COMMUNIST PARTY OF INDIA (MARXIST - LENINIST) - LIBERATION

COMMUNIST PARTY OF INDIA (MARXIST - LENINIST) - LIBERATION, TAMILNADU

Saturday, March 12, 2011

தீப்பொறி, 2011 மார்ச்

உள்ளே


தலையங்கம்

2011 மார்ச் 14 அறைகூவல்

மார்ச் 8: சர்வதேச பெண்கள் தினம். தொடருகிற கேள்விகள்

பிரிக்கால் தொழிலாளர் போராட்டம்: ஒரு பரிசீலனை

நரபலி. 21ஆம் நூற்றாண்டில் இந்தியா

தமிழ்நாட்டில் கட்சி கட்டுதலின் வழித்தடம்: ஒரு சுருக்கமான சித்திரம்

கந்தர்வகோட்டை சட்டமன்ற தொகுதி: மக்கள் கோரிக்கை சாசனம்தலையங்கம்


ஊழல், துரோக திமுக அணியை தோற்கடிப்போம்!


சந்தர்ப்பவாத அஇஅதிமுக அணியை புறக்கணிப்போம்!!


உழைக்கும் மக்கள் குரலை சட்டமன்றத்தில் ஓங்கி ஒலிக்கச் செய்வோம்!!!

விளையாட்டுக்களில் டம்மிகள் உண்டு. தேர்தலில் கூட வேட்பாளர்களில் டம்மிகள் உண்டு. ஆனால் டம்மி கைது? தமிழக மக்கள்தான் அதை அனுபவித்து உணரும் பெரும்பேறு பெற்றவர்கள். மத்திய புலனாய்வு துறை ராசாவை விசாரித்ததில் ஏதேதோ விஷயங்கள் வெளிச்சத்துக்கு வர, கனிமொழி கைது செய்யப்பட வேண்டும் என்று ஜெயலலிதா அறிக்கை விட்டுக் கொண்டிருந்த பின்னணியில் ‘கனிமொழி கைது’ என்று மொட்டையாக வந்த தலைப்புச் செய்திகள் தமிழ்நாட்டில் பரபரப்பை ஏற்படுத்தின. கனிமொழி கைதுதான், ஆனால் அது மீனவர் பிரச்சனையில் என்று தெரிந்து கொண்டபோது காற்று போன பலூன் போல உணர்ந்தார்கள் தமிழக மக்கள். இவ்வளவுதானா? மீனவர் பிரச்சனையில் கனிமொழி கைது கண்துடைப்பு நாடகம் என்பதை புரிந்துகொள்ள பட்டறிவே போதும் என்பதால் கனிமொழி கைது தேநீர் கடை பெஞ்சு விஷயமாகிப் போனது.

கருணாநிதி கதை, வசனம், இயக்கத்தில் கனிமொழி நடித்து வெளியான இந்தப் படம், தமிழக மீனவர் பிரச்சனையில் கருணாநிதிக்கும் கனிமொழிக்கும் திமுகவுக்கும் அக்கறையே இல்லை என்பதை மிகத் தெளிவாகக் காட்டியது. இலங்கையில் புலிகளுக்கு எதிரான ‘இறுதிப் போர்’ நடந்து கொண்டிருந்தபோது, நாடாளுமன்ற உறுப்பினர் பதவியில் இருந்து விலகும் கடிதத்தை தமிழக முதல்வரிடம் கொடுத்தவர் கனிமொழி.

கனிமொழியின் முதல் கைது, தமிழக மக்கள் பிரச்சனையில், அதுவும் மீனவர் பிரச்சனையில், அதுவும் செம்மொழி பேசும் மீனவர் பிரச்சனையில் என்று காட்டப் பார்த்தார் கருணாநிதி. முதலில் டம்மி கைது, அதன் பிறகு ராடியா விவகாரத்தில் கைதோ, வேறு ஏதோ நடக்கலாம். கைதின் பின்னால் இருந்த நோக்கம் இது மட்டுமே. ஆனால் தமிழக மக்கள் புரிந்து கொண்டார்கள். தான் ஒரு முக்கிய கூட்டாளியாக இருக்கும் ஆட்சிக்கு எதிராக ஒரு போராட்டம், அதில் கைது...? யாரை ஏமாற்ற...? தமிழக மக்கள் பிரச்சனை, மீனவர் பிரச்சனை, அரசியல் நடத்த அவ்வளவு எளிதாக பயன்படுத்தப்படுகிறதா...? இது கடலுக்குள் வாழ்வைத் தேடும் மீனவர்களை கேலி செய்வது அல்லவா....? 136 மீனவர்கள் கைது செய்யப்பட்டது கூட வேறு ஏதாவது ஏற்பாடா...? கேள்விகள் கேட்டார்கள்.

மீனவர் பிரச்சனையில் ஜெயலலிதாவும் தன் பங்குக்கு அரசியல் நடத்தினார். வேதாரண்யத்துக்கு ஓடோடிப் போய் ஒரு லட்ச ரூபாய் கொடுத்து கொல்லப்பட்ட மீனவர் ஜெயகுமார் குடும்பத்துடன் புகைப்படம் எடுத்துக்கொண்டார். சுஷ்மா ஸ்வராஜ் கூட டில்லியில் ஆர்ப்பாட்டம் நடத்தினார். கடந்த 30 ஆண்டுகளாக இலங்கை கடற்படையினரால் 300 மீனவர்கள் கொல்லப்பட்டுள்ளனர். 500 என்று கூட சொல்லப்படுகிறது. இவ்வளவு நாட்களாக எங்கிருந்தார் சுஷ்மா? என்ன செய்தார் ஜெயலலிதா? கச்சத்தீவு என்று கத்துகிறாரே. கச்சத்தீவு கிடைத்து விட்டால் தீர்ந்துவிடுமா தமிழக மீனவர் பிரச்சனை? கடலை நம்பி வாழும் வறிய மக்களை அந்த வாழ்வாதாரத்தில் இருந்து பிய்த்தெடுக்கும் இந்திய சட்டங்களும், அறிவிப்பாணைகளும் இன்னும் பேராபத்தை விளைவிக்குமே. அது பற்றி ஜெயலலிதாவுக்கு அக்கறை உள்ளதா? இது இந்தியக் கடல், இது இலங்கைக் கடல் என்று குறுக்கே கடலுக்குள் சுவரா எழுப்பியிருக்கிறார்கள்? ஜெயகுமார் படுகொலை பெருங் கொடுமை. அவர் கழுத்தை கயிற்றில் சுற்றி, பிறகு கயிற்றோடு அவரைச் சுற்றி, அவர் இறந்தது தெரிந்த பிறகு எறிந்து விட்டு போயிருக்கிறார்கள். இதற்கு 10 நாட்களுக்கு முன்புதான் புதுக்கோட்டையைச் சேர்ந்த வீரபாண்டியன் என்ற மீனவர் இலங்கை கடற்படையினரால் சுட்டுக் கொல்லப்பட்டார்.

உலகில் வேறெங்கும் ஒரு நாட்டு மீன வரை இன்னொரு நாட்டு கடற்படை சுட்டுக் கொல்லும் சம்பவங்கள் நடப்பதில்லை. இடம் தெரியாமல் வந்துவிடும் மீனவர்களை கடற்படைகள் சுடக் கூடாது என்று சர்வதேச ஒப்பந்தம் உள்ளது. அதில் இலங்கை மற்றும் இந்திய அரசாங்கங்கள் ஒப்பமிட்டுள்ளன.

வழக்கமாக சென்னையில் இருந்து கொண்டு டில்லிக்கு எழுதும் கருணாநிதி இந்த முறை நேராக டில்லி சென்றார். கூட்டணி பற்றிய விவாதம் பிரதானமானதாகவும் மீனவர் பிரச்சனை துணையானதாகவும் இருந்தது.

எஸ்.எம்.கிருஷ்ணா இந்தியாவின் வெளியுறவு அமைச்சர் என்பதை மறந்துவிட்டு, இலங்கை அரசுக்காக பேசினார். இலங்கை சொல்வதையும் நாம் கணக்கில் கொள்ள வேண்டும் என்றார். இரண்டு நாடுகளும் மார்ச் மாதத்தில் கூட்டு செயற்குழு அமைத்து அதில் பிரச்சனைகளை விவாதிக்கும் என்று இப்போது பிரச்சனையைத் தள்ளிப் போட்டுள்ளார்.

கருணாநிதி நாடகங்களுக்கு சற்று ஓய்வு கொடுத்துவிட்டு நிஜத்துக்கு வர வேண்டியிருந்தது. விலைவாசி போல் ஏறும் தேர்தல் காய்ச்சலுக்கு சிகிச்சை பார்க்க வேண்டியிருந்தது. முதலில் பாமக வாயை அடைத்தார். ‘நாங்களும் விடுதலை சிறுத்தைகளும் சேர்ந்தால் வட தமிழகத்தில் எங்களால் அற்புதங்களை நிகழ்த்த முடியும்’ என்றார் ராமதாஸ். அங்கு திமுகவுக்கு பலமில்லை என்பதையும் கருணாநிதிக்கு சொல்லாமல் சொன்னார்.

‘நாங்கள் விசுவாசமானவர்கள்’ என்று கெஞ்சிய பிறகு 10 இடங்கள் பெற்றுவிட்டார் திருமாவளவன். தமிழர் இறையாண்மை மாநாடு நடத்துபவர் பரளிபுதூர் பற்றி வாயே திறக்காத அளவுக்கு விசுவாசம்.

காங்கிரஸ்தான் கருணாநிதியின் இன்றைய தலைவலி. தொகுதிகள் பற்றி பேச வந்த காங்கிரஸ் குழு குறிப்புக்களுடன் வந்ததாம். 90 இடங்கள், துணைமுதல்வர் பதவி, சில அமைச்சர்கள் என்று பேரம் துவங்க, இல்லை என்று அழுத்தமாகச் சொல்லும் நிலையில் கருணாநிதி இல்லை. கனிமொழியின் தலைக்கு மேலே தொங்கும் கத்தியும், திமுகவின் ஊழல் கறைபடிந்த தோற்றமும், இந்த பேரத்தில், அவரை அவருக்கான இடத்தில் வைக்கின்றன.

தங்களை கேட்காமல் பாமக விஷயத்தை எப்படி முடிக்கலாம் என்று காங்கிரசார் கேட்க, அப்படி முடிக்கவில்லை என்றால் அவர் வேறு கூட்டணிக்குச் சென்று விடுவார் என்று திமுக தலைவர்கள் சொல்ல, அப்படியானால் எங்களுக்கு வேறு வழியில்லை என்று நினைத்தீர்களா என, சென்னை தமிழில் சொல்வதானால், எகிறியிருக்கிறார்கள் காங்கிரஸ்காரர்கள்.

தவறு செய்துவிடும் சிறுபிள்ளைகளை உன்னால் நான் கெட்டேன். என்னால் நீ கெட் டாய் என்று ஒருவர் காதை ஒருவர் பிடித்துக் கொண்டு உக்கி போடச் சொல்வார்கள் பெரியவர்கள். இப்போது திமுக, காங்கிரஸ் கட்சிகளின் நிலை அதுதான். திமுகவுக்கு காங்கிரசை விட்டால் வேறு வழியில்லை; காங்கிர சுக்கு திமுகவை விட்டால் வேறு வழியில்லை. இரண்டுமாகச் சேர்ந்து தோல்வியை தழுவாமல் இருக்க ஒன்றையொன்று தழுவிக்கொள்ள வேண்டியுள்ளது.

ஜெயலலிதா தன் பக்கம் காற்று அடிப்பதாக காட்டிக் கொண்டாலும், ஆட்சியில் பங்கு கேட்காமல் அணிக்கு விஜயகாந்த் வந்த பிறகுதான் ஓரளவு ஆசுவாசப்பட்டிருக்கிறார்.

அரசு ஊழியர் பற்றி அவருக்கு வந்திருக்கும் திடீர் அக்கறை எத்தனை நாட்கள் நீடிக்கும் என்பது யாவருக்கும் தெரியும். அவர்கள் வீட்டுக் கதவுகள் தட்டப்பட்டு அவர்கள் குடும்பத்தார் காவல்துறையினரால் துன்புறுத் தப்பட்ட அந்த இரவை அரசு ஊழியர் மட்டு மல்ல, தமிழக மக்கள் மறக்க மாட்டார்கள்.

இடதுசாரிகள் அம்மா தருவதை வாங்கிக் கொள்ள ஏங்கிக் கிடக்கிறார்கள். அஇஅதிமுகவின் மகளிர் அணி, இளைஞர் அணி, மீனவர் அணி, வழக்கறிஞர் அணி வரிசையில் ஒன்றாகி விட்ட மதிமுக அணியும் அப்படித்தான். கொஞ்சம் உண்ணாவிரதம், கொஞ்சம் ஆர்ப்பாட்டம் என்று வைகோவுக்கு காலம் போகும்.

பிப்ரவரி 18 அன்று கோவையில் மனிதக் கழிவு அகற்றும் பணியில் இரண்டு தொழிலாளர்கள் விஷவாயு தாக்கி மாண்டு போனார்கள். பிப்ரவரி 27 அன்று திருபெரும்புதூரில் தனியார் நிறுவனம் ஒன்றில் கிரேனில் இருந்து இரும்புக் கயிறு அறுந்து விழுந்து ஒரு பயிற்சியாளர் இறந்து போனார். ஜெயகுமார் பற்றி அக்கறை காட்டிய ஜெயலலிதா இவர்களைப் பற்றி ஏதும் பேசவில்லை. தொழிலாளர்கள் கொலையாகிப் போவதும் கருணாநிதி கண்டு கொள்ளாமல் இருப்பதும் புதிதல்ல.

இப்படி தொழிலாளர் பிணங்கள் மீது அரசியல் நடத்தும், இந்த இரண்டு அணிகளுக்குள்தான் தமிழக அரசியல் என்று சுருக்கப் பார்க்கின்றன முதலாளித்துவ ஊடகங்கள். இடதுசாரிகளின் தேர்தல் முன்னுரிமைகள் இந்தக் கருத்துக்கு வலுச்சேர்த்து விடுகின்றன. ஆட்சி மாற்றங்களுக்கு மட்டும் வாய்ப்புக்கள் தெரிகின்றனவே தவிர கொள்கை மாற்றங்களுக்கு வாய்ப்பின்றி போகிறது. உண்மையான எதிர்க்கட்சிப் பாத்திரம் மக்கள் போராட்டங்களுக்கே விடப்படுகிறது.

தமிழகத்தின் நகர்ப்புறங்களிலும் கிராமப்புறங்களிலும் உண்மையான எதிர்க்கட்சிப் பாத்திரம் ஆற்றுகிற மக்கள் போராட்டங்களை விடாப்பிடியாக முன்னெடுக்கிற இககமாலெ அம்பத்தூர், திருபெரும்புதூர், மாதவரம், விழுப்புரம், திருவிடைமருதூர், கந்தர்வ கோட்டை, மேட்டுபாளையம், குமாரபாளையம், சோழவந்தான், திருநெல்வேலி, குளச்சல் என தமிழகத்தின் 11 தொகுதிகளில் ஊழல், துரோக திமுக அணியை தோற்கடிப்போம், சந்தர்ப்பவாத அஇஅதிமுக அணியைப் புறக்கணிப்போம், உழைக்கும் மக்கள் குரலை சட்டமன்றத்தில் ஓங்கி ஒலிக்கச் செய்வோம் என்ற முழக்கத்துடன் தேர்தல் களம் காண்கிறது.

ஜெயலலிதா ஜெயித்தால் தமிழ்நாட்டை ஆண்டவனாலும் காப்பாற்ற முடியாது என்பது தமிழ்நாட்டின் பிரபலமான வசனங்களில் ஒன்று. இன்று கருணாநிதி ஜெயித்தால் தமிழ்நாட்டை ஆண்டவனாலும் காப்பாற்ற முடியாது என்று அது மாற்றிச் சொல்லப்படுகிறது. இவர்களில் யார் ஜெயித்தாலும் தமிழக மக்களை யாரும் காப்பாற்ற முடியாது என்பதுதான் உண்மை. இருவருமே மூலதன விசுவாசிகள். இருவருமே பெருந்தொழில் குழும நலன் காப்பவர்கள். இருவருமே ஊழல், ஒடுக்குமுறை அரசியலுக்குச் சொந்தமானவர்கள். இருவருமே முதலாளித்துவ வளர்ச்சிப் பாதையை பின்பற்றுபவர்கள். இருவருமே மறந்தும் கூட மக்கள் நலன்களை கருத்தில், கணக்கில் கொள்ளாதவர்கள்.

மீனவர்களோ, நகர்ப்புற, கிராமப்புற வறியவர்களோ, விவசாயத் தொழிலாளர்களோ, யாராயினும், தங்கள் வாழ்வுரிமைகளைப் பாதுகாக்க, இந்த இரண்டு அணிகளுக்கும் எதிராக தீவிரமான போராட்டங்களை நடத்த தயாராகிவிட்டனர். தமிழ்நாட்டின் நகர்ப்புற, நாட்டுப்புற வறிய மக்களின் அடிப்படை வாழ்வாதாரம் பற்றிய நிகழ்ச்சிநிரலை தமிழக அரசியலில் முன்னிறுத்தும் போராட்டங்களை முன்செலுத்த தன்னாலான அனைத்தையும் இகக மாலெ செய்கிறது.

தமிழக மீனவர்கள் மீது நடத்தப்படும் தாக்குதல்களைக் கண்டித்து பிப்ரவரி 21 அன்று கன்னியாகுமரி, சென்னை, புதுக்கோட்டை, நாகை மாவட்டங்களில் ஆர்ப்பாட்டங்கள் நடத்தியது. மக்கள் வளர்ச்சி, முன்னேற்றம், நல்வாழ்க்கை மீதான மக்கள் சாசனங்களுடன் கந்தர்வகோட்டை, மேட்டுபாளையம், அம்பத்தூர், திருநெல்வேலி தொகுதிகளில் மக்கள் சந்திப்பு பிரச்சாரத்தில் ஈடுபட்டுள்ளது. குமார பாளையத்தில் விசைத்தறி தொழிலாளர்களின் குறைந்தபட்ச கவுரமான வாழ்க்கையை உறுதிப்படுத்தும் கூலி உயர்வு போராட்டங்களில் அவர்களை எழ வைத்திருக்கிறது. குமரி யில் கட்டுமான, அமைப்புசாரா தொழிலாளர்களின் நலன் காக்கும் கோரிக்கைகள் மீது நூற்றுக்கணக்கான தொழிலாளர்களை அணி திரட்டி மாநாடு நடத்தியுள்ளது. சோழவந்தானில் நரபலிப் பிரச்சனையை வெளிச்சத்துக்கு கொண்டு வந்துள்ளது. திருவிடைமருதூரில் டெல்டாவை காப்போம், விவசாயத்தைக் காப்போம், விவசாய மக்களைக் காப்போம் என்ற முழக்கத்துடன் கருத்தரங்கம் நடத்தத் தயாராகிறது.

