின்ஸ், குமரி மாவட்டத்திலுள்ள வனத்துறை அமைச் சர் திரு.பச்சைமால் ஆகியோரை சந்தித்து சட்டவிரோத நடவடிக்கைகளை விளக்கி கூறி உதவி கேட்டனர். அமைதி ஏற்படுத்தக் கோரினர்.

03.11.2011 அன்று கூடுதல் ஆய்வாளர் தான் விரும்பும் அனைவரையும் கைது செய்து சிறையில் அடைப்பேன் என சவால் விடுத்தார். இது தொடர்பாக ஏஅய்சிசிடியு மீன்பிடித் தொழிலாளர் சங்க மாவட்ட செயலாளர் தோழர் ஆன்றணி புரூஸ் தலைமையில் கடற்கரை ஊர் பிரமுகர்கள் ஆன்டணி, ஜான், பட்டம் மற்றும் ஆன்றோ லெனின் ஆகியோர் இகக(மாலெ) கட்சி அலுவலகம் வந்து கிராமத்தில் மக்களின் அச்சத்தைப் போக்க கட்சி உதவிட கோரினர்.

இந்தப் பின்னணியில் குளச்சல் கடற்கரை கிராமத்தில் ஊர் பங்குத் தந்தை திரு.ஸ்டீபன் தலைமையில் நடந்த கூட்டத்தில் கட்சியின் மாநிலச் செயலாளர் தோழர் பாலசுந்தரம் கலந்து கொண்டார். தோழர் அந்தோணிமுத்து, ஊர் செயலாளர் தர்மராஜ் உட்பட 50 பேர் கலந்துகொண்டனர். கூட்டத்தில் 03.11.2011 அன்று காலை 10 மணிக்கு காவல் நிலையத்தை முற்றுகையிடுவது எனவும், விசைப்படகுகள், கட்டுமரம், வல்லம் வேலை நிறுத்தம் செய்தி டவும், மாணவர்கள் பள்ளிக்கு செல்ல வேண் டாம் எனவும் முடிவு எடுக்கப்பட்டது.

அன்றைய தினமே தமிழக முதல்வரிலி ருந்து அனைத்து மாநில, மாவட்ட அதிகாரிக ளுக்கும் முடிவுகள் மின்னஞ்சல் செய்யப்பட் டன. பத்மநாபபுரம் கோட்டாட்சியர் திரு.மோகனசுந்தரம் அவர்களை சந்தித்து தஈஞ தலைமையிலான நீதி விசாரணை மூலம் சிவில் உரிமைகளை மீறும், சட்டவிரோதமாக செயல் படும் காவல்துறை அதிகாரிகள் மீது நடவ டிக்கை எடுத்திட கோரப்பட்டது. அவர் போராட்டம் வேண்டாம் நீதி விசாரணை நடத்துகிறேன் என உறுதியளித்தார். காவல் துறையினரின் உருட்டல், மிரட்டல், அச்சுறுத் தும் நடவடிக்கையையும் தஈஞ தடை செய்தார். மீண்டும் 08.11.2011 அன்று தஈஞ வை சந்தித்து நீதிவிசாரணை கோரிக்கை வைக்கப்பட்டது.

கூடுதல் ஆய்வாளர் தர்மராஜ், ஆய்வாளர் பிரபாகரன் ஆகியோர் மீது துறைரீதியான நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் என்ற கோரிக்கையுடன் மாவட்டம் முழுவதும் சுவரொட்டி இயக்கம் நடத்தப்பட்டது. மீண்டும் கிராம மக்களை நேரடியாக சந்தித்த பின் இகக(மாலெ) கட்சி போராட்டம் நடத்த திட்டமிட்டுள்ளது. தமிழக அரசும், மாவட்ட நிர்வாகமும் இது பற்றி மவுனம் சாதிப்பது இனி இயலாது.

காட்டுமன்னார்குடியில் காவல்துறை அத்துமீறல்

சமீபத்தில் நடந்து முடிந்த உள்ளாட்சித் தேர்தலை அடுத்து காட்டுமன்னார்குடி வட்டம் மேலராதாம்பூர் ஊராட்சி, ராஜசூடா மணியில் தேர்தலில் ஈடுபட்ட இருதரப் பாருக்கிடையில் சச்சரவு ஏற்பட்டுள்ளது. காட்டுமன்னார்குடி காவல் நிலையத்தினர் சச்சரவைக் கட்டுப்படுத்தி மோதல் ஏற்படாமல் தடுத்து நிறுத்தி ஊரில் அமைதியை ஏற்படுத் தியிருக்க வேண்டும். மாறாக வெற்றி பெற்ற வர்களுக்கு ஆதரவாக காவல்துறையினர் அத்து மீறி நடந்துள்ளனர். காவல் அதிகாரி வாக னத்திலே வந்த வன்முறைக் கும்பல் தங்களை எதிர்த்து தேர்தலில் வேலை பார்த்தவர்கள் மீது தாக்குதல் நடத்தியுள்ளனர். பெண்களை ஆபாச வார்த்தைகளால் திட்டியுள்ளனர். குற்ற வாளிகள் மீது கடும் நடவடிக்கை எடுத்திருக்க வேண்டிய காவல்துறை குற்றமற்றவர்களை கைது செய்து சிறையிலடைத்துள்ளது. பெண் களை கைது செய்து காவல் நிலையத்தில் வைத் துள்ளனர். பிரச்சனையில் சம்பந்தப்படாத பலர் மீது வழக்குப் போட்டுள்ளனர். இதனால்,  ஊருக்குள் மக்கள் கடும் அச்சத்திற்கும் பதட் டத்திற்கும் ஆளாகியுள்ளனர். இதை எதிர்த்துக் கேட்ட மாலெ கட்சி மாவட்டக் கமிட்டி உறுப்பினர் புலவேந்திரன் மீது வழக்குப் போட்டு தேடி வருகின்றனர். எதிராளிகள் அவரது வீட்டுக்கு தீ வைத்துள்ளனர்.

