COMMUNIST PARTY OF INDIA (MARXIST - LENINIST) - LIBERATION

COMMUNIST PARTY OF INDIA (MARXIST - LENINIST) - LIBERATION, TAMILNADU

Friday, December 1, 2017

உழைக்கும் மக்களே, 
ஜனநாயகத்தை நேசிப்பவர்களே!

கோவை பிரிக்கால் நிர்வாகம் கொலை வழக்கில் விடுதலையான 7 பேருக்கு 

ஆயுள் தண்டனை பெற்றுத் தர எடுக்கும் 
பழி வாங்கும் முயற்சிகளை முறியடிப்போம்!

தோழர்கள் மணிவண்ணன், ராமமூர்த்தி 
ஆயுள் தண்டனை உறுதி செய்யப்பட்டதற்கு எதிராக குரல் கொடுப்போம்!

சென்னை உயர்நீதிமன்றம் மீண்டும் ஒரு முறை வேலை நிறுத்தத்தை நிறுத்தியுள்ளது

ஸ்ட்ரைக்குக்கு எதிராக நீதிமன்றம் ஸ்ட்ரைக் செய்வது வாடிக்கையாகிவிட்டது. ரூ.7,000 கொத்தடிமை மாதச் சம்பளம் வாங்கும் வாழ்க்கைக்கு எதிராக, தடைகளை எல்லாம் கடந்து போராடிய செவி லியர்களை, விஜயபாஸ்கரும் காவல்துறையும் மருத்துவ துறையும் ஒரு முறை மிரட்டினார்கள். 29.11.2017 அன்று சென்னை உயர்நீதிமன்றம் ‘பொது நல’ வழக்கில் வேலை நிறுத்தம் தொடர தடை விதித்துள்ளது. வழக்கு நேர உடையாடல்கள் பற்றிய பத்திரிகை செய்திகள் அதிர்ச்சி தருகின்றன. ரூ.7,000 சம்பளம் எனத் தெரிந்துதானே வேலைக்கு வந்தீர்கள், கட்டுப்படியாகாவிட்டால் விட்டுவிட்டு போக வேண்டியது தானே, வேலை நிறுத்தம் செய்ய அவசரமாய் ஓடி வந்தவர்கள், வேலைக்குத் திரும்ப மட்டும் அவகாசம் வேண்டுமா என தனியார் முதலாளிகள் போல் நீதிமன்றம் பேசியுள்ளது. மனச்சாட்சிக்கு விரோதமான ஒப்பந்தங்கள், ஊழியர்களைக் கட்டுப்படுத்தாது, வலியவர்கள், எளியவர்களிடம், கண்ணைக் காதை திறந்து வைத்துக்கொண்டுதானே ஒப்பந்தம் போட்டாய், பிறகு மாற்றிப் பேசலாமா என்று கேட்பது ஏற்கத்தக்கதல்ல என உச்சநீதிமன்றம் சென்ட்ரல் இன்லேன்ட் வாட்டர் ட்ரான்ஸ்போர்ட் கார்ப்பரேசன் வழக்கில் சொல்லியுள்ளதையும் அரசியல்சாசனத்தின் சமவேலைக்கு சம ஊதியம் என்ற கோட்பாட்டையும் உயர்நீதிமன்றம் கணக்கில் கொள்ள வேண்டும்.

திருத்திக் கொள்ளாமலே இருப்பதைவிட தாமாக திருத்திக் கொள்வது மேலானது

வரதட்சணை தொடர்பான வழக்குகளில், பெண்கள் தரப்பில் நடக்கும் முறை கேடுகளால் மனித உரிமைகள் மீறப்படுவதாக, தான் கருதுவதால், புகாரை விசாரிக்க ஒரு குழு போட்டு குழு ஒப்புதலுடன் புகாரை பதிவு செய்யுமாறு ஜ÷லை 27 அன்று உச்சநீதிமன்ற இரு நீதிபதிகள் அமர்வம் தீர்ப்பு சொன்னது. பாதிக்கப்பட்டவர்களையே குற்றம் சாட்டுதல் என்ற விக்டிம் பிளேமிங், விக்டிம் பேஷிங் ( Victim Blaming Victim Bashing) நடந்துள்ளதாக நாட்டின் முற்போக்கு ஜனநாயகக் குரல்கள் கண்டனம் தெரிவித்தன. இப்போது 29.11.2017 அன்று, தலைமை நீதிபதி தீபக் மிஸ்ரா, நீதிபதிகள் கனிவல்கர், சந்திரசூட் அமர்வம், சட்டப்படி வழக்குகள் பதிவாக வேண்டும், அதற்கு சிக்கல் ஏற்படுத்தும் வழிகாட்டுதல்கள் எப்படிச் சரியாக இருக்கும் எனக் கேள்வி எழுப்பியுள்ளது. அந்தத் தீர்ப்பில் மாறுபடுவதாகச் சொன்ன நீதிபதிகள், வழக்கு விசாரணையை ஜனவரி மூன்றாவது வாரத்துக்கு ஒத்திவைத்துள்ளார்.
தவறான தீர்ப்புக்கள் தாமதமாகவேனும் திருத்தப்படுவது நல்லதுதானே.


தமிழக விவசாயத்தை அழிக்கிற நீராதாரத்தை அழிக்கிற
மணல் குவாரிகள் வேண்டாம்! 