காங்கிரசுக்கு எத்தனை இடங்கள் என்று கூட இன்னும் முடிவாகாத நிலையில் தேர்தல் அறிவிப்பு வந்துவிட்டது. தமிழ்நாட்டில் இரு துருவ அரசியலுக்கு, கழகங்களின் ஆட்சிக்கு முடிவு கட்டி, மக்கள் சார்பு அரசியலை முன்னிறுத்த வேண்டிய மகத்தான கடமை தமிழக உழைக்கும் மக்களுக்கு காத்திருக்கிறது.2011 மார்ச் 14 அறைகூவல்

விலைஉயர்வுக்கு எதிராக ஊழலுக்கு எதிராக


ஊழல், ஒடுக்குமுறை, துரோக அய்முகூ ஆட்சிக்கு எதிராக


டில்லி நோக்கி, நாடாளுமன்றம் நோக்கி மக்கள் பேரணி


அய்முகூ அரசாங்கமே! விலைஉயர்வுக்கு, ஊழலுக்கு


நாட்டின் மீது, மக்கள் மீது நெருக்கடிச் சுமையை ஏற்றியதற்கு


பொறுப்பேற்றுக் கொள்! ஆட்சியை விட்டு வெளியேறு!

அரசின் பாதுகாப்பில் உள்ள உணவு அழுகிப் போகிற, 77% மக்கள் நாளொன்றுக்கு ரூ.20க்கும் குறைவான செலவில் வாழ்கிற, நாளும் உயரும் உணவுப் பொருட்கள் விலை இன்னும் இன்னும் கூடுதலான மக்களை பட்டினிக்கு சத்துணவின்மைக்கு தள்ளுகிற ஒரு நாட்டை உங்களால் கற்பனை செய்து பார்க்க முடிகிறதா?

நாட்டின் செல்வம் தொடர்ந்து நாட்டுக்கு வெளியே வடிந்துஓடி அந்நிய வங்கிகளில் குவிக்கப்படுவதை, ‘சர்வதேச ராஜீய உறவுகள்’ என்ற பெயரில் குற்றவாளிகள் மீது நடவ டிக்கை எடுக்க மறுக்கும் ஓர் அரசாங்கத்தை கொண்ட ஒரு நாட்டை உங்களால் கற்பனை செய்து பார்க்க முடிகிறதா?

பெருந்தொழில் நிறுவனங்களோடு அமைச்சர்களும் அதிகாரிகளும் ஒத்திசைந்து செயல்பட்டு, மக்கள் நலனுக்காக பயன்பட்டிருக்கக் கூடிய தேசிய கருவூலத்தின் மிகப்பெரிய நிதியை கொள்ளையடிக்கிற ஒரு நாட்டை, இந்தக் கொள்ளையை வறிய மக்களின் உணவுக்காக, எரிபொருளுக்காக, உரத்துக்காக அரசாங்கம் செலவிடுகிற மானியத்துடன் ஒப்பிடுகிற ஒரு பிரதமரை உங்களால் கற்பனை செய்து பார்க்க முடிகிறதா?

பல பத்தாயிரக்கணக்கான விவசாயிகள் தற்கொலை செய்துகொள்ள நிர்ப்பந்திக்கப் படுகிற ஒரு நாட்டை, விவசாயிகளின் நிலத்தை, வாழ்வாதாரத்தை பறிக்க பெருந்தொழில் நிறுவனங்களுடன் சேர்ந்து சதி செய்கிற ஓர் அரசாங்கத்தை உங்களால் கற்பனை செய்து பார்க்க முடிகிறதா?

நாட்டின் கனிம வளங்களை, பிற இயற்கை செல்வாதாராங்களை, தண்டனை பற்றிய எந்த அச்சமும் இன்றி, உள்நாட்டு வெளிநாட்டு நிறுவனங்கள் கொள்ளையடிக்க அனுமதிக்கும் விதம் சுற்றுச்சூழல் சட்டங்கள் மற்றும் நிலச் சட்டங்கள் முதல் பஞ்சாயத்து சட்டங்கள் வரை, நாட்டின் அனைத்து சட்டங்களையும் காற்றில் பறக்க விடுகிற ஓர் அரசாங்கம் கொண்ட ஒரு நாட்டை உங்களால் கற்பனை செய்து பார்க்க முடிகிறதா?

உண்மையைக் கண்டு உயிர்போகும் அளவு அஞ்சுகிற ஓர் அரசாங்கம், அதனால் குண்டாந்தடி, துப்பாக்கி குண்டு, கருப்புச் சட்டங்கள் கொண்டு மக்கள் போராட்டங்களை நசுக்குகிற ஓர் அரசாங்கம், நேர்மையான அறிவாளிகளை தேசத்துரோகக் குற்றம் சுமத்தி சிறையில் அடைக்கும் ஓர் அரசாங்கம் கொண்டஒரு நாட்டை உங்களால் கற்பனை செய்து பார்க்க முடிகிறதா?

நாம் அதுபோன்ற ஒரு நாட்டை கற்பனை செய்து பார்க்க வேண்டிய அவசியமில்லை. இப்படி ஒரு நாட்டில்தான் நாம் வாழ்கிறோம். இருபது ஆண்டுகால தாராளமயம், தனியார் மயம், உலகமயத்துக்குப் பிந்தைய இந்தியா இதுதான். அய்முகூ ஆட்சியில் உள்ள இந்தியாவில் கட்டுக்கடங்காத ஊழலுக்கு அரசாட்சியே உரிமமாகிவிட்டது; ஜனநாயகத்தின் மீது அரசு ஒடுக்குமுறையின் கருமேகங்கள் படிந்துள்ளன; சாமான்ய மக்கள் பிழைத்திருக்க கூட கடுமையான போராட்டம் நடத்த வேண்டியுள்ளது.

இந்த நிலைமைகளை இனிமேலும் சகித்துக் கொள்ளக் கூடாது. அய்முகூ அரசாங்கம் தனது வாக்குறுதிகள் அனைத்துக்கும் துரோகம் இழைத்துவிட்டது. எனவே, ஆட்சி செய்வதற்கான அதிகாரத்தையும் இழந்து விட்டது. அது உயரப் பறக்கும் பணவீக்கம், கட்டுக்கடங்காத ஊழல் ஆகியவற்றின் அரசாங்கம் என நிரூபிக்கப்பட்டு விட்டது. பிரதமரும் காங்கிரஸ் தலைவர்களும் அனைத்துப் பிரச்சனைகளையும் ‘கூட்டணி நிர்ப்பந்தம்’ என விளக்கப் பார்க்கின்றனர். காங்கிரசுக்கும் அய்முகூவுக்கும் என்ன ‘நிர்ப்பந்தம்’ இருந்தாலும், அதுபோன்ற ஓர் ஆட்சியை சகித்துக் கொள்ள வேண்டிய நிர்ப்பந்தம் நிச்சயம் நாட்டுக்கு இல்லை. வாருங்கள்! மார்ச் 14 அன்று நாம் அனைவரும் நாடாளுமன்றம் நோக்கிய மக்கள் பேரணியில் இணைவோம். அய்முகூ அரசாங்கம் நொண்டிச் சாக்குகள் சொல்வதை நிறுத்த வேண்டும் என்று சொல்வோம். ஆட்சியை விட்டு ஓடச் சொல்வோம்.

மாற்று என்ன? தேஜமு விலைகளைக் குறைத்து ஊழல்களைக் தடுக்கும் என்று நம்மை நம்பச் சொல்கிறது. ஆனால் தேஜமு ஆட்சி நடக்கும் மாநிலங்களான குஜராத்தோ அல்லது கர்நாடகாவோ, மத்திய பிரதேசமோ அல்லது சட்டிஸ்கரோ, ஜார்க்கண்டோ அல்லது பீகாரோ, அனைத்துமே அய்முகூ ஆட்சியிலான மாநிலங்களைப் போலவே ஊழல் சேற்றில் மூழ்கியுள்ளன. ஊழலுக்கும் ஒடுக்குமுறைக்கும் முடிவு கட்ட வேண்டும் என்று நாடே கேட்டுக் கொண்டிருக்கும் போது, பாஜகவும் ஆர்எஸ்எஸ்ஸ÷ம் காஷ்மீர், அயோத்யா பிரச்சனைகளில் பதட்டத்தை மூட்டிவிடுவதில் மும்முரமாய் உள்ளன. அவர்களில் சிலர் நேரடியான பயங்கரவாத நடவடிக்கைகளில் ஈடுபட்டுள்ளனர். ஆக, நிச்சயம் அது ஓர் ஏற்றுக்கொள்ளத் தக்க மாற்று அல்ல.

உண்மையில், தாராளமய, தனியார்மய, உலகமயக் கொள்கைகளை திணிக்கும் எந்த அரசாங்கமும் விலைஉயர்வைக் கட்டுப்படுத்த முடியாது; ஊழலைத் தடுக்க முடியாது. பெருந்தொழில் குழும நிகழ்ச்சிநிரலை பிரதிநிதித்துவப்படுத்தும் எந்த அரசாங்கமும் மக்களின் அடிப்படை நலன்களை உத்தரவாதம் செய்ய முடியாது.

நாட்டுக்கு மாற்றுக் கொள்கைகள் வேண்டும். மூலதனத்தின் லாபத்தை, அதிகாரத்தை அல்லாமல் மக்களின் தேவைகளை, விருப்பங்களை மய்யமாகக் கொண்ட கொள்கைகள் மத்தியில் வேண்டும். இதை நோக்கிய ஒரு சக்திவாய்ந்த மக்கள் விழிப்புணர்வும் அனைத்து போராடுகிற இடதுசாரி சக்திகளின் ஓர் ஒன்று பட்ட அறுதியிடலும் நாட்டுக்குத் தேவை.

இககமாலெயும், அகில இந்திய இடதுசாரி ஒருங்கிணைப்பின் உறுப்பு அமைப்புகளும் அது போன்றதொரு மக்கள் ஆதரவு மாற்றுக்காக அனைத்து அரங்கங்களிலும் போராட்டங்களை முன்னெடுக்கின்றன. இந்தப் போராட்டங்களை மேலும் முன்னெடுத்துச் செல்ல மார்ச் 14 நாடாளுமன்றம் நோக்கிய மக்கள் பேரணியை பெருவெற்றி பெறச் செய்வோம்.மார்ச் 8: சர்வதேச பெண்கள் தினம்

தொடருகிற கேள்விகள்.......

எஸ்.குமாரசாமி

வளர்ந்த நாடு என ஒபாமாவே சொல்லி விட்டார். இந்தியா அய்நா பாதுகாப்பு கவுன்சிலில் நிரந்தர உறுப்பினர் இடம் பெறப் போகிறது. தமிழ்நாடு ரூ. 50000 கோடி முதலீடு களை ஈர்த்து வைர மாநில விருதுகள் பெற்று விட்டது, சோனியா, மாயாவதி, ஜெயலலிதா என்ற அரசியல் ஆற்றல் மிக்க பெண்கள் இல்லையா, பெண்கள் அதிகாரம் பெறுதல், ஆண் - பெண் பால் சமத்துவம் என்ற ஆரவாரங்கள் தாண்டி இந்தியாவில் தமிழகத்தில், பெண்களின் நிலை எப்படி உள்ளது?

தலித் கீ பேட்டி (தலித்தின் மகள்) மாயாவதி ஆட்சியில்

இந்தியாவிலேயே அதிக மக்கள் தொகை கொண்ட உத்தரபிரதேசத்தில், பண்டா தொகுதி சட்டமன்ற உறுப்பினர் புருஷோத்தம் நரேஷ் திவேதி, ஒரு தலித் பெண்ணை பாலி யல் பலாத்காரம் செய்து, அந்தப் பெண்மீது திருட்டுக் குற்றம் சுமத்தி சிறையில் அடைக்க வைத்து விட்டார். புருஷோத்தம் என்றால் புருஷர்களில் உத்தமர், ஆண்களில் சிறந்தவர் என்று பொருள். ஸ்ரீஇராமச்சந்திர மூர்த்திக்கு புருஷோத்தமன் என்று பெயர். பண்டா தொகுதி சட்டமன்ற உறுப்பினர் எத்தகைய புருஷோத்தமர்! கான்பூரில் பாலியல் பலாத்காரத்தை எதிர்த்த பெண்ணின் உடல் உறுப்புக்கள் வெட்டி சிதைக்கப்பட்டுள்ளன. பகுஜன் சமாஜ் கட்சியின் இன்னொரு சட்ட மன்ற உறுப்பினர் சிவ்பிரசாத் யாதவ், கல்வி நிலைய முதல்வர், ஓர் ஆசிரியரைப் பாலியல் பலாத்காரம் செய்த, அவரது கணவரை தற்கொலை செய்ய வைக்கக் காரணமானவரை பாதுகாக்க சதி செய்தார் என இட்டாவா நீதிமன்றத்தில் குற்றம் சாட்டப்பட்டுள்ளார்.

காங்கிரஸ் ஆளுகிற மாநிலங்களில்

காங்கிரஸ் ஆளும் டெல்லியிலும் அய்தராபாத்திலும்தான் பெண்களுக்கு எதிரான வன்முறைகள் அதிகம். காங்கிரஸ் ஆளும் அரியானாவில்தான் ‘கவுரவக் கொலைகள்’ என்ற பெயரில், மரபு மீறி விரும்பும் ஆண்களைத் திருமணம் செய்யும் பெண்கள் ஒவ்வோர் ஆண்டும் கொல்லப்படுகிறார்கள். ஆணாதிக்க மனோபாவம், பெண் மீதான அத்துமீறல் ஆகியவை ஜவஹர்லால் நேரு பல்கலைக் கழகத்தை உலுக்கி உள்ளது. ஒரு பெண் தன் விருப்பப்படி தன் தேர்வுப்படி ஓர் ஆணுடன் உடல்உறவு கொண்டார். இதனைப் படமாக்கி இணையத்தளத்தில் பலர் பார்த்துள்ளனர். படமெடுத்தவர், படத்தை இணையத்தளத்தில் உலவ விட்டவர், பார்த்தவர், எல்லோருமே பெண்களின் தனி வெளியையும் கவுரவத்தையும் அத்துமீறும் சமூகக் குற்றத்தில் ஈடுபட்டுள்ளனர். பாலியல் பலாத்காரத்திற்கு ஆளானவர்களுக்கு நஷ்டஈடு வழங்கும் அரசுகள், குற்றத்தின் மீது கவனம் செலுத்துவதற்கு மாறாக, களங்கப்பட்ட உடலுக்கு நஷ்டஈடு என்று பெண்களைச் சிறுமைப்படுத்தும், ஆணாதிக்கப் பார்வையைத்தான் வலுப்படுத்துகிறார்கள். ஜேஎன்யு பல்கலைக்கழகமும் குற்றத்தின் மீது கவனம் செலுத்தாமல், பெண் உடல்கள் களங்கப்படாமல் இருப்பதற்காக ‘தடுப்பு’ நடவடிக்கைகளில், ஆடைக் கட்டுப்பாடு, ஆண், பெண் சந்திப்பைப் கட்டுப்படுத்துவது போன்ற கலாச்சாரக் காவலர் பணிகளில்தான் ஈடுபட்டுள்ளது. காங்கிரஸ் ஆளும் மகாராஷ்டிராவில், சரத் பவார் கட்சி சட்டமன்ற உறுப்பினர் திலிப்வாக், ஒரு பெண்ணை, நயவஞ்சகமாக, வேலை பெற்றுத் தருவதாகச் சொல்லி, அரசு விருந்தினர் இல்லத்திற்கு வரவழைத்து பாலியல் பலாத்காரம் செய்துள்ளார். சட்டமன்ற உறுப்பினர்கள், சம்பளம் போக வரும் இதர பயன்கள் ஒன்றில் பாலியல் பலாத்காரமும் அடங்கும் என்றும் தமக்கு பாலியல் பலாத்காரம் செய்யும் உரிமம் உண்டு என்றும் கருதுகின்றனர்.

பிற கட்சிகள் ஆளுகிற மாநிலங்களில்

இமாலய வெற்றி எனப் போற்றப்படும் நிதிஷ்குமார் வென்றுள்ள பீகாரில் விதைத்ததை அறுவடை செய்துள்ளார். தம்மைப் பாலியல் பலாத்காரம் செய்த பூர்ணியா பாஜக சட்டமன்ற உறுப்பினரை ரூபம் பதக் என்ற ஆசிரியர் பலரும் பார்க்க குத்திக் கொன்றார். பாலியல் பலாத்காரம் செய்ய தமக்கு உரிமம் இருக்கிறது எனச் சட்டமன்ற உறுப்பினர்கள் கருதும்போது, ரூபம் பதக் போன்ற பெண்கள் காத்திருந்து பழிவாங்க தமக்கும் உரிமம் உள்ளது எனக் கருதத் தோன்றுகிறது. ஜார்கண்ட் மாநிலத்தில் இன்ஸ்பெக்டர் ஜெனரல் ஆக இருந்த நட ராஜன் ஓர் ஆதிவாசிப் பெண்ணைப் பாலியல் பலாத்காரம் செய்த வழக்கில் ஆட்டம் காட்டித் தப்பித்து பின் பிடிபட்டவர், இப்போது அந்தப் பெண் மாவோயிஸ்ட் தலைவர் என்று கூப்பாடு போடுகிறார். அப்படிச் சொன்னாலே போதும், அதைவிடத் தப்பிக்க வேறு என்ன சிறந்த வழி என நினைக்கிறார். ஒடிஷாவில் சட்டிஸ்கரில் மேற்குவங்கத்தில் ஆதிவாசிப் பெண்களைப் பசுமை வேட்டை பாடாய் படுத்துகிறது. வங்கத்தில் ஒரு பெண்ணைக் கொன்று மிருகம் போல் கம்பில் மாட்டித் தூக்கிச் சென்ற காட் சியை நாடே கண்டது. ஒடிஷாவில் ராயகடா வில் ஓரிரவில் 4 ஆதிவாசிப் பெண்கள் கொல்லப்பட்டனர். டிசம்பர் இறுதி வாரத்தில், டாடா எஃகு ஆலைக்கு எதிரான போராட்டம் நடக்கும் இடத்திலேயே, கலிங்காநகரில் 10 பெண்கள் கொல்லப்பட்டனர். இதில் ஒரு பெண்ணுக்கு 12 வயது. நான்கு பெண்கள் 20 வயது நிரம்பியவர்கள். கேரளாவின் சௌம்யா, வங்கி வேலைக்குப் போவேன், தாயை மகிழ்ச்சியோடு இருக்கச் செய்வேன் என்ற கனவுகளோடு தனியார் நிறுவனத்தில் பணியாற்றி வந்த பெண். ஓடும் ரயிலில் பாலியல் பலாத்கார முயற்சியை எதிர்த்தபோது வண்டியிலிருந்து கீழே தள்ளப்பட்டார். உயிருக்காக போராடிக் கொண்டிருந்த போதே, பாலியல் வன்முறைக்கு ஆளானார்.