இந்த வன்முறை சம்பவங்கள் குறித்து புகார் கொடுக்க 08.11.2011 அன்று மாலெ கட்சி மாநிலக் கமிட்டி உறுப்பினரும் அனைத் திந்திய விவசாயத் தொழிலாளர் சங்கத்தின் மாநிலத் தலைவருமான டி.கே.எஸ். ஜனார்த் தனன், கட்சியின் மாநிலக் கமிட்டி உறுப்பின ரும் கடலூர் மாவட்டச் செயலாளருமான சி.அம்மையப்பன், கட்சியின் மாவட்டக்குழு உறுப்பினரும் அகில இந்திய மாணவர் கழக மாநிலத் துணைத் தலைவருமான ராஜசங்கர் ஆகியோர் காட்டுமன்னார்குடி காவல்நிலைய ஆய்வாளரை சந்திக்க சென்றுள்ளனர். அப் போது காவல்நிலைய வளாகத்தில் மேல ராதாம்பூர் ஊராட்சித் தலைவர் நேரு, அவரது அண்ணன் மேகேந்திரன் தலைமையில் சுமார் 50 பேர் கொண்ட வன்முறைக் கும்பல் அவர் களை தடுத்து நிறுத்தி அவதூறாகப் பேசி தாக்க முயன்றுள்ளார்.

அவர்களை சமாளித்து காவல்நிலைய ஆய் வாளர் இடத்தில் மனு கொடுக்கச் சென்றுள் ளனர். அங்கேயும் உள்ளே நுழைந்த வன் முறைக் கும்பல் தொடர்ந்து மாலெ கட்சி தலைவர்களை தரக்குறைவாகப் பேசி மீண்டும் தாக்க முற்பட்டதோடு வெளியே செல்லுமாறு துரத்தியுள்ளனர். காட்டுமன்னார்குடி ஆய்வா ளர் அலுவலகத்திற்குள் ஆய்வாளரது முன்னி லையிலேயே நடந்துள்ள இத்தகைய அதிர்ச் சிக்குரிய சம்பவங்களைப் பார்த்துக் கொண்டு அமைதியாக இருந்துள்ளார். அலுவலகத்திற் குள் அத்துமீறி நுழைந்து மாலெ கட்சித் தலை வர்களிடம் தகராறு செய்து வெளியேற்றிய வன்முறைக் கும்பலை ஆய்வாளர் அப்புறப்ப டுத்தியிருக்க வேண்டும். வன்முறைக் கும்பல் மீது வழக்குப் போடுவது உள்ளிட்ட கடும் நடவடிக்கை எடுத்திருக்க வேண்டும். மாலெ கட்சித் தலைவர்களுக்கு பாதுகாப்பு அளித்து அவர்களது புகாரைப் பெற்று உரிய மேல் நடவடிக்கை எடுத்திருக்க வேண்டும். இவை எதையும் செய்யத் தவறியுள்ளார்.

சட்டம் ஒழுங்கை பாதுகாக்க வேண்டிய அதிகாரம் பெற்றுள்ள காவல் நிலையத்திற்குள் வன்முறைக் கும்பல் அத்து மீறி நுழைந்து அராஜகம் செய்திருப்பது காவல் நிலையத்தை யார் நடத்துகிறார்கள் என்ற கேள்வியை எழுப்பியுள்ளது. மேலும் அரசியல் கட்சித் தலைவர்கள் அச்சுறுத்தப்படுவார்கள், அவர் கள் பணி செய்யப்படாமல் தடுக்கப்படுவார்கள் என்பது ஆபத்தான விசயங்களாகும்.

எனவே உடனடியாக அரசு தலையிட்டு, காவல்நிலையத்திற்குள் நுழைந்து வன்முறை யில் ஈடுபட்டவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுப்பதோடு காவல்நிலைய அதிகாரத்தை வன்முறைக் கும்பல் கைகளில் விட்டு விட்டு வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்த காவல் துறை ஆய்வாளர் திரு.சந்திரசேகர் மற்றும் உதவி ஆய்வாளர் ரங்கநாதன் மீதும் கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும். கேள்விக்குள் ளாகியுள்ள சட்டம் ஒழுங்கை நிலைநாட்டுவ தோடு மேலராதாம்பூர் ஊராட்சி ராஜசூடா மணி பகுதி மக்களுக்கு பாதுகாப்பையும் அமைதியையும் ஏற்படுத்த வேண்டும்.