ஜெயலலிதா இறந்து ஓராண்டு கழித்து ஒரு வழியாக ஆர்கே நகர் இடைத்தேர்தல் நடக்கவுள்ளது.
நீதிபதிகள் நீதி வழங்குவதில்லை 
நீதிபதிகள் தீர்ப்புக்காரர்களே

கர்ணன், சிஜேஏஆர், காமினி ஜெய்ஸ்வால், ஹடியா வழக்குகளில்
உச்சநீதிமன்ற நடப்புகளும் நமது கேள்விகளும்

எஸ்.குமாரசாமி

தினமணி நாளிதழ், 15.11.2017 தேதிய தலையங்கத்தில், 10.11.2017 அன்று உச்சநீதிமன்றம் இதுவரை சந்தித்திராத சோதனையைச் சந்தித்தது என்றும் ஏறத்தாழ 75 நிமிடங்கள் அங்கு நிலவிய பதற்றம் அதன் மரியாதையையும் நம்பிக்கையையும் சிதைப்பதாக அமைந்துவிட்டது என்றும் கவலைப்பட்டது.
அறம்

அறம் படத்தில் கதாநாயகன் இல்லை. திரைக்குப் பின்னால் போராட்ட வாழ்க்கை வாழ்கிற பலவிதமான வலி வேதனைகளை சுமந்து கொண்டு அக்கம்பக்கமாக துணை பாத்திரங்களில் நடிக்கிற சாதாரணர்கள்தான் இந்த படத்தின் கதாநாயகர்கள் என படம் பார்த்துவிட்டு திரையரங்க இருக்கையை விட்டு எழும்போது உணர முடிகிறது.
நவம்பர் இறுதியில் இரண்டு நிகழ்ச்சிகள்

பாரதி

‘உயர்நீதிமன்றங்களில் தாய்மொழி’ என்ற தலைப்பில், விடுதலை சிறுத்தைகள் கட்சியின் வழக்கறிஞர்கள் அணியின் முதல் மாநில மாநாடு 25.11.2017 அன்று சென்னையில் நடத்தப்பட்டது. மூத்த வழக்கறிஞர், ஏஅய்சிசிடியு தேசியத் தலைவர் என்ற அடிப்படையில், தோழர் எஸ்.குமாரசாமி அழைக்கப்பட்டார்.
நிலையான படை இல்லாத ஓர் அரசு
தண்டத் தீனி அதிகார வர்க்கம் இல்லாத ஓர் அரசு 
அரசாக இல்லாத ஓர் அரசு
ஜனநாயகம் நிறைந்த ஒரு சர்வாதிகார அரசு
அதுவே சோசலிச அரசு

எஸ்.குமாரசாமி

கம்யூனிஸ்டுகள், பாட்டாளி வர்க்க சர்வாதிகாரம் வர வேண்டும் என்கிறார்கள். பகிரங்கமாக அப்படிச் சொல்கிறார்கள். அப்படியானால், அவர்கள் ஜனநாயகத்தின் விரோதிகள்தானே? இது ஒரு வகைக் கேள்வி.


சங்க முன்னோடிகளுக்கு கம்பல்சரி ரெஸ்ட், 21 நாட்கள் சம்பளப் பிடித்தம் உள்ளிட்ட தண்டனையை அமல்படுத்துகிற அய்க்கிய அமெரிக்க நிறுவனமான சான்மினா தொழிலாளர்கள், இந்த தண்டனை உள்ளிட்ட பல்வேறு பழிவாங்கும் நடவடிக்கைகளுக்கு எதிராக நவம்பர் 21 முதல் நடத்த திட்டமிட்ட வேலை நிறுத்தப் போராட்டத்துக்கு மக்கள் ஆதரவு திரட்ட திருபெரும்புதூரில் நவம்பர் 17 அன்று நடத்திய கூட்டம்.


பாலியல் துன்புறுத்தல் தொடர்பாக தோழர் சீதா எழுப்பியுள்ள புகாரில் நீதித்துறை விரைவாக விசாரணை நடத்தி குற்றம் சுமத்தப்பட்ட வழக்கறிஞர் ராகவன் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தி புரட்சிகர இளைஞர் கழகம் நவம்பர் 24 அன்று கூடுவாஞ்சேரியில் நடத்திய ஆர்ப்பாட்டம்.


புதுக்கோட்டை மாவட்ட புரட்சிகர இளைஞர் கழகத்தின் முதல் மாநாட்டை ஒட்டி புதுக்கோட்டை மாவட்ட புரட்சிகர இளைஞர் கழக தோழர்கள், மக்கள் மத்தியில் பிரச்சாரம் மேற்கொண்டு வருகிறார்கள். மாநாட்டுக்கான நிதி வசூல் செய்ய அவர்கள் சீருடைகளுடன் சென்றது மக்கள் கவனத்தை ஈர்ப்பதாக அமைந்தது.


குமரி மாவட்டம் ரீத்தாபுரத்தில் உள்ள பன்றிப் பண்ணையை அகற்றக் கோரி நவம்பர் 24 அன்று அனைத்து கட்சியினர் நடத்திய ஆர்ப்பாட்டத்தில் இககமாலெ தோழர்கள் கலந்து கொண்டனர்.

Tuesday, November 14, 2017

தமிழக அரசு அறிவிக்கிற திட்டங்கள் அமலாக்கம் பற்றி
வெள்ளையறிக்கை வேண்டும்!

குன்றுகள் காணாமல் போயின என்று சகாயம் ஆய்வு செய்தபோது தெரிய வந்ததுபோல், தமிழ்நாடு மொத்தமாக காணாமல் போனால், அல்லது தனுஷ்கோடி கடலில் மூழ்கியது போல் தமிழ்நாடே மழை வெள்ளத்தில் மூழ்கிப் போனால், வறட்சியால் கருகிப் போய்விட்டால்.... எந்தத் தமிழ்நாட்டை ஆள பாஜகவும் மற்றவர்களும் துடியாய் துடிக்கிறார்கள்?

Search