கண்ணகியை

தெய்வமாக்கியவர்கள் தேசத்தில்

கருணாநிதி அமைச்சர் வேலு இல்லத் திருமணத்தில் தம்மை வாழும் வள்ளுவர் என்றோ தொல்காப்பியர் என்றோ அழைக்கக் கூடாது எனவும் பெரியாரின் தொண்டர் அண்ணாவின் தம்பி என்றுதான் அழைக்க வேண்டும் எனவும் கட்டளையிட்டுள்ளார்.

கருணாநிதி பெரியாருக்குப் பக்கத்தில் கூடப் போக முடியாது. வள்ளுவர் நிழலில் நின்று கொண்டு ஆபாசமாகப் பேச முடியும். பெரியார், பெண் விடுதலை அடைய ஆண்மை ஒழிய வேண்டும், அதாவது ஆண் ஆதிக்கம் ஒழிக்கப்பட வேண்டும் எனப் பிரகடனம் செய்தார். ஆணாதிக்கத்தின் அச்சுஅசலான பிரதிநிதி கருணாநிதி. அவர் தம்மோடு அரசியல் களத்தில் மோதும் ஜெயலலிதாவை ஒரு பெண்ணாக மட்டுமே கேவலமான முறையில் அணுகி, ‘எனக்குக் குடும்பம் இருக்கிறது. உனக்குக் குடும்பம் கிடையாது. நீ தத்தாரி’. என்கிறார். கண்ணகியை தெய்வமாக்கி பெண்ணுக்கு விலங்கு போடும் கயமை, குடும்பம் எனக் கேள்வி எழுப்பு கிறது. கருணாநிதி ஜெயலலிதாவுக்கு எதிராக, அவர் வழக்கப்படி, நாலாந்தர நரகல் நடையில் பேசியதாகச் சுருக்கிப் பார்க்க முடியாது. அவர் பெண் இனத்தையே நாகரிக மானுடத்தையே இழிவு படுத்துகிறார். ஆணாதிக்க உணர்வுகளை விசிறி விடுகிறார். பெண் என்றால் அவர் குடும்பப் பெண் ஆக இருக்க வேண்டும். (குடும்ப ஆண் என்று எவரும் சொல்வது கூட கிடையாது). குடும்ப, சாதி கவுரவம் எல்லாமே, பெண்ணுடைய நடை, உடை, பழக்க வழக்கங்கள், விருப்பு வெறுப்புகள், தேர்வுகளுடன் தொடர்பானவை. வீட்டில் மட்டும் வேலை செய்தாலும் வெளியில் வேலைக்குச் சென்றாலும் அவர் ‘குடும்பப் பெண்ணாக’ சகோதரன், தந்தை, கணவன் அல்லது (ஆணாதிக்க) சமூகம் சொல்வதுபடி நடக்க வேண்டும்.

கருணாநிதி என்றாலே குடும்பம்தான். குடும்ப ஆட்சி ஊரறியும். ராமதாசோடு உறவும் பிரிவும் கூட, அவருக்குக் குடும்பத்திற்குள் பிணக்கும் இணக்கமும்தான். அப்போது அது திராவிட குடும்பம். காங்கிரஸ் பாஜக உறவுகளும் பிரிவுகளும், ஆரிய திராவிட கூட்டுக் குடும்ப அல்லது இன சங்கமக் குடும்ப விவகாரமாக இருக்கக் கூடும். சிறுத்தைகள் சீட்டு கேட்கும் போது கூட, பதினாறும் பெற்று பெருவாழ்வு வாழ வாழ்த்தச் சொல்லித்தான் கேட்கிறார்கள். திமுக அமைச்சர் கே.என்.நேரு கன்னியாகுமரியில் போக்கு வரத்து ஊழியர்கள் சம்பள உயர்வு பெற்று விட்டதால் இனி ரூ.10 லட்சம் பணம் 10 சவரன் நகை வரதட்சணை கேட்கலாம் என ஆலோசனை சொல்கிறார். அப்படி மணமாகிற குடும்பப் பெண்கள் குறளுக்கேற்ப வாழலாம்.

தெய்வம் தொழாள் கொழுநன் தொழுதெழுவாள்

பெய்யெனப் பெய்யும் மழை.

தெய்வத்தைத் தொழாமல், கணவனையே தெய்வமாக தொழுகிற பெண், பெய் என்று சொன்னால் மழை பெய்யுமாம். கல்லானாலும் புல்லானாலும் கணவன் அல்லவா?

வள்ளுவன், கண்ணகி வழி, ‘குடும்பப் பெண்களின்’ முக்கியத்துவம், நிதி மூலதனம் பரவிப் பாயும் உலகமயக் காலங்களில் ஏன் முன்நிறுத்தப்படுகிறது? ‘குடும்பப் பெண்’ என்ற கருத்துக்கு பின்னால், லாபம் தேடி நாவில் எச்சில் ஊறி நிற்கும் மூலதனமும் ரத்தக் கறை படிந்த சந்தையின் கொடும் கரங்களும் உள்ளன.

அதிகாரம் வழங்குதலும்

ஆண் பெண் பால் சமத்துவமும்

இந்த முழக்கங்களை, உலக முதலாளித்துவவாதிகள் தெளிவான உள்நோக்கங்களுடன் வைக்கிறார்கள். அதிகாரம் பொறுப்புகளோடு சேர்ந்து வரும் என்கிறார்கள். குடும்பப் பொறுப்பு பெண் கைகளில் வந்தால் பால் சமத்துவம் தானாக வந்துவிடும், உழைப்பு பெண்மயமானால் எல்லாம் நலமே என்கிறார்கள்.

நுண்கடன், மகளிர் சுய உதவிக் குழுக் கள், தொண்டு நிறுவனங்கள், கிராமங்களின் கடைக்கோடி வரை வந்து விட்டன. பெண்ணிடம் நீ, உனக்கான மூலதனத்தின், அது எவ்வளவு சிறியதாக இருந்தாலும், அதிபர் என மாய்மாலம் பேசுகிறார்கள்.

ஆண்கள் பார்க்காத, பார்க்கத் தயாராக இல்லாத (வருமானம் குறைவு என்பதால் வேறு வேலைக்குச் செல்கின்றார்கள்) குறைந்த கூலியில், விவசாய வேலைகளில், கசக்கிப் பிழியும் வியர்வைக் கூட வேலைகளே, உழைப்பு பெண்மயமாதலின் பின்னால் உள்ள ரகசியம். நாடெங்கும் 95% பெண் விவசாயத் தொழிலாளர்கள் சட்டப்படியான குறைந்தபட்ச சம்பளத்தை விடக் குறைவாகவே பெறுகிறார்கள்.

கடன் பெண்மயமாகிறது. நுண்கடன், கந்து வட்டியின் இன்னொரு வடிவத்தில் பெண்களை, கடன் பொறியில் தள்ளுகிறது. பெண் குடும்பத்தை விட்டு நகரமாட்டாள். கிராமத்தை விட்டு வெளியேற மாட்டாள். பெண்கள் எங்கு உள்ளனர் எனச் சுலபமாக அடையாளம் காணலாம். கடன் திருப்பாதது அவமானம் எனக் கூச்சப்படுவார்கள். குடும்ப கவுரவத்திற்கு இழுக்கு என நினைப்பார்கள். ஆக, அவமானம் கவுரவத்திற்கு இழுக்கு என்ற மதிப்பீடுகள், பெண்களுக்குக் கடன் தருவது உகந்தது எனக் கருத வைக்கின்றன.

உலக வங்கி தனது பால் நடவடிக்கைத் திட்டத்தில், வறுமை போக்க, ஆண், பெண் சமத்துவம் வர நுண்கடன் உதவுதாகச் சொல்கிறது. வறுமைத் துயர் போக்குவது அரசின் பொறுப்பல்ல. குடும்ப பெண்ணின் பொறுப்பு. கடன் வாங்கி அதிகாரமும் சமத்துவமும் பெறுவார்கள். ‘சவால் விடாதே, எதிர்த்துப் போராடாதே, உலக மூலதனச் சுழற்சிக்குள் நீயும் வா’ என்கிறது மூலதனம்.

விவசாயக் கூலிகள், கடன் வாங்கும் ஏழை கிராமப்புறப் பெண்கள் கூடுதல் நேரம் உழைத் தாக வேண்டும். தொலைக்காட்சி பார்க்கும், பொழுது போக்கும் நேரத்தை, குடும்ப பொரு ளாதாரத்தைக் காப்பாற்ற பெண்கள் பயன் படுத்த வேண்டும். ஓய்வு நேரம் என்பதே பெண்களுக்கு இல்லை. சுமை தூக்கும் மிருகங் களின் நிலைதான் இந்தப் பெண்களின் நிலை. எவ்வளவு உயர்வான அதிகாரம்! எவ்வளவு சிறந்த சமத்துவம்!

இருண்ட மேகங்களில் ஒளிக் கீற்றுகள்.

முன்னேறிப் பாயும் மூலதனம் கிராமப்புற பிற்போக்கைப் பலப்படுத்துகிறது. பலவீனப்படுத்தவில்லை. ஆனபோதும், சமூக உற்பத்தி யில் ஈடுபடும் சமூக உறவுகளில் நுழையும் பெண்கள் எதிர்ப்புப் போராட்டங்களில் எழத்தான் செய்கிறார்கள். எங்கு போராட்டம் நடந்தாலும் அதில் பெண்கள் பங்கு நிச்சயம் இருக்கும். ஆயிரம் ஷர்மிளாக்கள் தோன்றிக் கொண்டே இருப்பார்கள். காஷ்மீரத்துப் பெண்கள் இந்திய இராணுவத்திற்கு அரசிற்கு சவால் விடுகிறார்கள்.

நான்கு ஆண்டுகளாகப் போராடும் பிரிக்கால் பெண் தொழிலாளர்கள், இரவும் பகலும் சாலை மறியல் செய்தவர்கள், சிறை சென்றவர்கள், கொலை வழக்கைச் சந்திப்பவர்கள், சங்க அங்கீகார உரிமையை வென்றுள்ளார்கள். மார்ச் 7 அவர்கள் சங்கம் நிர்வாகத்துடன் பேசுகிறது. சர்வதேச பெண்கள் தின நூற்றாண்டுக்கு அந்தப் போராளிகள், கவுரவமான முடிவைத் தந்துள்ளார்கள்.பிரிக்கால் தொழிலாளர் போராட்டம்: ஒரு பரிசீலனை

நான்கு ஆண்டுகளாக நடந்து வருகிற போராட்டத்தின் ஒரு கட்டம் முடிந்துள்ளது. எத்தனையோ தியாகங்கள், எத்தனையோ இழப்புக்கள், பலவிதமான போராட்ட வடிவங்கள், பலவிதமான பேச்சு வார்த்தைகள், சமாதான முயற்சிகள் ஆகியவற்றுக்குப் பிறகு, பெரும்பான்மை சங்கம் அங்கீகரிக்கப்பட்டுள்ளது. 07.03.2011 அன்று சங்கம் நிர்வாகத்தைச் சந்தித்துப் பேசுகிறது.

பிரிக்கால் நிறுவனம்: ஒரு பார்வை

ஆட்டோமொபைல் உதிரி பாகங்கள் தயாரிக்கும் இந்நிறுவனம் கோவையில், புனேயில், உத்தர்கண்டில் தொழிற்சாலைகள் வைத்துள்ளது. பிரமோட்டர் திரு விஜய்மோகன் மற்றும் அவருக்கு நெருக்கமானவர்கள் 35.83% பங்குகள் வைத்துள்ளனர். ஜப்பானிய டென்சோ கார்ப்பரேஷன் 12.5% பங்குகள் வைத்துள்ளனர். பொதுவிலும் மியூச்சுவல் ஃபண்ட்ஃஸ் மூலமும் சுமார் 44% பங்குகள் உள்ளன.

நிறுவனத்தின் பெய்ட் அப் கேப்பிடல் ரூ.9 கோடி. நிறுவனத்தின் தற்போதைய சொத்து மதிப்பு சுமார் ரூ.550 கோடி. 31.03.2010 முடிந்த ஆண்டில் நிறுவனம் 40% டிவிடண்ட் பங்குதாரர்களுக்கு வழங்கி உள்ளது. ரூ.360 லட்சம் டிவிடண்டுக்கு ரூ.59 லட்சம் வரி கட்டப் பட்டுள்ளது.

2008 - 2009ல் மொத்த விற்பனை ரூ.614 கோடி.

2009 - 2010ல் மொத்த விற்பனை ரூ.742 கோடி.

2008 - 2009ல் வரிகட்டிய பின் நஷ்டம் ரூ.30 கோடி.

2009 - 2010ல் வரி கட்டிய பின் லாபம் ரூ.25.5 கோடி.

உதிரி பாகங்கள் தயாரிப்பில் கடும் போட்டி நிலவுவதால், தனி புராடக்ட் தயாரிப்பதற்கு கவனம் செலுத்த வேண்டும் என நிர்வாகத் தரப்பில் சொல்லப்படுகிறது.

போராட்டத்தின் துவக்கம்

கோவை பிளாண்ட் 1 மற்றும் 3ல் எல்பிஎஃப், சிஅய்டியு, எஅய்டியுசி, அய்என்டியுசி மற்றும் தோழர் குசேலரோடு தொடர்பில்லாத டபிள்யுபிசி சங்கங்கள் மீது அதிருப்தி அடைந்த தொழிலாளர்கள் கோவை மாவட்ட பிரிக்கால் எம்ப்ளாயீஸ் டிரேட் யூனியன், கோவை மாவட்ட பிரிக்கால் தொழிலாளர் தொழிற்சங்கம் என்ற சங்கங்களை 2007ல் ஆரம்பித்தனர். ஏகப்பெரும்பான்மைத் தொழிலாளர்கள் ஆதரித்தனர். சங்கங்களுக்கு ஏஅய்சிசிடியு தலைவர் தோழர் எஸ்.குமாரசாமி வழிகாட்டினார். முன்னணிகள் உத்தர்கண்ட் மாநிலத்திற்கு மாற்றப்பட்டனர். வேலை நிறுத்தம் வெடித்தது. நிர்வாகம், துணை யூனிட் தொழிலாளர்கள் ஒப்பந்தத் தொழிலாளர்கள் என்று அழைத்தவர்களும் போராட்டத்தில் கலந்து கொண்டனர்.

அரசாணைகள்.... வழக்குகள்....

தமிழக அரசு ஒரு குறுகிய கால இடைவெளியில் இந்த ஆலையில், வழக்கை நீதிமன்ற விசாரணைக்கு அனுப்பும் 3 ஆணைகள், வேலை நிறுத்தம், கதவ டைப்பு தொடர்வதைத் தடை செய்யும் ஆணை, இரு தரப்பினர்க்கும் நிபந்தனை விதிக்கும் 2 ஆணைகள் என மொத்தம் 6 அரசாணைகள் போட்டது. தொழிலாளர் துறை முன் இடைவிடாமல் வாதாடி, ஊடாடி, அரசிடம் போராடித்தான் இந்த ஆணைகள் 10.04.2007, 24.05.2007, 29.06.2009 தேதிகளில் போடப்பட்டன. நிர்வாகம் தாக்கல் செய்த 5 ரிட் மனுக்களில் 4 சென்னை உயர்நீதிமன்றத்தால் தள்ளுபடி செய்யப்பட்டன. ஒரு வழக்கு ஒரு பகுதி அனுமதிக்கப்பட்டு ஒரு பகுதி தள்ளுபடி செய்யப்பட்டது. ஏப்ரல் மே 2007 ஆணைகள் மீதான வழக்குகள் சென்னை உயர்நீதி மன்ற இரு நீதிபதிகள் அமர்வம் முன்பு 10.12.2007 அன்று முடிவுக்கு வந்தன. அதற்கெதிராக நிர்வாகம் உச்சநீதிமன்றம் சென்றபோது, உச்ச நீதிமன்றம் விடுமுறையில் செல்லும் முன்பே 16.05.2008 அன்றே பகுதி கதவடைப்பு, செய்யப்பட்ட 64 தொழிலாளர்கள் மீண்டும் வேலைக்கு எடுக்கப்பட வேண்டும் என தொழிலாளர்கள் நிவாரணம் பெற்றனர். 29.06.2009 அரசாணை மீதும் தொடரப்பட்ட வழக்கும் ஒரு வருடத் திற்குள்ளாகவே முடிந்தது. உயர்நீதிமன்றத்திலும் உச்ச நீதிமன்றத்திலும் மேல் முறையீடுகள் உள்ளன. பொதுவாக வழக்குகள் இவ்வளவு சீக்கிரம் முடிவதில்லை.