தமிழகத்தில் அதிகரித்து வருகிற காவல் துறை அத்துமீறல்கள் தடுத்து நிறுத்தப்படா விடில் மக்கள் போராட்டங்களுக்கு அரசு பதில் சொல்ல வேண்டியிருக்கும்.

சில மாணவர்கள் போராட்டம்
கல்வி தனியார்மயத்துக்கு முடிவு கட்டுவோம்!

2011 மே மாதம் முதல் சிலி மாணவர்கள் சிலி வீதிகளில் போராட்டங்களில் இறங்கியுள் ளார்கள். அமெரிக்க அடிவருடி அரசாங்கமான பினோஷேயின் சர்வாதிகார ஆட்சியில் (1973 - 1990) பள்ளிக் கல்வி முதல் பல்கலைக் கல்வி வரை தனியார்மயமாக்கப்பட்டது. இன்னும் அது அப்படியே தொடர்வதற்கு எதிராக அவர்கள் போராடுகிறார்கள்.

பள்ளிக் கல்விக்கான அரசு ஒதுக்கீடு உயர்த்தப்பட வேண்டும் என்றும் வகுப்பறைக ளின் தரம் உயர்த்தப்பட வேண்டும் என்றும் முழங்கி சிலி மாணவர்களின் பெருங்கூட்ட மைப்பு இந்த இயக்கத்தை துவங்கியது. இயக்கம் முன்செல்லச் செல்ல, இப்போது, லாபம் சம்பாதிப்பதற்கான கல்விக்கு முடிவு கட்ட வேண்டும் என்ற முழக்கம் வலுப்பெற் றுள்ளது. மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட கம்யூனிஸ்ட் அலெண்டே அரசாங்கம் சிஅய்ஏ ஆதரவுடன் வீழ்த்தப்பட்ட பிறகு பினோஷே ஆட்சி, நாட்டின் துவக்கக் கல்வி மற்றும் உயர்நிலைக் கல்வியை முனிசிபல் நிர்வாகத் திடம் ஒப்படைத்தது. இப்போது நடந்து கொண்டிருக்கும் மாணவர் இயக்கம் கல்விப் பொறுப்பை மத்திய அரசாங்கமே மீண்டும் ஏற்க வேண்டும் என்று கோருகிறது.

நாட்டின் 80% மக்கள் மாணவர் இயக் கத்துக்கு ஆதரவாக இருக்கிறார்கள் என்று சொல்லப்படுகிறது. போராட்டத்தின் நிர்ப்பந் தத்தால் நாட்டின் கல்வி அமைச்சர் பதவி விலகி யுள்ளார். சிலி அதிபர் செபாஸ்டின்  பினேரா வின் வெகுமக்கள் ஆதரவு மதிப்பில் வீழ்ச்சி ஏற்பட்டுள்ளது.

சிலியின் பல பல்கலை கழகங்கள் தனி யார் கைகளில் உள்ளன. இதுவும் பினோஷே அரசாங்கத்தின் வழிமரபுதான். கல்வி அமைச்சர் ஜோகுன் லவின் உட்பட பினேரா ஆட்சியின் இரண்டு மத்திய அமைச்சர்கள் சேர்ந்து உரு வாக்கிய யூனிவர்சிடாட் டெல் டெசா ரோல்லோ பல்கலைகழகம் ஓர் உதாரணம்.

மாணவர் இயக்கம் ஆசிரியர்கள், தொழிற் சங்கங்கள் மற்றும் பரந்த மக்களின் ஆதரவைப் பெற்றுள்ளது. சிலியின் நவதாராளவாதக் கொள்கைகள் மற்றும் வலதுசாரி அரசியலில் இருந்து இடதுசாரி நோக்கிய பாதையை இந்தப் போராட்டம் காட்டுகிறது என்று அவர் கள் பார்க்கிறார்கள். மாணவர் பேரணிகளில் 1 லட்சம் பேர் கூட கலந்துகொள்கிறார்கள். அவர்களுடைய போராட்டங்கள் கற்பனை வளமிக்கதாக உள்ளன. கல்வியில்லையென் றால் மாணவர்கள் இறந்ததற்கு சமம் என்பதைச் சொல்லும் விதம் ஒட்டுமொத்த மாக தற்கொலை செய்து கொள்வது, அனை வரும் முத்தமிட்டுக் கொள்வது, அனைவரும் சேர்ந்து நடனமாடுவது, 1 லட்சம் பேருக்கும் மேல் கலந்துகொண்ட குடும்பக் கலை நிகழ்ச்சி, சிலியின் மிகப்பெரிய தொழிற்சங்கமான சென்ட்ரல் யூனிடேரியா டி ட்ரபா ஜாடோர்ஸ் ஆதரவுடன் ஆகஸ்ட் 24, 25 தேதிகளில் இரண்டு நாட்கள் பொது வேலை நிறுத்தம் என பல்வேறு வடிவங்களிலான போராட்டங் களை அவர்கள் நடத்தினார்கள்.

வேலை நிறுத்தம் நடந்த இரண்டு நாட் களில் சீருடை அணிந்த காவலர்களான கராபி நிரோஸ் 1,400 பேரை கைது செய்தனர்.  மனு வேல் குடீரெஸ் என்ற 16 வயது மாணவர் காவல்துறை துப்பாக்கிக் குண்டுக்கு பலியா னார். காவல்துறை இந்தப் படுகொலையை மறுக்கப் பார்த்தது. ஆனால், போராட்டங்கள் வலுத்ததால், நாட்டின் காவல்துறையின் உயரதிகாரி ஜெனரல் ஈக்வர்டோ கார்டன் பதவி நீக்கம் செய்யப்பட்டார். அவருடன் யூனிட் மட்டத்தில் பல காவல்துறை அதிகாரி களும் பணி நீக்கம் செய்யப்பட்டனர். இந்தப் படுகொலைக்குப் பின்னால் ஏற்பட்ட அரசியல் நிகழ்வுகளால் அதிபர் போராடிக் கொண் டிருந்த மாணவர்களுடன் பேச வேண்டிய நிர்ப்பந்தத்துக்கு ஆளானார்.

2006லும் சிலியின் மேல்நிலைப் பள்ளி மாணவர்கள் பென்குவின் புரட்சி என்று அழைக்கப்பட்ட ஆக்கிரமிப்புகளில், வேலை நிறுத்தங்களில் ஈடுபட்டார்கள். பல்கலை கழக நுழைவுத் தேர்வுகள் ஜனநாயகமயமாக்கப்பட வேண்டும் என்றும் பிற மாணவர் ஆதரவு கொள்கை மாற்றங்களுக்காகவும் கோரிக்கை கள் எழுப்பினார்கள். அந்த மேல்நிலைப் பள்ளி மாணவர்களில் பலர்தான், இந்த ஆண்டு நடக்கிற இயக்கத்தின் தலை வர்களாக உள்ள பல்கலை கழக மாணவர்கள் என்று சொல்லப்படுகிறது.

அதிபர் பினேரா மக்களை சமாதானப்படுத்தப் பார்த் தார். கல்வி, மருத்துவம் மற்றும் பிற பல்வேறு சேவை கள் மக்களுக்கு இலவசமாக இருக்க வேண்டும் என்றுதான் நாம் அனைவரும் விரும்புகி றோம். ஆனால், வாழ்க்கையில் எதுவும் இலவசமாகக் கிடைப் பதில்லை. யாராவது அதற்கு பணம் செலுத்தியாக வேண் டும் என்றார். அவர் சொன் னதைக் கேட்க யாரும் தயா ராக இல்லை.

சிலி கம்யூனிஸ்ட் கட்சி யின் உறுப்பினரான, 23 வயது கெமிலா வலாஜோ இந்த இயக்கத்துக்கு தலைமை தாங்குகிறார். 2010ல் சிலி பல்கலை கழக மாணவர் கூட்டமைப்பின் தலைவராக அவர் தேர்ந்தெடுக்கப்பட் டார். இப்போது சிலி மாண வர் பெருங்கூட்டமைப்பின் முக்கியமான அதிகாரபூர்வ பேச்சாளராக உள்ளார். சிலி பல்கலை கழக மாணவர் கூட் டமைப்பின் தேர்தல்கள் வர வுள்ளன. வலாஜோவின் தலை மைக்கு அது சவால்மிக்கதாக இருக்கும்.

வெகுமக்கள் கற்பனை மற்றும் நாட்டின் அரசியல் ஆகியவற்றின் மீது பெரிய தாக்கம் செலுத்தியுள்ள சிலி மாணவர்கள் இயக்கம், தனி யார்மயமாக்கப்பட்ட, லாப நோக்கம் கொண்ட கல்வி என் கிற அதேபோன்ற பிரச்சனை களை எதிர்கொள்ளும் இந்திய மாணவர்களுக்கு உத்வேகம் அளிப்பதாக உள்ளது.

(லிபரேசன், டிசம்பர் 2011 இதழில் இருந்து)

முற்போக்கு பெண்கள் கழக பயிற்சி வகுப்பு

அகில இந்திய முற்போக்கு பெண்கள் கழக  சென்னை மாவட்ட பயிற்சி வகுப்பு 07.11.2011 நவம்பர் புரட்சி தினத்தன்று பெண்கள் கழக மாவட்டத் தலைவர் தோழர் தேவகி தலைமையில் நடைபெற்றது.

மாலெ கட்சி மாநிலக்குழு உறுப்பினர் தோழர் எ.எஸ்.குமார் ‘நமது புரட்சி, நமது கட்சி என்ற தலைப்பின் மீது பேசினார். நவம்பர் 7 அன்று லெனின் தலைமையில் புரட்சி நடந்து கம்யூனிஸ்ட் கட்சி ஆட்சியைப் பிடித்தபோது புரட்சியில் பல ஆயிரக்கணக்கான பெண்களும் பங்கு பெற்றனர் என்ற அவர் இன்று விலை உயர்வு, வரதட்சணைக் கொடுமை, பாலியல் தொல்லை, வேலைச் சுமை, பெண் குழந்தைகளை கருவிலேயே அழிப்பது போன்ற பல பிரச்சனைகளை பெண்கள் எதிர் கொள்கிறார்கள். இவற்றை எதிர்த்துப் போராட, பெண்களை அமைப்பாக் குவது, இன்றைய அவசியத் தேவை என வலியுறுத்தினார்.