அசாதாரணமான அரசு தலையீடுகள்

போராட்டத்தின் தீவிரத்தால், போராட்டம் துவங்கிய சுமார் ஒரு மாத காலத்திலேயே அரசு தலையிட்டது. அரசு நிர்வாகத்துக்கு நிபந்தனைகள் விதித்து 10 பி ஆணை போட வேண்டும், 10 பி போட மறுத்த மறுநாளே 11.04.2007ல் சென்னையில் பேரணி, பிரும்மாண்டமான மே தின பேரணி, பொது மக்கள் தந்தி தருவது, பல சங்கங்கள் கடிதம் எழுதுவது, தொழிலாளர்கள் ஆணையர் அலுவலகத்தை முற்றுகையிடுவது, 10 பி கேட்டு உயர்நீதிமன்றத்தில் வழக்கு, அமைச்சர் இல்லத்திற்குச் சென்று பெண் போராட்ட வீரர்கள் சந்திப்பது என்ற பின்னணியில் 10.04.2007ல் 10 பி ஆணை போட மறுத்த அரசு 24.05.2007 அன்றே 10 பி ஆணை போட்டது.

நிர்வாகம் பூஜ்யம் சம்பளம் 75% சம்பளவெட்டு 20% போனஸ் மறுப்பு ஆகியவற்றைச் செய்தபோது அரசு தலையீட்டால் பிரச்சனை தீர்ந்தது.

நிர்வாகம் டிசம்பர் 2008ல் 183 தொழிலாளர்களிடம் ரூ.1.96 கோடி பிடித்தம் செய்வேன் என்று சொன்னபோது 02.09.2008 அன்று அப்படிச் செய்யக் கூடாது என அரசு ஆலோசனை வழங்கியது.

ஜ÷லை 2007 முதல் ஒப்பந்த சம்பளம் தராததற்கு அரசு ஒப்பந்த மீறலுக்காக ஏன் பிராசிக்யூஷன் நடவடிக்கை எடுக்கக் கூடாது என காரணம் கோரும் குறிப்பாணையை நிர்வாகத்துக்கு வழங்கியது.

அதேபோல் சங்கத்தை விட்டு விலகியவர் களுக்குத்தான் சம்பள உயர்வு என நிர்வாகம் சொல் வது தொழிலாளர் விரோத நடவடிக்கை, அதற்கு ஏன் நடவடிக்கை கூடாது எனவும் காரணம் கோரும் குறிப்பாணை தரப்பட்டது

ஆகஸ்ட் 2008ல் 170 பேர் மீதான கதவடைப்பு என்பது அரசு தலையீட்டால் 16 பேர் மீது கதவடைப்பு 24 பேர் தற்காலிக வேலை நீக்கம் என மாறியது.

2009ல் பயிற்சியாளர்களை நிர்வாகம் ரெகுலர் உற்பத்தியில் ஈடுபடுத்தியது என ஆதாரபூர்வமாக காட்டி, அப்படி செய்யக் கூடாது என ஆலோசனை வழங்கச் செய்தது சங்கம்.

21.09.2009, 22.09.2009 தேதிகளில் தொழிலாளர் துறை, தொழிற்சாலை துறை அதிகாரிகள் ஆலைக்குள் நேரடி சோதனை செய்து பயிற்சியாளர்களை ஒப்பந்தத் தொழிலாளர்களை நிர்வாகம் ஈடுபடுத்தியது, இது நிரந்தர தொழிலாளர்களைப் பாதிக்கிறது என அரசுக்கு அறிவிக்கை தந்தனர்.

தமிழக சட்டமன்றத்தில் பிரிக்கால் பிரச்சினையும் பிரிக்கால் தொழிலாளர்கள் எழுப்பிய பிரச்சினைகளும் 5 முறை எதிரொலித்தன.

அரசு தலையிட, தொழிலாளர் போராட்டங்களும் கிடைத்த ஒருமைப்பாடும் தொழிலாளர் தரப்பை சங்கம் விடாப்பிடியாய் ஆதாரபூர்வமாகவும் சட்டபூர்வமாகவும் விளக்கியதும், இன்னமும் சில நேர்மையாளர்கள் சட்டப்படி செல்ல நினைப்பவர்கள் இருப்பதும் காரணங்களாகும். முதலாளித்துவ சட்டங்கள்படி நடக்க வைக்க, இவை எல்லாம் தேவைப்படுகின்றன.

தொழிலாளர்க்கு கிடைத்த ஆதரவு

கோவை எல்எம்டபிள்யு, கேஎஸ்பி பம்ப்ஸ், சுபா பிளாஸ்டிக், அய்டிபிஎல், சென்னை டைமன்ட் செயின் எம்ஆர்எஃப், ஹ÷ண்டாய் ஆலைகளின் தொழிலாளர்கள், புரட்சிகர இளைஞர் கழக, பெண்கள் கழக, மாணவர் கழக, மாலெ கட்சி தோழர்கள், பகுதி மக்கள் எப்போதும் நம்மோடு நின்றனர். மற்ற முற்போக்கு ஜனநாயக சக்திகளும் உதவினர். வலது இடது தீவிர வாதிகள் கூட்டணி என்ற விஷமப் பிரச்சாரத்தை எல்லாம் மீறி தொழிலாளர் போராட்டத்திற்கு தோள் கொடுக்கும் நண்பராக கோவை வழக்கறிஞர் லட்சுமணநாராயணன் பாறை போல் நின்றார். தோழர் குசேலர் தவிர ஏஅய்டியுசி சிஅய்டியு, அய்என்டியுசி, எல்பிஎஃப், பிஎம்எஸ், எச்எம்எஸ் தொழிலாளர் ஆதரவாக நிற்கக் கூடாது என்பதோடு நில்லாமல் உள்ளூரில் மிகவும் உறுதியாக நிர்வாகத்தோடு நின்றனர். பாமக, இகக, இககமா, அதிமுக, மதிமுக, காங்கிரஸ் சட்டமன்ற உறுப்பினர்கள் தொழிலாளர் அணுகிக் கேட்டுக்கொண்டதால் பிரச்சினை பற்றி சட்டமன்றத்தில் பேசினர். இது வரை நம்மால் சில பல லட்சங்கள் திரட்ட முடிந்துள்ளது.

காவல்துறை முற்றுகை

மாவட்ட காவல் கண்காணிப்பாளர் நம்மைப் பிறவிப் பகைவர்கள் போல் பார்க்கிறார். அவரோடு சேர்ந்து கொண்டு பெரம்பலூர் கண்காணிப்பாளர் மகளிர் ஆணைய புகார் வேலையை மறந்து, மார்க்சிய லெனினிய கருத்துக்களைப் பரப்பும் குமாரசாமின் நடவடிக்கைகளை கண்காணிக்க சொல்லி பரிந்துரை தந்தார். போதுமான அளவு பரப்பாத குற்றத்தை ஒப்புக்கொள்கிறோம். மேலும் கூடுதலாக பரப்ப ஆன தெல்லாம் செய்கிறோம் என பதில் தந்தோம். அவரது பரிந்துரைக்கு எதிராக வழக்கு போட்டுள்ளோம். தோழர் குமாரசாமி உட்பட 27 பேர் மீது கொலை சதி என வழக்குகள் போடப்பட்டுள்ளன. 160க்கும் மேற் பட்டோர் குற்றவியல் வழக்குகளைச் சந்திக்கின்றனர். 8 பெண்கள் உட்பட 83 பேர் 120 நாட்கள் வரை சிறையில் இருந்துள்ளனர். கொலை வழக்கில் குற்றப் பத்திரிகை கொடுக்கப்பட்டு விட்டது.

எஸ்பி, டிஜிபி, உயர் போலீஸ் அதிகாரிகள் மக்கள் கோரிக்கைகள் மீது கோவை முதல் சென்னை வரை நெடும்பயணம் நடத்த நமக்கு அனுமதி மறுத்தனர். துரதிர்ஷ்டவசமான ஒரு மரணத்தை பயன்படுத்தி முற்றுகையிட்டு முறியடிக்க முயன்றனர். நீதிமன்றம் சென்று அனுமதி பெற்றோம். இப்போதும் பெரிய நாயக்கன்பாளையம் பகுதியில் கூட்டங்கள் நடத்த அனுமதி மறுக்கப்படுகிறது. சட்டப்படி நிற்காது என தெரிந்தும் கொலை வழக்கில் இருப்பவர்கள் கூட்டம் பேசக் கூடாது என்கிறார்கள். மத்திய மாநில அமைச்சர்கள் சட்டமன்ற நாடாளுமன்ற உறுப்பினர்கள் பலர் மீது கொலை வழக்கு இருக்கிறது எனக் காவல் துறைக்கு தெரியும். கார்ப்பரேட் காவலர்கள், காக்கிச் சட்டையில் இருக்கிறார்கள். அனைத்து ஆபத்துக்களும் சாத்தியம் எனத் தெரியும். அவரவர் வேலையை அவரவர் செய்வோம்.

வடியாத, வற்றாத வர்க்க உணர்வு

ஷேக்ஸ்பியர் கிளியோபாட்ரா பற்றி அஞ்ங் ஸ்ரீஹய்ய்ர்ற் ஜ்ண்ற்ட்ங்ழ் ய்ர்ழ் ஸ்ரீன்ள்ற்ர்ம் ள்ற்ஹப்ங் ட்ங்ழ் ண்ய்ச்ண்ய்ண்ற்ங் ஸ்ஹழ்ண்ங்ற்ஹ் என எழுதினார். (வயது அவள் மீது சுருக்கங்கள் கொண்டு வராது. மரபு அவளது முடிவற்ற வேறுவேறு தன்மைகளை பழையதானதாக்காது). பேரதிசயங்களை சாதிக்கிறார்கள் பிரிக்கால் தொழிலாளர்கள். தமது சாதனையை தாமே முறியடிக்கிறார்கள். பிரிக்கால் தொழிலாளர்கள் ரத்தத்தால் சதையால் ஆனவர்கள். சுகதுக்கங்கள் உடைய சாமான்ய மனிதர்கள். கவலைகள் விருப்பங்கள், தேவைகள் உள்ளவர்கள். கடன்களும் உண்டு எனச் சொல்ல வேண்டியதில்லை. தயக்கம், தடுமாற்றம், ஊசலாட்டம் அவர்களைத் தீண்டாமலே விட்டுவிட்டனவா? நிச்சயம் இல்லை. அப்படியானால் தாக்கு பிடிக்க என்ன மாயம் மந்திரம் உதவுகிறது?

அவர்கள் கடந்த கால வரலாற்றையும் வலியையும் மறக்கவில்லை

காசு பணம் முக்கியம்தான். எப்படியும் வேண்டும் தான். ஆனால் சுயமரியாதை, தொழிலாளி என்ற கவுரவம் மேலானது எனக் கருதுகிறார்கள். அவர்கள் தனித்தனி மனிதர்களாக பலவீனங்களைக் கொண்டிருக்கிறார்கள். ஆனால் ஒரு வர்க்கமாக சிந்திக்க, அமைப்பாகச் செயல்பட போராட்டம் அவர்களை கற்க வைத்தது. ஏஅய்சிசிடியு உதவியது. அதற்குத் தூண்டியது. தலைமையின் பண்புகள் மட்டுமே இதனை சாத்தியப்படுத்துமா? அவர்களிடம் தேடுதல் இருந்தது. கற்பதற்கான கதவுகளை தேடித் தட்டினார்கள் நுழைந்தார்கள். வர்க்க உணர்வை இறுகப் பற்றி னார்கள். பொதுப் பேரவைகள் நடந்தன. துறை நிர்வாகிகள் கூட்டங்கள் நடந்தன. தொழிலாளர்களுடன் பலவிதமான சந்திப்புக்கள் நடந்தன. கேள்விகள் எழுப்பப்பட்டன. பதில்கள், விவாதங்கள் மூலம் பிறந்தன. முடிவெடுப்பதில் ஜனநாயகம் வெளிப்படைத் தன்மை இருந்தது. சாதுரியம், நேர்மை ஆகியவற்றின் இயல்பான இணைப்பு புரிந்தது. சொல்ல வேண்டிய நேரம், சொல்ல வேண்டிய அளவு, சொல்ல வேண்டிய விஷயங்கள் மட்டுமே சொல்லப்படும், ஆனால் எல்லா விஷயங்களும் உரிய நேரத்தில் சொல்லப்படும் என்பவை மனதில் பதிந்தன.

சுலப வெற்றி, துரித வெற்றி, வெற்றியின் உத்தரவாதம், பிரிக்கால் தொழிலாளர்களும் விரும்பித்தான் செய்தார்கள். ஆனால் எப்போது முடியும் என்பதை விட எப்படி முடியும் எனச் சிந்திக்க வேண்டும், வெற்றிக்கான உத்தரவாதத்துடன் போராட்டத்தைத் துவக்குவது போராட்டமே நடக்காது என்பதற்கான உத்தரவாதம் எனப் புரிந்து கொண்டனர். பலவீனங்கள் இருந்தாலும், தலைமைக்கும் கடைசி தொழிலாளிக்கும் இடையில், ஓர் உறவுப் பாலம் அமைப்புச் சங்கிலி பலமானது.

ஒடுக்கப்பட்டவர்களின் நெடுமூச்சு, ஆன்மா இல்லாத உலகின் ஆன்மா இதயம் இல்லாத உலகின் இதயம் என்பது, மாற்றத்திற்கான தொழிலாளர் இயக்கம்தான் எனக் கண்டு பாரம் சுமக்காமல் இளைப்பாறியது. இயல்பாக சங்கம் தாண்டிய விஷயங்களும், ஈடுபாடும் கூட உணர்வு வற்றாமல், வடியாமல் இருக்க உதவின. வெவ்வேறு கட்டங்களில் கையாளப்பட்ட செயல் தந்திர மாற்றங்களும் கூட தாக்குப் பிடிப்பதை முன்னேறுவதுடன் இணைந்தன.

மாறிய போராட்ட வடிவங்கள்

எழுச்சி தணிதல், வேகம் சோர்வு, ஏதோ மனித எண்ணங்களில் தாமாகத் தோன்றுவதல்ல. போராட்டத்தின் வெவ்வேறு கட்டங்களில், வெவ்வேறு சூழல்களில், இவை இருக்கத்தான் செய்யும். அடிப்படையான மார்க்சியக் கேள்வி, பிரச்சனையைப் புரிந்து கொள்வதோடு நின்று விடாமல் மாற்றி அமைப்பதோடு தொடர்புடையது. தோழர் லெனின், செயல்தந்திரங்கள் பற்றிச் சொன்னார். ‘ஒவ்வொன்றும் தனித்தனியாக எடுத்துக் கொண்டால், தாக்குதல் தன்மையோ தற்காப்புத் தன்மையோ கொண்டதாகவோ, எல்லாம் சேர்த்துக் கொண்டால், இன்னும் தீவிரமான தீர்மானகரமான மோதலுக்கு இட்டுச் செல்லும், வெவ்வேறு போராட்ட வடிவங்களை இணைப்பதில், ஒன்றில் இருந்து மற்றொன்றுக்கு திறமையாக மாறிச் செல்வதில், வெகுமக்கள் உணர்வைச் சீராக உயர்த்தி, அவர்கள் கூட்டுச் செயல்பாட்டுத் தளத்தை விரிவுபடுத்துவதில் மார்க்சிய செயல்தந்திரங்கள் அடங்கி உள்ளது.’ செயல் தந்திரங்கள் பற்றி, போராட்டத்தில் நம்மை பலப்படுத்தி எதிர்தரப்பினர் நிலையைப் பலவீனப்படுத்துவது பற்றி, கூலி உழைப்பிற்கும் மூலதனத்திற்கும் இடையிலான சண்டையில், சமநிலையை கூலி உழைப்பிற்குச் சாதகமாக மாற்றுவது பற்றி, அதற்காக நாம் தீர்மானிக்கிற இடம் நேரம், சூழல், களம், வடிவம் ஆகியவற்றின்படி மட்டுமே போராட்டம் என்பது பற்றி, நிர்வாகிகளிடம் முன்னணிகளுடன் விவாதிக்கப்பட்டது. காத்திருப்பதே போராட்டம், பின்வாங்குதலும் முன்னேறுதலும் போராட்டத்தின் பிரிக்க முடியாத பகுதிகள் என உணர்த்தப்பட்டது. கற்பதையும் கற்பிப்பதையும், பிரிக்கால் தொழிலாளர்களும் ஏஅய்சிசிடியுவும் பரஸ்பரம் செய்தனர்.

ஆலை நுழைவு, முற்றுகை, சிவப்பு பயங்கரம் என நாம் ஈடுபட்டதாக, (நாம் மறுக்கிற) குற்றம் சுமத்தப் படுகிறது. கூட்டங்கள், உண்ணாவிரதங்கள், குழந்தைகள் குடும்பங்கள் போராட்டங்கள், அரசு அலுவலகங்கள் முற்றுகைகள், சந்திப்புக்கள், அரசுடன் பேசுதல், கால வரையற்ற உண்ணாவிரதம், கருத்துக் கணிப்பு, கேட்காத போது எதிர்பாராதபோது தேர்தல், பயிரை பாதிக்காமல் களை எடுப்பது, கடிதங்கள் எழுதுவது என எல்லா வடிவங்களையும் சோதித்துள்ளோம். வடிவங்கள் மாறினோம். இணைத்தோம், உணர்வை உயர்த்தினோம். கூட்டு செயல்பாட்டுத் தளத்தை விரிவுபடுத்தினோம். எல்லாவற்றுக்கும் மேலாக, மிகவும் நுட்பமும் திறனும் கொண்ட ஆபத்தான பேச்சுவார்த்தை என்ற போராட்ட வடிவத்தை நிர்வாகம் எடுத்தது. நாமும் ஆட்டத்தை விட்டு வெளியேறாமல் ஆடினோம். நம் தரப்பு பேச்சுவார்த்தைக் குழு மூலம் காய்கள் நகர்த்தப்பட்டன. கடிதங்கள் எழுதப்பட்டன. பேசினோம். பேச இயலாது என்றும் சொன்னோம். இப்போது, இனி அங்கீகரிக்கப்பட்ட சங்கமாகப் பேசுவது என, முடிவாகி உள்ளது.

தொழிற்சாலை சுவர்கள் தாண்டி

தொழிலாளர்களிடம் தொழிலாளி வர்க்க அரசியலை துணிச்சலுடன் வெளிப்படையாகப் பேச தயங்குவது தவிர்ப்பது என்பவை தொழிற்சங்கத்தில் கருத்துப் போராட்டம் நடத்தாமல் இருப்பதோடு தொடர்புடையவை. சங்கம் அய்க்கிய முன்னணிதான். ஆனால் கம்யூனிஸ்ட்கள் தமது கருத்துக்களை ஆளுமை நிலைக்குக் கொண்டுவர பகிரங்கமாக, உறுதியாக, அதே நேரம் உரிய நீக்குப்போக்குடன் செயல்பட வேண்டும்.