பெண்கள் கழக மாநிலத் தலைவர் தோழர் தேன்மொழி பெண்கள் கழகத்தின் நோக்கம் பற்றி பேசினார். நீண்ட நாட்களாக செயல்பட்டு வரும் பெண்கள் கழகத்தின் வேலைகள் மாற்றியமைக்கப்பட வேண்டும் என்றும் காவல்துறை, மற்றும் உயர்மட்ட பதவிகளில். அதிகாரப் பதவி களில் பெண்கள் இருந்தாலும், ஆணாதிக்க கருத்துக்கள் பெண்களை அடக்கி, ஒடுக்குவது அதிகரித்து வருவதை எதிர்த்துப் போராட வேண்டும் என்றும் பெண்களின் அரசியல் அதிகாரத்தை தட்டிக் கழிப்பதை எதிர்த்து போராடுவதும் அவசியம் என்றும் வலியுறுத்தினார்.

பெண்கள் இயக்கம்: அடிப்படைக் கருத்தாக்கங்களும் நமது கடமைகளும்  தலைப்பு மீது ஏஅய்சிசிடியு மாநிலச் செயலாளர் தோழர் ஜவஹர் கருத்துக்கள் முன்வைத்தார். பெண்கள் அமைப்பு பலவித போராட்டங்கள் நடத்துகிறபோதும் இன்றைய அரசியல் மாற்றங்களுக்கு ஏற்ப அமைப்பை பலப்படுத்த வேண்டும், விரிவுபடுத்த வேண்டும் என்றார்.

வகுப்பில் கட்சி அரசியல் தலைமைக் குழு உறுப்பினர் தோழர் எஸ்.குமாரசாமி உரையாற்றினார்: ‘பெண் தொழிலாளர் மத்தியில் பீடி, விசைத்தறி தாண்டி படித்த பிரிவினர் மத்தியில் செல்ல கவனம் குவிக்க வேண்டும். பெண் மாணவர்களை பெண்கள் கழகத்தில் சேர்க்க முனைப்பான முயற்சி இருக்க வேண்டும். படித்த பிரிவினர் மத்தியில் இருந்து வருபவர்கள் புரட்சிகரமான கருத்துக்களை எடுத்துச் செல்பவர்களாக இருக்க வேண்டும். பெண்கள் கழகத்தை சுரண்டலுக்கு எதிரான ஆயுதமாகப் பயன்படுத்தும் திறன்கொண்டவர்கள் வேண்டும். சென்னையில் பகுதி மக்கள் மத்தியில் கட்டுமான பெண் தொழிலாளர் மத்தியில் வீட்டு வேலை செய்பவர்கள் மத்தியில் நமது வேலைகள் இருக்க வேண்டும். வீட்டு வேலை செய்யும் பெண்கள் மத்தியில் பெண்கள் கழகம் தனது தனித்த சுதந்திரமான அடையாளத்துடன் உறுப்பினர் சேர்ப்பது அவசியம். மாவோ சொல்லியுள்ளவாறு சிந்திக்க, போராட, வெற்றி பெற துணிய வேண்டும்.

பிப்ரவரி அகில இந்திய மாநாட்டுக்குள் 5000 பேர் உறுப்பினர் சேர்க்க வேண்டும் எனவும் பகுதிவாரியாக, 20 மய்யங்களில் உறுப்பி னர் சேர்ப்பு நடத்தப்பட வேண்டும் எனவும் முடிவுகள் எடுக்கப்பட்டன.

வகுப்பில் 30 பேர் கலந்துகொண்டனர்.

பால் விலை, பேருந்து கட்டணம் உயர்வை ரத்து செய்!
தேன்மொழி

 


மக்கள் தலையில் இடிபோல் இறங்கிய பால் விலை, பேருந்து கட்டண உயர்வுகளுக்கு எதிராக மாலெ கட்சியும் அதன் வெகுமக்கள் அமைப்புக்களும் மாநிலம் முழுவதும் எதிர்ப்புப் போராட்டங்கள் கட்டமைத்தன.


 சென்னை, 24.11.2011
 
சென்னை: 19.11.2011 அன்று டிஅய்டிசி, சிட்கோ தொழிற்பேட்டை வாயிலில், காஞ்சி மருத்துவமனை வாயிலில், ஆர்ப்பாட்டங்கள் நடைபெற்றன. 350 தொழிலாளர்கள் மூன்று நிகழ்ச்சிகளிலும் பங்கேற்றனர்.

20.11.2011 அன்று சென்னை மெமோரியல் அரங்கம் அருகில் அகில இந்திய மாணவர் கழ கம் மற்றும் புரட்சிகர இளைஞர் கழகங்களின் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. 150க்கும் அதிகமானவர்கள் கலந்து கொண்டனர். அகில இந்திய மாணவர் கழக மாநிலச் செயலாளர் தோழர் மலர்விழி தலைமையில் நடந்த ஆர்ப்பாட்டத்தில் அகில இந்திய மாணவர் கழக மாநில தலைவர் தோழர் கே.பாரதி, ஏஅய்சிசிடியு மாநில செயலாளர் தோழர் கே.பழனிவேல் கண்டன உரையாற்றினர்.

22.11.2011 அன்று மாலெ கட்சியின்  ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. 100க்கும் அதிகமானவர்கள் கலந்து கொண்டனர். மாநகர கமிட்டி உறுப்பினர் தோழர் மோகன் தலைமையில் நடந்த ஆர்ப்பாட்டத்தில் கட்சி மாநில கமிட்டி உறுப்பினர் தோழர் ஜி.ராதா கிருஷ்ணன். அகில இந்திய மாணவர் கழக மாநில தலைவர் தோழர் கே.பாரதி சிறப்புரை யாற்றினர். ஏஅய்சிசிடியு மாநில செயலாளர் தோழர் கே.பழனிவேல் கட்டுமான தொழிலா ளர் சங்க மாவட்ட தலைவர் தோழர் முனு சாமி, அகில இந்திய  முற்போக்கு பெண்கள் கழக மாவட்ட தலைவர் தோழர் கே.தேவகி ஆகியோர் கண்டன உரையாற்றினர்.

24.11.2011 அகில இந்திய முற்போக்கு பெண்கள் கழகம் திருமுல்லைவாயிலில் கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தியது. பெண்கள் கழக மாநிலச் செயலாளர் தோழர் ரேவதி தலைமை தாங்கினார். மாநிலத் தலைவர் தோழர் தேன்மொழி, மாவட்ட தலைவர் தோழர் தேவகி, மாநிலத் துணைத் தலைவர் தோழர் குப்பாபாய், லில்லி மாவட்ட துணைச் செயலாளர், விஜயகுமாரி மாவட்ட துணைத் தலைவர், ஏஅய்சிசிடியு மாவட்டத் தலைவர் தோழர் பழனிவேல், மாலெ கட்சி மாவட்ட செயலாளர் தோழர் எஸ்.சேகர், தமிழ்நாடு ஜனநாயக கட்டுமான தொழிலாளர் சங்க மாவட்ட செயலாளர் தோழர் முனுசாமி, உழைப்போர் உரிமை இயக்க மாவட்ட செயலாளர் தோழர் மோகன், மாலெ கட்சி மாவட்டக்குழு உறுப்பினர் தோழர் எ.சேகர், அகில இந்திய மாணவர் கழக மாநிலத் தலை வர் தோழர் பாரதி, புரட்சிகர இளைஞர் கழக மாவட்ட பொறுப்பாளர் தோழர் சுஜாதா ஆகியோர் கண்டன உரையாற்றினர்.

கோவை, 22.11.2011

கோவை: 18.11.2011 அன்று பிரிக்கால் பிளான்ட 1 மற்றும் 3ல் நடத்தப்பட்ட கண்டன ஆர்ப்பாட்டங்களில் 500க்கும் அதிகமானவர்கள் பங்கேற்றனர் .

22.11.2011 அன்று பெரிய நாயக்கன்பாளை யத்தில் மாலெ கட்சி மாவட்ட கமிட்டி உறுப் பினர் தோழர் குருசாமி தலைமையில் நடை பெற்ற ஆர்ப்பாட்டத்தில் மாநில கமிட்டி உறுப்பினர் தோழர் என்.கே நடராஜன், எல்எம்டபிள்யு தோழர் சந்திரன், பிரிக்கால் சங்க நிர்வாகிகள், ஏஅய்சிசிடியு மாநிலச் செயலாளர் தோழர் கிருஷ்ணமூர்த்தி புரட்சி கர இளைஞர் கழக மாவட்ட பொறுப்பாளர் தோழர் ராமச்சந்திரன் ஆகியோர் கண்டன உரையாற்றினார்கள்.

புதுக்கோட்டை: 21.11.2011 அன்று கந்தர்வ கோட்டையில்  நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் கட்சி மாநிலக்குழு உறுப்பினர் தோழர் ஆசைத்தம்பி கண்டன உரையாற்றினார்.

30.11.2011 அன்று கரம்பக்குடியில் சிறுவர்த் தகர்களை அழிக்கும் மத்திய அரசின் முடிவை கண்டித்து நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் கட்சி மாநிலக்குழு உறுப்பினர் தோழர் ஆசைத்தம்பி வர்த்தகர் சங்க பிரதிநிதிகள் உரையாற்றினர்.

நெல்லை: 23.11.2011 அன்று திருநெல்வேலி யில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் கட்சி மாவட்ட செயலாளர் தோழர் சங்கரபாண்டி யன், ஏஅய்சிசிடியு மாநில செயலாளர் தோழர் ரமேஷ், கட்சி மாவட்ட கமிட்டி உறுப்பினர் கள் கணேசன், ரவிடேனியல் உரையாற்றினர். தோழர் கருப்பசாமி தலைமை தாங்கினார்.