இன்னொரு புறம் நாற்காலி மார்க்சியர்கள், நுனிப்புல் மேய்பவர்கள், பண்டிதர்கள், அரசியல்படுத்துக, அரசியல்படுத்துக எனக் கூப்பாடு போடுவார்கள். வெம்பிப் புழுங்குவார்கள். வெகுமக்கள் அரசியலுக்கும் இவர்களுக்கும் ஆயுள் காலம் நெடுக உறவு ஏற்படாது. அரசியல் பற்றிப் பேசி, அரசியலிலிருந்து விலகும், விலக்கும் வேலை பார்ப்பார்கள்.

யதார்த்த விவரங்களிலிருந்து உண்மையைத் தேடினால், பிரிக்காலில் என்ன நடக்கிறது என்பது புரியும். இது முழுமுற்றூடானதல்ல. ஒப்பீட்டுரீதியானது தான்.

பிரிக்கால் தொழிலாளர்கள் இரண்டு அகில இந்திய பொது வேலை நிறுத்தங்களில் ஈடுபட்டுள்ளனர்.

ஆகஸ்ட் 9 வெள்ளையனே வெளியேறு நாளை தோழர் திபங்கர் கலந்து கொண்ட கூட்டத்தில் அனுசரித்துள்ளனர்.

பகத்சிங் நினைவு நாள் கூட்டம் நடத்தினர். பகத்சிங் பேட்ஜ் அணிந்து ஆலைக்குச் சென்றனர்.

இகக(மாலெ) கட்சி காங்கிரசிற்கு ரூ.1 லட்சத்திற்கும் மேல் நிதி வழங்கி உள்ளனர்.

தொழிற்சங்க அங்கீகார சட்டத் திருத்தம், பயிற்சியாளர் உள்ளிட்ட நிரந்தரமற்ற தொழிலாளர் நலன் காக்கச் சட்டம் கோரி மிகப் பெரிய கையெழுத்து இயக்கம் நடத்தினர். ஏஅய்சிசிடியு நடவடிக்கைகளில் முத்திரை பதித்தனர்.

கிராமப்புறங்களுக்குச் சென்று விவசாயத் தொழிலாளர்களுடன் உறவாடுகின்றனர்.

கல்வி வகுப்புகள் நடத்துகின்றனர்.

மக்கள் கோரிக்கைகளுக்காக, போராடி நெடும் பயணம் நடத்தினர்.

விலைஉயர்வு உள்ளிட்ட மக்கள் பிரச்சனைகளில் மக்கள் சந்திப்பு கையெழுத்து இயக்கம் நடத்தினர்.

தொகுதி மக்கள் வாழ்க்கையை அறிய கள ஆய்வு நடத்தினர்.

வர்க்க உணர்வை போராட்ட அரசியல் உணர்வை உயர்த்த, கூட்டு செயல்பாட்டுத் தளத்தை விரிவுபடுத்த நடக்கும் இடைவிடாத முயற்சிகளின் ஒரு பகுதியாக தொழிலாளர் குடும்பத் திருவிழா நடத்தினர்.

இலங்கைத் தமிழர்க்கு ஒருமைப்பாடு தெரிவித்தனர்.

நீலகிரி மக்கள் துயர் துடைக்கச் சென்றனர்.

தோழர் சவுந்தர்ராஜன் கைதைக் கண்டனம் செய்தனர். ஹ÷ண்டாய் உள்ளிட்ட போராட்டங்களை ஆதரிக்கின்றனர்.

மேட்டுப்பாளையம் தொகுதி மக்களின் வளர்ச்சி, முன்னேற்றம், நல்வாழ்க்கைக்கான கோரிக்கை சாசனம் தயாரித்து, மக்கள் ஆதரவு திரட்டுகின்றனர்.

அகில இந்திய இடதுசாரி ஒருங்கிணûப்பின், நாடுகாக்க மக்கள் வாழ்வு காக்க தொழிலாளர் வர்க்கம் எழுவோம் என்ற கூட்டத்தை, கோவையில் நடத்தினர்.

இப்போது, முதலாளித்துவ அரசியலை பாட்டாளி வர்க்க அரசியல் கொண்டு சட்டமன்றத் தேர்தலில் சந்திக்கின்றனர்.

அடுத்து என்ன?

கோவை மாவட்ட பிரிக்கால் எம்ப்ளாயீஸ் டிரேட் யூனியனும் கோவை மாவட்ட பிரிக்கால் தொழிலாளர் தொழிற்சங்கமும் இணைந்து கோவை மாவட்ட பிரிக்கால் தொழிலாளர் ஒற்றுமை சங்கத்தை உருவாக்கி உள்ளன. இச்சங்கம் ஏஅய்சிசிடியுவுடன் இணைக்கப்பட்டுள்ளது. இச்சங்கத்தோடு நிர்வாகம் 07.03.2011 அன்று பேசுகிறது.

துணை யூனிட் தொழிலாளர்கள் பிரச்னை, வேலை நிறுத்தங்கள், சம்பள முடக்கங்கள், ஒப்பந்தங் கள் போடுதல் என பல சிக்கலான, கடினமான பிரச்ச னைகள் சங்கத்தின் முன் தீர்வுக்காகக் காத்திருக்கின்றன.

மறுபுறம் சங்கம், பகுதி மக்களுடன் கைகோர்க்க, மேட்டுப்பாளையம் தொகுதியை ஒரு மக்கள் போராட்டப் பகுதியாக்கும் முயற்சிகளில் தொடரும்.

கட்சி வரும் சட்டமன்ற தேர்தல் உள்ளிட்ட இந்த எல்லா சவால்களையும் எதிர்கொள்ள ஆர்வமுடன் தயார் ஆகிறது.நரபலி! 21ஆம் நூற்றாண்டில் இந்தியா?

கட்சிகள் தேர்தலுக்கு தயாராகின்றன. கூட்டணி உடன்பாடுகள் தொகுதிப் பங்கீடுகள் தலைப்புச் செய்திகளாகின்றன. பொருளாதார ஆய்வறிக்கை 9% பொருளாதார வளர்ச்சி பற்றி பேசுகிறது. தேசிய அரசியல் தேசிய, திராவிட அரசியல், இடது அரசியல், தலித் அரசியல், வட்டார அரசியல் பேசும் அனைத்து சிறு, நடுத்தர கட்சிகளும் திராவிட அரசியல் பேசும் திமுக - அதிமுக பெரிய கட்சிகளுடன் உடன்பாடு கண்டுவருகின்றன. பெரிய கட்சிகளும் சிறிய கட்சிகளுக்கு ‘பெரும்மரியாதை’, ‘கவுரவம்’ கொடுத்து உபச ரிக்கின்றன! ஓர் உச்சகட்ட இருதுருவ (இரு அணி) அரசியல் உருவாகியுள்ளது. பல்துருவ அரசியல் (தனி அடையாள அரசியல், இடது, ஜனநாயக அரசியல்) இருதுருவ அரசியலுக்குள் அய்க்கியமாகி வருகின்றன. தேர்தல் ஜனநாயகத்தை நோக்கி பெரும் கொண்டாட்டமும் குதூகலமும் துவங்கிவிட்டன.

தமிழ்நாட்டின் முகம் தெரியாத ஒரு கிராமத்தில் (கச்சைகட்டி) 4 வயது ஏழை தலித் பெண் குழந்தை நரபலியிடப்பட்டிருக்கிறது! பரளிப்புதூர் தலித்துகள் சாதி வெறியர்களால் மிகக்கொடூரமாகத் தாக்கப்பட்டிருக்கிறார்கள். அதிமுக ஆட்சியில் கொடியங்குளம்; திமுக ஆட்சியில் பரளிப்புதூர்!

கச்சைக்கட்டி (மதுரை) நரபலிக் கொடூரமும் பரளிப்புதூர் (திண்டுக்கல்) தாக்குதலும் ஏழைகளுக்கு எதிரானது. தலித்துகளுக்கு எதிரானது. பெண்களுக்கு எதிரானது. நவீன அறிவியல் சிந்தனைக்கு எதிரானது. முற்போக்கு கலாச்சாரத்துக்கு எதிரானது. நாகரீக மாண்புக ளுக்கு எதிரானது. ஒட்டுமொத்த சமுதாயத்துக்கும் எதிரானது. காட்டுமிராண்டி காலத்து நம்பிக்கைகள், பழக்க வழக்கங்கள், மன்னர் காலத்து மாண்புகள் 21ஆம் நூற்றாண்டில் தொடர்கின்றன!

மதுரைக்கு அருகிலுள்ள தனிச்சியம் என்ற ஊரில், திமுக பிரமுகர்கள் கட்டி வரும் ஒரு தனியார் கல்லூரியில் இருக்கும் கெட்ட ஆவியை (முனியை) விரட்டுவதற்காக ஏழை தலித் பெண் குழந்தை, ராஜலட்சுமி நரபலி கொடுக்கப்பட்டது பகுதி மக்களுக்கு தெரிந் துள்ளது. ஆனால் மாவட்ட நிர்வாகமும் போலீசும் தெரியவில்லை என்கிறது. கெட்ட வழியில் சொத்து சேர்த்த கிராமப்புற பணக்காரர்கள், அரசாங்க ஆதரவுடன் தீயவழிகளில் திடீர் பணக்காரர்களானவர்கள், குற்றமிழைப் பதை தொழிலாகக் கொண்டவர்கள் கூட்டணி சேர்ந்து அந்தக் கல்லூரியை பல கோடி மதிப்பில் கட்டி வருகின்றனர். நீர்ப்பாசன ஏரியின் ஒரு பகுதியை ஆக்கிரமித்து கட்டப்பட்டு வருவதாகவும் சொல்லப்படுகிறது.

இந்தக் கொடூர நிகழ்வுகள் பற்றி கட்சிகள் எதுவும் கவலைப்படவில்லை.! மாபெரும் தேர்தல் ஜனநாயகப் போராட்டத்தில் இறங்கியுள்ளதால் இந்த ‘அற்ப’ விஷயங்களில் கவனம் செலுத்த தேவையில்லையென முடிவு செய்து விட்டன போலும்! ஆறாவது முறை முதல்வா ராக ஆசைக் கனவு காணும் கருணாநிதி,! ‘குடிசைகளே இல்லாத தமிழகம் உருவாகும். அதைக் கண்டு வெளிநாட்டுக்காரர்களே வியந்து போவார்கள்’ என்று கூறி பரவசமடைகிறார்! தமிழ்நாட்டிலிருந்து தீய சக்திகளை விரட்டுவேன் என்று பிறந்த நாளில் சபதமேற்கிறார் ஜெயலலிதா! ஜெயலலிதாவும் கச்சைகட்டி, பரளிப்புதூர் தலித்துகளுக்காக குரலெழுப்பவில்லை. ஆட்சியில் பங்கு பெற்றே ஆக வேண்டும் என்ற தீவிரத்துடன் செயல்பட்டு வரும் காங்கரசும் தலித், பிற்படுத்தப்பட்டவர்களின் ஒற்றுமைக்காக பாடுபடும் ராமதாசும் கண்டுகொள்ளவில்லை. இந்திய கம்யூனிஸ்ட் தா.பாண்டியனும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் ராமகிருஷ்ணனும் அதிமுகவை ஆட்சியிலேற்றுவோம் என்று உறுதிமொழி ஏற்கிறார்கள்! இலங்கைக்குச் சென்ற திருமாவளவன் அவமானப்படுத்தப்பட்டதை கண்டித்து மதுரை தொடங்கி மாநிலம் முழுவதும் கண்டன முழக்கங்களை எழுப்பியுள்ளது விடுதலைச் சிறுத்தைகள். கருணாநிதியும் திமுகவும் தலித்துகளுக்கு விரோதிகள் என்று மதுரையில் முழுக்கமிடுகிறார் புதிய தமிழகம் கிருஷ்ணசாமி! அறியத்தக்க வகையில் பாராட்டத்தக்க வகையில் தீண்டாமை பிரச்சனையை முன்னுக்கு கொண்டு வந்த இகக(மா) சார்பு ‘தீண்டாமை ஒழிப்பு முன்னணி’ பின்னுக்கு சென்றுவிட்டது! கச்சை கட்டி, பரளிப்புதூர் பிரச்சனைகளில் எதுவும் செய்யவில்லை. உத்தபுரமும் தேர்தல் வரை ஒத்தி வைக்கப்பட்டுள்ளதாகத் தெரிகிறது.

ஆவேசப்பட்ட விடுதலை சிறுத்தை இளைஞர்களிடம் கட்சி வளர்ச்சிக்கு பாதிப்பு இல்லாமல் போராட்டம் நடத்திக்கொள்ளுங்கள் என திருமாவளவன் ஆலோசனை வழங்கியுள்ளார். விமானம் ஏறி இலங்கை வரை சென்ற திருமாவளவனால் பரளிப்புதூருக்கு செல்ல முடியவில்லை. மதுரையில் திமுகவுக்கு எதிராக முழக்கம் எழுப்பிய புதிய தமிழகம் கிருஷ்ணசாமியால் கச்சைகட்டிக்கு செல்ல முடியவில்லை.

தேர்தல் சமயத்தில் தலித்துகளோடு நிற்பது தெருவுக்கு வருவது தலித் அல்லாதவர்களின் வாக்குகளை பாதித்துவிடும் என்று எண்ணுகி றார்கள்போலும். கருணாநிதியையும் ஜெயலலிதாவையும் கோபப்படுத்தும் எனக் கவலைப்படு கிறார்கள் போலும். கருணாநிதி தலித் ராசாவை கைவிட்டுவிட்டது போல தலித் தலைவர்கள் தலித்துகளை கைவிட தயாராகிவிட்டார்கள் போலும்! தீண்டாமை ஒழிப்பு முன்னணி தலித்துகளுக்காக தெருவுக்கு வந்தால் தேர்தல் கால சமன்பாட்டை குலைத்துவிடும் என்று மார்க்சிஸ்டுகள் கவலைப்படுகிறார்கள் போலும்! சிறப்பு பொருளாதார மண்டலங்களுக்காக மதுரையிலும் அனைவருக்கும் வீடு கேட்டு திண்டுக்கல்லிலும் வீதிக்கு வந்த மார்க்சிஸ்ட் தலைவர் பாலபாரதி கச்சைகட்டி, பரளிப்புதூர் தலித்துகளுக்காக குரலெழுப்பாதது ஆச்சரியமளிக்கிறது. உத்தபுரம் சென்ற டாக்டர் கிருஷ்ணசாமியை தாக்கிய முக்குலத்தோர்களை ஆதரித்து அறிக்கை விட்டவர் தா.பாண்டியன். அவர் கச்சைகட்டி, பரளிப்புதூர் தலித்துகளுக்காக குரலெழுப்பாதது ஆச்சரியம் இல்லை. மொத்தத்தில் தேர்தல் சந்தர்ப்பவாதம் திமுக தொடங்கி அனைத்து கட்சிகளையும் ஆட்சி செய்கிறது. அடக்கி ஆளுகிறது.

மூட நம்பிக்கைகளுக்கு எதிரானவை முற்போக்கானவை என்று சொல்லிக் கொள்ளும் திராவிட அமைப்புகள் வீதிக்கு வந்திருக்க வேண்டும். தலித் கட்சிகள் நரபலி, பரளிப்புதூர் பிரச்சனைகளில் முன்வந்திருக்க வேண்டும். இனம், தமிழ், சிறுபான்மை நலம், முன்னேற்றம் பேசும் அமைப்புகள் கண்டனக் குரல் எழுப்பியிருக்க வேண்டும்.

கல்வி, மருத்துவம் உள்ளிட்ட சமூகத் துறைகளில் இந்த துறைகளுக்கு சம்பந்தமில்லா தவர்கள் நுழைந்து விட்டார்கள். கிராமப்புற வளர்ச்சித் திட்டங்கள் என்ற பேரால் ஒதுக்கப்படும் நிதியை சட்டவிரோத வழிகளில் அபகரித்தவர்கள். (ஒவ்வொரு ஊராட்சிக்கும் ஒரு கோடிவரை நிதி ஒதுக்கப்பட்டுள்ளதாக திமுக அமைச்சர்கள் சாதனை பேசுகிறார்கள்; இந்த ஒரு கோடி நிதியில் ஒரு ரூபாய் கூட தலித் கிராமங்களுக்கு வந்து சேரவில்லையென பரளிப்புதூர் தலித் திமுக ஊராட்சி மன்ற உறுப்பினர் திரு.பஞ்சு சொல்கிறார்)! குற்றம் செய்வதை தொழிலாகக் கொண்டு சொத்து சேர்த்தவர்கள், இந்நாள், முன்னாள் அமைச்சர்கள், அரசியல்வாதிகள், ஒப்பந்தக்காரர்கள், கட்சித் தலைவர்கள், கல்லூரிகள், பல்கலைக் கழகங்கள், மருத்துவமனைகள் உருவாக்கி வருகிறார்கள். இதற்காக நிலங்களை அபகரித்து வருகிறார்கள். விவசாயத்தை, விவசாயிகளை அழித்து வருகிறார்கள். எப்படியாவது பணம், எதைச் செய்தாவது சொத்து என்பது வாழ் க்கை நெறியாக, வழிகாட்டும் கொள்கையாக மாறிவிட்டது. 20 ஆண்டுகால புதிய பொரு ளாதாரக் கொள்கைகள் (தனியார்மயம், தாராளமயம், உலகமயம்) உருவாக்கியுள்ள விளைவுகள் இவைதான். தமிழ்நாட்டின் வளர்ச்சி முன்னேற்றத்தின் கதை இதுதான். கிராமப்புற ஏழைகளை உறிஞ்சி, குற்றவழிக ளில் சொத்து சேர்த்து, அரசாங்க நிதிகளைக் கொள்ளையடித்து திடீர் பணக்காரர்களான வர்கள் பொருளாதார வாழ்வை ஆக்கிரமித்துக் கொள்ள தனியார்மயமாக்கம் வழிசெய்கிறது. தறிகெட்ட வகையில் செயல்படுத்தப்படும் தனியார்மயமாக்கம் இந்தக் குற்றக்கும்பல்களை ஊட்டி வளர்க்கிறது. இந்தக் குற்றக் கும்பல்கள் கிராமப்புற - நகர்ப்புற ஏழைகளுக்கு எதிராக, பெண்களுக்கு எதிராக, தலித்துகளுக்கு எதிராக விவசாயிகளுக்கு எதிராக கூட்டணி அமைத்து அரசாங்க ஆதரவுடன் குற்றம் புரிந்து வருகின்றன.