ஈரோடு - நாமக்கல்: 19.11.2011 அன்று ஈரோடு மாவட்டம் பள்ளிபாளையத்தில்  கட்சி மாவட்ட கமிட்டி உறுப்பினர் தோழர் எம்.ஆறு முகம் தலைமையில் நடைபெற்ற ஆர்ப்பாட் டத்தில் கட்சி மாவட்ட செயலாளர் தோழர் கோவிந்தராஜ் மற்றும் விசைத்தறி மற்றும் கட்டுமான தொழிலாளர் சங்க நிர்வாகிகள் கண்டன உரையாற்றினர்.

23.11.2011 அன்று நாமக்கல் மாவட்டம் ஆவத்திபாளையத்தில் கட்சி மாவட்ட கமிட்டி உறுப்பினர் தோழர் ஜி.செல்வம் தலைமையில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் மாநில கமிட்டி உறுப்பினரும் மாவட்ட செயலாளருமான தோழர் கோவிந்தராஜ், விசைத்தறி சங்க தலைவர் தோழர் புகழேந்தி மற்றும் கட்டுமான தொழிலாளர் சங்கத் தலைவர் தோழர் கே.ஆர்.குமாரசாமி கண்டன உரையாற்றினர்.

கடலூர்: 23.11.2011 அன்று விருத்தாச்சலத்தில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் கட்சி மாநிலக் குழு உறுப்பினர் தோழர் அம்மையப்பன் புரட் சிகர இளைஞர் கழக மாநிலத் துணை தலைவர் தோழர் தனவேல், மாணவர் கழக மாநிலத் துணைத்தலைவர் தோழர் ராஜசங்கர் கண்டன உரையாற்றினர்.

கரூர், 25.11.2011

கரூர்: 25.11.2011 அன்று நடந்த ஆர்ப்பாட்டத்தில் கட்சி மாநிலக்குழு உறுப்பினர் தோழர் கே.ஜி.தேசிகன் ஏஅய்சிசிடியு மாநில செயற்குழு உறுப்பினர் கள் ராமச்சந்திரன், சந்திரசேகரன் உரையாற்றினர். புரட்சிகர இளைஞர் கழக மாவட்ட தலைவர் தோழர் கோபால் தலைமை தாங்கினார்.

குமரி: குளச்சலில் 3 இடங் களில் 26.11.2011 அன்று பிரச்சா ரம் மேற்கொள்ளப்பட்டது.

காஞ்சி: 26.11.2011 அன்று வண்டலூரில்  நடைபெற்ற கூட்டத்தில் கட்சி மாவட்ட பொறுப்பாளர் தோழர் சொ.இரணியப்பன், உள்ளூர் கமிட்டி உறுப்பினர்கள் ஏ.கோபால், பாலசுப்பிரமணியன், அகில இந்திய மாணவர் கழக தலைவர்கள் கோபாலகிருஷணன், பிரபா கரன், கலந்துகொண்டு உரையாற்றினார்கள்.

தஞ்சை: 24.11.2011 அன்று கும்பகோணத் தில்  வாயில் கருப்புத்துணி கட்டி நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் அகில இந்திய மாணவர் கழக  மாநில செயலாளர் தோழர் ராமேஷ்வர் பிரசாத் தலைமை தாங்கினார். கட்டுமான தொழிலாளர் சங்க மாநில செயலாளர் தோழர் ராஜன், அகில இந்திய மாணவர் கழக மாநில துணை தலைவர் ராஜசங்கர்  மாணவர் கழக தலைவர் சதீஷ்குமார் உரையாற்றினர்.

சேலம்: சேலத்தில் சுவரொட்டி இயக்கம் நடைபெற்றது.

இந்தப் போராட்டங்களில் கூடங்குளம் அணுஉலையை மூட வேண்டும் என்ற முழக் கங்கள் எழுப்பப்பட்டன.

தொகுப்பு: எஸ்.சேகர்

சிறுவர்த்தகத்தில் அந்நிய நேரடி முதலீடு வேண்டாம்!

நவம்பர் 29, மாலெ கட்சி மாநிலந்தழுவிய ஆர்ப்பாட்டம்

கோவை, 29.11.2011

கோவை: ஏஅய்சிசிடியு மாநில செயலாளர் தோழர் கிருஷ்ணமூர்த்தி தலைமையில் 300 பேருக்கும் மேல் கலந்துகொண்ட ஆர்ப்பாட் டத்தில் கட்சி அரசியல் தலைமைக் குழு உறுப்பினர் தோழர் எஸ்.குமாரசாமி, எல்எம் டிபிள்யு தோழர் சந்திரன் உரையாற்றினார்கள்.

சென்னை: 200க்கும் அதிகமானவர்கள் கலந்து கொண்டனர். கட்சி மாவட்ட கமிட்டி உறுப்பினர் தோழர் முனுசாமி தலைமையில் நடந்த போராட்டத்தில்  அகில இந்திய மாண வர் கழக மாநிலத் தலைவர் தோழர் கே.பாரதி சிறப்புரையாற்றினார். தமிழ்நாடு வணிகர் சங் கங்களின் பேரவை மாவட்ட துணை தலைவர் பி.வி கருணாகரன் மாலெ கட்சி மாவட்ட கமிட்டி உறுப்பினர்கள் தோழர்கள் பழனி வேல், என்.குமரேஷ், மோகன் ஆகியோர்  கண்டன உரையாற்றினார்கள்.