ராஜலட்சுமி நரபலியிடப்பட்டு 40 நாட்களுக்குப் பிறகும் காவல்துறை, அரசாங்க நிர்வாகம் எதுவும் செய்யவில்லை! மதுரை மாவட்ட உயர் போலீஸ் அதிகாரி இது நரபலி இல்லை என வாதிடுகிறார். மதுரை மாவட்ட ஆட்சியர் இது போன்ற ஒரு சம்பவமே எனக்கு தெரியாது என்று சொல்கிறார்! சமூக விரோதக் குற்றக் கும்பல்களும் அரசாங்க நிர்வாகமும் கைகோர்த்து செல்கின்றன. பல வகையான குற்றக் கும்பல்களும் அரசாங்க நிர்வாகத்தைக் காவல்துறையைக் கட்டுப்படுத்துகின்றன. குற்றப் பொருளாதாரமும் குற்ற அரசியலும் கைகோர்த்து சமூகத்துக்கு எதிராக திரும்பியுள்ளன.

பெரும்பான்மை உழைக்கும் மக்களுக்கெதிராக குற்றங்கள் செய்து கோடீசுவரர்களாகும் குற்றப் பொருளாதாரமே ‘முதலாளித்துவ வளர்ச்சிப் பாதை’. சேர்வராயன் மலைகளை அழித்து மலைவாழ் மக்களை ஒழித்து ‘வேதாந்தா’ வளர்ச்சி வேதம் பாடுகிறது. காடு, மலை, கடல், வயல்வெளி அனைத்தையும் அபகரித்து உள்நாட்டு, வெளிநாட்டு முதலா ளித்துவ குற்றக் கும்பல் பேயாட்டம் போடுகிறது. இது குற்ற அரசியலாக கொடிகட்டிப் பறக்கிறது. ஸ்பெக்ட்ரம் போன்ற பெரும்ஊழல்கள் கொள்ளைகளும் பேயாட்டம் போடுகின்றன. கூட்டணி அரசியலும் கூட்டணி அரசாங்கமும் இதிலிருந்துதான் உருவாகின்றன. இதைத்தான் கூட்டணி ஆட்சி நிர்ப்பந்தம் என்று மன்மோகன் சிங் கூறுகிறார். இதற்கு எதிராக மக்களோ, போராடும் மக்கள் அமைப்புகளோ பேசக் கூடாது என்கிறார்கள். நீதிமன்றமோ, பத்திரிகைகளோ பேசக்கூடாது என்கிறார்கள். குற்றப் பொருளாதாரத்துக்கெதிராக குற்றமய அரசியலுக்கெதிராக உழைக்கும் மக்களை அணிதிரட்டுவதே ‘மக்கள் சார்பு வளர்ச்சிப் பாதை’க்கான அரசியல். ஜனநாயக அரசியல் போராட்டம். இந்தப் போராட்டத்தில் தலித் அரசியல் சக்திகள் முன்வரவேண்டும். மனித உரிமை, குடியுரிமை அமைப்புகள் முன்வர வேண்டும். இடது அரசியல் சக்திகள் முன்வர வேண்டும். முற்போக்கு சக்திகள், ஜனநாயக மதிப்பீடுகளுக்காக நிற்கும் மாணவர்கள், இளைஞர்கள் முன்வர வேண்டும். ஆணாதிக்க சிந்தனைகளை நடைமுறைகளை எதிர் த்துப் போராடும் உழைக்கும் பெண்கள் முன்வர வேண்டும். முதலாளித்துவ வளர்ச்சிப் பாதையை எதிர்த்து மக்கள் சார்பு வளர்ச்சிப்பாதைக்காக இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சி மார்க்சிஸ்ட் லெனினிஸ்ட் களத்தில் நிற்கிறது. இந்தப் போராட்டத்தில் நகர்ப்புற தொழிலாளர்களும் நாட்டுப்புற ஏழைகளும் முன்னணியில் நிற்கிறார்கள். இது உழைக்கும் மக்களை ஆதார சக்தியாகக் கொண்ட முற்போக்கு, ஜனநாயக, இடதுசாரி சக்திகளின் போராட்டமாக உருவெடுக்க வேண்டும்.

கச்சைகட்டி, பரளிப்புதூர் தலித்துகளுக்காக மார்க்சிஸ்ட்-லெனினிஸ்ட் கட்சி துணிச்சலுடன் முன்முயற்சி எடுத்தபோது வேதாந்தாவுக்கு எதிராக குரலெழுப்பிய போது பினாயக் சென்னுக்கு ஆதரவாக களத்தில் நின்றபோது பலதரப்பட்ட அறிவாளிகள், பத்திரிகையாளர்கள், சிவில் உரிமை பிரமுகர்கள், இடது, ஜனநாயக, முற்போக்கு பிரதிநிதிகள் ஆதரவாக நின்றனர். இது பெரும் நம்பிக்கை அளிப்பதாக உள்ளது.

இந்த தேர்தலில் மாற்றத்திற்கெதிரான மக்களுக்கெதிரான சக்திகளின் ஒட்டுமொத்த அணிவரிசையை எதிர்த்து மாற்றத்திற்கான மக்களுக்கான அரசியல் கட்சி இககமாலெ புரட்சிகர துணிச்சல், அர்ப்பணிப்புடன் முன்நிற்கிறது. போராட்டம் கடுமையானது. தொடரும் இந்தப் போராட்டத்தில், இருதுருவ அரசியலுக்கெதிராக திராவிட அரசியல் என்ற பெயரால் திரண்டுள்ள இருண்ட, தீய சக்திகளுக்கெதிராக, மாற்றத்தை விரும்பும் சக்திகள் மாற்றத்திற்காகப் போராடும் மார்க்சிஸ்ட் - லெனினிஸ்ட் கட்சியுடன் கரம் கோர்க்க வேண்டும்.

- பாலசுந்தரம்

நரபலிக்குக் காரணமானவர்கள் கைது செய்யப்பட வேண்டும் என்றும் கொல்லப்பட்ட சிறுமியின் குடும்பத்துக்கு ரூ.10 லட்சம் நிவாரணம் வழங்கப்பட வேண்டும் என வலியுறுத்தியும் மாலெ கட்சி மாநிலச் செயலாளர் தோழர் பாலசுந்தரம் தலைமையிலான குழு பிப்ரவரி 21 அன்று அதிகாரிகளை சந்தித்தது. பிப்ரவரி 23 அன்று பத்திரிகை யாளர் கூட்டம் நடத்தியது. இதைத் தொடர்ந்து ஒருவர் கைது செய்யப் பட்டுள்ளார். ஆனால் அவர் நாக்கைக் கடித்துக்கொண்டதால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். அவரிடம் இருந்து எந்தத் தகவலையும் பெற முடியவில்லை. அவரது தந்தை சிறுமியைக் கொன்றதை ஒப்புக்கொண்டுள்ளார்.

ஜனவரி 26 அன்று இந்தப் பிரச்சனையில் முற்போக்கு பெண்கள் கழக மாநிலப் பொதுச் செயலாளர் தோழர் உஷா, அகில இந்திய மாணவர் கழக மாநிலச் செயலாளர் தோழர் திவ்யா ஆகியோர் உள்ளிட்ட உண்மை அறியும் குழு கொல்லப்பட்ட சிறுமியின் குடும்பத்தினரை சந்தித்தது. இந்தக் குழுவில் மக்கள் சிவில் உரிமை கழகத்தைச் சேர்ந்தவர்களும் பங்கேற்றனர்.

பரளிபுதூர் தலித் மக்கள் மீது நடந்த தாக்குதலை ஒட்டி மாலெ கட்சியின் உண்மை அறியும் குழு மாலெ கட்சி மாநிலச் செயலாளர் தோழர் பாலசுந்தரம் தலைமையில் பகுதிக்கு சென்றது. திண்டுக்கல் மாவட்ட மாலெ கட்சி பொறுப்பா ளர் தோழர் ஜெயவீரன், முற் போக்கு பெண்கள் கழக மாநிலத் தலைவர் தோழர் தேன்மொழி, மாநிலப் பொதுச் செயலாளர் தோழர் உஷா, அகில இந்திய மாணவர் கழக மாநிலச் செயலாளர் தோழர் திவ்யா, திண்டுக்கல் மாவ ட்ட மாலெ கட்சி பொறுப்பாளர் தோழர் ராமசந்திரன், ஏஅய்சிசிடியு மாநில பொதுக்குழு உறுப்பினர் தோழர் மணிவேல், மதுரை மாவட்டக்குழு உறுப்பினர் தோழர் மதிவாணன் குழுவில் இருந்தனர்.

தமிழ்நாட்டில் கட்சிக் கட்டுதலின் வழித்தடம்: ஒரு சுருக்கமான சித்திரம்


டி.பி.பக்ஷி

வெகுமக்கள் அரசியல் முன்முயற்சிகள் என்ற அரங்கில் நமது வர்க்க அணுகுமுறை மற்றும் புரட்சிகர ஜனநாயக நோக்குநிலை ஆகியவற்றில் இருந்து நாம் பல்வேறு வழிவிலகல்களை எதிர்கொண்டோம்.

இந்தப் பின்னணியில் தனித்த செயல்பாடு கொண்ட போக்கு, குழுவாதப் போக்கு, வட்ட உணர்வு, கருத்தியல் குழப்பம், இணைவாதம் அல்லது பல்வேறு மய்யங்கள் என்ற வடிவில் அமைப்புரீதியான அராஜகம் ஆகிய வற்றால் குறிக்கப்படுகிற தீவிரமான ஸ்திரமின்மையை ஒற்றுமையின்மையை தமிழ்நாட்டில் கட்சி கட்டுதல், எதிர்கொண்டது.

நமது எட்டாவது கட்சி காங்கிரஸ் ஆவணத்தில் விவரிக்கப்பட்டுள்ள இந்த நிலைமைகள் வகைமாதிரி ஆகும்.

நமது கட்சியில், கட்சி அமைப்பு முறை இன்னும் துவக்கக் கட்டத்தில் உள்ள பலவீன மான மாநிலங்களுடன் கண்டுணரத் தக்க விதம் இணைந்துள்ளது. கட்சி தன்னம்பிக்கை கொண்ட உறுதியான அமைப்பாக மாறும் போது மறைந்து விடக் கூடிய, பல்முளைக்கும் போது ஏற்படும் பிரச்சனைகள் என இவற்றைப் பார்க்கலாம். ஆனால் குழுவாதமும் தன்னை மறுஉற்பத்தி செய்துகொள்கிறது. விரிவடைந்து கொண்டிருக்கிற கட்சியில் கூட அது தொடர முடியும். எனவே அதை முளையிலேயே கிள்ளி எறிவது அவசியம். அதற்கு எந்த வகையிலும் நீண்ட ஆயுளைத் தரக் கூடாது. உதாரணமாக, நமது கட்சியின் தமிழ்நாடு அமைப்பு இந்தப் பிரச்சனையால் நீண்ட காலமாக பாதிக்கப்பட் டிருந்தது. அது மாநிலத்தில் நமது வேலைகளை மட்டுப்படுத்தியது; சிதறடித்தது; பல முக்கிய மாவட்டங்களில் கட்சி அமைப்பை மீண்டும் மீண்டும் ஸ்திரமற்றதாக்கியது.

கட்சி இந்த நிலைமைகளை அப்படியே விட்டுவிடவில்லை. இந்தத் தீவிரமான பிரச்சனைகளுக்கு முடிவு கட்ட விடாப்பிடியான போராட்டம் நடத்தப்பட்டது. இந்த நீண்ட போராட்டத்தில் நாம் இரண்டு மைல் கற்களை அடையாளப்படுத்தலாம்.

ஒன்று, 1991 - 1992 கட்டத்தில் தமிழ் நாட்டின் கட்சி மாநிலக் கமிட்டியைக் கலைப் பது என்ற அசாதாரணமான முடிவை மத்தியக் கமிட்டி எடுத்தது. ஒரு குறிப்பிட்ட காலத்தில் புதிய மாநிலக் கமிட்டியை தேர்ந்தெடுக்கும் கட்சி மாநில மாநாட்டில் நிறைவு பெறும் ஒரு சிறப்பு இயக்கத்தை நடத்த 5 பேர் கொண்ட மாநில தலைமைக் குழுவை அமைத்தது.

இந்த இயக்கத்தில் மூன்று அம்சங்களுக்கு அழுத்தம் தரப்பட்டது.

அ) இந்திய மக்கள் முன்னணியின் பெயரால் கட்சியை நீர்த்துப் போகச் செய்யும் பிரச்சனையில் கருத்தியல்ரீதியாக தெளிவான பிரித்து நிறுத்தும் கோட்டை வரையறுப்பது; தமிழக குறிப்பியல்புகள் என்ற பெயரில் தலித் திய அல்லது திராவிட போக்குகளை கொத்திப் பொறுக்கி இணைப்பது; திட்டமிடப்பட்ட, தொடர்ச்சியான, தொழில்முறை தொழிற்சங்க வேலையை பொருளாதாரவாதத்துடன் குழப்பிக் கொள்வது; அராஜகவாதச் சுமையை மறைக்க இடதுசாரி வாய்ச்சவடால், மேலோட்டமான வேலை நடையை மேற்கொள்வது; மத்தியத்துவப்படுத்தப்பட்ட கட்சி என்ற கருத்துக்கு, அதன் ஒருபடித்தான தன்மைக்கு சவால் விடுப்பது; கட்சியின் மய்யமும் ஒரு குழு என்று சொல்லி கூட்டமைப்புவாதத்தை முன் வைப்பது, குழுவாதத்தை நியாயப்படுத்துவது.

ஆ) கிராமப்புற மற்றும் நகர்ப்புற தொழில் பகுதிகளில் சில ஸ்திரமான, துடிப்பான போராட்டப் பகுதிகளை வளர்த்தெடுக்க பாடுபடுவது.

இ) வேர்க்கால் மட்டத்தில், மேலோட்டமான அகநிலைவாத வேலைநடைக்கு மாறாக, கட்சி பற்றிய அனைத்தும் தழுவிய பார்வையும், பரிசோதனைக் கூடங்களை உருவாக்குவதில் கவனக் குவிப்பு மற்றும் ஆய்வு கொண்ட உயிரோட்டமான வேலை நடையை வளர்த்தெடுக்கும் அடிப்படையிலான புதிய பரிசோத னைகளுக்கு வாய்ப்புக்கள் இருக்கும் விதம் படைப்பாற்றல்மிக்க விதத்தில் பொருத்துவதை தடுக்காத செயல்தந்திரமும் கொண்ட ஒரு கட்சி ஊழியர் குழாமை உறுதிப்படுத்துவது.

1992 ஏப்ரல் 22 அன்று நடந்த நன்கு கட்டமைக்கப்பட்ட மாநில மாநாட்டில் இந்த இயக்கம் நிறைவுற்றது. அது உண்மையில் ஓர் உயிரோட்டமான மாநாடாக இருந்தது. அனைத்து அரசியல், கருத்தியல் நடைமுறை கேள்விகளிலும் பிளவு ஏற்பட்டது; புதிய மாநிலக் கமிட்டி தேர்ந்தெடுக்கபட்டது. இறுதியாக பதவிக் காலம் முடிந்த மாநில தலைமைக் குழு முன்வைத்த பட்டியல் தேர்ந்தெடுக்கப்பட்டது. புதிய மாநிலக் கமிட்டி ஒவ்வொரு பிரச்சனையிலும் வேறுபாடுகளை பதிவு செய்த பிளாக்கின் தலைமை தோழர்களையும் உள்ளடக்கியதாக இருந்தது.

துரதிர்ஷ்டவசமாக இவர்கள், மாறுபட்ட கருத்துக்களுடன் புதிய மாநிலக் கமிட்டி யையே நிராகரித்தனர். சிந்தனையில் சுதந்திரம், செயலில் ஒற்றுமை என்ற லெனினியக் கோட்பாட்டுக்கு கட்டுப்பட மறுத்தனர். கண்கூடாக தெரியும் வளர்ச்சிகளுடன் தமிழ்நாட்டில் ஒரு புதிய பயணம் துவங்கியது. ஆனால் அனைத்து ஓட்டைகளையும் சரியாக அடைக்க முடியவில்லை. இதனால் நாம் பெற்ற வெற்றிகள் வடிந்து போயின. ஒரு குறிப்பிட்ட காலத்துக்குப் பிறகு உறுதியை குலைக்கும் சக்திகள் மீண்டும் மேலே எழத் துவங்கின.

இரண்டாவதாக, ஏழாவது மற்றும் எட்டாவது காங்கிரசுகளுக்கு இடையிலான 2003 - 2007 காலகட்டம். இந்த கட்டத்தில் கட்சி பழைய நிலைக்குத் திரும்பியது. முக்கியமான கட்சித் தலைவர்கள் இடையே காத்திரமான வேறுபாடுகள் என்ற பரிமாணமும் சேர்ந்து கொண்டது. இது கட்சி காங்கிரசுக்கு முன்பு நடந்த மாநில மாநாட்டில் பதவிக் காலம் முடிந்த மாநிலக் கமிட்டியால் முன்வைக்கப் பட்ட அதிகாரபூர்வ பட்டியல் தோல்வி பெறுவதற்கு இட்டுச் சென்றது. சூழலை எதிர்கொள்ள புதிதாக உருவாக்கப்பட்ட கட்சி மத்தியக் கமிட்டியின் தென்பிராந்திய குழுவின் வழிகாட்டுதலில் ஒரு புதிய இயக்கம் வடிவமைக்கப்பட்டது. தமிழ்நாட்டின் மொத்த கட்சி சக்திகளையும், வெவ்வேறு கருத்துக்கள் கொண்டிருந்தாலும், ஒன்றுபடுத்துவதில் இந்த இயக்கப்போக்கு துவக்கப்பட்டது. ஒவ்வொரு தலைமை தோழருக்கும் குறிப்பான முக்கிய பொறுப்புக்கள் தரப்பட்டன. பின்வரும் கடமைகள் முன்னெடுக்கப்பட்டன.