புதுக்கோட்டை 29.11.2011

புதுக்கோட்டை: கந்தர்வகோட்டையில்  நடைபெற்ற தர்ணா ஆர்ப்பாட்டத்தில் கட்சி மாநிலக்குழு  உறுப்பினர் தோழர் ஆசைத்தம்பி உரையாற்றினார். ஏஅய்சிசிடியு மாநிலச் செயலா ளர் தோழர் தேசிகன், அவிதொச தோழர்கள் வளத்தான், ராஜங்கம், கட்டுமான சங்க தலை வர் தோழர் முருகையன், வியாபாரிகள் சங்க மாவட்ட தலைவர்கள் பங்கேற்று பேசினர்.

நெல்லை: ஆயிரக்கணக்கான சிறு வியாபாரி களை சந்திக்கும் இயக்கம் நடந்தது. சுத்தமல்லி யில் நடைபயணமும், பேட்டையில், நெல்லை டவுனில் கண்டன ஆர்ப்பாட்டமும் நடை பெற்றன. கட்சி மாவட்ட செயலாளர் தோழர் டி.சங்கரபாண்டியன், ஏஅய்சிசிடியு தலைவர் கள் ரமேஷ், கணேசன், ரவிடேனியல் கலந்து கொண்டு உரையாற்றினார்கள்.

விழுப்புரம்: மாவட்ட கட்சி மாவட்ட கமிட்டி செயலாளர் தோழர் எம்.வெங்கடே சன் தலைமையில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத் தில் மாநிலக் குழு உறுப்பினர் தோழர் அம்மை யப்பன், புதுவை மாநில செயலாளர் தோழர் பாலசுப்பிரமணியன் கமிட்டி உறுப்பினர்கள் சங்கரன், மோதிலால், விழுப்புரம் மாவட்டக்குழு உறுப்பினர்கள் கண்டன உரையாற்றினார்கள்.

குமரி: கட்சி மாவட்ட செயலாளர் தோழர் எஸ்.எம்.அந்தோணிமுத்து தலைமையில் பரவலான பிரச்சார இயக்கம் நடத்தப்பட்டது. ஏஅய்சிசிடியு தலைவர்கள் தோழர்கள் மேரி ஸ்டெல்லா, சுசீலா கலந்துகொண்டனர்.

சேலம்: கட்டுமான தொழிலாளர் சங்க மாவட்ட தலைவர் தோழர் கே.நடராஜன் தலைமையில் நடந்த ஆர்ப்பாட்டத்தில் கட்சி மாநிலக்குழு உறுப்பினர் தோழர் அ.சந்திரமோ கன், கோஆப்டெக்ஸ் ஊழியர் சங்கத் தலைவர் தோழர் விஸ்வநாதன் நுகர்பொருள் வாணிபக் கழக சுமைதூக்குவோர் சங்க மாநிலப் பொதுச் செயலாளர் தோழர் கோவிந்தராஜ், கட்சி மாவட்ட செயலாளர் தோழர் மோகனசுந்தரம் உரையாற்றினர்.

தொகுப்பு: எஸ்.சேகர்

வேண்டாம் கூடங்குளம் அணுஉலை!

அகில இந்திய மாணவர் கழகம் பட்டினிப் போராட்டம்

26.11.2011 அன்று சென்னை யில் கூடங்குளம் அணு உலையை மூட வலியுறுத்தி அகில இந்திய மாணவர் கழகம் மற்றும் புரட்சி கர இளைஞர் கழகங்களின் பட்டினிப் போராட்டம் கொட் டும் மழையிலும்  நடைபெற்றது. 100க்கும் அதிகமானவர்கள் கலந்து கொண்டனர். இளைஞர் கழக மாவட்ட பொறுப்பாளர் தோழர் சுஜாதா, மற்றும் மாண வர் கழக திருவள்ளூர் மாவட்ட பொறுப்பாளர் தோழர் சீதா  தலைமையில் நடந்த போராட்டத்தில் அகில இந்திய மாணவர் கழக மாநில தலைவர் தோழர் கே.பாரதி பொதுச் செயலாளர் தோழர் வெங்கடாசலம் மாலெ கட்சி மாநிலக்குழு உறுப்பினர் கள் தோழர்கள் எ.எஸ்.குமார், எஸ்.சேகர், தேன்மொழி ஏஅய்சிசிடியு மாவட்ட நிர்வாகிகள் தோழர்கள் மோகன், ஜீவானந்தம், பசுபதி, புகழ்வேந்தன், முனுசாமி, ஜேம்ஸ் கண்டன உரையாற்றினர். ஜனநாயக வழக்கறிஞர் சங்கத்தின் செயலாளர் தோழர் விஜய், தோழர் தமிழ்செல்வி, புரட்சிகர இளைஞர் கழகத்தின் மாநில நிர்வாகிகள் கடலுரிலிருந்து தோழர் தனவேல், கோவையி லிருந்து தோழர் ராமசந்திரன், கரூரிலிருந்து தோழர் கோபால், முற்போக்கு பெண்கள் கழக மாவட்டத் தலைவர் தோழர் கே.தேவகி உரையாற்றினர்.

Search