அ) பல சிறிய புள்ளிகளில் உள்ள நமது கிராமப்புற வேலைகளை அடிப்படையாகக் கொண்டு தமிழ்நாட்டில் மாநில அளவிலான விவசாயத் தொழிலாளர் அமைப்பைக் கட்ட பாடுபடுவது. இந்த இயக்கப்போக்கை துவக்க, ஒரு புதிய பார்வையை, திசைவழியை உருவாக்க, நமது வளர்ச்சிக்கான புறநிலைரீதியான வெளியை அடையாளம் காண, குறிப்பிட்ட கால அளவிலான வேலைத் திட்டத்தை உருவாக்க, சீர்காழியில் மாநில அளவிலான 2 - நாட்கள் பயிற்சிப் பட்டறை நடத்தப்பட்டது.

தொழிலாளர் வர்க்க அரங்கில் பன்முகப்பட்ட முன்முயற்சிகளுடன் அமைப்பாக்கப்பட்ட துறையில் நமது வேலைகளை மறுகட்டமைப்பு செய்வது, அமைப்புசாரா தொழிலாளர் அரங்கில் திட்டமிட்ட விரிவாக்கம்.

ஆ) வெகுமக்கள் அரசியல் முன்முயற்சிகள் என்ற அரங்கில், தொடர்ச்சியான ஆனால் சம்பி ரதாயமான, அடையாள, தாழ்ந்த மட்டத்தி லான மாநில அளவிலான அரசியல் நடவடிக்கைகள் என்பதற்கு பதிலாக, வேர்க்கால் மட்டத்தில் அடிப்படை பிரச்சனைகளில் நமது போராட்டங்களை மய்யப்படுத்தும் திறன்மிக்க அரசியல் முன்முயற்சிகள்; சில குறிப்பிட்ட கட்டங்களில் பெருந்திரள் மக்கள் பங்கேற்புடன் மாநில அளவிலான அரசியல் இயக்கங்கள்.

இ) சில பழைய பகுதிகளில், சில வட்டங்களில் சுருங்கி நிற்பதற்கு விடை கொடுத்து, புதிய பகுதிகளில், புதிய வட்டங்களில் இடதுசாரி நீரோட்ட சக்திகளுடன் ஊடாடல் மீது அழுத்தத்துடன் துணிச்சலான விரிவாக்கத்துக்கு பாடுபடுவது.

ஈ) கூட்டமைப்புவாதப் போக்கை, வட்ட உணர்வை, குழுவாதத்தை விடாப்பிடியாக எதிர்ப்பது, கட்சியின் மய்யப்படுத்தப்பட்ட செயல்பாடு, சிந்தனையில் சுதந்திரம், செயலில் ஒற்றுமை என்ற உணர்வு ஆகியவற்றை ஜனநா யக மத்தியத்துவத்தின் அடிப்படைகளாக உயர்த்திப் பிடிப்பது; நமது விரிவடைகிற மக்கள் செல் வாக்கில் இருந்து பெருவாரியான கட்சி உறுப்பினர்கள் சேர்ப்பது; கட்சி அமைப்புக ளுக்குள் அவர்களைக் கொண்டுவருவது; உள்ளூர் கமிட்டிகளை, கிளைகளை வலுப்படுத்து வது; கட்சி மாநில ஏடான தீப்பொறியை முறைப்படுத்துவது; பற்றியெரியும் பிரச்சனைகளில் வெளியீடுகள் வெளியிடுவது.கந்தர்வகோட்டை சட்டமன்ற தொகுதி


மக்கள் கோரிக்கை சாசனம்ஏழை, சிறுகுறு விவசாயிகள் நலன் காக்க

தனியார் பண்ணை நிலங்கள் கைப்பற்றப்பட்டு நிலமற்றவர்களுக்கு தரப்பட வேண்டும்.

ஆகக்கூடுதலான நிலத்தை விவசாயத்துக்கு பயன்படுத்தும்விதம் வன நிலங்களை அரசு விவசாய பண்ணை நிலங்களாக மாற்ற வேண்டும்.

நில மேம்பாட்டிற்கு, விவசாயத்திற்கு தடை இன்றி நிறுவனக் கடன் வழங்கப்பட வேண்டும்.

விவசாய இடுபொருட்களின் விலையை குறைத்து விவசாய விளைபொருட்களின் விலையை உயர்த்த வேண்டும்.

நிறுவனம்சாராக் கடன்களில் சிக்கித் தவிக்கும் ஏழை, சிறு, குறு விவசாயிகளை கடனில் இருந்து மீட்க தலா ரூ.25,000 நிவாரணம் வழங்கப்பட வேண்டும்.

பசிப்பயிர்களை ஊக்குவிக்க உரிய நேரத்தில் பயிர்க் கடன்கள் வழங்கப்பட வேண்டும்.

ஆழ்குழாய் கிணறு போட்டால்தான் மின் இணைப்பு வழங்க முடியும் என்கிற நிலையை மாற்றி, ஆழ்குழாய் கிணறு போட நிலமிருந்தால் அவர்களுக்கு மின்இணைப்பு வழங்கி ஆழ்குழாய் கிணறு போட வழி செய்ய வேண்டும்.

தோட்டப் பயிர்களை அதிகரிக்க தோட்டப் பயிர் செய்யும் விவசாயிகளை பாதுகாக்க உணவு பதப்படுத்தும் திட்டங்கள் வேண்டும்.

விவசாயத்தை மேம்படுத்த விவசாயப் பகுதிகளில் கிராம சாலைகளை மேம்படுத்த வேண்டும்.

தொகுதியின் கிராமப்புற பொருளாதாரத்தில் மாற்றம் வர

தொகுதியில் உள்ள, கோவில், மடம் அறகட்டளை, மூடப்பட்ட ஆலை நிலங்கள், தனியார் கல்வி நிறுவனங்கள் நிலங்கள், தனியார் மருத்துவமனை நிலங்கள், நுôற்றுக்கும் மேற்பட்ட பண்ணை நிலங்கள் ஆகியவற்றைக் கைப்பற்றி, நிலமற்ற விவசாயத் தொழிலாளர்களுக்கு, ஏழை விவசாயிகளுக்கு தலா 2 ஏக்கர் வழங்க வேண்டும்.

வீட்டுமனை இல்லாத அனைவருக்கும் எந்த வகை நிலமாக இருந்தாலும், வகைமாற்றம் செய்து வீட்டுமனை பட்டா வழங்க வேண்டும்.

வறுமை கோட்டு பட்டியலில் உள்ள தகுதியற்ற வசதி படைத்தவர்களை நீக்கி, விடுபட்டவர்களை பட்டியலில் சேர்த்து பயன் பெற செய்ய வேண்டும்.

குடும்ப அட்டை ஒன்றுக்கு 50 கிலோ அரிசி, 50 கிலோ கோதுமை ரூ.1 விலையிலும் 10 லிட்டர் மண்ணெய் ரூ.2 விலையிலும் இதர பொருட்கள் மலிவு விலையிலும் வழங்க வேண்டும்.

பொது விநியோக அங்காடிகளை அதிகப்படுத்த வேண்டும். பகுதி நேர அங்காடிகளை விரிவு படுத்த வேண்டும்.

கலைஞர் வீடு, இந்திரா கூட்டுக்குடியிருப்பு வீடுகளுக்கு ரூ.2,00,000 என நிதி உயர்த்தப்பட வேண்டும்.

பழுதடைந்த கூட்டுக் குடியிருப்பு வீடுகளுக்கு மராமத்து செய்ய வீட்டுக்கு ரூ.50,000 வழங்கப்பட வேண்டும்.

நகரங்களுக்கு வேலை தேடிச் செல்லும் அமைப்புசாரா தொழிலாளர்களுக்கு இலவச பஸ் பாஸ் வழங்கப்பட வேண்டும்.

ஆடு, மாடு, கோழி வளர்க்க, சிறு தொழில் செய்ய கடன் வழங்கப்பட வேண்டும்.

கோலப்பன் குழு பரிந்துரைப்படி மழை கோட், காலனி வீடு என அனைத்து சலுகைகளும் வழங்கப்பட வேண்டும்.

ஸ்ரீகிருஷ்ணா கமிசன் பரிந்துரைப்படி ரூ.11,000 குறைந்தபட்ச கூலி வழங்கப்பட வேண்டும்.

நிலச்சீர்திருத்த ஆணையம் அமைக்கப்பட வேண்டும்.

நில உச்சவரம்பு சட்டத்தில் 5 ஸ்டேன்டேர்டு ஏக்கர் உச்சவரம்பு என விதிக்கப்பட வேண்டும்.

பூதான் நிலங்களை மீட்டு உரியவர்களுக்கு வழங்க வேண்டும்.

ஊரக வேலை உறுதித் திட்டத்தில் ஆண்டுக்கு 200 நாட்கள் வேலை, ரூ.200 கூலி, குடும்பத்தில் இருவருக்கு வேலை, வேலையில்லா காலப்படி ஆகியவை உறுதி செய்யப்பட வேண்டும்.

அப்படி உறுதி செய்யப்பட்டால் வருடத்திற்கு குடும்பத்திற்கு ரூ.80,000 கிடைக்கும். வறிய மக்களின் வாங்கும் சக்தி அதிகரிக்கும். கிராமப்புற பொருளாதாரத்தில் மாற்றம் வரும்.

கல்வி

ஆரம்பப் பள்ளிகள் இல்லாத கிராமமே இல்லை என்கிற நிலை வர வேண்டும்.

ஊராட்சிக்கு ஒரு நடுநிலைப் பள்ளி வேண்டும்.

லட்சம் மக்கள் வாழும் பகுதியில் 2 மேல்நிலை பள்ளிகள் மட்டும் உள்ளன. அனைத்து நடுநிலைப் பள்ளிகளும் உயர்நிலைப் பள்ளிகளாகவும், அனைத்து உயர்நிலைப் பள்ளிகளும் மேல்நிலைப் பள்ளிகளாகவும் தரம் உயர்த்தப்பட வேண்டும்.

தாலுகாக்கள் ஒவ்வொன்றிலும் அரசு கலைக் கல்லுôரி, அரசு பொறியியல் கல்லுôரி, அரசு தொழிற்பயிற்சி நிலையம், ஆசிரியர், நர்சிங், பாலிடெக்னிக் நிறுவனங்கள் உள்ளிட்ட உயர் கல்வி நிறுவனங்கள் அமைக்கப்பட வேண்டும்.

22.82% இருக்கும் ஆதிதிராவிட மக்களுக்காக, ஆதிதிராவிடர் நலப்பள்ளிகள் அமைக்கப்பட வேண்டும்.

அனைத்து உயர்நிலை, மேல்நிலை பள்ளிகளிலும் மாணவர் விடுதிகள் அமைக்கப்பட வேண்டும்.

கரம்பகுடியில் ஆதிதிராவிட பெண் மாணவர் விடுதியும் பெண்கள் மேல்நிலை பள்ளிக்கு விளையாட்டுத் திடலும் அமைக்கப்பட வேண்டும்.

கரம்பகுடி, கந்தர்வகோட்டை பகுதிகளில் மக்கள் இயல்பாக கூடும் இடத்தில் நூலகத்திற்கு சொந்த கட்டிடம் கட்டப்பட வேண்டும்.

மருத்துவம்

கந்தர்வகோட்டை மருத்துவனையின் தரம் உயர்த்தப்பட வேண்டும்.

ஒவ்வோர் ஊராட்சியிலும் ஒரு கிராம செவிலியர் அமர்த்தப்பட வேண்டும். காவல்துறையினர் பெறு வது போல் கிராம செவிலியர்களுக்கு அனைத்து சலுகைகளும் வழங்கப்பட்டு தங்கியிருந்து வேலை செய்ய வசதி செய்து தரப்பட வேண்டும்.

5000 பேருக்கு ஓர் ஆரம்ப சுகாதார நிலையம் வேண்டும்.

கரம்பகுடி மருத்துவமனை தாலுக்கா மருத்துவ மனையாக தரம் உயர்த்தப்பட்டு புதிய கட்டிட வசதி செய்யப்பட வேண்டும்.

அனைத்து தாலுகா மருத்துவமனைகளும் 24 மணி நேரமும் இயங்கக் கூடிய மருத்துவமனைகளாக மாற்றப்பட வேண்டும். பொது மருத்துவர், பல், எலும்பு முறிவு, குழந்தைகள் பெண்கள் மருத்துவத்துக்கு சிறப்பு மருத்துவர்கள் நியமனம் செய்யப்பட வேண்டும்.

பார்வையாளர்கள் தங்க, வாகனம் நிறுத்த வசதி செய்யப்பட வேண்டும்.

எக்ஸ்ரே, ஸ்கேன், ரத்தப் பரிசோதனை, பிரேதப் பரிசோதனை ஆகியவை செய்ய வசதிகள் ஏற்படுத்தப்பட வேண்டும்.

அனைத்து மருத்துவமனைகளுக்கும் ஜென ரேட்டர் வசதி செய்யப்பட வேண்டும்.

கால்நடை வளர்ப்பு

ஊராட்சிக்கு ஒரு மருந்தகமும், 5 ஊராட்சிகளுக்கு ஒரு கால்நடை மருத்துவமனையும் அமைக்கப்பட வேண்டும்.

மேய்ச்சல் புறம்போக்கு நில ஆக்கிரமிப்பை அகற்றி ஆடு, மாடு வளர்க்க புல் வளர்ப்பு திட்டம் கொண்டுவர வேண்டும்.

துவக்க வேளாண்மை கூட்டுறவு வங்கி இருக்கும் இடத்தில் பால் சொசைட்டி அமைக்கப்பட வேண்டும்.

கிராமம் முழுவதும், குடிநீர்த் தொட்டிகள் அமைக்கப்பட வேண்டும்.

வெள்ளாடு வளர்க்க தடை விதிக்கும் நபர்கள் மீது குண்டர் தடுப்பு சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

தொகுதியில் ஒவ்வொரு தாலுகாவிலும் ஆடு, மாடு, விற்பனை செய்யும் சந்தை அமைக்கப்பட வேண்டும்.

ஆடு, மாடுகளுக்கு காப்பீடு செய்யப்பட்டு இழப்புக்களுக்கு நட்டஈடு வழங்கப்பட வேண்டும்.

சாலைகள்

தரமற்ற சாலைகளை சீர் செய்ய வேண்டும். தார் சாலைகளாக மாற்றப்பட வேண்டும். அனைத்து கிராமங்களுக்கும் இணைப்பு சாலைகள் அமைக்கப்பட வேண்டும். கிராமங்களில் உள்ள விவசாய மக்கள், பள்ளிக் குழந்தைகள் போக்குவரத்து வசதியை, கிராமங்களில் பேருந்து சேவை இயங்குவதை உறுதிப்படுத்த கிராமச் சாலைகள் மேம்படுத்தப்பட வேண்டும்.

போக்குவரத்து

அனைத்து கிராமங்களுக்கும் பேருந்து வசதி உத்தரவாதப் படுத்தப்பட வேண்டும்.

கீரனுôர், கந்தர்வகோட்டை, கரம்பகுடி ஆகிய மய்யங்களில் பேருந்து பணிமனைகள், பேருந்து நிலையங்கள் அமைக்கப்பட வேண்டும். கூடுதல் பேருந்துகள் இயக்கப்பட வேண்டும்.

தொகுதியில் உள்ள பள்ளிக் குழந்தைகளுக்கு, மாணவர்களுக்கு சிறப்புப் பேருந்து வசதி செய்து தரப்பட வேண்டும்.

குடிநீர்

தொகுதியில் குடிநீர் என்ற அடிப்படை வசதியை உத்தரவாதப்படுத்த நீர்த்தேக்கத் தொட்டிகளின் எண்ணிக்கையை, கொள்ளளவை அதிகப்படுத்த வேண்டும்.

இருக்கிற தண்ணீர் தொட்டிகளை அவ்வப்போது சுத்தம் செய்வது, மருந்தடிப்பது போன்ற சுகாதார நடவடிக்கைகள் எடுக்கப்பட வேண்டும். மின்சார தட்டுப்பாடு, மின்மோட்டார் பழுதாகிப் போவது ஆகிய பிரச்சனைகளால் கிணற்று நீரையே நம்பியிருக்க வேண்டியுள்ளது. இந்த அடிப்படைப் பிரச்சனையில் உடனடியாக கவனம் செலுத்தி தொகுதி மக்களுக்கு பாதுகாப்பான குடிநீர் உத்தரவாதம் செய்யப்பட வேண்டும்.

காவிரி கூட்டுக் குடிநீர் திட்டத்தை தொகுதி முழுவதும் கொண்டுவர வேண்டும்.

மின்சாரம்

கிராம பொது இடங்கள், கிராம சாலைகள், தெருக்களில், கூடுதல் தெருவிளக்குகள் உறுதி செய்யப்பட வேண்டும். குடிசை வீடுகளுக்கு விளக்கு வசதி செய்து தொகுதியை இருளில் இருந்து மீட்க வேண்டும்.

நோக்கியா, ஹ÷ண்டாய் போன்ற பன்னாட்டு முதலாளிகளுக்கு தடையற்ற மின்சாரம் தரப்படுவது போல் விவசாயிகளுக்கும் தடையின்றி மின்சாரம் வழங்கப்பட வேண்டும்.

சமூக நீதி

தலித், முத்தரையர் சமூகத்தைச் சேர்ந்தவர்களுக்கு ஊர் சொத்தில், உள்ளூர் அதிகாரத்தில் பங்கு வேண்டும்.

சாதிய தீண்டாமைப் பிரச்சனைகளுக்கு மாவட்ட ஆட்சியர், வட்டாட்சியர், காவல்துறை கண்காணிப்பாளர், ஆய்வாளர் ஆகியோரை பொறுப்பாக்கி நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும்.

பொதுக் கோரிக்கைகள்

தொகுதியில் கால்நடை மருத்துவக் கல்லூரி, பொறியியல் கல்லூரி, விவசாயக் கல்லூரி அமைக்கப்பட வேண்டும்.

அங்கன்வாடி, சத்துணவு பணியாளர், துப்புரவு பணியாளர்கள் பணிநிரந்தரம் செய்யப்பட வேண்டும். அனைவருக்கும் அரசு ஊழியர் சம்பளம் வழங்கப்பட வேண்டும்.

விவசாய தொழிலாளர்கள் உள்ளடக்கிய கிராமப்புற தொழிலாளர்கள், அனைத்துவகை அமைப்புசாரா தொழிலாளர்கள், ஏழை சிறு குறு விவசாயிகள், சிறு கடை, தெருக்கடை (காய்கறி கடை, பூ கடை, பழக்கடை, தையல்கடை) நடத்தும் அன்றாடம் காய்ச்சிகள் அனைவரும் வறுமைக் கோட்டு பட்டியலில் சேர்க்கப்பட வேண்டும்.

மாவட்டம் விட்டு மாவட்டம் வேலைக்கு செல்லும் விவசாயத் தொழிலாளர்க்கு, அமைப்புசாரா தொழிலாளர்க்கு இலவச பஸ்பாஸ் வழங்கப்பட வேண்டும்.

ஊராட்சியில் அமலாக்கப்படும் அனைத்து மக்கள் நலத்திட்டங்களையும் விவசாயத் தொழிலாளர்கள் மேற்பார்வை செய்ய வழிவகை செய்யப்பட வேண்டும்.

விவசாயிகள் குறைதீர் கூட்டம் நடத்துவது போல், விவசாயத் தொழிலாளர்களுக்கும் கிராமப்புறத் தொழிலாளர்களுக்கும் மாதம் ஒரு முறை குறைதீர் கூட்டம் நடத்தப்பட வேண்டும்.

கைவினைஞர்கள், ஆட்டோ, கார் ஓட்டுனர் களுக்கு சிறுவணிகம் செய்ய அரசு வங்கிக் கடன் வழங்கப்பட வேண்டும்.

தொகுதியில் நீர் நிலைகள் அனைத்தும் பாதுகாக்கப்பட்டு பராமரிக்கப்பட வேண்டும்.

வெள்ளாளவிடுதி அரசு மாநில எண்ணை வித்து பண்ணையில் வேலை செய்யும் அனைவரும் பணி நிரந்தரம் செய்யப்பட வேண்டும். பண்ணை களில் உள்ள நிலங்கள் விவசாயத்திற்கு பயன் படுத்தப்பட வேண்டும்.

காவேரி கூட்டுக் குடிநீர்த் திட்டம் தொகுதி முழுக்க விரிவாக்கம் செய்யப்பட வேண்டும்.

விவசாயத்தை விவசாயத் தொழிலாளர்களின் வாழ்க்கையை நாசப்படுத்தி பகுதித் தொழிலாளர் களின் உழைப்பையும் சுரண்டுகிற சாராய ஆலை பகுதியில் இருந்து அப்புறப் படுத்தப்பட வேண்டும். அதில் வேலை செய்யும் அனைத்து தொழிலாளர்களுக்கும் மாற்று வேலை ஏற்பாடு செய்யப்பட வேண்டும்.

கரம்பகுடி, கந்தர்வகோட்டை, கீரனூரில் அரசு பயணியர் விடுதி அமைக்கப்பட வேண்டும்.

அனைத்து மகளிர் சுகாதார வளாகங்களும் முறையாக இயங்குவதை உத்தரவாதப்படுத்த வேண்டும்.

அனைத்து வட்டங்களிலும் கிராம நிர்வாக அதிகாரி, வருவாய் அதிகாரி தங்கியிருந்து வேலை செய்ய வசதிகள் ஏற்படுத்தப்பட வேண்டும்.

தொகுதியில் உத்தரவாதமான வேலை, கூலி, தொழிலாளர் உரிமைகள் ஆகியவற்றுடன் புதிய ஆலைகள் துவங்கப்பட வேண்டும்.

தொகுதியில் மூடப்பட்ட சித்தார் கம்பெனி, கே.வி.நிட்வேர், கல்குவாரி உள்ளிட்ட அனைத்து நிறுவனங்களிலும் வேலை செய்தவர்களுக்கு நட்ட ஈடு வழங்கப்பட வேண்டும்.

அரசு ஊழியர்களின் கவுரவம் மற்றும் சங்க உரிமைகள் மதிக்கப்பட வேண்டும்.

மாநில அரசு ஆசிரியர்களுக்கு மத்திய அரசு ஆசிரியர்களுக்கு இணையான ஊதியம் வழங்கப்பட வேண்டும்.

கரம்பகுடியில் புதிய வட்டாட்சியர் அலுவலகம் கட்டித் தரப்பட வேண்டும்.

கரம்பக்குடி வாரச் சந்தை விரிவுபடுத்தப்பட்டு சேமிப்புக் கிடங்குகள் அமைக்கப்பட வேண்டும்.

தொகுதி முழுவதும் கூடுதல் பொதுக் கழிப்பறை வசதி செய்யப்பட வேண்டும்

காய்கறி, பழம் போன்ற அழுகக் கூடிய பொருட்கள் விற்கும் வியாபாரிகள் நலன் கருதி பதப்படுத்தும் கிட்டங்கி வசதி செய்யப்பட வேண்டும்.

தொகுதி முழுவதும், கிராமப்புறங்களிலும், மக்கள் குடியிருப்பு பகுதிகளிலும் உள்ள டாஸ்மாக் கடைகள் அப்புறப்படுத்தப்பட வேண்டும்.

திருமணஞ்சேரி ஆற்றின் குறுக்கே நீர்தேக்க அணை அமைக்கப்பட வேண்டும். செங்கமேடு, நம்புராம்பட்டி, வாரியில் பாலங்கள் அமைக்கப்பட வேண்டும்.

நீண்ட நாட்களாக கட்டுமான வேலை முடியாமல் இருக்கும் ஓட்டை பாலத்தை உடனடியாக கட்டி முடிக்க வேண்டும்.

கரம்பகுடியில் வட்டாட்சி அலுவலக கட்டிடம் கட்டப்பட வேண்டும்.

கரம்பகுடி பேரூராட்சி திருமண மண்டபத்தை சீர்செய்து மக்கள் பயன்பாட்டிற்கு தரப்பட வேண்டும்.

கந்தர்வகோட்டை ஊராட்சி பேரூராட்சியாக மாற்றப்பட வேண்டும்.

கந்தர்வகோட்டையின் கள்ளர் சமூக மக்களுக்கு மிகவும் பிற்படுத்தப்பட்ட சாதியினர் அந்தஸ்து வழங்கப்பட்டுள்ளது போல், கந்தர்வகோட்டை பகுதி பின்தங்கிய பகுதி என அறிவிக்கப்பட்டு வளர்ச்சிப் பணிகள் துவக்கப்பட வேண்டும்.நிலம், வேலை, கூலி, சமூக கவுரவம், வீட்டுமனை, கல்வி, மருத்துவம், தொழிலாளர் உரிமைகள் என்ற விசயங்களில், கழகங்களோ காங்கிரசோ மக்கள் சார்பு வளர்ச்சி பாதையில் பணியாற்ற மாட்டார்கள். மூலதன விசுவாசத்தில் முதலாளித்துவ சேவையில், கருணாநிதியும் ஜெயலலிதாவும் போட்டியாளர்கள். இவர்கள் இரண்டுபேரின் இரண்டு முகாம்களின் சண்டையில், எவர் வென்றாலும் எவர் தோற்றாலும் முதலாளித்துவ வளர்ச்சி பாதையோ, முதலாளித்துவ அரசியலோ பலவீனப்படாது.

தமிழகத்தில், ஒரு போராடும் எதிர்க் கட்சியை, புரட்சிகர எதிர்க்கட்சியை பலப்படுத்தப்பட வேண்டிய நேரம் வந்துவிட்டது. மக்கள் சார்பு வளர்ச்சிப் பாதை, மக்கள் அரசியல், காலத்தின் கட்டாயம்.

கந்தர்வகோட்டை வசதிபடைத்தவர்களின், ஆதிக்க சக்திகளின் கோட்டை அல்ல.

கந்தர்வகோட்டை கழகங்களின் காங்கிரசின் கோட்டை அல்ல.

கந்தர்வகோட்டை உழைக்கும் மக்களின் கோட்டையாக வேண்டும்!

கந்தர்வகோட்டையை கம்யூனிஸ்ட் கோட்டையாக்குவோம்!!

நிலச்சீர்திருத்த ஆணையம் அமைப்பது பற்றி விவாதிக்க


சிறப்பு சட்டமன்றத் தொடர் கூட்டு!


இககமாலெ, அனைத்திந்திய விவசாயத் தொழிலாளர் சங்கம்


மாநிலம் முழுவதும் ஆர்ப்பாட்டம்

நிலச்சீர்திருத்த ஆணையம் அமைப்பது பற்றி விவாதிக்க சிறப்பு சட்டமன்றத் தொடர் கூட்டக் கோரி பிப்ரவரி 14 அன்று இகக மாலெயும், அனைத்திந்திய விவசாயத் தொழிலாளர் சங்கமும் மாநிலம் முழுவதும் ஆர்ப்பாட்டங்கள் நடத்தின.

சென்னையில் சென்னை, திருவள்ளூர் மற்றும் காஞ்சிபுரம் மாவட்டங்களில் இருந்து 300 பேர் கலந்துகொண்ட ஆர்ப்பாட்டம் நடத்தப்பட்டது. சென்னையின் மாலெ கட்சி மாவட்டச் செயலாளர் தோழர் எஸ்.சேகர் தலைமையில் நடந்த ஆர்ப்பாட்டத்தில் கட்சி மாநிலக் குழு உறுப்பினர்கள் தோழர்கள் எ.எஸ்.குமார், எஸ்.இரணியப்பன் ஆகியோர் கலந்துகொண்டனர். அனைத்திந்திய விவசாயத் தொழிலாளர் சங்க மாநிலப் பொதுச் செயலாளரும் திருவள்ளூர் மாவட்ட மாலெ கட்சி செயலாளருமான தோழர் எஸ்.ஜானகிராமன், மாலெ கட்சி அரசியல் தலைமைக் குழு உறுப்பினர் தோழர் எஸ்.குமாரசாமி ஆகியோர் கண்டன உரையாற்றினர்.

புதுக்கோட்டையில் கந்தர்வகோட்டை, கரம்பகுடி, குன்றாண்டார்கோயில் என 3 மய்யங்களில் 300 பேர் கலந்துகொண்ட ஆர்ப்பாட்டங்கள் நடத்தப்பட்டன. கட்சியின் மாநிலக் குழு உறுப்பினரும் புதுக்கோட்டை மாவட்ட செயலாளருமான தோழர் பழ.ஆசை தம்பி, மாநிலக் குழு உறுப்பினர் தோழர் தேசிகன், அனைத்திந்திய விவசாயத் தொழிலாளர் சங்க மாநிலத் துணைப் பொதுச் செயலாளர் தோழர் வளத்தான் ஆகியோர் இந்த ஆர்ப்பாட்டங்களில் கலந்துகொண்டனர்.

உளுந்தூர்பேட்டையில் பெரும்பான்மை எண்ணிக்கையில் பெண்கள் உட்பட 300 பேர் கலந்து கொண்ட பேரணியும் ஆர்ப்பாட்டமும் நடத்தப்பட்டது. விழுப்புரம் மற்றும் கடலூர் மாவட்ட கிராமப்புற வறிய மக்களும் விவசாயத் தொழிலாளர்களும் கலந்துகொண்டனர். கட்சி மாநிலக் குழு உறுப்பினரும் அனைத்திந்திய விவசாயத் தொழிலாளர் சங்க மாநிலத் துணைப் பொதுச் செயலாளருமான தோழர் எம்.வெங்கடேசன், மாநிலக் குழு உறுப்பினர் தோழர் எஸ்.அம்மையப்பன் ஆகியோர் இந்த ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்டனர். ஆர்ப்பாட்டத்துக்கான பிரச்சாரத்தின் ஒரு பகுதியாக பிப்ரவரி 4 அன்று மேலஓலக்கூர் பகுதியில் முற்போக்கு பெண்கள் கழக மாநிலச் செயலாளர் தோழர் சுசீலா தலைமையில் 30 கி.மீ தூரம் வரை நடைபயணம் நடைபெற்றது.

குமரியில் நூற்றுக்கும் மேற்பட்டோர் கலந்து கொண்ட ஆர்ப்பாட்டம் நடத்தப்பட் டது. கட்சி மாநிலக் குழு உறுப்பினர் தோழர் எஸ்.எம்.அந்தோணிமுத்து கலந்துகொண்டார்.

நெல்லையில் 100 பேர் கலந்து கொண்ட ஆர்ப்பாட்டத்தில் தோழர் கணேசன் தலைமை தாங்கினார். கட்சி மாநிலக் குழு உறுப்பினர்கள் தோழர்கள் டி.சங்கரபாண்டியன், தேன் மொழி ஆகியோர் கண்டன உரையாற்றினர்.

கும்பகோணத்தில் 100 பேர் கலந்து கொண்ட ஆர்ப்பாட்டத்தில் தோழர் கன்னை யன் தலைமை தாங்கினார். கட்சி மாநிலக் குழு உறுப்பினர் தோழர் எஸ்.இளங்கோவன், அனைத்திந்திய விவசாயத் தொழிலாளர் சங்க மாநிலத் தலைவர் தோழர் டி.கே.எஸ்.ஜனார்த் தனன் ஆகியோர் கண்டன உரையாற்றினர்.

குமாரபாளையத்தில் நடந்த ஆர்ப்பாட்டத்தில் அகில இந்திய மாணவர் கழக மாநிலப் பொதுச் செயலாளர் தோழர் வெங்கடாசலம் தலைமை தாங்கினார். கட்சி மாநிலக் குழு உறுப்பினர் தோழர் எ.கோவிந்தராஜ் கண்டன உரையாற்றினார்.

மதுரையில் நடந்த மக்கள் மன்றத்தில் தோழர் முருகேசன் தலைமை தாங்கினார். கட்சி மாநிலச் செயலாளர் தோழர் எஸ்.பாலசுந்தரம், மாநிலக் குழு உறுப்பினர் தோழர் உஷா ஆகியோர் உரையாற்றினர்.

சேலத்து செய்தி: போராட்டம் நிலம் தரும்

சேலம், பூவனூர் ஊராட்சி, தாதனூர் கிராமத்தில் பொதுப் பாதையில் உள்ள ஆக்கிரமிப்பை அகற்றக் கோரியும், இதற்காக போராடிய தோழர்கள் எ.செந்தில் குமார் மற்றும் கே.பெரியசாமி மீது போடப்பட்ட பொய் வழக்கை திரும்பப் பெறக் கோரியும் கல்வி நிறுவனங்களின் பெயரால் ஆயிரக்கணக்கான ஏக்கர் நிலத்தை அபகரிக்கும் இந்திய கிறித்துவ கல்வி நிறுவனத்தின் மீது நடவடிக்கை எடுக்கக்கோரியும் பிப்ரவரி 7 அன்று அனைத்திந்திய விவசாய மகாசபையும், அனைத் திந்திய விவசாய தொழிலாளர் சங்கமும் நடத்திய ஆர்ப்பாட்டத்தில் விவசாய மகாசபை அமைப்பாளர் தோழர் அய்யந்துரை தலைமை தாங்கினார். கட்சி மாநிலக் குழு உறுப்பினர் தோழர் சந்திரமோகன், மாவட்டச் செயலாளர் தோழர் மோகனசுந்தரம் உரையாற்றினர்.

மார்ச் 2 அன்று பொதுப்பாதையை அடைத்து வைத்த தனியார் நிறுவனத்துக்கு எதிராக மாலெ கட்சி தலைமையில் பகுதி மக்கள் திடீர் மறியல் போராட்டத்தில் இறங்கினர். காவல்துறை தலையிட்டு அடைப்பை தற்காலிகமாக திறந்துவிட்டது. அதை நீக்குவதாக உறுதியும் அளித்துள்ளது.

பிப்ரவரி 13 அன்று ‘சேர்வராயன் மலைகளில் இருந்து வேதாந்தாவே வெளியேறு’ என்ற நூல் வெளியிடப்பட்டது. சமூக ஆராய்ச்சி மற்றும் சட்ட விழிப்புணர்வுக்கான சங்கம் நடத்திய இந்த விழாவில் கட்சியின் மாநிலச் செயலாளர் தோழர் பாலசுந்தரம், மாநிலக் குழு உறுப்பினர் தோழர் சந்திரமோகன் கலந்துகொண்டனர்.

‘அய்முகூ அரசே வெளியேறு’ என்ற முழக்கத் துடன் பிப்ரவரி 13 அன்று சேலத்தில் நடந்த பொதுக் கூட்டத்தில் கட்சியின் மாநிலச் செயலாளர் தோழர் பாலசுந்தரம் மாநிலக் குழு உறுப்பினர் தோழர் சந்திர மோகன், மாவட்டச் செயலாளர் தோழர் மோகன சுந்தரம் ஆகியோர் உரையாற்றினர்.

சேலம் குப்பனூர் பகுதியில் பருத்தி காடு கிராமத்தில் ஆயிரம் ஏக்கருக்கும் மேற்பட்ட நிலத்தை இந்திய கிறித்துவ கல்வி நிறுவனம் வளைத்துப் போட்டுள்ளது. பிப்ரவரி 25 அன்று மாலெ கட்சி தலை மையில் 45 குடும்பங்கள் அங்கு குடிசைப் போட்டு குடியேறின. இதன் பிறகு தலையிட்ட வருவாய் மற்றும் காவல்துறை அதிகாரிகள் குடிசைகளை பிரித்துப் போடும்படி வலியுறுத்தினர். மக்கள் மறுத்ததால் பிப்ரவரி 27 அன்று 1 ஏக்கர் 5 சென்ட் நிலத்தை அளந்து தந்துள்ளனர். இதற்கான பேச்சு வார்த்தையில் மாலெ கட்சி தோழர்கள் அய்யந்துரை, பாலமுருகன், செந்தில், வெங்கடேஷ் ஆகியோருடன் இககமா மற்றும் பாமக கட்சியைச் சேர்ந்தவர்களும் கலந்து கொண்டனர். இப்போது அந்த நிலத்தை மக்கள் மத்தியில் பிரித்துத் தரும் பணி நடக்கிறது.Search